தஜ்ஜால் பாகம் 1

 எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்ற வார்த்தையோடு துவங்குகிறேன்.


எங்களுக்கு வந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


எங்களுக்கு வந்த கல்வி எப்போது விடைபெறும் என்று தெரியவில்லை.


எங்களோட கல்வி விடைபெறும் முன் உங்களுடன் பகிர்கிறேன்.


கருத்து வேறுபாடு இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் நாங்கள் அதை வரவேற்க்கிறோம்.


தஜ்ஜால் 

பாகம் 1 

இது சுவாரசியமான கதை இல்லை


சிந்தித்து மனிதன் நேர்வழி பெற மட்டுமே இதனை விளக்குகிறோம்.


இந்த தலைப்பை தொடங்கும் முன் ஒரு விஷயம் சொல்லி கொள்ள விரும்புகிறோம்.


குர் ஆனில் 3 விதமாக அல்லாஹ் மனிதர்கள் செய்யும் தவறுகளை பார்த்து கூறுவான்.


 1.மனிதர்களாகிய உங்களை நான்தான் வழிக்கெடுக்கிறேன்.

2. மனிதர்களாகிய உங்களுக்கு இப்லீஸ் எதிரி தெளிவான பகைவன்

3. மனிதர்களாகிய நீங்கள் உங்கள் கையாலே அழிவின் பக்கம் செல்லாதீர்கள்



நாங்கள் இந்த தஜ்ஜாலின் தலைப்பில் மூன்றையும் கொண்டு வந்துள்ளோம்.


1. அல்லாஹ்தான் நீங்கள் செய்யும் அநியாயத்தால் தஜ்ஜாலை அனுப்புகிறான்.

2. இப்லீஸ் தெளிவான பகைவன் (மனோ இச்சை)

3. புஹாரி 7406. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ, உங்கள் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை வேறுசிலர் அனுபவிக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோறினார்கள்.


அல்லாஹ்வின் வேதனை (வேறு பல வழிகளில் இருந்தாலும்) நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு பூமியில் ஒருவருக்கொருவர் போர் புரிந்துகொண்டு இருக்கிறார்கள் இதுவே அல்லாஹ்வின் வேதனையாகும்.


“உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து...” என்பதைக் கேட்டவுடன் “இது (முந்தைய வேதனைகளைவிட) மிக எளிதானது” என நபி (ஸல்) அவர்கள் அதே ஹதீதில் கடைசியில் கூறினார்கள்.


மனிதர்களுக்கு உண்டான இபாதத்துகள் தொழுகை மற்றும் அதை சார்ந்த சட்ட திட்டங்களை சொல்லிக்கொடுக்க மதரசா உள்ளது,


மறுமை நாளின் அடையாளங்கிளில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் தஜ்ஜால் சார்ந்த அரசியலை உலகம் தான் சொல்லிக்கொடுக்கும் (குறிப்பாக இந்த தலைப்பை முஸ்லீம்களை விட பெரும்பாலான மாற்று மத சகோதர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள்)


தஜ்ஜால், யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் தலைப்பை எந்த மதரசாவது சொல்லி கொடுத்ததுண்டா?கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.


இந்த தலைப்பை ஒருவருக்கொருவர் கலந்து பேசி முடிவு செய்ய ஒன்றாகும்.


தஜ்ஜால், யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ்   என்ற தலைப்பு பெரும்பாலான அறிஞ்சர்களால் எடுத்து பேசமுடியாத தலைப்பு இது!


அப்படியே பேசினாலும் ஏதோ கனவு உலகத்தில் நடப்பது போல் பேசுகிறார்கள்.


நிஜமாக உலகத்திற்கு அவன் வந்து கொடுக்க கூடிய குழப்பங்கள் வேறு, உலகத்தில் அவன் காட்சியளிக்காமல் கொடுக்க கூடிய குழப்பங்கள் என்பது வேறு


தஜ்ஜால் ஒரு தீவில் இருந்து தமீமுத் தாரியிடம் சொல்வதையெல்லாம் புரிந்தால் அவனால் உலகத்தில் காட்சியளிக்காமல் குழப்பங்களை ஏற்படுத்த முடியும் இந்த ஹதீதை பின்பு கூறுகிறோம்.


புஹாரி 833. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் தஜ்ஜா-ன் குழப்பத்தி-ருந்து பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றுள்ளேன்.


தஜ்ஜால் வரக்கூடிய நாளில்தான் தஜ்ஜாலின் சோதனை வரும் என்றால் (அல்லாஹ்விடம் நபி ஸல் அவர்கள் தஜ்ஜாலின் சோதனையிலிருந்து பாதுகாப்பு கூற காரணம் என்ன?)


முஸ்லீம் 5645. 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களைப் படைத்தது முதல் யுக முடிவுநாள் ஏற்படும்வரை தஜ்ஜாலைவிட (குழப்பத்தை ஏற்படுத்துகின்ற) மிகப் பெரும்படைப்பேதும் இல்லை" என்று கூறினார்கள்.


நபி ஸல் அவர்கள் தஜ்ஜாலைவிட (குழப்பத்தை ஏற்படுத்துகின்ற) மிகப் பெரும்படைப்பேதும் இல்லை" என்று கூறுவது எதோடு ஒப்பிடுகிறார்கள் என்று சிந்தியுங்கள்.



புஹாரி 3057. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தாரை அவனைக் குறித்து எச்சரித்துள்ளார்கள். 



( நூஹ் அலை அவர்கள் கூட தஜ்ஜாலை பற்றி தன்னுடைய சமூகத்திற்கு எச்சரித்திருக்கிறார்கள் என்றால் அவனுடைய வயதை கணக்கிட்டு கொள்ளுங்கள்)


இதையெல்லாம் நாங்கள் கூறுவது அவனுக்கு அல்லாஹ் கொடுத்த அம்சங்கள் ஆகும்.


தஜ்ஜால் வந்தால் நாம் இலகுவாக இனம் கண்டுகொள்ளலாம் என்று கவனக்குறைவாக இருக்கிறோம்.


ஒருவர் மரணிக்கும் போது லா இலாஹா இல்லல்லாகு முஹம்மதர் ரஸூறுல்லாஹ் என்று சொல்லிவிடலாம் வாழம்போது எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். என்று எண்ணுவது எப்படியோ!

அதே போல்தான் தஜ்ஜால் கடைசி வரும்போது அவன் நெற்றியில் காஃபீர் என்ற எழுத்தை வைத்து புரிந்து கொள்ளலாம் வாழம்போது எப்படி வேண்டுமென்றாலும் இருந்துகொள்ளலாம் என்று எண்ணிக்கொள்கிறோம்.


ஒருவர் வாழம்போது முஸ்லீமாக வாழ முயன்றால்தான் இறக்கும் போது கலிமாவை கூற முடியும்.


அல்லாஹ்வின் அரசியல் புரியவில்லை என்றால் தஜ்ஜாலின் அரசியல் புரியாது.


அதுபோக நபி ஸல் அவர்கள் அவனுடைய சோதனை எதோடு ஒப்பிடுகிறார்கள் 


புஹாரி 86


நபி (ஸல்) அவர்கள் அவர்கள் எனக்கு (பின்வருமாறு) இறைவனிடமிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில் பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்க மான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள்.


இந்த தலைப்பை ஒரு சில பெரிய அறிஞ்சர் ஷேக் இம்ரான் ஹுசைன், ஷேக் மவுதூதி, இஷ்ரார் அகமது, பேசிய வழி முறை படி எங்களோட சிறிய விளக்கம் சேர்ந்து இருக்கும் (தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்)



 இந்த தலைப்பை நாம் சொல்லும் முறையில் நம்பினால்தான் நாம் முஸ்லீம்கள் ஆகுவோம் இல்லையென்றால் காஃபிர்கள் என்று நாங்கள் சொல்ல வரவில்லை, அந்த சொல்லுக்கு தகுதி படைத்தவன் அல்லாஹ் ஒருவனே.



ஒரு வேளை இந்த தலைப்பு  நாங்கள் சொல்லும் இந்த முறையில் தஜ்ஜால் உடைய குழப்பங்கள் இருந்தால் என்ன செய்வது?


ஆகவே சிந்தனையை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.


 தஜ்ஜால்,யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ்  இவர்கள்தான் என்பதற்கும் 

 இவர்கள் தஜ்ஜால்,யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் இல்லை என்பதற்கும் !

ஆதாரம் இல்லை



நாங்கள் எப்படி கூறுகிறோம் என்றால் ஒரு வேளை இந்த அரிஞ்சர்கள் கூற்றுபடி இருந்தால் இந்த விளக்கம் நமக்கு  கை கொடுக்கும். இல்லையென்றால் உலகத்தில் என்ன நடக்கிறது என்று புரியாத புதிராக இருக்கவேண்டியதுதான்.


அல்லாஹ் குர்ஆனில் கூறும் சொல்படி சோதனை இல்லாமல் நீங்கள் சாதாரணமாக சொர்க்கதை அடைய முடியுமா?


அல்லாஹ்வுடைய தீனில் முழுமையாக ஈடுபட்டவர்களுக்கு இந்த தலைப்பு தேவை இல்லை ஏனென்றால் அவர்கள் முழுமையாக தீனில் உள்ளனர் அவர்களை இந்த தஜ்ஜாலுடைய குழப்பங்கள் ஒன்றும் செய்யாது அவர்களை அல்லாஹ் பாதுகாக்கிறான்


இந்த தலைப்பு தேவை படக்கூடியவர்கள் சாதாரண மனிதர்கள்

எந்த அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் அல்லாஹ்வின் நினைவை விட்டு வெளியே சென்றவர்கள்.


இப்போது உள்ள இந்த நிலையிலாவது அல்லாஹ் நமக்கு புரியவைத்ததற்கு நன்றி செலுத்துவோம்.


யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ்   என்பவர்கள் மனிதர்கள் ஆவார்கள் என்பதை ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளோம்.


இவர்கள் மனிதர்கள்தான் என்று விளங்கியுள்ளவர்கள் இந்த அறிஞ்சர்களின் விளக்கம் பயனளிக்கும்


மறுமை நாளின் பெரிய அடையாளங்கள் என்று வரக்கூடிய நிகழ்வுகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று ஒற்றுமை உள்ளது.


இதில் முதன்மையாக உள்ளது தஜ்ஜால்,யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ்   இந்த இருவரும் தான்


தஜ்ஜால் என்பவனின் வருகை முதலிலும் அவனுடைய குழப்பங்கள் பின்பும் வராது (உலக நிகழ்வின் படி அவனுடைய குழப்பங்கள் முதலிலும் அவன் வருகை பின்பும் இருக்கும்.


அது எப்படி சாத்தியம் என்று பாக்கலாமா


ஒருவர் வந்த பின்புதான் குழப்பங்கள் இருக்க வேண்டும் என்பது சாதாரண மனிதனுக்கு பொருந்தும்.


தஜ்ஜால் என்பவன் உலகில் மக்கள் நேரடியாக காண முடியாமல் அவன் உலகில் நடக்கும் நிகழ்வுகளை கவனிக்க முடியும்


அதன் ஆதாரம்


இப்போது உலகத்தில் நடக்கக்கூடிய குழப்பங்கள் எல்லாம் அவன்தான் மறைவில் இருந்து செய்கிறான் என்று செல்கிறோம்.


அவனால் மறைவில் இருந்து குழப்பங்கள் செய்யமுடியுமா என்ற ஆதாரம் கீழே 


தமீமுத் தாரீ சொன்ன நீண்ட ஹதீஸ் 

இதை இங்க கூற காரணம் தஜ்ஜால் தான் இருக்கும் இடத்தில் இருந்தே நபி ஸல் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து வைத்துள்ளான்.  என்றால் அவன் சாதாரண மனிதன் இல்லை

தஜ்ஜால் நிஜமாக உலகத்தில்  இல்லாமல் இப்போது உலகத்தில் நடக்கக்கூடிய குழப்பங்கள் எல்லாம் தஜ்ஜால் செய்வது சாத்தியமா இல்லையா ? ஹதீஸை படியுங்கள்


(நாம்தஜ்ஜாலை நம் அருகில் இருக்கும் ஒரு சாதாரண மன்னனை போல் எண்ணுகிறோம்.

அவனுக்கு உலகம் முழுவதும் செல்ல சக்தி கொடுக்கப்பட்டுள்ளது.

 அப்படியென்றால் அவனது திறமையை சாதாரணமாக எடை போடவேண்டாம்.


இது ஒரு நீண்ட ஹதீஸ் தஜ்ஜால் எப்படி பட்டவன் என்பது புரியவைக்க தஜ்ஜால் ஒரு தீவில் வந்தவர்களிடம் கூறுவதை மட்டும் கூறியுள்ளோம். (தேவையுள்ளதை நேரடியாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்)


முஸ்லீம் 5638. ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:


கிறித்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் (என்னிடம்) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.

அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார். அது(பெருங்குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது. அவர் என்னிடம் கூறினார் இது அவனுக்கே கொடுக்கப்பட்ட திறமை என்று சொல்லலாம் (முஸ்லீம்களுக்கு இது சோதனையாகும்)


தஜ்ஜால் அவன்"பைசான் பேரீச்சந்தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்றான். "அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று கேட்டோம்.

அதற்கு அவன், "அந்தப் பேரீச்சந்தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன்" என்றான். நாங்கள் "ஆம்" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள். அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று கூறினான்.

பிறகு "தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?"என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான்.

பிறகு, "(ஷாம் நாட்டிலுள்ள) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நாங்கள், "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?" என்றோம். அதற்கு அவன், "அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம், அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது. அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள்" என்று சொன்னோம்.

பிறகு அவன், "எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள். அவர் (இப்போது) என்ன செய்கிறார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் (மதீனாவில்) தங்கியிருக்கிறார்" என்று பதிலளித்தோம்.

அவன், "அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள், "ஆம்" என்றோம். அவன், "அவர்களை அவர் என்ன செய்தார்?" என்று கேட்டான். நாங்கள், "அவர், தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார். அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர்" என்று சொன்னோம். அதற்கு அவன், "அப்படித்தான் நடந்ததா?" என்று கேட்டான். நாங்கள் "ஆம்" என்றோம்.

அவன், "அறிந்துகொள்ளுங்கள். அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும். (இனி) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன்: நான்தான் மசீஹ் (அத்தஜ்ஜால்) ஆவேன். நான் (இங்கிருந்து) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது.


தஜ்ஜால் ஒரு தீவில் இருந்து கொண்டு மதினாவில் நபி என்ன செய்கிறார் அவருக்கும் அரேபியருக்கும் போர் நடந்ததா?, ஷாம் நாட்டின் நீர் நிலை பற்றி?, தபரியா நீர் நிலை பற்றி?, என்று அங்கே தீவில் வந்த தமீமுத் தாரி மற்றும் அவர்களுடைய மக்களிடம் எப்படி சொல்லமுடியும்,


இதிலிருந்து தஜ்ஜால் ஒரு தீவில் இருந்து குழப்பங்கள் செய்ய முடியும் என்பதை நம்ப முடியும்.


மறுமையின் பெரிய அடையாளங்கள் என்பது இந்த நடக்கக்கூடிய ஹிஜிரி ஆண்டையும் சேர்த்து உள்ளதுதான்.


மறுமை நாள் என்ற அந்த குறிப்பிட்ட நாள் (நேரம்) மனிதர்கள் நினைக்க கூடிய அந்த நாள் கடைசி நாள் தான் அது உண்மையாக நிகழும்.


அதனுடைய அடையாளங்கள் என்பது அந்த கடைசி குறிப்பிட்ட நாளில் நடக்காது நடக்கவும் சாத்தியம் இல்லை


யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் இவர்களின் தலைவன் (தஜ்ஜால்) என்று சொல்லலாம்


நபி ஸல் அவர்கள் கூறியது என்னுடைய மரணதிற்கு பின்பு மறுமை நாள் தொடங்கிவிட்டது என்ற சொல் அந்த கடைசி நாளை குறிக்காது.


மறுமை நாள் என்பது அல்லாஹ்வுடைய நாள் ஆகும் மனிதனுடைய நாள் இல்லை.


நீங்கள் கணக்கிட கூடிய ஆயிரம் ஆண்டுகள் அல்லாஹ்வுக்கு ஒரு நாள்


(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

(அல்குர்ஆன் : 22:47)


இதுவும் வேதனை பற்றி பேசக்கூடிய வசனம் நபி ஸல் காலத்தில் அல்லாஹ் கூறியது.

இதிலிருந்து தெரிகிறதா மறுமை நாள் அடையாளம் என்பது அந்த குறிப்பிட்ட நாளை குறிப்பிட வில்லை என்று.


ஆகவே நபி ஸல் அவர்கள் இறந்ததிற்கு பின்பே மறுமையின் அடையாளம் தொடங்கி விட்டது. அதுவும் சாதாரண அடையாளம் இல்லை


மறுமையின் பெரிய அடையாளங்களில் உள்ள தஜ்ஜால் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் அடையாளம் ஆகும்.


இதிலிருந்து நாங்கள் பேசக்கூடிய தஜ்ஜால் பற்றி வார்த்தைகள்  இந்த கட்டுரையில் கூறிகிறோம் இதை தஜ்ஜால் வெளிவரவில்லை அவனுடைய குழப்பங்களை பற்றி பேசுகிறோம் என்று புரிந்துகொள்ளுங்கள்.


இந்த கட்டுரையில் இப்போதும் கூறுகிறோம்,


உண்மையான மறைவான அந்த நேரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் அவனை தவிர யாருக்கும் தெரியாது.


இதை அல்லாஹ்வே கூறுகிறான்.

 ‏

(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.

(அல்குர்ஆன் : 79:42)


அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?

(அல்குர்ஆன் : 79:43)


அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.

(அல்குர்ஆன் : 79:44)


அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,

(அல்குர்ஆன் : 79:45)




உதாரணமாக இன்னும் 400 அல்லது 500 வருடங்களில் உலக அழிவு வந்துவிடும் என்று சொல்வது


ஒரு ஆய்வின் அடிப்படையில் மட்டுமே ஒரு வேளை அடுத்த வருடத்தில் அழிவு வரும் என்பதும் ஆய்வின் அடிப்படைதான் ஆகையால் மறுமையின் அந்த நேரம் அல்லாஹ்வே அறிவான்.


அதன் அடையாளங்கள் நாங்கள் கணக்கிட்ட படி தோராயமாக தஜ்ஜாலின் வருகை இந்த நூற்றாண்டிலோ, அடுத்த நோற்றாண்டிலோ வருவதற்கு உண்டான வாய்ப்பு அதிகம்.




அதன் விளக்கங்கள் பின்வருமாறு


முஸ்லீம் 5629 தஜ்ஜால் என்பவன் சிறியாவுக்கும், ஈராக்குக்கும் இடையே இருந்து புறப்பட்டு வருவான்


இந்த இடம் அவன் உண்மையாக வரக்கூடிய இடமாக இருந்தாலும்


நபி ஸல் அவர்கள் இறந்ததற்கு பின்பு உமர் ரலி அவர்கள் ஆட்சி காலம் தொடர்ந்து


முஆவியா (ரலி), அலி (ரலி) ஹசன் (ரலி), ஹுசைன் (ரலி) வரை இவர்கள் உம்மத் வரை இஸ்லாமிய ஆட்சியின் கீழ் உள்ள இடம் என்று சொல்லப்போனால் கிழக்கில் இப்போது இருக்கக்கூடிய ஈராக் முதல் மேற்கில் பாலஸ்தீனம் வரைக்கும் இருந்தது.


முஆவியா ரலி தலைமையிடமாக ஆட்சி செய்த இடம் இப்போது உள்ள டாமஸ்கஸ் (சிரியா)

அலி ரலி அவர்கள் தலைமை இடமாக வைத்து இருந்த இடம் பாக்தாத் (ஈராக்) இங்குதான் உஸ்மான் ரலி அவர்களின் கொலை சம்பவம் மூலம் முதன் முதலில் ஒரு குழப்பம் தோன்றுகிறது


நபி ஸல் சொன்னது தஜ்ஜால் சிறியாவுக்கும், ஈராக்குக்கும் இடையே இருந்து புறப்படுவான் என்று கூறினார்கள்


நாங்கள் இவனுடைய குழப்பம் சிறியாவுக்கும், ஈராக்குக்கும் இடையே இருந்து நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு தொடங்கி விட்டது என்று கூறுகிறோம்.



 முஸ்லீம் 5629:வலப்பக்கத்தில் இருந்தும் இடப்பக்கத்தில் இருந்தும் அக்கிரமங்களை கட்டவிழ்த்து விடுவான் என்று கூறினார்கள்.


இதனுடைய அர்த்தம் அவன் வந்ததும்  நேரடியாக உள்ள குழப்பங்களும் இருக்க கூடும்.


நாங்கள் சொல்லும் இந்த அர்த்தங்களும் இருக்க கூடும் 


இந்த வலப்புறம், இடப்புறம் குழப்பங்கள் யசீத் பின் முஆவியா காலத்திலும் உமையா கலீபா காலத்திலும் நடந்த குழப்பங்கள் ஆகும். கஃஹ்பா தீக்கரை ஆக்கப்பட்டது என்றும் ஒரு வரலாறு நிகழ்வு உண்டு என்று கூறுகிறார்கள்.


இந்த வலப்புறம், இடப்புறம் என்பதை அல்லாஹ்வுடைய தீனில் ஒன்று சேராமல் அவர்கள் தன்னிடம் உள்ளதை வைத்து திருப்த்தி அடைந்ததால் இதை அல்லாஹ் தஜ்ஜால் மூலம் இந்த குழப்பங்களை அல்லாஹ் கொடுத்து இருக்கிறான் என்றும் சொல்லலாம்.


நபி ஸல் அவர்கள் பின்பு வந்த ஆட்சியாளர்கள் 12 நபர்கள் குறைசியர்கள்தானே அவர்கள் எப்படி இந்த குழப்பங்களில் சிக்கி இருப்பார்கள் என்று வியந்து போகலாம்.


அதே நடைமுறையில் நபி ஸல் அவர்கள் பின்பு ஹசன் ரலி, ஹுசைன் ரலி இவர்களுக்கு பின்பு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களுடைய ஆட்சியும் நபி ஸல் அவர்கள் செயல் முறை வைத்து இவர்களின் ஒற்றுமை பார்த்தாலே தெரியும்.


ஆகவே தஜ்ஜாலின் குழப்பங்கள் இது போல் இருந்தால் அல்லாஹ்வுடைய தூதர் அந்த சமயத்தில் உறுதியோடு இருங்கள் என்று கூறினார்கள்.











(இப்போது நாங்கள் ஒரு கேள்வி கேட்கிறோம் இது எங்களுடைய சொந்த கேள்விதான் இது எந்த மார்க்க அறிஞ்சர்களின் கருத்தும் இல்லை.


நபி ஸல் அவர்கள் குறைசியர்கள் செய்த தவறினால் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் அந்த சுவர் ஒரு ஓட்டை விழுந்து விட்டது என்று கூறினார்கள்.


அதன் விடை குறைசியர்கள் செய்த தவறினால் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் என்பவர்கள் சோதனை மூலம் அல்லாஹ் அவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டான்.


நீங்கள் அந்த யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் அப்போது எங்கே என்று கேட்டால், நாங்கள் இப்போது குறைசியர்கள் எங்கே என்று கேட்போம்.)





யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் அவர்களின் தலைவன் தஜ்ஜால் வழியாக இந்த உலகத்தில் குறைசியர்களுக்கு தண்டனை வழங்கிவிட்டான்


தஜ்ஜாலை பற்றி அவன் எப்படி இருப்பான் அவனுடைய அடையாளங்கள் எல்லாம் நபி ஸல் அவர்கள் கூறிவிட்டார்கள் ஆனால் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் பற்றி அடையாளங்களை தஜ்ஜாலுடைய அளவுக்கு கூறவில்லை.


யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் யார் எப்படி இருப்பார்கள் அவர்களின் அடையாளங்கள் எல்லாம் அந்த நிகழ்காலத்தில் அங்குள்ள முஸ்லீம் அரிஞ்சர்களே அடையாளம் காணமுடியும்.


இதற்காகத்தான் இஜ்மா அவசியம்.............

Comments