ஃபித்னாக்கள் தலைதூக்கும் இடம் என்று சொல்லப்படும் இடம்,

 ஃபித்னாக்கள் தலைதூக்கும் இடம் என்று சொல்லப்படும் இடம்,


ஈராக்கும்,நஜ்த் உம் ஹதீஸ்களில் கிடைக்கிறது,


ஈராக் என்ற வார்த்தையை எடுத்துள்ளேன்.வேண்டும் என்றால் மூலத்தில் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம்.


இரண்டு இடத்திலும் ஃபித்னாக்கள் தலைதூக்கியதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.


முழுமையாக ஃபித்னாக்கள் தலைதூக்கிய இடம் நஜ்த் மட்டும்தான் மீதி எல்லாம் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது.



எல்லா ஹதீஸும் புஹாரி 4389. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். குழப்பம் இங்கே (கிழக்கில்) உள்ளது. இங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


4388. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


யமன்வாசிகள் உங்களிடம் வந்திருக் கிறார்கள். அவர்கள் இளகிய மனமுடையவர்கள்; மென்மையான இதய முடையவர்கள். இறைநம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். தற் பெருமையும் அகம்பாவமும் ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி) களிட(மு)ம் காணப்படுகின்றன. கம்பீரமும் (அதே நேரத்தில்) அமைதியும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகின்றன.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.426


இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


4387. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை (ஈமான்) இங்கேயுள்ளது” என்று தமது கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், “கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்.


7094. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் ஷாம் (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளம் வழங்குவாயாக! இறைவா! எங்கள் யமன் நாட்டில் எங்களுக்கு வளம் வழங்குவாயாக!” என்று சொன்னார்கள். மக்கள், “எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (வளம் வழங்குமாறு பிரார்த்தியுங்கள்)” என்று கேட்க, (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள், “இறைவா! எங்கள் ஷாம் நாட்டில் வளம் வழங்குவாயாக! எங்கள் யமன் நாட்டில் வளம் வழங்குவாயாக!” என்றே பிரார்த்தித்தார்கள்.


மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் ‘நஜ்த்’ பகுதியிலும் (வளம் வழங்குமாறு பிரார்த்தியுங்களேன்)” என்று (மீண்டும்) கேட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், -மூன்றாவது முறையில் என்று நினைக்கிறேன்- “அங்குதான் நில நடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்


1037. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


“இறைவா! எங்கள் ‘ஷாம்’ (சிரியா) நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்கு வாயாக! இறைவா! எங்கள் ‘யமன்’ நாட்டில் எங்களுக்கு வளத்தை வழங்குவாயாக!” என்று (நபி (ஸல்) அவர்கள்) கூறினார்கள்.


மக்கள் (சிலர்), “எங்கள் நஜ்த்  நாட்டிலும் (வளம் ஏற்படப் பிரார்த்தியுங் களேன்!)” என்று (இரண்டு முறை) கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அங்குதான் நிலநடுக்கங்களும் குழப்பங்களும் தோன்றும்; அங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்” என்று கூறினார்கள்


3104. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா (ரலி) அவர்களின் உறைவிடத்தை நோக்கிச் சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் ஏற்படும்” என்று மூன்று முறை கூறிவிட்டு, ‘‘ஷைத்தானின் கொம்பு எங்கிருந்து உதயமாகின்றதோ அங்கி ருந்து....” என்று கூறினார்கள்.


3279. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, ‘‘குழப்பம் இங்குதான். குழப்பம் இங்குதான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து... (அது தோன்றும்)” என்று கூறினார்கள்.


7092. அப்துல்லாஹ் பின் உமர் ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் அருகில் நின்றுகொண்டு, (கிழக்குத் திசையைச் சுட்டிக்காட்டி) “குழப்பம் இங்குதான் தோன்றும்; குழப்பம் இங்குதான் தோன்றும். ‘ஷைத்தானின் கொம்பு’ அல்லது ‘சூரியனின் கொம்பு’ உதயமாகும் இடத்திலிருந்து” என்று சொன்னார்கள்


3511. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் மீதிருந்தபடி, “தெரிந்துகொள்ளுங்கள்: குழப்பம், இங்கே ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்துதான் தோன்றும்” என்று கிழக்குத் திசையை நோக்கிச் சைகை செய்தபடி கூறினார்.


4387. அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள், “இறைநம்பிக்கை (ஈமான்) இங்கேயுள்ளது” என்று தமது கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், “கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங் களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக்கொண்டே (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்


4389. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். குழப்பம் இங்கே (கிழக்கில்) உள்ளது. இங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார


5303. அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டி சைகை செய்து ‘‘இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும்” என்று இரு முறை கூறிவிட்டு, ‘‘அறிந்துகொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (குழப்பங்கள் தலைதூக்கும். அதாவது,) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்” என்று சொன்னார்கள்


Comments