உலகில் நடக்கக்கூடிய போர்கள் ஏன் நடக்கிறது என்று தெரியாதவர்கள்
தன்னுடைய கருத்தில் பெருமையின் காரணமாக மனதில் ஏற்பட்டுள்ள விஷயமாகும்
இஸ்லாமில் இரண்டு கருத்து வருகிறது, அதில் ஒன்று தேர்ந்தெடுக்காமல் அடுத்த வந்த புது விஷயங்களில் தீர்வு காண முடியாது.
குர் ஆன் சொல்லக்கூடிய காஃபிர்கள் ஆன எல்லா சமூகமும் அழிக்க பட்டுவிட்டது,வேதக்காரர்களில் அநியாயகாரர்களை தவிர
வேதக்காரர்களிலும், முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்கள் தங்களிடம் தெளிவான ஆதாரம் வரும் வரை (தம் வழிகளிலிருந்து) விலகுபவர்கள் அல்லர்.
(அல்குர்ஆன் : 98:1)
அல்லாஹ் இதில் முஷ்ரிக்குகளையும் சேர்த்து கூறுகிறான்.
நாம் இங்கு சொல்லக்கூடியது வேதம் கொடுக்கப்பட்டவர்கள்
காரணம் முஷ்ரிக்குகளை விடவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கு கடமை என்பது அதிகமாகும்
ஆகவே வேதக்காரர்கள் இறைவனின் வார்த்தை பொய்பித்த காரணங்களால் முன் சென்றவர்கள் அளிக்கப்பட்டனர்,
இப்போது அல்லாஹ் கூறுவதை பார்ப்போம்
இறந்து போனவர்கள், அழிக்கப்பட்டவர்கள் இப்போது என்னிடத்தில் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் பேசத்தொடங்குகிறான் .
ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) (பொய்பிக்கும் உங்களை போன்ற)முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்
என்று அல்லாஹ் கூறுகிறான்.
(அல்குர்ஆன் : 38:11)
அவை பின்வருமாறு
(இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
(அல்குர்ஆன் : 38:12)
(இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 38:13)
இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.
(அல்குர்ஆன் : 38:14)
முந்தைய சமுதாயங்களில் அழிக்கப்பட்டவர்களைப் பற்றிய நினைவூட்டல்
அல்லாஹ் நமக்கு கடந்த கால சமுதாயங்களைப் பற்றியும், தூதர்களை எதிர்த்ததற்காகவும் நபிமார்கள் (அலை) அவர்களை நிராகரித்ததற்காகவும் அவர்களுக்கு ஏற்பட்ட தண்டனை மற்றும் பழிவாங்குதலைப் பற்றியும் கூறுகிறான். நாம் ஏற்கனவே அவர்களின் கதைகளை விரிவாக பல இடங்களில் (குர்ஆனில்) பார்த்துள்ளோம். அல்லாஹ் கூறுகிறான்: ﴾أُوْلَـئِكَ الاٌّحْزَابُ﴿
(அத்தகையவர்களே கூட்டணியினர்.) அதாவது, 'அவர்கள் உங்களை விட பெரியவர்களாகவும் வலிமையானவர்களாகவும் இருந்தனர், அவர்களுக்கு அதிக செல்வமும் குழந்தைகளும் இருந்தன, ஆனால் உங்கள் இறைவனின் கட்டளை வந்தபோது அது அவர்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதும் பாதுகாக்கவில்லை.' அல்லாஹ் கூறுகிறான்: ﴾إِن كُلٌّ إِلاَّ كَذَّبَ الرٌّسُلَ فَحَقَّ عِقَابِ ﴿
(அவர்களில் ஒவ்வொருவரும் தூதர்களைப் பொய்ப்பித்தனர்; எனவே எனது தண்டனை நியாயமானதாக இருந்தது.) 'அவர்களின் அழிவுக்கான காரணம் தூதர்களை நிராகரித்ததே, எனவே இங்கு உரையாற்றப்படுபவர்கள் எச்சரிக்கையாகவும் பயந்தும் இருக்கட்டும்.' ﴾وَمَا يَنظُرُ هَـؤُلآءِ إِلاَّ صَيْحَةً وحِدَةً مَّا لَهَا مِن فَوَاقٍ ﴿
(இவர்கள் ஒரு ஒற்றை சய்ஹாவை (பேரொலியை) மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதற்கு இடைவேளையோ முடிவோ இருக்காது.) மாலிக் (ரழி) அவர்கள் ஸைத் பின் அஸ்லம் (ரழி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்; "அதைத் தடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்," அதாவது, அவர்கள் மணிநேரத்தை மட்டுமே எதிர்பார்ப்பார்கள், அது அவர்கள் உணராத நிலையில் திடீரென அவர்கள் மீது வரும். ஆனால் அதன் சில அறிகுறிகள் ஏற்கனவே வந்துவிட்டன, அதாவது அது நெருங்கிவிட்டது. இந்த சய்ஹா என்பது எக்காளத்தின் ஒலியாகும், அல்லாஹ் இஸ்ராஃபீல் (அலை) அவர்களுக்கு நீண்ட குறிப்பை ஒலிக்குமாறு கட்டளையிடும்போது, அல்லாஹ் விரும்பியவர்களைத் தவிர வானத்திலோ பூமியிலோ உள்ள எவரும் பயப்படாமல் இருக்க மாட்டார்கள். ﴾وَقَالُواْ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ ﴿
(தஃப்சீர் இப்னு கஸீர் : 38:12-16)
இனி பனி இஸ்ரவேலர்கள் கொண்ட காஃபிர்களான சமூகம் மட்டுமே இருக்கிறது (அவர்களிலும் நல் அமல்கள் செய்யும் மனிதர்கள் தவிர)
இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
(அல்குர்ஆன் : 17:104)
இத்தோடு முஸ்லீமிகளில் உள்ள காஃபிர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு வேதனை கொடுக்கப்படுகிறது (போர் மூலமாகவும், நோய் மூலமாகவும்)
கொடுக்கப்படவும் போகிறது (இறுதி அழிவு மூலமாகவும்)
இப்போது வரக்கூடிய அழிவு (வேதனை என்பது) முஸ்லீங்களான காஃபிர்களுக்கும் சேர்த்து என்று நம்மில் பல பேர்களுக்கு புரியவில்லை.(அல்லாஹ்வே அறிந்தவன்)
நபி ஸல் அவர்கள் பின்பு அபூபக்கர் ரலி காலத்தில் (அல்லாஹ் அவரை பொருந்திகொள்வானாக)ஒரு கருத்து,அதன் பின்பு உமர் ரலி அவர்கள் காலத்தில் (அல்லாஹ் அவரை பொருந்திகொள்வானாக) ஒரு கருத்து, அதன் பின்பு உஸ்மான் ரலி அவர்கள் காலத்தில் (அல்லாஹ் அவரை பொருந்திகொள்வானாக) ஒரு கருத்து,அதன் பின்பு அலி, ஹுசைன், ஹசன் ரலி ((அல்லாஹ் அவர் அனைவரின் செயல்களையும் பொருந்திகொள்வானாக) ஒரு கருத்து என்று இப்போது எண்ணில் அடங்காத கருத்துகள் இருக்கின்றன.
உறுதியான தெளிவான ஒரு கருத்தை பெற குர் ஆனின் பக்கம் வாருங்கள்
தெளிவான விளக்கம் பெற குர் ஆனையும்,வரலாறுகளையும், கர்பலாவையும் படிக்காமல் ஒருவர் தெளிவான விளங்க முடியாது.
இதுவரை அழிந்த சமுதாயத்தை குறித்து பார்த்தோம், இப்போது நபி ஸல் அவர்களை பார்த்து மறுமை நாளில் அல்லாஹ் கேள்வி கேட்பதை பார்ப்போம்.
தூதர்கள் ﷺ அவர்களிடம் அவர்களது சமுதாயங்களைப் பற்றி கேட்கப்படும்
மறுமை நாளில், தான் அனுப்பிய தூதர்களிடம் அவர்களது சமுதாயங்கள் அவர்களின் போதனைகளுக்கு எவ்வாறு பதிலளித்தனர் என்பதைப் பற்றி கேட்பார் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் மற்ற வசனங்களில் கூறியுள்ளான்,
فَلَنَسْـَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْـَلَنَّ الْمُرْسَلِينَ
(எனவே, நிச்சயமாக நாம் (வேதம்) அனுப்பப்பட்டவர்களிடம் கேட்போம், மேலும் நிச்சயமாக நாம் தூதர்களிடமும் கேட்போம்.) 7:6, மேலும்,
فَوَرَبِّكَ لَنَسْـَلَنَّهُمْ أَجْمَعِينَ - عَمَّا كَانُواْ يَعْمَلُونَ
(ஆகவே, உம் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் அவர்கள் அனைவரிடமும் கேட்போம். அவர்கள் செய்து கொண்டிருந்தவை அனைத்தைப் பற்றியும்.) 15:92-93. இங்கு தூதர்களின் கூற்று,
لاَ عِلْمَ لَنَآ
(எங்களுக்கு அறிவு இல்லை) என்பது அந்த நாளின் பயங்கரத்தின் விளைவாகும் என்று முஜாஹித், அல்-ஹசன் அல்-பஸ்ரீ மற்றும் அஸ்-சுத்தீ ஆகியோர் கூறுகின்றனர். அப்துர்-ரஸ்ஸாக் அறிவித்தார், அத்-தவ்ரீ கூறினார், அல்-அஃமஷ் கூறினார், முஜாஹித் இந்த வசனத்தைப் பற்றி கூறினார்,
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ
(அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், அவர்களிடம் கேட்பான்: "நீங்கள் என்ன பதிலைப் பெற்றீர்கள்?") அவர்கள் பயந்து விடுவார்கள், பின்னர் பதிலளிப்பார்கள்,
لاَ عِلْمَ لَنَآ
(எங்களுக்கு அறிவு இல்லை...) இப்னு ஜரீர் மற்றும் இப்னு அபீ ஹாதிம் ஆகியோரும் இந்த விளக்கத்தைப் பதிவு செய்துள்ளனர். அலீ பின் அபீ தல்ஹா கூறினார், இப்னு அப்பாஸ் (ரழி) இந்த வசனத்திற்கு விளக்கமளித்தார்,
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَآ أُجِبْتُمْ قَالُواْ لاَ عِلْمَ لَنَآ إِنَّكَ أَنتَ عَلَّـمُ الْغُيُوبِ
(அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், அவர்களிடம் கேட்பான்: "நீங்கள் என்ன பதிலைப் பெற்றீர்கள் (உங்கள் போதனைக்கு மனிதர்களிடமிருந்து)?" அவர்கள் கூறுவார்கள்: "எங்களுக்கு அறிவு இல்லை, நிச்சயமாக, நீ மட்டுமே மறைவானவற்றை அறிந்தவன்.") "அவர்கள் இறைவனிடம், மிகவும் கண்ணியமானவனே, 'நாங்கள் அறிந்தவற்றைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை, அதைக் கூட நீ எங்களை விட அதிகமாக அறிந்திருக்கிறாய்' என்று கூறுவார்கள்." இந்தப் பதில் இறைவனுக்கு மரியாதை காட்டுவதற்காக கூறப்படுகிறது, மேலும் இதன் பொருள், உமது அனைத்தையும் சூழ்ந்த அறிவுடன் ஒப்பிடும்போது எங்களுக்கு எந்த அறிவும் இல்லை என்பதாகும். எனவே, எங்கள் அறிவு இந்த மக்களின் வெளிப்படையான நடத்தையை மட்டுமே புரிந்து கொண்டது, அவர்களின் இதயங்களின் இரகசியங்களை அல்ல. நீ அனைத்தையும் அறிந்தவன், அனைத்தையும் சூழ்ந்த அறிவு கொண்டவன், உமது அறிவுடன் ஒப்பிடும்போது எங்கள் அறிவு எந்த அறிவும் இல்லாததைப் போன்றது, ஏனெனில்
أَنتَ عَلَّـمُ الْغُيُوبِ
(நீ மட்டுமே மறைவானவற்றை அறிந்தவன்.)
إِذْ قَالَ اللَّهُ يعِيسَى ابْنَ مَرْيَمَ اذْكُرْ نِعْمَتِى عَلَيْكَ وَعَلَى وَلِدَتِكَ إِذْ أَيَّدتُّكَ بِرُوحِ الْقُدُسِ تُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلاً وَإِذْ عَلَّمْتُكَ الْكِتَـبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالإِنجِيلَ وَإِذْ تَخْلُقُ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ بِإِذْنِى فَتَنفُخُ فِيهَا فَتَكُونُ طَيْراً بِإِذْنِى وَتُبْرِىءُ الاٌّكْمَهَ وَالاٌّبْرَصَ بِإِذْنِى وَإِذْ تُخْرِجُ الْمَوتَى بِإِذْنِى وَإِذْ كَفَفْتُ بَنِى إِسْرَءِيلَ عَنكَ إِذْ جِئْتَهُمْ بِالْبَيِّنَـتِ فَقَالَ الَّذِينَ كَفَرُواْ مِنْهُمْ إِنْ هَـذَا إِلاَّ سِحْرٌ مُّبِينٌ - وَإِذْ أَوْحَيْتُ إِلَى الْحَوَارِيِّينَ أَنْ ءَامِنُواْ بِى وَبِرَسُولِى قَالُواْ ءَامَنَّا وَاشْهَدْ بِأَنَّنَا مُسْلِمُونَ
(தஃப்சீர் இப்னு கஸீர் : 5:109)
இங்கு நபி ஸல் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால்
நாம் தொழுதோம், ஜக்காத் கொடுத்தோம்,மேலும் பல அமல்கள் செய்துவிட்டோம் நமக்கு ஷஃபாஅத் கிடைத்துவிடும் என்ற மமதையே ஒருவருக்கு எதிரி ஆகும்.
இங்கு நாம் திருப்த்தி படுத்த கூடிய ஒரே ஒருவன் அல்லாஹ் மட்டுமே, அல்லாஹ்வை திருப்த்தி படுத்தினால் நாம் செய்யக்கூடிய செயல் அவனே நிவர்த்தி செய்துவிடுவான்.
மேலும் படியுங்கள்.
இப்போது கருத்துகளின் உச்சமாகும் மறுமைநாளில் நபி ஸல் அவர்கள் பின் புதிதாக மார்க்கத்தை ஏற்படுத்தி வந்தவர்களை பற்றி அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு வெளிச்சமிட்டு காட்டுவான்
அப்போது நபி ஸல் அவர்கள் உடைய ஷஃபாஅத் விலகிவிடும் அதற்கு உண்டான ஆதாரங்கள்
புஹாரி
7050. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே (‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். யார் அதை அருந்துகிறாரோ அவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வரு வார்கள். அவர்களை நான் அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள் வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அறிவிப் பாளர்களில் ஒருவரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை மக்களுக்கு அறிவித்துக்கொண்டிருந்தபோது நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். பிறகு, “நீங்கள் இவ்வாறுதான் சஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று வினவினார்கள். நான், “ஆம்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் இதை அறிவித்ததற்கு நான் சாட்சி. அவர்கள் தமது அறிவிப்பில் கூடுதலாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்:
“அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்தான்” என்று நபியவர்கள் கூறியதற்கு, “உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும். உடனே நான், “எனக்குப் பிறகு (தமது மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிóருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்து வானாக!” என்று சொல்வேன்
உலகில் எல்லா நபிமாறும் தன்னுடைய உம்மத்தில் அநியாயக்கார மக்களுக்காக தண்டனை வழங்குமாறு உலகிலே துஆ கேட்டு விட்டார்கள்.
ஆனால் நபி ஸல் அவர்களின் துஆ மட்டும் நிலுவையில் இருக்கிறது
அது புஹாரி 7050 இல் மூலமாக ரஸூறுல்லாஹ் மறுமையில் கேட்பார்கள் என்று அல்லாஹ் நமக்கு முன்னவே தெரிவித்து விட்டான்.
மேலும் படியுங்கள்.
புஹாரி 7049. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்களுக்கு முன்பே (மறுமை நாளில் ‘அல்கவ்ஸர்’) தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அப்போது உங்களில் சிலர் என்னிடம் கொண்டுவரப்படுவார்கள். நான் அவர்களுக்கு (தடாகத்திலிருந்து தண்ணீர்) வழங்க முற்படும்போது அவர்கள் என்னிடமிருந்து விலக்கிவைக்கப்படுவார்கள். உடனே நான், “என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்” என்று கூறுவேன். அதற்கு அல்லாஹ், “இவர்கள் உமக்குப் பின்னால் (புதிது புதிதாக) என்னென்ன (குழப்பங்களை) உருவாக்கினார்கள் என்று உமக்குத் தெரியாது” என்று கூறுவான்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புஹாரி 6585. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான், “இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்பேன். அதற்கு இறைவன் “உமக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உமக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றுவிட்டார்கள்” என்று சொல்வான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாம் இன்று செய்யும் அத்துனை செயல்களும் நபி ஸல் அவர்கள் காட்டித்தந்த வழி என்று மனதில் அமைதி படுத்தி வைத்திருக்கிறோம்.
ஒவ்வொரு செயலையும் நாம் நபி ஸல் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்திருக்கோமா
ஒருவரால் தன்னுடைய நஃப்ஸ் தெளிவான ஹக்கில் இருக்கிறது என்று ஒருவர் உறுதியிற்று சொல்லமுடியவில்லையென்றால் அவர் அசத்தியத்தில்தான் இருக்கிறார்.
உலகம் அழியும் என்று சில அடையாளங்கள் மூலம் நபி ஸல் அவர்கள் வழியாக அல்லாஹ் நமக்கு விளக்கி விட்டான்.
அந்த அழிவு நாளை அல்லாஹ் வரக்கூடிய நாளில் அருகில் வைத்து இருந்தால் அது மக்களாகிய நாம் இப்போது இல்லை என்று வாதிட்டு மக்களோடு நாம் தர்க்கம் செய்ய தயாராக உள்ளோம்.
ஆனால் அந்த மறுமை நாளோ
அல்லாஹ் அவன் சொல்லுவது போன்று வரக்கூடிய நாளில் நடந்தால் நாம் பொய்யார்கள் ஆவோம்.
ஆகவே வார்த்தைகளில் கூட முஸ்லீம்கள் ஆகிய நாம் கவனத்தை கடைபிடிப்போம்.
இப்போது பனி இஸ்ரவேலர்கள் மட்டும் இல்லை, அவர்களோடு முஸ்லீங்களான காஃபிர்களும் சேர்ந்து அழிவை (வேதனை) சந்திக்க போகிறோம்
ஆகவே நபி ஸல் அவர்களின் வழியை இக்காலத்தில் எந்த செயல் நிகழ்காலத்தோடும் நபி ஸல் அவர்களின் எந்த செயலோடு பொருந்தி போகிறதோ அதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.
இனிமேல் உம்மத் யாருடைய துஆவாலும் மீளாது, மஹதி அலை அவர்கள் வரும் வரை
என்று அறிஞ்சர்களின் கருத்தாகும்
ஆகவே மனிதர்களாகிய நாம் செய்யும் தவருகளை திருத்தி கொண்டு பாவமன்னிப்பு தேடி மீண்டெழுவோம்
Comments
Post a Comment