உலகத்தில் அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டவே போர்கள் நடக்கிறது , இப்லீஸையும் அவனுடைய படைகளையும்,அவனுடைய தோழர்களையும் யார் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன்,
உலகத்தில் அல்லாஹ்வின் ஆட்சி அல்லாஹ்வின் அடியார்களை கொண்டு அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டவே போர்கள் நடக்கிறது
எல்லாம் வல்ல இறைவன் இந்த கட்டுரையை உங்களுக்கு புரிய அருள் புரிவானாக
இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
இந்த கட்டுரையில் எங்களுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் பேசி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
குர் ஆன் வசனங்கள் எல்லா இடத்திலும் நமக்கு தோணக்கூடிய வசனங்களை எடுத்து காட்டக்கூடாது என்பதை நாங்களும் ஒத்துக்கொள்கிறோம்.
இங்கு கூறப்பட்ட வசனங்கள் பொதுவான மக்களுக்கு கூறப்பட்ட வசனங்கள் ஆகும்
சில வசனங்கள் மட்டும் அந்த சூழ்நிலையில் உள்ளதையும் நாங்கள் கூறி இருப்போம்
அந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டதாக இருந்தாலும் அதே போன்ற செயலை மனிதர்கள் யாரும் செய்தால் எந்த சூழ்நிலைக்காக சொல்லப்பட்ட வசனமோ அதே போன்ற சூழ்நிலையில் ஈடுபட்டவருக்கும் பொருந்தும்.
காரணம் நபி ஸல் அவர்கள் உலக மக்களுக்கு எல்லாவருக்கும் ரசூல் என்பதை மறக்க வேண்டாம்.
இந்த கட்டுரையின் பொருள்.முஹ்மீன்களையும் இப்லீஸையும் அவனுடைய படைகளையும்,அவனுடைய தோழர்களையும் யார் என்று பிரித்துக்காட்ட விரும்புகிறேன், இன்ஷாஅல்லாஹ் தெளிவுபடுத்தி விடுவேன் என்று நம்புகிறேன்.
எல்லாருக்கும் தெரிந்த குர் ஆன் வசனங்களை இங்கு கூறுகிறேன்.
தயவு செய்து சற்று ஆழமாக மனதில் ஏற்றுக்கொள்ளவும்.
15:39. (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.
17:62. “எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் கொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
இப்லீஸ் கூறின வார்த்தைகளில் தான் இங்கு கூறப்பட்டுள்ளன அதில் பொதுவானது என்று பார்த்தால் 'வழிகெடுப்பது" மட்டுமே.
வழிகெடுப்பது என்ற அல்லாஹ்விடம் ஷைத்தான் வாதாடுவதால் எந்த செயலில் வழிகெடுப்பது என்ற சந்தேகம் வரும் (அது அல்லாஹ்வின் தீன்)ஆகும்.
அல்லாஹ்வின் தீன் என்பது அமானத் பேணுதல் ஆகும்.
அல்லாஹ்வின் அமானத் என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு செயல் மாறுபடும்.
மேலும் அல்லாஹ் இப்லீஸிடம் நீ எப்படி எல்லாம் வழிகெடு என்று கூறுகிறான்.
17:64. “இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உம் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட் படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்); ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
இரண்டாவதாக இப்பிலீஸ் தன்னுடைய இறைவனிடம் சொல்லக்கூடிய வார்த்தைகளை பார்ப்போம்.
“இன்னும் நிச்சயமாக நான் அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களிடம் வீணான எண்ணங்களையும் உண்டாக்குவேன்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளின் காதுகளை அறுத்து விடும்படியும் அவர்களை ஏவுவேன். இன்னும் அல்லாஹ்வின் படைப்புகளையுடைய கோலங்களை மாற்றும்படியும் ஏவுவேன்” என்றும் ஷைத்தான் கூறினான்; எனவே எவன் அல்லாஹ்வை விட்டு ஷைத்தானை உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்கிறானோ, அவன் நிச்சயமாக பகிரங்கமான பெரு நஷ்டத்தை அடைந்தவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 4:119)
இங்கு சொல்லக்கூடிய வார்த்தைகள்,
கூப்பாடு,
படை,
செல்வம்,
குழந்தைகள்,
வாக்குறுதி,
வீணான எண்ணங்கள் (மனோ இச்சை),
அல்லாஹ்வின் படைப்புகளை மாற்றுவது.
மேலே சொல்லக்கூடிய வார்த்தைகள் யாருக்கெல்லாம் பொருந்துகிறதோ அவர்களிடம் இப்லீஸின் தற்காலிகமாக கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம் .
ஆனால் இந்த வார்த்தைகள் பயன்படுத்தும் எல்லாரும் இப்லீஸ் என்று சொல்லவரவில்லை
மாறாக தற்காலிகமாக ஒருவர் மீது ஷைத்தான் வந்து போகும் நேரம் சொல்லுகிறேன்.
இதில் சந்தேகம் இருக்குமானால் அல்லாஹ் விளக்குகிறான் சற்று கவனியுங்கள்.
எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
(அல்குர்ஆன் : 26:221)
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள்.
(அல்குர்ஆன் : 26:222)
தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம் (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும் பாலோர் பொய்யர்களே.
(அல்குர்ஆன் : 26:223)
மேல சொன்னதுபோல் பொய்யான வாக்குறிதி கொடுப்பவர்கள்.
மேலும் ஒருவருக்கு இறைவசனம் ஓதப்பட்டால் முழுவதும் கேக்காமல் கேட்பதற்கும் முன்பே (புரிந்துகொள்வதற்கு முன்பே ) மனிதர்களிடம் தர்க்கம் செய்பவர்கள் மேல் தற்காலிக இப்லீஸ் வந்து போகுதல் இருக்கும்.
22:3. இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.
22:4. அவனை (ஷைத்தானை)ப் பற்றி எழுதப் பட்டுள்ளது; எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழி கெடுத்து எரி நரகின் வேதனையின் பால் அவருக்கு வழி காட்டுகிறான்.
22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
தர்க்கம் செய்யும் நபர்கள் நாம் மனிதர்களிடம் தர்க்கம் செய்யவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும், ஏனென்றால் அந்த மனிதன் இறைவனின் வசனத்தை கொண்டு வந்து கூறுகிறார் அதுமட்டுமே அவருடைய வேலை ஆகவே தர்க்கம் செய்பவர்கள் இறைவனின் வசனங்களை நிராகரிக்கிறோம் என்று விளங்கவேண்டும்.
ஆகவே
எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
(அல்குர்ஆன் : 43:36)
இப்லீஸ் ஒரு மனிதனிடம் நண்பனாக இருப்பதை சில வசனங்கள் மூலம் தெரியமுடிகிறது.
ஆகவே முனாஃபிக்குகளையும், இப்லீஸின் நண்பர்களையும், அவனுடையை படைகளையும், இன்னும் பல படித்தரங்களையும் காணலாம், ஆகவே குர் ஆனை விட்டுவிடாதீர்கள்.
சூரா ஃபுர்க்கானில் ஒரு வசனம்
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
(அல்குர்ஆன் : 25:30)
இந்த வசனம் முன் வசனங்கள் மறுமை நாளில் வரக்கூடிய நிகழ்வை பற்றி பேசுகிறது
அந்நாளில் காஃபிர்களின் வேதனை வசனங்கள் ஆகும்
அவர்களிடம் அல்லாஹ் பேசம்போது
அந்த அநியாய காரர்கள் கூறுவார்கள்,
“எனக்கு வந்த கேடே! (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா?”
(அல்குர்ஆன் : 25:28)
அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுவார்கள் குர்ஆனை முழுவதும் இந்த சமுதாயம் புறக்கணித்துவிட்டார்கள் என்று
இப்லீஸ் மனிதர்களின் நண்பனாக்கி கொண்டவர்களின் வகைகள்
1. கல்வி ஞானம் இல்லாமல் மனிதர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டு ஆணவத்தோடு வழிகெடுப்பது
இவர்களை அல்லாஹ் வேதனை இவ்வுலகத்தில் தெளிவாக நரக வேதனை கொடுப்பேன் என்று கூறுகிறான்.
இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 22:8)
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.
(அல்குர்ஆன் : 22:9)
2. வகை யார் என்றால் சந்தேகத்தில் அல்லாஹ்வை வணங்குவது. இங்கே வணக்கம் என்று சொல்லுவது தொழுகை மட்டும் இல்லை மனிதனின் வாழ்க்கையில் உள்ள இன்ன பிற செயல்களும் ஆகும் (இந்த வசனத்தை தப்சீரில் காண்க)
உதாரணமாக ஒன்று அல்லாஹ்வின் பணிக்காக ஒன்று தொடங்கும் போது (இது நடக்குமா, நடக்காதா என்ற சிந்தனை) தான் மனிதனின் இரட்டை நிலைபாடு
இவர்கள் தெளிவான நஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்,
இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
(அல்குர்ஆன் : 22:11)
3 வகை யார் என்றால் நமக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகிறவர்கள்,நல் அமல்கள், மேலும் அல்லாஹ்வின் பாதையில் நஃப்ஸுடன் போராடுவது.
அல்லாஹ் மிகவும் தூய்மையானவன்
அல்லாஹ் யாருடைய குர் ஆனில் தனிப்பட்ட ஒருவரின் குணங்களை (weakness) என்று சொல்லலாம் அதை பிறருக்கு தனியாக கூறுவது இல்லை (ஒருவர் செய்யும் செயலை தவிர)
அதனால் தான் குர் ஆனில் பெயர் சொல்லி பேசக்கூடிய நபர்கள் என்று சொல்லப்போனால்
1. அல்லாஹ்வுக்கு எதிராக தெரிந்து செயல் செய்ய கூடிய பெரிய அநியாககாரர்கள்
2.முழுமையாக அல்லாஹ்வின் தீனில் ஈடுபட்ட முஹ்லசீன்களான நல்லடியார்கள்
பெரும்பாலும் இந்த இரண்டு பெயர்கள் தான் இதை தவிர மற்ற பெயர்கள் சொல்லாத நபர்கள் நான்தான் அநியாயகாரர்கள் இல்லையே என்று நினைப்பவர்களுக்கு
குர் ஆனில் கீழே சொல்லப்படக்கூடிய இந்த வசனம் பொருத்தமாக அமையும் என்று நினைக்கிறேன்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 8:25)
ஆகவே முஹ்லசீன்களான நல்லடியார்களை தவிர மனிதர்களான எல்லா நபர்களிடமும் சைத்தானால் (மனோ இச்சை படி)வஸ்வஸ் செய்ய இயலும்.
பாகம் 2
இதுவரை தனி மனிதனின் உள்ள வகைகள் கண்டோம்
இரண்டு வகை குழப்பங்கள் இருக்கிறது
ஒன்று தனிமனிதன் தானக்காக செய்யக்கூடிய ஃபித்னா இருக்கிறது,
மற்றொன்று உம்மதுக்காக செய்யக்கூடிய ஃபித்னா இருக்கிறது.
இப்போது உம்மத்தின் ஃபித்னா வகைகளை இப்லீஸ் செய்வது பற்றி சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்.
இப்ராஹிம் அலை அவர்களுக்கு பின்
யஹ்கூப் வம்ச வழி 12 மகன்களின் மூலம் பனி இஸ்ரவேளர்களின் குடும்பம் ஆரம்பிக்கிறது
அல்லாஹ்வின் அமானத் (மனிதர்களை நிர்வகிக்கும்) பொறுப்பு என்பது இப்போது யஹ்கூப் அலை பனி இஸ்ரவேலர்களுக்கு நபி ஈஸா அலை அவர்கள் வரை கொடுக்க நாடுகிறான்.
வரலாறுகள் என்பது மிக பெரியது இதைவிட சுருக்கமாக சொல்லமுடியுமா என்று எனக்கு தெரியவில்லை முடிந்த அளவு கூறியுள்ளேன்.
சந்தேகம் உள்ளவர்கள் தஃப்ஸீர் உடன் குர் ஆனை படியுங்கள்.
இந்த வரலாறுகளை எல்லாம் அது அரபுகளுடைய வரலாறு, பனி இஸ்ரவேலர்களுடைய வரலாறு என்று தன்னுடைய வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விட்டு வாழமுடியாது.
உலகம் என்பது ஒரு நெருப்பு கோழி முட்டை வடிவம் இதில் என்ன நடந்தாலும் அதில் நாம் சம்பந்தபடுவோம்.
யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர்.
(அல்குர்ஆன் : 2:133)
மனிதர்களை அல்லாஹ் நிர்வகிப்பதுதான் சாத்தியமாகும் ஆனால் அதை உலகில் மனிதர்களுக்கு மத்தியில் தற்காலிமாக தன்னுடைய நிர்வாகத்தை கொடுக்கிறான்.
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 2:83)
உறுதிமொழிதான் இங்கு கவனிக்க வேண்டியவை ஆகும்.
முஹலசீன்கள், அநியாயகாரர்கள், முனாபீக்கீன்கள்.
வாக்குறுதியையும் 3 ஆக பிரிக்கலாம்
வாக்குறுதியை நிறைவேறுப்பவர்கள் முஹ்லசீன்கள்,
வாக்குறுதியை மீருபவர்கள் அநியாயகாரர்கள்,
இந்த முனாஃபிக்கீன்கள் அநியாயகாரர்களோடு சேர்ந்து நீங்கள் வாக்குறுதியை மீறிவிடுங்கள் என்று எந்த பொருள் மூலமாக வந்தாலும் அதுவும் அல்லாஹ்வின் நியதிபடி தற்காலிகமாக அநியாயகாரர்கள் வரிசையில் சேர்க்கப்படும் அவர்கள் தவ்பா செய்து திரும்பும் வரை....... இவர்களிடமே ஷைத்தான் வந்து போகுவான்.
அதன் பின்பு வந்த நபி மார்கள் எல்லாம் அல்லாஹ்வின் வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடிய அத்தாட்சிகளாக பனி இஸ்ரவேலர்களுக்கு அனுப்பி வைத்தான் இதுவே அல்லாஹ்வின் பரிசாகும்
இதன் பின்பு யூசுப் அலை அவர்கள் வருகிறார்கள்
அதன் பின்பு நபி சிறிது காலத்திற்கு நபி வரவில்லை
பின்பு பனி இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் அமானத் சீர் குலைக்க படுகிறது.
இதன்பின்புதான் நபி மூஸா அலை அவர்கள் வருகிறார்கள்.
பனி இஸ்ரவேலர்கள் இதை சரியான முறையில் பாதுகாக்க முடியாமல் போனதிற்காக இப்லீஸின் தூண்டுதலின் பெயரில் பின் வந்தவந்தான் ஃபிர்அவுன்( இதை அல்லாஹ் அவர்கள் மீறியதிற்காக ஃபிர்அவுனை சோதனையாக வைத்தான் என்றும் சொல்லலாம்) அந்த சோதனை பின்பு அவர்களுக்கு மூஸா நபி மூலம் இறக்கம் காட்டுகிறான்.
இந்த முறை அந்த மக்களுக்கு உறுதிமொழி அல்லாஹ்விடம் இருந்து உறுதிமொழி மற்றபடுகிறது.
மூஸா நபி அவர்கள் கூடவே இருந்து சுமார் 350 வருடங்கள் வாழ்ந்து பல செயல்களை திருத்தி விட்டு இருந்தார்கள்.
மூஸா நபி இறந்ததும்
(நபியே!) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா? அவர்கள் தம் நபியிடம்: “நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்ப்படுத்துங்கள்” என்று கூறிய பொழுது அவர், “போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 2:246)
அவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்
(அல்குர்ஆன் : 2:247)
அந்த மக்கள் எங்களுக்கு போரிட ஒரு நபியை கேட்கிறார்கள் அப்போது உங்களுக்கு போர் கடமையாக்கப்பட்டால் போரிட மாட்டிர்களா என்று கேட்டுவிட்டு அல்லாஹ்
தாலூத் நபியை கொடுத்து பின்னர் அல்லாஹ் முன்னே உள்ள உறுதிமொழி மாற்றப்படுகிறது
உங்கள் மீது போர் கடமையாகிறது என்று.
இதன் பின்பு அவர்கள் அழிச்சாட்டியத்தால் அவர்களுக்கு அல்லாஹ் பாபிளோனில் இருந்து ஒரு அரசன் மூலம் அவர்களுக்கு வேதனை கொடுக்கிறான்.
பின்பு தாவூத் நபி ஜபூர் வேதம் கொடுக்கப்பட்டு அதில் பிற்காலத்தில் அவர்களுக்கு அல்லாஹ் கொடுக்க கூடியதை பற்றி முன்னறிவிப்பு கொடுக்கிறான்
நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 21:105)
இதன் பின்பு பல நபிமார்கள் வருகிறார்கள்
கடைசியாக நபி ஈஸா அலை அவர்கள் வருகிறார்கள்.
தாவூத் நபி காலத்தில் கொடுக்கப்பட்ட போர் நபி ஈஸா அலை அவர்கள் வரை தொடர்கிறது
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்கள் யார் என்று கேட்கிறார்கள்
“அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
(அல்குர்ஆன் : 3:52)
அவர்களில் சில நயவஞ்சகர்கள் ஈஸா அலைஹி அவர்களை கொல்ல திட்டமிட்டதால் அவரை அல்லாஹ் உயர்த்திவிட்டு
மீதி வேலையை நபி ஸல் அவர்களிடம் அவர்கள் காலத்தில் கொடுகிறான்
ஒவ்வொரு முறையும் காஃபிர்களாய் மாறிய கூட்டத்தை இந்த உலகில் விட்டுவைத்து விட்டு
அந்த காஃபிர்களையும் சேர்த்து நீங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்று தன்னுடைய அடியார்களிடம் அல்லாஹ் கொடுகிறான்
அடுத்த வந்த தலைமுறைக்கு தன்னுடைய அறிவுரை கொடுத்துவிட்டான் கொடுத்துவிட்டு அமானத்தை பாதுகாக்க தவறியவர்களை முன் சென்ற காஃபிர்களை வைத்து வேதனை தருவதே அல்லாஹ் தன்னுடைய ஃபித்ரத்தாக மாற்றிவுள்ளான்.
இப்போது உள்ள முஸ்லீங்களுக்கு முன்னால் பனி இஸ்ரயீல்கள்தான் முஸ்லீம்கள் அப்போது வழி தவறிய பனி இஸ்ரவேலர்கள் மீது அல்லாஹ்வின் வேதனை காஃபிர்களை வைத்துதான் அல்லாஹ் கொடுத்தான் இது இப்போது உள்ள பொதுவான அறிஞ்சர்களின் கருத்தும் கூட
இப்போது உள்ளவர்கள் யஃகூப் அவர்களின் வாரிசுகள் இல்லை முழுவதுமாக மாறிய காஃபிர்கள் ஆவரகள் (ஒரு சிலரை தவிர)
நபி ஸல் காலத்தில் பனி இஸ்ரவேலர்களையும் சேர்த்து அல்லாஹ் இந்தமுறை உதவியாளர்களாக நபி ஸல் அவர்களுக்கு யார் இருக்க போகிறீர்கள் என்று கேட்கிறான்.
ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?” எனக் கேட்க, சீடர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்” என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.
(அல்குர்ஆன் : 61:14)
இதுவரை உள்ள காஃபிர்கள் முன் வேதம் கொடுக்கப்பட்டு அதை சரிவர செய்ய தவறியவர்கள் ஆவார்கள் (முழுவதுமாக காஃபிர்கள், காஃபிர்களின் நண்பர்கள், ஒரு சிலரை தவிர)
ஆனால் இப்போது வேதம் கொடுக்கப்பட்டவர்கள் முஸ்லீம்கள் (முதலில், அரபிகள் அதன் பின்பு யார் முஸ்லீங்களாக யார் தன்னை முன்னிலை படுத்துகிறார்களோ அவர்கள்)
இப்போது அல்லாஹ்வின் அமானத் பேணக்கூடியவர்கள்
தன்னை முன்னிலை படுத்தும் முஸ்லீம்கள் (நபி ஸல் அவர்களின் உம்மத்துக்கள்)
பேணக்கூடிய முதல் அமானத் என்னவென்றால் குர் ஆன் தான்
ஏனென்றால் அதில்தான் சட்டதிட்டங்கள் கூறப்பட்டுள்ளன
இதை பேணக்கூடியவர்கள் பேணட்டும்
இதை பேணமுடியாதவர்கள் மீதுதான் தற்காலிகமாக இப்லீஸ் வந்து போவான்
மேலும் பேணமுடியாத பிடிவாத மக்கள் தன்னுடைய ஆன்மாவை முன் சென்ற சமூகத்தோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும்.
குர் ஆனில் காஃபிர்களை மட்டும் இல்லை முனாஃபிக்குகளையும் சேர்த்து அல்லாஹ் அடையாளம் காட்டிவிட்டான்.
குர் ஆனை வைத்து தன்னுடைய ஈமான உரசி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஜின்களுக்கே குர்ஆன் வந்த நோக்கம் புரிந்து விட்டது
முஹ்மீன்களை தவிர பெரும்பாலான மக்களுக்கு குர்ஆன் உள்ள நோக்கம் புரியவில்லை
நிச்சயமாக, ஜின்களில் சில (திருக் குர்ஆனை) செவிமடுத்து(த் தம் இனத்தாரிடம் கூறினர்:) “நிச்சயமாக நாங்கள், மிகவும் ஆச்சரியமான ஒரு குர்ஆனை கேட்டோம்” என்று கூறினர், என எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டதென்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 72:1)
இந்த குர் ஆனை கேட்டு சில ஜின்கள் ஈமான் கொண்டது.
முஸ்லீங்களே குர்ஆனை ஆழமாக சிந்தியுங்கள்.
இத்தோடு இந்த பாகத்தை முடித்து கொள்கிறேன்.
நாம் நல்ல ஒரு அமைதியான ஊரில் வசிக்கிறோம் என்று சிந்திப்பது மிக மிக மோசமான விளைவை தரும்
நபி மார்கள் வரக்கூடிய கால கட்டம் மிகவும் அறியாமையினால் இருக்க வேண்டும்
அப்படிப்பட்ட அறியாமை கால கட்டம் சிறிதாக வேறு ஒரு பாகத்தில் காண்பிக்கிறேன்
Comments
Post a Comment