தஜ்ஜால் பாகம் 2

 எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்ற வார்த்தையோடு துவங்குகிறேன்.


எங்களுக்கு வந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


எங்களுக்கு வந்த கல்வி எப்போது விடைபெறும் என்று தெரியவில்லை.


எங்களோட கல்வி விடைபெறும் முன் உங்களுடன் பகிர்கிறேன்.


கருத்து வேறுபாடு இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் நாங்கள் அதை வரவேற்க்கிறோம்.



பாகம் 2


இது அறிஞ்சர்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் நாங்களே சில வருட கணக்குகள் தொகுத்து தந்துள்ளோம்.



நாம் குழந்தைகளில் இருந்து  நாம் படிக்கும் மதரசாக்கள் நமக்கு சொல்லி தரக்கூடிய பாடம் (தொழுகை எப்படி தொழுவது, நோன்பு எப்படி வைப்பது, இதுபோன்றதே கூறுவார்கள்)இது இபாதத் சம்பந்த பட்டது.


சமூகத்தில் நடக்கும் பிரச்சனை, குடும்ப விவகாரம், கடன் கொடுக்கல் வாங்கல், நீதி செலுத்தும் விவகாரம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இது போன்ற செயல்களுக்கு தீர்வு நடக்கும் அந்த சமயத்தில் குர் ஆனில் இருந்து நேரடியாக எப்படி தீர்வு எடுக்க வேண்டும் என்ற முறையை எந்த மதராசக்கள் சொல்லி கொடுத்து பார்த்து இருக்கிறோம்.?


நடைமுறையில் இதே போன்ற செயலை காண்பிக்க முடியுமா?


ஒரு சிலரை தவிர பெரும்பாலான மக்கள் இருளில் தான் இருக்கிறார்கள்.


நாங்கள் இந்த பகுதியில் ஜெயித்து விட்டோம் என்று கூறவில்லை,


அநியாய காரர்களை விட்டும் எங்களை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.


நாங்கள் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கத்தில் பேசுகிறோம்.


சமூகத்தில் மதரசாவும், அரசியலும் தனித்தனியாக பிரித்து வைத்து

தஜ்ஜால் தன்னுடைய குழப்பங்களை சீராக எடுத்து போய்க்கொண்டுதான் இருக்கிறான்.


நாங்கள் சொல்லும் இந்த பதிவு புதிதாக இருக்கும்.

சற்று சிந்தியுங்கள் ஒருவேளை நாங்கள் கூறும் இந்த விளக்கங்களும் பயன்பெறலாம்.


இஸ்லாம் இப்படித்தான் மனிதர்களிடம் வந்து சேரும் இனி தேர்ந்தெடுப்பது மனிதன் கையில்.


ஒரு மாற்று மத சகோதரன் நம்மிடத்தில் வந்து ஒரு கேள்வி கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.


நபி ஸல் அவர்கள் ஒரு மத குறுதானே அவர்கள் கையில் கத்தி எதற்கு என்று கேட்கிறான்?


பதில் தெரியுமா? பதில் கூறமுடியுமா?


ஏனென்றால் நபி ஸல் அவர்கள் மத போதகர் + நாட்டின் தலைவர் + போர் வீரர் 

அவர்கள் கையில் கத்தி இருக்கத்தான் செய்யும் ( ஏன் இப்போது நாட்டில் உள்ள மக்களிடம் ஆயுதங்கள் இல்லையா என்ன?)


நபி ஸல் அவர்கள் காலத்தில் மக்களுக்கு அரசியல், வாழ்வாதாரம், சட்டத்திட்டங்கள் என்று இப்படி எல்லாமே ஒருவர் கையில் தான் இருந்தது, அபூபக்கர் ரலி , உமர் ரலி அவர்கள் ஆட்சியிலும் எல்லாம் ஒரே ஒருவர் கையில்தான் இருந்தது.


💓அவர்தான் கலீஃபா 💓


அப்படியிருந்த அந்த அரசியல், நீதி, எல்லாம் அநியாயகாரர்கள் கையில் போனது எப்படி?


இறைவனை வணக்குவதும் மத சம்பந்தமானவைகள் எல்லாம் மத குருமார்கள் கையில் போனது எப்படி?


இந்த பிரிவினை எப்படி வந்தது?


தஜ்ஜால் என்ற ஒருவன் தான் செய்ய முடியும்.


இதை சில அரிஞ்சர்கள் இப்லீஸ் என்றும் கூறுவார்கள்


இப்லீஸ் என்பவன் மறைமுகமானவன் அவனை நம்மால் பார்க்க முடியாது!


வரக்கூடிய காலங்களில் நம்முடைய கண்களால் தஜ்ஜாலை பார்க்கமுடியும்.


ஆகவே இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்.


கண்ணெதிரே நடந்த குழப்பங்களை நாம் தவறவிட்டுவிட்டோம்.


கண்ணெதிரே நடந்த விஷயங்களை வாருங்கள் காண்போம்.


முஸ்லீம் 5629 ஹதீதில் இருந்து தொகுத்து தருகிறோம்


அல்லாஹ்வுடைய தூதர் அவன் (தஜ்ஜால்) உலகில் 40 நாள் தங்கி இருப்பான் என்று கூறினார்கள்


இந்த குழப்பத்தை 2 ஆக பிரிக்கலாம் ஒன்று அவன் உலகில் உண்மையாகவே 40 நாள் தங்கி இருப்பான் ,


இரண்டு அவனுடைய குழப்பங்கள் என்பது வேறு


அவனுடைய குழப்பங்கள் நபி ஸல் இறந்த பின்பே தொடங்கிவிட்டது.


தஜ்ஜால் வரக்கூடிய நாட்கள் அன்றைய (முதல் 10 நாள் )ஒரு நாள் ஒரு ஆண்டை போன்று


(இரண்டாம் 10 நாள் ) மறுநாள் ஒரு மாதம் போன்று


(மூன்றாவது 10 நாள்) மறுநாள் ஒரு வாரம் போன்று


(நான்காவது 10 நாள் ) அடுத்த வரக்கூடிய நாள் உங்களில் சாதாரண நாள் போன்று என்று கூறினார்கள்.


இதில் கூறப்பட்ட ஒவ்வொரு நாளும் பல ஆண்டுகள் சம்பத்தபட்டது.(நாங்கள் முன்னயே கூறின அரிஞ்சர்களுடைய விளக்கங்களை சேர்த்து எங்களுடைய விளக்கத்தையும் கொடுக்கிறோம்) 


நபி ஸல் அவர்கள் 40 நாள் என்று சொன்னதும் நாங்கள் சொல்லுவது புதிதாகவும் தோன்றுகிறதா ?


நபி ஸல் அவர்கள் போதுமான அளவு விளக்கிவிட்டார்கள் அதை இந்த தஜ்ஜால் தலைப்பில் தொகுத்து தருகிறோம்.


அது போக இதையெல்லாம் உலகத்தோடு ஒப்பிடுவது நாம் அனைவரின் கடைமையும் கூட


இந்த ஒப்பிடுதல் அல்லாஹ் நமக்கு கொடுக்கிற சோதனை என்று புரிந்துகொள்ளுங்கள்.



இந்த விஷயத்தை சற்று ஆழமாக சிந்திக்கலாம்


40 நாளை 4 ஆக பிரிக்கலாம்


முதல் 10 முதல் நாளாகவும்

இரண்டாம் 10 இரண்டாவது நாளாகவும்

மூன்றாம் 10 மூன்றாவது நாளாகவும்

நான்காம் 10 நாலாவது நாளாகவும் வைத்து கொள்வோம்.


இனி உலகம் முடியக்கூடிய நாள் எத்தனை வருடம் உள்ளது  யாருக்காவது தெரியுமா? (எந்த ஒரு மனிதனாலும் )உறுதியிட்டு கூறமுடியவில்லை.


தஜ்ஜாலின் 40 நாள் வருடத்தோடும், மாசத்தோடும், வாரத்தோடும், சாதாரண நாள்களோடும் நபி ஸல் அவர்கள் கூறியதால் அதை ஹதீத்தில் மட்டும் வைத்து கொள்ள ரசூல் கூறவில்லை


நபி ஸல் அவர்கள் மக்களை சிந்திக்க கூறியுள்ளார்கள்.


தஜ்ஜாலின் ஒவ்வொரு நாளும் பல ஆண்டுகள் சம்பந்தபட்டத்தினால் அவனின் குழப்பங்களின் 40 நாளை நாம் பயணம் செய்து கொண்டு இருக்கும் இந்த ஹிஜிரி வருடங்களில் சம்பந்த படுத்தி பார்க்கலாம்.


இன்றைய ஹிஜிரி காலம் 1447


1447-12=1435


1447 ஹிஜிரி  12  ஐ ஏன் கழித்தோம் என்று கேட்டால்.


ஹிஜிரி என்பது மக்காவில் இருந்து மதினா சென்ற அந்த நிகழ்வு ஹிஜிரி ஆகும்.


இப்போது நபி ஸல் இறந்த பின்புதான் மறுமை நாள் தொடங்கி விட்டது என்று சொல்கிற காரணத்தினால்.


நாங்கள் தஜ்ஜாலின் குழப்பங்களை உங்களுக்கு விளக்க 1447 வருடத்தை 12 ஐ கழித்து 1435 ஆக எடுத்து கொண்டோம்.



1435/4 =358.75


359 ஹிஜிரி வருடமாக எடுத்து கொள்ளலாம்


இப்போது ஹிஜிரியை 1435 ஐ 4 ஆல் ஏன் வகுத்தோம் என்றால்


தஜ்ஜாலின் 40 நாள் குழப்பங்களை மனிதர்களுக்கு விளக்கவே.........


40 நாளில் ஒவ்வொரு 10 நாள் என்ற கணக்கில் ஒவ்வொரு 359 வருடமாக தஜ்ஜால் என்ன செய்துள்ளான் என்றுதான் நாம் காண போகிறோம்.



இப்போது நடைமுறையில் உள்ள கி. பி வருடங்களை எடுத்து கொள்வோம்.


நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு மறுமை தொடங்கி விட்டது.


நபி ஸல் அவர்கள் இறந்த வருடத்தை உதாரணமாக கி. பி 672 ஆக எடுத்து கொள்வோம்.


இப்போது தஜ்ஜாலின் 40 நாளில் முதல் பத்து நாள் 359 வருடம்


672+359=கி. பி 1031, (தஜ்ஜாலின் முதல் 10 நாள் )


மறுபடியும் ஞாபக படுத்துகிறோம் இது உம்மத்தின் இழப்பு இல்லை, தஜ்ஜாலின் குழப்பங்களில் ஒன்று.


கி. பி 672 முதல் கி. பி 1031 வருடம்  வரை சிறிய குழப்பங்களே இருந்தது.


உறுதியான இருந்த ஒரு உம்மத்தினுள்  எப்படி குழப்பங்கள் தொடங்கியது சிந்திக்க வேண்டாமா!


இந்த 359 வருடங்களுக்குள் ஏற்பட்ட முதல் ஃபித்னா, இரண்டாம் ஃபித்னா எல்லாமே பெரும்பாலான அரிஞ்சர்கள் தெரிந்த ஒன்றுதான்.


இந்த குழப்பங்களை எல்லாம் ஒருவர் மற்றொருவரை குறை சொல்ல சொல்லித்தந்தது யார் நாம் சிந்தித்தோமா?


இந்த ஃபித்னாவை பெரும்பாலான அரிஞ்சர்கள் மனிதர்களுக்குள் ஒவ்வொரு பிரிவினையிலும் ஒவ்வொரு தவறாக சித்தரித்து பிரிவினையை அதிகரித்து விட்டார்கள்.


அக்காலங்களில் குழப்பங்கள் பெரிதாக கூடாது என்றுதான் ஷகாபாக்கள் குர் ஆன் புத்தகமாகவும், ஹதீஸ் கலையும் தொகுக்கபட்டது


இந்த வருடங்களுக்குள்தான் நபி ஸல் அவர்களின் குடும்பத்தில் குறைசியர்களின்  12 பேர்களுடைய ஆட்சி வரும் என்று கூறினார்கள்.


குறைசியர்களின்  12 பேர்களுடைய ஆட்சியும் பொன்னான ஆட்சி என்று கூறமுடியுமா?


கூறமுடியும் என்றால் யசீத் பின் முஆவியா அவர்களுடைய ஆட்சியில் கஃஹ்பா "தீ" கரையாக்க பட்டது என்று வரலாறுகள் கூறப்படுகிறதே அதை பற்றி எப்படி புரிந்து கொள்ளலாம்?


குலஃபாய ராசீதீன்கள் ஆட்சியும்,யசீத் பின் முஆவியா அவர்களுடைய ஆட்சியும் ஒற்றுமை என கூறமுடியுமா?


இந்த முதல் 10 நாள் என்று கூறக்கூடிய 359 வருடங்களில்தான் தஜ்ஜாலின் குழப்பங்கள் சமூகத்தில் சேர்க்க அதிகமாக நேரம் அவன் எடுத்து கொள்ள வேண்டும் ( இதனாலே 1 நாள் ஒரு வருடம் போன்று தோன்றும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது)


அதனால்தான் அவனுடைய குழப்பங்கள் பெரிதாக (பெரும்பாலான மனிதர்களுக்கு தெரியவில்லை) போய் சேரவும் இல்லை சிலரை தவிர (இப்போதுதான் அரிஞ்சர்கள் உதவியோடு சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் தெரிய வருகிறது)


1031 வருடத்திற்க்கு முன்பு வந்த பெரும்பாலான ( புஹாரி இமாம், முஸ்லீம் இமாம், இது போன்ற நிறைய இமாம்களின்)  அறிஞ்சர்களின் (ஹதீஸ் கலையை) கருத்துகளை வைத்துதான் அரபு அல்லாத மக்களுக்கு கல்வி போதிக்க பட்டது


அதனால் தான் இப்போது உள்ள சூழ்நிலையில் முஸ்லீம்கள் இடத்தில் நிறைய பிரிவினையும் கூட ( 73 பிரிவினை கூட இருக்க வாய்ப்புண்டு)


முஸ்லீங்களின் இந்த மூல பிரிவினை தஜ்ஜால்தான் என்று புரிந்து வைத்து கொள்ளுங்கள்.


இந்த காலத்தில்தான் உமையாக்களுக்கும், பனு ஹாசிம்களுக்கும் எதிராக பல கிளர்ச்சிகளும் நடந்தன, அதே போல் உமைய்யா அணிகளுக்குள் பிளவுகளும்  கர்பலா போரும், அலியின் மகன் ஹுசைனையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றது, இது ஷியா-சுன்னி பிளவை உறுதிப்படுத்தியது. இறுதியில், பானு ஹாஷிமின் ஆதரவாளர்களும் அலியின் ஆதரவாளர்களும் உமையாக்களை வீழ்த்த ஒன்றிணைந்தனர். கடைசியில் அப்பாஸித் வம்சம் (கலீபா) ஆட்சியைக் கைப்பற்றியது.


இந்த 359 வருடத்திற்குள்  இஸ்லாமிய நாடுகளில் மீது தஜ்ஜால் நடத்திய குழப்பங்கள் ஆகும்,



ஒட்டுமொத்தமாக ஒரு அணியின் கீழ் வரவேண்டிய உம்மத் அல்லாஹ்வின் கயிறை அரபுகள் விட்ட வரலாறை சிறிதாக காணலாம்.


இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

(அல்குர்ஆன் : 3:103)


இந்த குர் ஆன் வசனம் நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு ஏன் இப்போது மட்டும் இல்லை உலகம் அழியும் வரைக்கும் பொருந்தும்.


இந்த பிரிவினை எல்லாம் எப்படி ஆனது என்று ஒரு தொகுப்பு மட்டுமே கூறுகிறோம்.


ஒட்டுமொத்த பிரிவினையும் தொடங்கிய முதல் புள்ளி எதுவாக இருக்கும் என்று யூகித்தால் கீழே நாங்கள் கூறக்கூடிய காரணமாகத்தான்  இருக்கவும் வாய்ப்பு உள்ளது.


நீங்களும் சற்று சிந்தியுங்கள்.


முதல் காரணம் நபி ஸல் அவர்களுக்கு இறைவனிடமிருந்து இரண்டு கருவூலம் கொடுக்கப்படுகிறது.

இந்த கருவூலத்தை நாம் எப்படி மொழிபெயர்கிறோம் என்றால் நபி இப்ராஹீம் அலை அவர்கள் வசித்துவந்த அந்த இரண்டு ஊரும் (இரண்டு கருவூலம்)


1.மஸ்ஜிதுல் கஹ்பா.

2.மஸ்ஜிதுல் அக்ஸா 


முஸ்லீம்களுக்கு மஸ்ஜிதுல் கஹ்பா எவ்வளவு முக்கியமோ அதே போல் மஸ்ஜிதுல் அக்ஸாவும் மிகவும் முக்கியம் இதுவும் முஸ்லீம்களின் ஆட்சின் கீழ்தான் இருக்கவேண்டும். (இதை நபி ஸல் அவர்கள் பின்பு வந்த உமர் ரலி அவர்கள் செய்து காட்டிவிட்டார்கள்)


முஸ்லீங்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை புனித தலமாக எண்ணியது இல்லை இப்படி ஒரு எண்ணம் வந்தது எதனால் உலக ஆகாயத்திற்காக ஒருவருக்கு ஒருவர் போட்டி இட்டு சென்ற பின்பே ஆகும்.


இப்போது உள்ள சூழ்நிலையில் அரபு இல்லாத மக்களுக்கு மஸ்ஜிதுல் அக்ஸா ஒரு புனித தலமாக இருக்கிறது


நாங்கள் கேட்பது அரபுகளுக்கு இந்த எண்ணம் உள்ளதா?


அப்போது நாம் யாரை முன் மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்.


இந்த மஸ்ஜிதுல் அக்ஸா கைவிட்டு போனது எதனால்?


புஹாரி 

7013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்)அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக்கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: ‘ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள்’ (ஜவாமிஉல் கலிம்) என்பதற்கு விளக்கமாவது: நபி (ஸல்) அவர்களது காலத்திற்கு முன்னால் ஏடுகளில் (நீளமான வார்த்தைகளால்) எழுதப்பட்டுவந்த பெரும் பெரும் கருத்துகளை(யும் தத்துவங்களையும்) ஓரிரு வார்த்தைகளில் ஒருங்கிணைத்து (இரத்தினச்சுருக்கமாக)ப் பேசுகின்ற ஆற்றலை நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்-என எனக்குச் செய்தி எட்டியது.


கருவூலம் என்ற வார்த்தை எந்த அர்த்தம் தருவது போன்று பேசியுள்ளார்களோ என்று அல்லாஹ்வுக்கும்,அல்லாஹ்வுடைய தூதருக்கு மட்டுமே தெரியும்.


கருவூலம் என்ற வார்த்தையை வரலாற்றின் நிகழ்வை கொண்டு இதற்காக இருக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம், அதனால் அநியாயகாரர்கள் வார்த்தை விளையாட்டுகள் செய்து இது அதனுடைய அர்த்தம் இல்லை என்று மனம் போன போக்கில் சொல்லலாம்.


ஆனால் வரலாறுகளில் கருவூலம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் இந்த இரண்டு மஸ்ஜித்துகளும்தான்.


வரலாற்றில் மஸ்ஜித்துல் அக்ஸாக்குகாகதான் போர்களே நடக்கின்றன.


இதில் முஸ்லீம் அல்லாத சாதாரண மனிதற்க்கு (சமூக ஆர்வலர்களுக்கு) கூட தெரிகிறது.


இதை முஸ்லீம்கள் தவறவிட்டதால் அவர்களுக்கு அல்லாஹ் இழிவு மேல் இழிவு தருகிறான்.


இந்த அறிவுரை எல்லாம் அல்லாஹ்வை பயப்படுகிறவர்களுக்குதான்.


இந்த ஹதீதில் அந்த கருவூலத்திற்க்காகத்தான் சண்டையும் நடக்கும் என்ற  மறைமுக வார்த்தை ( இதை மறைமுகம் என்று சொல்ல முடியாது நேரடியாக என்றுதான் சொல்லனும்) நபி ஸல் அவர்கள் கூறிவிட்டு சென்றுவிட்டார்கள்.(இந்த செய்தி புரிகிறவர்களுக்கு புரியும் புரியாதவர்கள் புரிய முயற்சி செய்யுங்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவோம்)


புஹாரி 6426. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது


எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவு கோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத் திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகின்றேன்” என்று சொன்னார்கள்.




(இதற்காகத்தான் (இந்த கருவூலத்திற்காகதான்) நீங்கள் சண்டையும் போடுவீர்கள் என்று நேரடியாகவே கூறிவிட்டார்கள்.)


நபி ஸல் அவர்களுக்கு பின்பு வந்த பெரும்பான்மையான மக்களுக்கு அது மறைவான வார்த்தையாகவே தெரிகிறது (அல்லாஹ் நாடியவர்களை தவிர)


இதை நாம் உணர (நமக்கு முன் சென்ற (கர்பலா) வரலாறை படிப்போம்)


அதற்காகத்தான் போட்டியும் நடந்தது என்று தெரியும்.


மேலும் ஒரு ஹதீத் இதை உறுதியும் படுத்துகிறது.


புஹாரி 4375. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நான் தூங்கிக்கொண்டிருக்கும்போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன.


“அவ்விரண்டும், எந்த இரு மகா பொய்யர்களுக்கிடையே நான் இருக்கின் றேனோ அவர்களைக் குறிக்கும்' என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்சீ என்ற) “ஸன்ஆ'வாசி யும் (முசைலிமா என்ற) “யமாமா'வாசியும் ஆவர்.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


இந்த கருவூலத்தை ஸன்ஆ'வாசிக்கும் “யமாமா'வாசிக்கும் போகும் என்று ஏன் கூறவேண்டும்.


இவர்கள் தன்னை நபி என்றுதானே கூறினார்கள் மேற்கூறிய இரண்டு மஸ்ஜித்களும் இவர்களுக்கு பொருந்தவில்லையே என்று சிந்தனை வரலாம்!


நபி ஸல் அவர்களுக்கு பின்பு முசைலிமா என்பவன் தன்னை நபியாக சொல்லிக்கொண்டவன்.

தன்னை நபியாக சொல்லிக்கொண்டால் பெரும் புகழ்,பணம்,ஆட்சி,செல்வம் இதெல்லாம் கிடைக்கும்


இதெல்லாம் கிடைத்தால் அந்த இரண்டு மஸ்ஜித்துகளும் தன்னுடைய ஆட்சிக்கு கீழ் வரும் என்ற எண்ணம் கொண்டதனால் இருக்கலாம் (நபி ஸல் அவர்களுக்கு கிடைத்த கருவூலம் முஸைலைமா என்பவனுக்கு கிடைக்கும் என்று இப்படியும் புரிந்து கொள்ளலாம்)


முஸைலைமா என்பவன் மீதும் அன்சீ என்பவன் மீதும் தான் நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு அபூபக்கர் ரலி அவர்கள் போரும் புரிந்தார்கள்.


ஒரு பக்கம் அரபுகளுக்கு உள்ளே உள்ள குழப்பங்கள்


மறு பக்கம் மஸ்ஜித்துல் அக்சா மீது படையேடுக்க ஆங்கிலேயர்கள் அதற்குண்டான தஜ்ஜாலின் சூழ்நிலைகள் எப்படி உருவாகிறது பார்ப்போமா.



ஆங்கிலேயர்கள் (Europe country) மத்தியில் உள்ள நாடுகளில் Roman empire, சீசர் மற்றும் Persian empire, குஸ்ரா உடைய ஆதிக்கம் இருந்தது அதை நபி ஸல் அவர்கள் முன் அறிவிப்பாக தன்னுடைய உம்மத்துக்கு இரண்டு ஆதிக்கமும் வீழ்ந்து போகும் என்று கூறினார்கள் அது நடக்கவும் செய்தது.


இது கழிந்து கிருஸ்துவர்கள் மத்தியில் சிலுவை வீரர்கள் என்ற ஒரு இனம் தொடங்குகிறது

உலகத்தில் இந்த சிலுவை வீரர்கள் உடைய போர் மட்டும் 8 தடவை நடக்கிறது


4 அல்லது 5 முறை Poland, german, Denmark, London, போன்ற ஆங்கிலேயர்கள் நாட்டிகளிலும்( இது அப்பாசியா கலீபா தொடங்கும் முன் நடைபெற்ற போர்களாகும் அரபு நாடுகளில் 3 வது சிலுவை போரில் மத்திய கிழக்கில் வந்தவர் தான் சாலவுத்தீன் அய்யூபி என்ற நல்ல ஒரு ஆட்சியாளர்.


அடுத்த 4 அல்லது 5 முறை மத்திய கிழக்கு அரபு நாடுகள் மத்தியிலும் போர் நடந்தது.


கிறிஸ்டீங்கள் இவர்களுக்கு இந்த இஸ்ரேல் என்ற இடம் சொந்தபடுத்த இந்த அரபு நாடுகளில் நடக்கக்கூடிய போர்கள் ஆகும் ( இந்த சிலுவை போர்கள்)


சிலுவை வீரர்களின் போர்கள் 800 முதல் 900 வருடங்களாக பலஸ்த்தீனம், சிரியா, ஜோர்டன், எகிப்த் போன்ற இடங்களில் இருக்ககூடிய இடங்களை இவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.


பின்பு 1890 ஆம் ஆண்டுக்கு பின்பு இஸ்ரேல் அமைய காரணமாக அமைந்தவர்கள்தான் சிலுவை வீரர்கள் ( இப்போது உள்ள இஸ்ரேல் என்ற நாட்டை விட்டு சிலுவை வீரர்களான இந்த கத்தோலிக்க இனம் யூதர்களிடம் விட்டு சென்றது)


அதைத்தான் அல்லாஹ் கிறிஸ்துவர்களும், யூதர்களும் உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள் என்ற அர்த்தம் ஆக வாய்ப்பு உள்ளது.


இந்த கிறிஸ்துவர்களும், யூதர்களும் உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள் என்ற வார்த்தையை நாம் சாதாரண மனிதர்களுக்கு பயன்படுத்துகிறோம்.


💓இது எல்லாம் அல்லாஹ்வின் ஆட்சியை சொந்தம் கொண்டாடுப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் வசனம் 💓

Comments