சூரா அல் கியாமா
அல்லாஹ்வின் வார்த்தை இப்படித்தான் புரியவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன், இப்படியும் இதிலிருந்து புரியமுடியும்.
உலக முடிவு நாளை கண்களால் பார்க்க வேண்டுமா? கியாமா சூரா அல்லாஹ்வின் தூதருடைய பின்பற்றும் நபர் கூறும் சொல் (உலக முடிவு நாளை கண்களால் பார்க்க வேண்டுமா?)
இந்த பெயரில் உள்ளதை மட்டுமே வைத்து தெளிவுப்படுத்திகிறேன்.
அல்லாஹ்வே அறிந்தவன்
வேறு எந்த ஒரு பொருளும் இடைப்படுவதில்லை
இதில் நபி ஸல் அவர்களுக்கு அவசரப்பட்டு உங்களுடைய நாவை அசைக்காதீர்கள் என்ற வார்த்தை அல்லாஹ் கூறுகிறான்.
நான் இங்கு கூறக்கூடிய வார்த்தையில் எதாவது தவறு இருந்தால் தயவு செய்து குர் ஆனை படியுங்கள்.
மறுமை நாளைப்பற்றி இங்கு கூறுவது மனிதர்களாகிய நாம் குர்ஆனை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வார்த்தைகள் சாதாரண நடையில் இலகுவாக புரிய இங்கு பதிவிடுகிறேன்.
கியாம நாளின் மீதும் நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
(அல்குர்ஆன் : 75:1,2)
அது என்னவென்றால்
(மரித்து உக்கிப்போன பின்பு) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
(அல்குர்ஆன் : 75:3)
மறுமைநாளில் அவனை திரும்பவவும் எழுப்படும் நாளில்
அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க (துல்லியமாக) படைக்க நாம் ஆற்றலுடையோம்.
(அல்குர்ஆன் : 75:4)
அவனை கர்ப்ப கோளறையில் சொட்டு சொட்டாய் ஊற்றப்படும் துளியயை அவன் பார்க்க வில்லையா? ( 75:37) இதே சூராவில் கடைசியில் அல்லாஹ் கூறுகிறான்.
சூராவின் ஒற்றுமை புரிகிறதா
எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
(அல்குர்ஆன் : 75:5)
அது இப்போது வராது என்றும், அப்படி ஒன்றுமே இல்லையென்றும் சொல்லுவதற்கு தன்னுடைய இறைவன் இடத்திலிருந்து வாக்குறுதி ஏதும் பெற்றுள்ளானா
“கியாம நாள் எப்போழுது வரும்?” என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
(அல்குர்ஆன் : 75:6)
ஆகவே, பார்வையும் மழுங்கி-விழும்
(அல்குர்ஆன் : 75:7)
சந்திரனும் ஒளியும் மங்கி-
விழும்
(அல்குர்ஆன் : 75:8)
சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
(அல்குர்ஆன் : 75:9)
அந்நாளில் “(தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது?” என்று மனிதன் கேட்பான்.
(அல்குர்ஆன் : 75:10)
“இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!” (என்று அவர்களுக்கு கூறப்படும் கூறப்படும்).
(அல்குர்ஆன் : 75:11)
அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
(அல்குர்ஆன் : 75:12)
அந்நாளில், மனிதன் அந்நாளில் முன்பு முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
(அல்குர்ஆன் : 75:13)
எனினும் மனிதன் அவனே தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 75:14)
அவனுக்கு மறுமை நாளில் அவன் செய்தது காட்டபடும்போது அது அப்படி செய்யவில்லை என்று பல காரணங்கள் கூற முற்படுவான்.
அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை (காரணங்களாக) எடுத்துப் போட்ட போதிலும்!
(அல்குர்ஆன் : 75:15)
அவன் அவ்வாறு கூறுவதினால் அதற்க்காக நபியாக இருக்கும் நீங்கள் அவசரமாக (குர்ஆனை ) கூறுவதற்கு உங்கள் நாவை அசைக்காதீர்கள்.
(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதுவதற்காக) உம் நாவை அசைக்காதீர்.
(அல்குர்ஆன் : 75:16)
காரணமாக இதுவும் இருக்கலாம். அவசரமாக வேதனை இப்போதுதான் வரும் என்ற விஷயம் கூறுவதற்க்காகவும் இருக்கலாம்.
ரஸூலுக்கு இது போன்ற விஷயம் தெரியாமல் இருக்கலாம் என்று கூறமுடியாது.
ரஸூலுக்கு தெரிய வாய்ப்பும் உண்டு அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு அதை அறிவித்தும் கொடுத்து இருக்க வாய்ப்பு உண்டு
இதை அல்லாஹ் சூரா ஜின் இல் கூறுகிறான்.
“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
(அல்குர்ஆன் : 72:26)
اِلَّا مَنِ ارْتَضٰى مِنْ رَّسُوْلٍ فَاِنَّهٗ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهٖ رَصَدًا ۙ
“தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
(அல்குர்ஆன் : 72:27)
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”
(அல்குர்ஆன் : 72:28)
ஆகவே நபி ஸல் அவர்கள் சில நமக்கு தெரியாத விஷயம் அவர்களுக்கு தெரியும் ஆனால் நமக்கு அதை தெரிவிப்பதும், தெரிவிக்காமல் இருப்பதும் இறைவன் புறத்தில் இருந்து அந்த அதிகாரம் வரவேண்டும்.
நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
(அல்குர்ஆன் : 75:17)
எனவே (ஜிப்ரீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 75:18)
பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
(அல்குர்ஆன் : 75:19)
எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 75:20)
அவசரப்படுவதால்தான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
(அல்குர்ஆன் : 75:21)
(மறுமை நாளிளும்)(ஒருவருடைய முடிவு நாளிலும்)அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 75:22)
அந்நாளில் என்பது வேதனை பற்றி கூறும்போது அல்லாஹ் நீங்கள் கணக்கீட கூடிய 1000 ஆண்டுகள் இறைவனுக்கு 1 நாள் என்று கூறுகிறான்.
ஆகவே குர் ஆன் பேசுவதால் அதை ஒரு நாளாகவும் எடுக்கலாம்.
1 நாளாக எடுத்தால் அந்த நிகழ்வு எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
தம்முடைய இறைவனளவில் நோக்கியவையாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 75:23)
ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
(அல்குர்ஆன் : 75:24)
இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
(அல்குர்ஆன் : 75:25)
அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,-
(அல்குர்ஆன் : 75:26)
முடிவு வந்துவிட்டால் அதன் பின் நற்செயல்கள் பற்றி சிந்திக்க முடியாது.உயிரை பரிப்பவர்கள் இடத்தில் தான் பேச்சு இருக்கும்.
“மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது.
(அல்குர்ஆன் : 75:27)
ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
(அல்குர்ஆன் : 75:28)
இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
(அல்குர்ஆன் : 75:29)
உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
(அல்குர்ஆன் : 75:30)
இறக்கும் தருணம் எப்படி இருக்கும் என்பது கண் முன்னே அல்லாஹ் காட்சிகளை நிறுத்துகிறான்.
ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை; அவன் தொழவுமில்லை.
(அல்குர்ஆன் : 75:31)
இங்கு உறுதிமொழி, தொழுகை பற்றி பேசுவதால் அதுவும் எல்லா சமூகத்தை பற்றி பேசுவதால். ஆகவே இங்கு தொழுகை, இறைவனின் அறிவுரை கேட்பது இல்லாதது, அநியாயமாக மற்றவரை கெடுப்பது இப்படி எல்லாருமே வருவார்கள்.
மறுமை நாளில் நாம் எழுப்பாடுவோம் என்ற அறிவுரை கேக்காமல்.
அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
(அல்குர்ஆன் : 75:32)
பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
(அல்குர்ஆன் : 75:33)
(மனிதனே ) கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
(அல்குர்ஆன் : 75:34)
பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
(அல்குர்ஆன் : 75:35)
வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
(அல்குர்ஆன் : 75:36)
(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
(அல்குர்ஆன் : 75:37)
பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
(அல்குர்ஆன் : 75:38)
பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
(அல்குர்ஆன் : 75:39)
இவ்வளவு தெரிந்தும் இந்த சூரா கியாமா அப்போது கியாமா என்று ஒன்று இல்லை என்று எப்படி சிந்திக்க முடியும்.
(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?
(அல்குர்ஆன் : 75:40)
இதை சிந்திக்க வேண்டாமா?
Comments
Post a Comment