எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்ற வார்த்தையோடு துவங்குகிறேன்.
எங்களுக்கு வந்த செய்தியை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எங்களுக்கு வந்த கல்வி எப்போது விடைபெறும் என்று தெரியவில்லை.
எங்களோட கல்வி விடைபெறும் முன் உங்களுடன் பகிர்கிறேன்.
கருத்து வேறுபாடு இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள் நாங்கள் அதை வரவேற்க்கிறோம்.
இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
பாகம் 3
தஜ்ஜால்
நாம் தஜ்ஜால் உலகத்தில் வசிக்கும் 40 நாளில் நாம் கடைசி 10 வது நாளில் இருக்கிறோம்.
ஒரு விஷயத்தை அல்லாஹ்வும் அவனுடைய ரஸூலும் சொல்லி இருந்து அதை தெரிந்து, புரிந்து நாம் மீறினால் நாம்தான் இனைவைப்பாளர்கள் ஆகுவோம்.
பள்ளிவாசலில் ஒரு சிலையை வைத்து அந்த சிலையை வணங்குவது மட்டும் தான் இணைவைப்பு என்றால்.........
குழப்பம் பண்ணுவத்தில் மிகவும் உயர்தரத்தில் உள்ளவன் இப்லீஸ் ஆவான்.
அவன் எந்த சிலையை வணங்கினான்.
அல்லாஹ் இப்லீஸை (இணைவைக்காதே)பெருமை அடிக்காதே என்று கூறினான்..
அவன் பெருமையைதான் அல்லாஹ்வுக்கு இணை வைத்தான் அதை அல்லாஹ்வே கூறுகிறான்.
அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.
(அல்குர்ஆன் : 2:34).
சீர்திருத்தபட்ட சமூகத்தில் முதல் முதலில் இப்லீஸ் என்பவன் நல்லதை சொல்லித்தான் வழி கெடுப்பான்.
ஆகவே இணைவைப்பு என்பது சிலையை வணங்குவது மட்டும் இல்லை.
சிலைவணங்குவது என்பது இணைவைப்பில் எல்லை மீறிய செயல் என்று சொல்லலாம்.
அல்லாஹ் நூஹ் அலை அவர்களுடைய சமூகத்தார்கள் சிலையை வணங்காதீர்கள் என்று கூறினான்
நூஹ் அலை அவர்களுடைய சமூகத்தார்கள் சிலையை இணைவைத்தார்கள்.
அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
(அல்குர்ஆன் : 71:23)
அல்லாஹ் ஷுஐப் அலை அவர்களுடைய சமூகத்தார்களை நிலுவை மோசடி பண்ணாதீர்கள் என்று கூறினான்
ஷுஐப் அலை அவர்களுடைய உம்மத்தார்கள் அளவு நிலுவையில் அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்கள்.
அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்,
(அல்குர்ஆன் : 7:85)
அல்லாஹ் ஆது, ஸமூது கூட்டத்தை வலிமையை கொண்டு பெருமை அடிக்காதீர்கள் என்று கூறினான்.
ஆது, ஸமூது கூட்டம் தனக்கு கொடுக்கப்பட்ட வலிமை அல்லாஹ்வுக்கு இணைவைத்தார்கள்.
ஆது கூட்டம்
“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
(அல்குர்ஆன் : 26:130)
ஸமூத் கூட்டம்
“மேலும், ஆணவம் கொண்டவர்களாக நீங்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்களே!
(அல்குர்ஆன் : 26:149)
அல்லாஹ் லூத் அலை அவர்களுடைய சமூகத்தார்களை இழிவான செயலை செய்யாதீர்கள் என்று கூறினான்.
லூத் அலை அவர்களுடைய உம்மத் இழிவான செயலை செய்து அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள்.
“உலகத்தார்களில் நீங்கள் ஆடவர்களிடம் (கெட்ட நோக்கோடு) நெருங்குகின்றீர்களா?
(அல்குர்ஆன் : 26:165)
இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.............
அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு கூறின இணைவைப்பில் பொதுவான விஷயம் என்னவென்றால்
அல்லாஹ் மனிதனுக்கு ஏதாவது ஒரு விஷயத்தை தடை செய்தால்.
அதை மனிதர்களாகிய நாம் மீறும் போதுதான்.
அது இணைவைப்பில் சேரும்......
நாம் நபி ஸல் அவர்களுடைய உம்மத்.
நாம் இறைவனுக்கு எதையெல்லாம் இணைவைத்தோம்?
சொல்லமுடியுமா?
இஸ்லாமில் இணைவைத்தல் என்பது சிலை வைத்து வணங்குவது மட்டும் இல்லை
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாமல் போவது இணைவைப்பில் தான் சேரும்.
இந்த இணைவைப்பை தஜ்ஜாலின் தலைப்பில் கூற காரணம் என்ன?
குர்ஆனில் தாக்ஃஉத் என்ற வார்த்தைக்கு அர்த்தம் மொழிபெயர்ப்பில் ஷைத்தான் என்று வரும்.
ஏன் அல்லாஹ் தாக்ஃஉத் என்று கூறுகிறான்
ஷைத்தான் என்று கூறலாமே இதை நாம் யோசித்துள்ளோமா?
தஃப்சீர் படித்தால்தான் புரியும்.
நாம் சமூகத்தில் தான் சில கூட்டம் தஃப்சீர் படிப்பது அவசியம் இல்லையே என்று கூறுகிறதே..... அப்போது நமக்கு எப்படி தெரியும்.
தாக்ஃஉத் என்பதற்கு தஃப்சீரில் விரிவாக வரும் நாங்கள் ஒரு வரியில் கூறுகிறோம் சற்று புரிய முயற்சி செய்வோம்.
தாக்ஃஉத் என்பதற்கு தஃப்சீரில் ஒவ்வொரு சமூகமும் அல்லாஹ்வை நினைவு கூறுவதிலிருந்து தடுக்கும் (இணைவைக்கும்) எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை அல்லாஹ் தாக்ஃஉத் என்று கூறுவது போல் நாங்கள் உணர்கிறோம் .
இதை பின்வரும் ஹதீதும் விளக்குகிறது
மறுமை நாளில் வரிசையாக மக்களை நிற்க வைக்கும் போது உள்ள நிகழ்வு கீழே உள்ளது
மறுமை நாளில் மக்கள் ஒன்று திரட்டப்படுவார்கள். அப்போது அல்லாஹ், "யார் எதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடரட்டும்" என்று கூறுவான்.
ஷைத்தான்களை (தாஹூத்) வணங்கியவர்கள் ஷைத்தான்களையும் பின்தொடர்வார்கள்.
ஸஹீஹுல் புகாரி : 806
இந்த இடத்திலும் அல்லாஹ் " "தாக்ஃஉத்" என்று கூறுகிறான் ( ஹதீதின் மூலத்தில் உள்ள அரபு வார்த்தையை பார்க்கவும்).
சில விஷயங்களுக்கு ஆதாரம் நேரடியாக கொடுக்க இயலாது (குர் ஆன் உள்ளது ) (அதில் சம்பவம் சொல்லப்பட்டுள்ளது) இனி படிப்பது சிந்திப்பது நமது கடமையாகும்.
தஜ்ஜாலை நம்புவதும் இணைவைப்பாகும்
அவனின் குழப்பங்களை நம்புவதும் இணைவைப்பாகும்.
அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு முன்பு வந்த எல்லா தூதர்களும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு செயல் தனி தனியாக செய்ய சொல்லி அல்லாஹ் கூறினான்.
முன்னர் வந்த ரசூல்களுக்கு கொடுத்த தனி தனி செயலை மொத்தமாக நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்து விட்டான்.
நபி ஸல் அவர்களும் செய்தும் காட்டிவிட்டார்கள்.
நபி ஸல் அவர்களை பின்பற்றும் நபர்கள் நாமும் எப்படி இணைவைத்து இருப்போம் என்று சிந்திப்போமா?
அப்படி சிந்தித்தால் அல்லாஹ்வுடைய அந்த எல்லா கட்டளைக்கும் பின்பற்றும் தகுதியுடையவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்வோம்.
ஆகவே பயப்பக்தியுடையோர் யார் என்றால்?
(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)
ஈமான் என்பது மறைவான வற்றை நம்புவதும் பயப்பக்தியாகும்.
மறைவான விஷயங்கள் என்பது எது ?
மறுமை நாள் என்பது மறைவான விஷயங்கள் உள்ளவையாகும்.
மறுமை நாளுடைய அடையாளங்களும் மறைவான விஷயங்கள் ஆகும்.
நமக்கு இது பற்றி அரிஞ்சர்கள் சொல்லும்போது.
அந்த விளக்கங்களை புரிய முயற்சி செய்வோம்.
புரியா முடியா விட்டால் அல்லாஹ்வுடைய வார்த்தையை (புரியும் வரை) நிராகரிக்க வேண்டாம்.
இந்த விஷயங்களை சற்று சிந்திப்போம்.
காரணம் பின் வரும் சமூகத்திற்கு இந்த விளக்கங்களே பயன்பெற வாய்ப்புண்டு.........
இதற்க்கு முந்தின ஒன்றாம் பகுதியில் தஜ்ஜாலின் முதல் 10 நாளில் உள்ள அவனின் குழப்பங்களையும், அரபுங்களுடைய மிக பெரிய பிரிவினையும் பார்த்தோம்.
சியா, சுன்னி பிரிவு என்பது சாதாரண விஷயம் இல்லை
முஹம்மது ஸல் அவர்களுக்கு முன்பு நபி ஈஸா அலை அவர்கள் பின்பு வந்த the great split என்று சொல்லக்கூடிய ரோமன் கத்தோலிக் மற்றும் ஆர்த்தோடக்ஸ் பிரிவினை போன்றதாகும்.
அநியாயகாரர்கள் கத்தோலிக் மற்றும் ஆர்த்தோடக்ஸ் பிரித்தது போன்று சியா, சுன்னி பிரிவு பிரித்து விட்டார்கள்.
நபி ஸல் அவர்கள் தன்னுடைய உம்மத்துக்கு கற்று கொடுத்த அரசியலை போன பகுதில் பார்த்தோம்.
நாங்கள் நபி ஸல் அவர்களின் அரசியல் எப்படி இருந்தது என்பதை விளக்க வரவில்லை,அந்த அரசியல் சம்பந்தமான விஷயங்களை விளக்க மார்க்க அறிஞ்சர்கள் இருக்கிறார்கள்.
நாங்கள் நபி ஸல் அவர்களுடைய அரசியலை விளக்க எங்களுக்கு கல்வியும் இல்லை (இன்ஷாஅல்லாஹ் வேறு ஒரு பகுதியில் முடிந்தால் விளக்குகிறோம் ) இது அதற்குண்டான பகுதியும் இல்லை.
நாங்கள் தஜ்ஜாலின் குழப்பங்களை விளக்க வந்துள்ளோம்.
இப்போது தஜ்ஜாலின் 40 நாளில் இரண்டாவது பத்து நாள் 359 வருடம் பற்றி சிறிதாக காண்போம்.
இந்த பகுதியை நாங்கள் விளக்கினாலும் மக்களுக்கு விளங்குமா என்று தெரியவில்லை.
எப்படி விளக்குவது என்றும் தெரியவில்லை.
இருந்தாலும் கூறுகிறோம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
கி. பி 1031+359=கி. பி 1390 வரை (தஜ்ஜாலின் இரண்டாம் 10 நாள் )
மறுபடியும் ஞாபக படுத்துகிறோம் இது உம்மத்தின் இழப்பு இல்லை, இது தஜ்ஜாலின் குழப்பங்களில் இரண்டாவது பகுதி .
கி. பி 672 முதல் கி. பி 1031 வருடம் வரை ஒரு வகையான (அதாவது அஹ்லுல் பெய்த் என்று சொல்லக்கூடிய குடும்பத்திற்குள் உள்ள )குழப்பங்களே இருந்தது.
இந்த வருடங்களுக்குள் இனம், மொழி,கலாச்சாரம், கல்வி இப்படி எந்த பகுதியிலும் தஜ்ஜாலால் நெருங்க முடியவில்லை.
இதன் பின்புதான் தஜ்ஜாலின் குழப்பங்கள் வேறு ஒரு சமூகம் (சிலுவை வீரர்கள் ) மூலம் தொடர்கிறது.
கி. பி 1031 வரை முஸ்லீங்களுக்கு கிறித்துவர்கள் நண்பனாக பார்க்க முடியும் என்கிற குர்ஆன் வசனமும் வரக்கூடிய நிகழ்வுக்கு பொருத்தமாக அமைகிறது.
இந்த கிறித்துவர்கள் நண்பனாக என்று கூறக்கூடிய வசனங்களை யாருக்கு இறங்கியது என்று புரியாமல் நீங்கள் எப்படி உங்கள் விருப்பத்திற்கு மாற்றுகிறீர்கள் என்று நீங்கள் எங்களை பார்த்து கேட்கலாம்?
"சூரா ரூம்" முதல் 4 வசனங்கள் யாரை பற்றி இறங்கியது என்று சிந்தியுங்கள் அதில் அல்லாஹ் ரோம் (வேதக்காரர்கள்) என்ற நாடு பாரசீகத்தை ஜெயிக்கும் அப்போது முஹ்மீன்கள் சந்தோசப்பாடுவார்கள் என்று கூறுகிறான்.
வேதக்காரர்கள் ஜெயித்தால் முஹ்மீன்களுக்கு ஏன் சந்தோசம் என்று சிந்தித்தோமா?
இப்போது அதை பற்றி சிந்தியியுங்கள்.
அல் மாயிதா 5:82 முதல் 85 வரை இருக்கும் வசனம் ரோம் கிருஷ்துவர்கள் நண்பவர்கள் என்று இவர்களை பார்த்துதான் பேசுகிறது என்று குர் ஆன் தஃப்சீரும் விளக்குகிறது.
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர்;
(அல்குர்ஆன் : 5:51)
இந்த வசனம் நபி ஸல் அவர்கள் காலத்தில் ஒரு சம்பவத்திற்கு கூறப்படுகிறது.
இது அநியாயகாரர்களை பார்த்து (5:51 வசனம் பேசுகிறது)
இந்த வசனங்கள் 11 ஆம் நூற்றாண்டில் ரோம், பாரசீகம் சேர்ந்ததும் ,19 ஆம் நூற்றாண்டில் சிலுவை வீரர்களும், யூதர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய நாடுகளுக்கு துரோகம் விளைவித்தது.
இந்த நிகழ்வு (5:51 வசனம் பொருத்தமாக அமைகிறதா?)
எப்படி பொருத்தமாக இருக்கிறது என்று கவனியுங்கள்
11 ஆம் நூற்றாண்டில் மேற்கு ரோமும், கிழக்கு பாரசீகமும் எப்படி ஒன்று சேருகிறது என்று பார்ப்போம்.
மேற்கு பாரசீகத்தில் கி. பி 3 ஆம் நூற்றாண்டில் வந்த கான்ஸ்ஸ்டாண்டின் என்பவர் கிறிஸ்துவத்தை தழுவினார், இஸ்லாமிய அரிஞ்சர்கள் இஸ்லாமில் எப்படி அக்கீதாவை இஸ்லாமில் சேர்த்தார்களோ! அதேபோல் காண்ஸ்டாண்டின் நோபிள் என்பவருடைய அதிகாரத்தில்தான் கிறிஸ்துவத்தில் துறவரம் போன்ற சில கொள்கைகளை கொண்டு வந்தார் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
அதன் பின்பு அவரோட தலைமுறையினர்களில் வந்தவர்கள்
முஹம்மது ஸல் அவர்கள் காலம் வரை மேற்கு பாரசீகர்களும் அதை ஆளும் வம்சமுடைய மக்களும் கிறிஸ்துவத்திலேயே இருந்தார்கள்.
இதன் பின்புதான் அப்பகுதியுடைய ஆட்சி 11 ஆம் நூற்றாண்டு வரை அதை நபி ஸல் அவர்கள் வழி வந்த குலஃபாய ராசிதீன்கள் மற்றும் சில முஸ்லீம்கள் எடுத்து ஆட்சி செய்து வந்தார்கள்.
ஆகவேதான் ரோமன் எம்பைர் உள்ள பகுதியை ஹிராக்ளியஸ் கையில் வரும் சமயத்தில் அவர் எண்ணத்திலும் இஸ்லாம் மேலோங்கும் என்ற எண்ணம் இருந்தது ( ஒரு காலம் வரும் அப்போது என் காலுக்கு கீழ் உள்ள நிலைத்தையும் அவரே ஆட்சி செய்வார் என்று அந்த மன்னரே கூறியுள்ளார் ) இதை ஹதீத் புஹாரி 7 இல் காணமுடிகிறது.
காரணம் கிழக்கு பாரசீகம் நெருப்பை வணங்குபவர்களாகவும், ரோம்மை ஆளுபவர்கள் வேதகாரர்களாகவும் இருந்தார்கள்.
நெருப்பை வணங்குபவர்களுக்கு அல்லாஹ்வை புரியவைப்பது கஷ்டம்.
வேதக்காரர்களுக்கு இலகுவாக புரிய வைக்கலாம்.
இப்போது இருகக்கூடிய சியா, சுன்னி போல( இவர்களுக்குள் தங்களுடைய இஸ்லாமில் சிறிய தவறு இருந்தால் புரிய வைப்பது மிகவும் சுலபம் ) , இவர்கள் எல்லோரும் அல்லாஹ் என்ற ஒரே இறைவனைதான் வணங்குகிறார்கள்.
சரி இவர்கள் முஸ்லீங்களுக்கு எப்படி எதிரியாக மாறுகிறார்கள் என்று பாருங்கள்.
கி. பி 1081 ஆம் ஆண்டு என்ற கிழக்கு ஆர்த்தடக்ஸ் வழியை பிம்பற்றிய அலெக்ஸியோஸ் I கொம்னெனோஸ் (கிரேக்கம்: Ἀλέξιος Κομνηνός, ரோமானியமயமாக்கல்: Aléxios Komnēnós, சுமார் 1057 – 15 ஆகஸ்ட் 1118), லத்தீன் மொழியில் அலெக்ஸியோஸ் I கொம்னெனஸ் என்று அழைக்கப்படுகிறார்,
1081 முதல் 1118 வரை பைசண்டைன் பேரரசராக இருந்தார். அரசவையை கைப்பற்றிய பிறகு, அவர் தனது ஆட்சி முழுவதும் சரிந்து வரும் பேரரசையும் தொடர்ச்சியான போரையுமே எதிர்கொண்டார்,
அலெக்ஸியோஸ் தன்னுடைய பைசண்டைன் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினார்
இவர் செல்ஜுக் துருக்கியர்களுக்கு எதிராக உதவி கோரி மேற்கு ஐரோப்பாவிடம் அவர் முறையிட்டது முதல் சிலுவைப் போரை ஏற்படுத்திய வினையூக்கியாகும்.
அவர் கொம்னெனியன் வம்சத்தின் முதல் பேரரசர் இல்லாவிட்டாலும், அவரது ஆட்சியின் போதுதான் கொம்னெனோஸ் குடும்பம் முழு அதிகாரத்திற்கு வந்து அரசாட்சிக்கு ஒரு பரம்பரை வாரிசைத் தொடங்கியது.
ஜான் கோம்னெனோஸின் மகனும் ஐசக் கோம்னெனோஸின் மருமகனுமான அலெக்ஸியோஸ், மூன்று பைசண்டைன் பேரரசர்களின் கீழ் சிறப்புடன் பணியாற்றினார். 1081 ஆம் ஆண்டில், பேரரசர் நிகெபோரோஸ் III பொட்டானியட்டுகளுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியை அவர் வழிநடத்தி அரசாட்சியை கைப்பற்றினார்.
1085 ஆம் ஆண்டில் பைசண்டைன் இழப்புகளில் பெரும்பாலானவற்றை மீட்டெடுத்தார்.
பின்னர் 1090 களில், அலெக்ஸியோஸ் ஆசியா மைனரை நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார், அவற்றில் பெரும்பாலானவை செல்ஜுக் துருக்கியர்களிடம் விழுந்தன. மேற்கத்திய ஆதரவை விரும்பிய அவர், போப்பாண்டவர் ஆட்சிக்கு எதிராக சமரச நடவடிக்கைகளை எடுத்தார், மேலும் போப் அர்பன் முறையாக முதல் சிலுவைப் போரை அழைத்தார், இது ஒரு வருடம் கழித்து தொடங்கி மேற்கு அனடோலியாவின் பெரும்பகுதியை பைசண்டைன் ஆட்சிக்கு மீட்டெடுப்பதில் முடிந்தது
இவர்கள் வம்ச வழியை சேர்ந்தவர்கள் கிழக்கு பாரசீகத்தை தலைமையிடமாக வைத்து மேற்கு ரோமானிய சிப்பாய்களை வைத்து ஜெருசலம் என்ற இடம் கிறிஸ்துவர்களுக்கு சொந்தம் என்ற சிந்தனையில் ஜெருசலத்தை தலைமை இடமாக வைத்து ஆள்வதற்க்கு சிலுவை போர்கள் நடக்கிறது சிறிது காலம் முஸ்லீம்கள் கையிலும் பின்னர் கிறிஸ்துவர்கள் கையிலும் அவரவர்கள் செயலிர்க்கேர்ப்ப அல்லாஹ் ஆட்சியை கொடுத்தான்.
1081 முதல் 11 ஆம் நூற்றாண்டு தொடங்கிய சிலுவை போர்தான் கட்டம் கட்டமாக 19 ஆம் நூற்றாண்டு வரை நடந்தது வரலாற்றில் இந்த சிலுவை வீரர்கள் என்று சொல்லக்கூடிய கிறிஸ்துவர்கள் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் வந்து குடியேற உதவியாக இருந்தார்கள்.
இதையே குர் ஆனில் கிறிஸ்துவர்களும், யூதர்களும் ஒன்றாக வந்தால் உற்ற நண்பனாக ஆக்கி கொள்ளாதீர்கள் என்றுஅல்லாஹ் கூறுகிறான்.
காண்ஸ்டாண்டின் நோபிள் காலத்தில் தொடங்கிய கிருஸ்த்துவர்களின் வகைகள் 2 ஒன்று ரோமன் கத்தோலிக், இன்னொன்று ஆர்த்தோடஸ்க் ஆகும்.
இந்த இரண்டு வகையிலும் பல வகையான பிரிவினைகளை உருவாக்கி வைத்துள்ளார்கள்.
காண்ஸ்டாண்டின் நோபிள் காலத்தில் தொடங்கிய இந்த ஆர்த்தோடஸ்க் முதன்மையான கொள்கை மெல்ல மெல்ல அந்த பகுதியில் வாழ்பவர்களிடம் இருந்து விலகி
கிழக்கு ஆர்த்தோடஸ்க் என்ற இனமாக ரஷ்யாவாக மாறி நிக்கிறது.
இப்போது ரஷ்யாவில்தான் கிறிஸ்துவத்தின் சடங்குகள் எல்லாம் நடக்கிறது.
ஆகவே ரஷ்யாவை முஸ்லீங்களின் நண்பனாக ஏற்றுக்கொள்ளலாமா என்பதற்க்காக நாங்கள் இதை கூறவில்ல.
அதுவும் தவறாக போக வாய்ப்புள்ளது.
மறுமை நாள் வருவதற்கு முன்பு ஒரு கருப்பு கொடிக்கு கீழ் வரக்கூடியவர்கள்தான் சிறந்தவர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அரபு நாடுகள் எல்லாம் கை விட்டு விட்டது ஆகவே ரஷ்யா, சீனா, கொரியா எல்லாம் நமக்கு உதவி செய்யும் என்று கனவு காண்பது பெரிய தவறு.
இந்த குழப்பங்கள் எல்லாம் நாம் வாழக்கூடிய நாளை தஜ்ஜாலின் ஒரு மாத அளவாக எடுத்து கொண்டாலே இந்த வரலாறுகள் புரியும்.
இனிமேல் முஸ்லீமின் ஆட்சியில் எப்படி மாற்றங்கள் வந்தது என்று பார்ப்போம்.
கி. பி.1390 அந்த 13 ஆம் நூற்றாண்டில் அப்பாசியாக் கலீபாவிடம் உம்மத்தின் ஆட்சி சென்ற முறை
ஒன்பதாம் நூற்றாண்டில், அப்பாஸிட்கள் தங்கள் கலிபாவிற்கு மட்டுமே விசுவாசமான ஒரு இராணுவத்தை உருவாக்கினர்கள் , இது பெரும்பாலும் துருக்கிய குமன், சர்க்காசியன் மற்றும் ஜார்ஜிய அடிமை வம்சாவளியைச் சேர்ந்த மம்லுக்குகளைக் கொண்டது ஆகும், இவர்கள் மம்லுக்குகள் என்று அழைக்கபட்டார்கள் 1250 வாக்கில் மம்லுக்குகள் எகிப்தில் ஆட்சிக்கு வந்தனர். இது அப்பாசியா கலீபாக்கு மாறும் முன் மம்லுக் இராணுவம் மீது, பெரும்பாலும் எதிர்மறையாகப் பார்க்கப்பட்டாலும், கலிபாவிற்கு உதவியது மற்றும் தீங்கு விளைவித்தது. ஆரம்பத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்திற்கு ஒரு நிலையான படையை வழங்கியது. இருப்பினும், இந்த வெளிநாட்டு இராணுவத்தை உருவாக்கியதும், அல்-முத்தாசிம் தலைநகரை பாக்தாத்திலிருந்து சமாராவிற்கு மாற்றியதும் கலிபாவிற்கும் அவர்கள் ஆட்சி செய்வதாகக் கூறும் மக்களுக்கும் இடையே ஒரு பிளவை உருவாக்கியது. பின்னர் ஒருமித்த கருத்துக்குக்காக அப்பாசியா கலீபாவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை மம்லுக்குகளின் அதிகாரமாக இருந்தது.
இந்த காலகட்டத்தில் தோராயமாக 7 காலீபாக்கள் என்று நினைக்கிறேன்.
பனு ஹாசிம் ஆட்சி பின்பு பனு உமையா ஆட்சிக்கு வந்தது அதன் பின்பு வந்ததுதான்.
அப்பாஸ் ரலி அவர்களின் வம்ச வழியை சார்ந்தவர்கள் என்று சில வரலாறுகளில் கூறப்படுகிறது.
அப்பாசியா கலீபா வருவதற்கு முன் எகிப்த் வசம் இருந்தது.
1150 களில்தான் சலாவுதீன் அய்யூபி வருகிறார்கள் இவர் எகிப்த், சிறியா, பாலஸ்தீன் ஆகிய இடங்களில் தனி ஒரு ஆளாக நின்று (சிலுவை வீரர்களோடு) சேர்ந்து ஒரு ஒப்பந்தம் இடப்பட்டது.
சலாவுதீன் அய்யூபிக்கு போர்வீரர்கள் உதவி அப்பாசியா கலீபாக்கள், மாமிலூக்கள் போன்றோர்கள் செய்தார்கள் என்று கூறபடுகிறது.
இது வரை கொடுத்த பதிவில் தஜ்ஜாலின் குழப்பங்களை நம்புவதால் இணைவைப்புஆக மாற வாய்ப்புள்ளது என்று பார்த்தோம்.
மேலும் ரோம்மும் பாரசீகமும் முஸ்லீம்களை எப்படி எதிர்த்து வந்தார்கள் என்றும்
சிலுவை வீரர்கள் எப்படி வந்தார்கள் என்றும்
அப்பாசியா கலீபா தொடங்கும் முன் உள்ள நிலைமையும் பார்த்தோம்.
இதை மொத்தமாக பார்த்தால் தஜ்ஜாலின் குழப்பங்கள் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்?
இது அவனுடைய 10 நாள் இல்லை என்று எப்படி சொல்லமுடியும்.
சிலர் நேரடியாக நபி ஸல் அவர்கள் கூறவில்லையே என்று கூறுகிறார்கள்.
நேரடியாக கூறினால் நமக்கு சோதனையே இருக்காதே?
சில சோதனையை நேராக கூறினாலும் புரியாது!
சோதனை இல்லாமல் அல்லாஹ் சொர்க்கம் எப்படி தருவான்?
சிந்திக்க வேண்டாமா?
இதை இப்படி புரிந்து கொள்ளலாம் இந்த 400 வருடங்கல் என்பது இதற்க்கு முந்தின 400 வருடங்களை காட்டிலும் அதிகமான குழப்பங்கள் இருக்கும்.
இதை வரலாறுகளாக பார்த்தால் நன்றாக புரிகிறது.
இக்காலங்களில் நமக்கு ஊடகம் இல்லாததால் ஏற்பட்ட குழப்பங்கள் நமக்கு ( புரியவில்லை ) தெரிவதில்லை.
அலி ரலி அவர்கள் வரை உம்மத் ஒரு தலைமையின் கீழ் இயங்கிகொண்டு இருந்தது
இதன் பின்பு உம்மத் தனி தனி தலைமையின் கீழ் இயங்க ஆராமித்தது
குடும்ப ஆட்சி முறையாக ஆராமித்தது.
இதன் பின்பு பொருளாதாரம், கல்வி, ஏனைய கலாச்சாரம், இனம், இது போன்று தனி தனி அதிகாரம் கீழ் வைத்து இயங்க ஆரம்பம் ஆனது.
ஒரு பிரதிநிதியிடம் கேட்டு முஸ்லீம்கள் முடிவு எடுத்த காலம் முடிந்து போய்
அதே மார்க்க முடிவுகள் அதன் பின்பு தனித்தனியாக ஆராமித்தது.
பொதுவாக எல்லாருக்கும் தனி ஒரு வழிகாட்டி கலீபா இல்லாமல் தன்னுடைய பகுதியில் தனியாக ஒருவர் ஆட்சி செலுத்தலாம். என்ற செயல் யசீத் பின் முஆவியா ரலி அவர்கள் ஆட்சியிலே தொடங்கிவிட்டது.
இதெல்லாம் குழப்பம்தான்
நீங்கள் இதெல்லாம் குழப்பம் இல்லை சொல்வீர்களா?
குழப்பம்தான் என்று சொன்னாலும்
குழப்பம் இல்லை என்று சொன்னாலும்
இந்த இரண்டிற்குமே நேரடியாக இந்த இரண்டு தரப்புக்கும் ஆதாரம் காட்டமுடியாது.
உலக நிகழ்வை வைத்துதான் முடிவெடுக்க முடியும்.
வரக்கூடிய காலகட்டத்தில் இன்ஷாஅல்லாஹ் இந்த கருத்து வேறுபாட்டில் உள்ள இரண்டு தரப்புக்கும் அல்லாஹ்வே நல்லவர்களே தீயவர்களிடமிருந்து பிரித்து காட்டி நிச்சயமாக தீர்ப்பும் அளிப்பான்.
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை;அல்குர்ஆன் : 3:179)
இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை;
(அல்குர்ஆன் : 3:179)
அல்லாஹ்வே மறைவானதை அறிவிப்பதில்லை என்று சொல்லிவிட்டானே என்று அவர்கள் கூறுவர்களேயானால்
அல்லாஹ் அதற்க்கு பின் சொல்லக்கூடிய வார்த்தையை கவனியுங்கள்
ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான்.
(அல்குர்ஆன் : 3:179)
இதெல்லாம் மக்களுக்கு அறிவிக்க தூதரை அல்லாஹ்வே தேர்ந்தெடுப்பான்.
முதல் 400 வருடங்களில் குடும்ப ஆட்சி முறையில் குழப்பங்கள்
இரண்டாவது 400 வருடங்களில் இனம்,மொழி, என்ற அடிப்படையில் ஆட்சி அதிகார குழப்பங்கள்
ஒரு சிலரிடம் தவிர அல்லாஹ்வுடைய தீன்,ஆட்சி, அதிகாரம், எங்கே இருந்தது, யாரிடம் இருக்கிறது
யாராவது கூறமுடியுமா?
முடியாது!
அதனால்தான் நாங்கள் கூறுகிறோம்.
இது ஒட்டுமொத்த உம்மத்துக்கும் நாங்கள் இங்கே கூறின நிகழ்வு எல்லாம் தஜ்ஜாலின் குழப்பங்கள் ஆகும்
Comments
Post a Comment