“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
தஜ்ஜால்
பாகம் 5
அல்லாஹ் நபி ஸல் அவர்களை உலகிற்க்கு
கி, பி 6 ஆம் நூற்றாண்டில் மனித உடல் ரீதியாக ரசூலாக அனுப்பி வைத்திருந்தான்.
ஆனால் நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு இப்போது வரைக்கும் உடல்ரீதியாக மக்களுக்கு ரசூலோ, நபியோ இல்லாமல் ஒரு சமூகத்தை விட்டிருக்கிறான் என்றால்......
எந்த அளவுக்கு இந்த உலகத்தில் அத்தாட்சி அமைந்துள்ளது என்று பார்க்கவும்,
அல்லாஹ் தன் அடியார்கள் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளான் என்பதை நாம் சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்.
இதுவரை சில நபர்களுக்கு கொடுத்த விளக்கங்கள் தவறாக வந்துள்ளதே என்று எண்ணம் தோன்ற வேண்டாம்.
ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய கல்வி தரத்தை வைத்து பதிவை விளங்கி கொள்வார்கள்.
அல்லாஹ் நாட்டம் இருக்கும் வரை எங்களுக்கும் இந்த விளக்கங்கள் முதலில் புரியாமல் இருந்தது.
(இப்போது விளக்கங்கள் தவறாக உள்ளதுபோன்று தோன்றும் மக்கள் அல்லாஹ்விடம் ஒவ்வொருவரின் கல்வியை அதிகபடுத்த கை ஏந்துவோம்).
இப்போது வருகிற இஸ்லாம் என்ற பெயரில் வருகிற விளக்கங்களும் அதை கொடுக்கிற அரிஞ்சர்களும் சிறந்தவர்கள் என்று சொல்லவரவில்லை முன்காலத்தில் உள்ள அரிஞ்சர்கள் எப்போதும் சிறந்தவர்கள்தான்.
அதற்க்காக இப்போது உள்ள அறிஞ்சர்களின் விளக்கங்களை தவிர்க்க வேண்டாம்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் விளக்கங்கள் வந்துகொண்டேதான் இருக்கும்.
அதையெல்லாம் சரியாக கையாளாவிட்டால் பின் வரும் சமூகத்திற்கு நல் வழியை தவறாக காண்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
நாம்.................... எதற்க்காக படைக்கபட்டிருக்கிறோம் என்று தெரியாமலும்,காலையில் எதற்க்காக எழுந்துருக்கிறோம் என்று தெரியாமலும் நம்மளுடைய வாழ்க்கையை ஓட்டிகொண்டிருக்கிறோம்.
இஸ்லாத்திற்காக எத்தனையோ அரிஞ்சர்கள் காலையிலும், மாலையிலும், மார்க்கத்தில் என்னனேன்ன உள்ளது என்று தன் வாழ்நாளை அல்லாஹ்வுக்காக தொலைத்து சத்தியத்தை தேடி மக்களுக்கு எடுத்துறைத்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களின் செயல்களை ஒரு சில தவறுகள் இருக்கத்தான் செய்யும்.
அவர்களின் தவறுகளை விட்டுவிடுவோம்.
இப்லீஸ் மனிதனுக்கு தெளிவான பகைவன் என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.
அந்த அறிஞ்சார்களின் விளக்கங்கள் தவறாக விளக்கங்களாக இருக்கிறது என்று நினைத்து.
நாம் ஒரே ஒரு வார்த்தையில் அவர் ஒரு வழிக்கேடர் என்று கூறவேண்டாம்,
அவரை வழிக்கேடர் என்று கூற நாம் என்ன தெரிந்துவைத்துள்ளோம் என்று நம்மிடமே கேள்வி எழுப்புவோம்.
ஒரு வேளை அவர்கள் கூறிய இந்த விளக்கம் உண்மையாக இருந்தால் என்ன செய்வது என்று சிந்தித்ததுண்டா?
உலகத்தில் மறைவான விளக்கங்கள் அல்லாஹ் ஒருவனே அறிவான் என்பதில் மாற்று கருத்து எங்களுக்கும் இல்லை.
உதாரணமாக ஒரு விஷயம் சொல்லிக்கொள்கிறேன்.
நாம் எல்லாம் ஒரு வீட்டில் இருக்கிறோம். வெளியே மழை பெய்கிறது, நாம் வீட்டினுள் இருந்து கொண்டே அந்த மழையை பார்க்காமலே மழை வந்தது என்று சொல்கிறோமில்லையா?
இதுவும் மறைவான விஷயம்தானே!
இதை எப்படி நம்மளால் சொல்ல முடிந்தது?
மனிதன் படித்து கற்று கொண்ட விஷயத்தில்தான் மறைவான விஷயமாக இருந்தாலும் யூகிக்க முடியும்.
மனிதன் அறிவுக்கு எட்டாத சில மறைவான விஷயம் அல்லாஹ் மட்டுமே அறிவான்.
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)
இந்த
மறைவான 5 விஷயங்களை தவிர மீதி ஒரு மனிதன் கற்ற கல்வியில் மறைவான விஷயங்கள் சாதாரண மனிதனால் யூகிக்க முடியும்.
இந்த மறைவான நிகழ்வு பற்றி ஃபிர்அவுன்குடும்பத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர் மூலமே தொடங்குகிறது.
அவருக்கு தெரிந்த மறைவான கல்வியின் அடிப்படையில் அவர் ஃபிர்அவுனுக்கு விளக்குகிறார்.
ஃபிர்அவுன்குடும்பத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர், மற்றும் மூஸா, ஃபிர்அவுன், இந்த 3 நபர்களையும் பற்றி குர் ஆனில் இருந்து சிறிய வரலாறு விளக்கமாக தருகிறோம்.
இப்போது நமக்கு மத்தியில் இருக்கும் அரிஞ்சர்கள் கொடுக்கும் விளக்கம் என்பது (மூஸா அலை அவர்கள் அவர்கள் சமூகத்திற்கு கொடுத்தது போல)
அரிஞ்சர்கள் சொன்ன பின்பு அந்த விளக்கத்தை கேட்க்கும் சாதாரண மனிதர்கள் (ஒன்றும் தெரியாத ஃபிர்அவுன் போல)
இதற்கு இடைப்பட்ட உள்ள மக்கள் அந்த விளக்கங்களை புரிந்து இருப்பார்கள் அதை எப்படி நம்புவது என்று தெரியாமலும் மக்களுக்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தெரியாமலும்.
முழுமையான நம்பிக்கை (முஹ்லஸீன்களாக) இல்லாமல் இருப்பவர்கள்.(இது நம்மளாகவும் இருக்க வாய்ப்புண்டு)
இப்போது அந்த விளக்கங்கள் குறித்து பார்ப்போம் சூரா அல் முஃஹ்மீனில்
மூஸா அலை அவர்கள் நபித்துவம் பெற்று ஃபிர்அவுனிடம் அந்த ஒரிரை கொள்கை பற்றி விளக்கம் கொடுக்க வந்தார்கள்
ஃபிர்அவுனுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சிகள் எல்லாம் புரிந்தாலும்.
அதை அவனுக்கு விளக்க அந்த நேரத்தில் ஃபிர்அவுனுக்கு இடையில் இருந்த ஃபிர்அவுன் குடும்பத்தில் உள்ள ஒருவர் சில விளக்கங்களை கூறுகிறார் அவர் என்ன கூறினால் என்றால்?
மூஸா அவர் தன்னை நபி என்று கூறுகிறார்.
அவர் ஒருவேளை நபியாக இருந்தால் ( ஃபிர்அவுனாகிய ) நீங்கள் அவரை கொலை செய்யாமல் விட்டு விடுங்கள் அப்படி செய்தால் அவர் சொன்னது போன்று நமக்கு அல்லாஹ்வின் வேதனை வந்துவிடும் என்று அவன் குடும்பத்தில் உள்ள ஒருவர் அவனுக்கு எச்சரிக்கிறார்.
மேலும் நீங்கள் அவரை கொலை செய்யாமல் விட்டுவிட்டால் அல்லாஹ்வே அவரை தண்டித்து விடுவான். ( என்று அந்த ஃபிர்அவுனிடம் அந்த குடும்பத்தாரில் உள்ள ஒருவர் கூறிகிறார்.)
அவரை அல்லாஹ் காப்பாற்றினான் என்று (40 வது அத்தியாயம் 28 வசனம் முதல் 45 வசனம் இல் கூறுகிறான்)
இந்த குட்டி விளக்கத்தை மூஸா அலை அவர்களை முன் மாதிரியாக வைத்து இந்த தஜ்ஜால் விஷயத்தில் நாங்கள் இந்த அரிஞ்சர்கள் கொடுக்கும் விளக்கத்தை நாங்கள் எங்களுக்கு மறைவான அடிப்படையில் இருக்கும் தரகர்கள் போன்று மக்களிடம் கூறுகிறோம்.
இந்த தஜ்ஜால் விளக்கம் ஒரு வேளை உண்மையாக இருந்தால் என்ன செய்வீர்கள்.
இந்த விளக்கங்களுக்கு யாரிடம் மாற்று கருத்து உள்ளது.
தெரிந்தால் தயவு செய்து மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்த அரிஞ்சர்கள் பொய் சொன்னால் அவர்களை அல்லாஹ்வே தண்டித்துவிடுவான்.
அதை பற்றி நீங்களோ நாமோ கவலை பட வேண்டிய அவசியம் இல்லை.
மறுமை நாளில் ஒவ்வொருவரிடமும் தனி தனியாகவே கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால் இந்த அரிஞ்சர்கள் சொல்வது முழுவதும் உண்மை போன்றுதான் எங்களுக்கு தோன்றுகிறது.
🤲🤲🤲யா அல்லாஹ் எங்களின் கல்வி ஞானத்தை பெருக்குவாயாக🤲🤲🤲
ஆகவே நாங்கள் அதை சிந்தித்து சிறிய கணக்கின் அடிப்படையில் நல்ல நோக்கத்தோடு நாம் சற்று தோராயமாக விளக்குகிறோம்
தஜ்ஜால் 5
கடைசியாக இந்த நடப்பு ஆண்டையும் சேர்த்து தஜ்ஜாலின் கடைசி 10 நாள்களில் இருந்து கொண்டு இருக்கிறோம்.
இதையும் நாம் காண்போம்.
கி. பி. 1749+359 =2108 கி. பி
இந்த கடைசி 10 நாள் தஜ்ஜாலின் குழப்பங்கள் நம்மில் சாதாரண நாள்கள் போன்று இருக்கும்.
இந்த சாதாரண நாள்களை சாதாரண மனிதனால் காணமுடியும்.
இந்த 2025 ஆம் ஆண்டில் மொபைல் கையில் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த உலகை பற்றி தெளிவாக தெரிய முடியும்
இந்த உலகை ஆளும் ஒரு சக்தி அமெரிக்காவாகும் (இந்த அமெரிக்காவையும் தெளிவாக ஆளும் சக்தி எல்லாருக்கும் தெரிந்ததுதான்)
முன்னே சொன்னது போன்று இந்த தலைப்பு என்பது முழுமையாக எந்த நேரங்களில், எந்த காலகட்டத்தில், எந்தவிதமான உலக அரசியல் நகர்வை நகர்த்துகிறது என்று அறிந்த ஒருவன் அல்லாஹ் ஒருவனே
தஜ்ஜாலின் சாதாரண நாட்கள் கி, பி 1700 முதல் 1800 வரை ஓட்டமன் கலீபா வீழ்ச்சி அடைந்தற்க்கு பிறகு,
கி. பி 1800 முதல் 1900 வரை ஜெர்மனில் ஹிட்லரால் அடித்து விரட்டபட்ட சமூகம் இருக்கிறது அவர்கள் அங்கே உள்ள ஜெவ்ஸ் ஆவார்கள் ( judaisam + Zionism )
இவர்கள் எல்லாம் வெளியேற்றிய பின்னர் அவர்கள் (Zionism மக்கள் ) பாலஸ்த்தீனம் என்ற நாட்டுக்கு குடியேற வருகிறார்கள்.
மூஸா அலை அவர்கள் காலத்தில் அவர்கள் சமூகத்திற்கு அல்லாஹ் ஒரு வாக்காக வசனத்தை அவர்களுக்கு கூறுகிறான் நமக்கு ஞாபக படுத்துகிறான்.
2025 ஆவது இந்த வருடத்தில் இருக்கிற இந்த மக்கள் மூஸா அலை அவர்களுடைய உம்மத் என்று இவர்களே கூறிக்கொள்கிறார்கள்
அப்படிப்பட்ட இந்த மக்களுக்கும் மூஸா அலை காலத்தில் உள்ள மூஸாவின் உம்மத்துக்கும் உள்ள ஈமான் என்பது மிக பெரிய வித்தியாசம் உள்ளது
குர் ஆனில் வசனத்தில் அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.
மூஸா அலை அவர்கள் அந்த பனி இஸ்ரேல் மக்களை ஃபிர்அவுனிடம் இருந்து காப்பாற்றி கூப்பிட்டு வந்து விட்டு பின்பு அல்லாஹ் அவர்களிடம் ஒரு வசனத்தை கூறுகிறான்.
இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவனின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்.”
(அல்குர்ஆன் : 17:104)
இந்த வசனத்தையும் 2 அர்த்தங்களாக நாம் புரியலாம்.
ஒன்று அல்லாஹ் கூறக்கூடிய மறுமை என்று கூறக்கூடிய அந்த கடைசிநாள் (முடிவுநாள்)
இன்னொன்று அந்த கடைசி நாளுக்காக ஒரு குறிப்பிட்ட வருடத்தில் கி. பி 1970 களிலிருந்தே இருந்தே உலகில் உள்ள அவர்கள் தங்களுக்கு தாங்களே மூஸா அலை அவர்களுடைய உம்மத் என்று சொல்லக்கூடிய பனி இஸ்ரவேலர்களை ஒன்று சேர்க்கும் வேலை மனிதர்கள் நாம் புரியக்கூடிய வகையில் இந்த 1000 ஆண்டுகளாக ஒன்று சேர்த்து கொண்டிருக்கிறான்.
அல்லாஹ்வின் 1 நாளில் அடிப்படையில் அது நடந்து கொண்டு இருக்கிறது.
சூரா அன்பியாவில் அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறும் என்ற சொல்
மறுமை நாளின் முடிவு இந்த யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் சமூகத்திற்கு நிறைவேறிவிட்டது.
கி. பி 700 முதல் 1000 வரை வரலாறு செய்திகளின் அவதூறுகளை மனிதர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் பரப்பக்கூடிய குழப்பங்களின் வேகமும்.............
இப்போது கி. பி 1700 முதல் 2025 வரை உள்ள வரலாறு செய்திகளின் அவதூறுகளை மனிதர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் பரப்பக்கூடிய வானொலி, TV, இன்டர்நெட், mobile, இப்படி இந்த குறுகிய 50 ஆண்டுகளாக உள்ள குழப்பங்களின் வேகமும் தஜ்ஜாலின் குழப்பங்களாக எடுத்து கொள்ள முடியலையா?
இன்னுமா........ புரியவில்லை!
குர்ஆன் சொல்லக்கூடிய அல்லாஹ்வுடைய நாளை , மனிதனுடைய ஆண்டுகளாக கணக்கிட்டால் தஜ்ஜாலின் குழப்ப காலகட்டம் புரியும்.
இந்த கி. பி 1700 முதல் 1900 வரை யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews) என்ற (crusades-சிலுவை வீரர்கள்) அல்லாஹ் குர் ஆனில் கூறுப்பட்ட அந்நாளில் கடல் அலைகள் போல் ஒன்றோடு ஒன்று மொதவிடுவோம் என்று கூறுகிறான்.
இதை (அலைகள் மோதவிடுவதை) அரிஞ்சர்கள் முதலாம் உலக போர், இரண்டாம் உலக போராக குறிப்பிடுகிறார்கள்.
இன்னும், அந்நாளில் அவர்களில் சிலரைச் சிலருடன் (கடல்) அலைகள் (மோதுவதைப் போல்) மோதுமாறு நாம் விட்டு விடுவோம்;
என்று அல்லாஹ் கூறுகிறான்.
(அல்குர்ஆன் : 18:99)
முதல் மற்றும் இரண்டாம் உலக போர் என்பது பொதுவாக 1700 முதல் 1900 வரையிலும் உலகத்தில் பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.
இந்தியாவிலும் கூட ஆங்கிலேயர்கள் (Zionist) மீதான போராட்டம் நடந்தது
ஆனால் அவன் இப்போது இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை,
அதற்க்கு மாறாக அவன் அமெரிக்கா என்ற ஒற்றை நாட்டை நிறுவி அங்க இருந்து (கல்வி, அரசு அலுவலகம்,பணம், தொழில், கலாச்சாரம், இப்படி சொல்லி கொண்டே போகலாம்) கண்காணிக்க உலகத்தில் எல்லா நிறுவனங்களையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்து வைத்து கொண்டு இருக்கின்றான்.
18 ஆம் நோற்றாண்டில் சிலுவை வீரர்கள் சீயோனிஸ்ட் கள் புனித இடங்களுக்காக போராடினதை போன்று, இனி வரக்கூடிய காலகட்டங்களில் கல்வி, அரசு அலுவலகம்,பணம், தொழில், கலாச்சாரம்,இப்படி எல்லா துறைகளையும் இஸ்ரேல் என்ற நாட்டுக்கு கொடுக்க உள்ளது.
இப்போது மறைமுகமாக உலகத்தை சீயோனிஸ்ட் ஆளுகிறார்கள்.
தெளிவாக சொன்னால் எல்லா நாடுகளின் முதலாளி முதலைகள் தான்
இனி உலகத்தை இவர்கள் வெளிப்படையாக ஆள்வார்கள். அல்லாஹ்வே அறிவான்.
உலகத்தை தஜ்ஜால் என்ற ஒருவன் கையில் கொடுக்க சாதாரண சுதந்திரம் என்ற பெயரை உலகத்திற்கு கொடுத்துவிட்டு இருக்கிறான்.
முதலாளித்துவம் என்ற அடிப்படையை வைத்து பார்க்கும்போது.
இனி இஸ்ரேலின் தலைவராக கூட தஜ்ஜால் வர வாய்ப்புண்டு
இதனை சுற்றி உள்ள இடங்களில் தஜ்ஜாலின் குழப்பம் இந்த 50 வருடத்தில் எவ்வளவு வேகமாக வளருகிறது என்று அவனுடைய சாதாரண நாள் எங்கள் கண்களுக்கு பிரதிபலிக்கிறது.
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் ஆங்கிலேயர்கள் ballfourdeclaration, என்ற ஒப்பந்தம் பாலஸ்தீனத்தை விட்டுவிட்டு போகும்போது அமெரிக்காவை நடுவராக வைத்து பாலஸ்தீனம் என்ற நாடு யூதர்களுக்கும் சொந்தம் என்ற ஒரு வரையிரை இல்லாத ஒப்பந்ததை போட்டார்கள்.
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் Zionist என்ற Ben gurion என்பவர் இஸ்ரேலை நிறுவுகிறார்.
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் ஓட்டமன் கலீபாவின் ஆட்சிக்கு கீழ் நஜித் தேசத்தில் ஒத்த கருத்தில் இயங்கிகொண்டு இருந்த ஷரீஃப் அல் ஹுசைன் என்ற அமீர் ஓட்டமன் கலீபாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வைத்து.
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் தனி நாடாக பிரித்ததுதான் சவூதி அரேபியாவாகும்.
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் உலகத்தில் ஒரே ஒரு செல்வம் என்ற பெயர் கொண்ட காகித பணம் உபயோகபடுத்தபடுகிறது
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் ஒருவர் நிர்வாகத்தில் உலகத்தை கொண்டு வர உலகில் முதல் முறையாக தொடங்கப்பட்ட காகித பணம் bank of England ஆகும்
இந்த 50 வருட காலகட்டத்தில்தான் உலகத்தில் பணம் எப்படி உபயோக படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டதுதான் international monitoring Fund
இதெல்லாம் ஒரு சமூகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
இந்த சமூகம் எதற்க்காக இயங்குகிறது என்று புரியவேண்டாமா?
நாங்கள் அரிஞ்சர்கள் உதவியோடு இவ்வளவு தெளிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை....... அல்லாஹ்வே குர் ஆனில் விளக்கியுள்ளான் மனிதர்கள் சிந்திக்க தவறிவிட்டார்கள்.
நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 21:95)
பனி இஸ்ராயீல்கள் செய்த அட்டுழியத்தினால் அவர்கள் மீது வேதனை கொடுத்து கி, பி 70 இல் அந்த மக்ஸிதுல் அஃஷாவில் இருந்து அல்லாஹ் விரட்டிவிட்டான்.
இதன் பின்பு
யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
(அல்குர்ஆன் : 21:96)
யஃஜூஜு(jews), மஃஜூஜு(jews) என்ற மனிதர்கள் உலகத்தில் உள்ள எல்லா உயர் அதிகாரத்தின் மேல் சென்றும் விட்டார்கள்.
21:95 இல் கூறப்பட்ட அந்த வேதனை கொடுக்கப்பட்ட அந்த மக்கள் திரும்பி அதே ஊருக்கு திரும்பி வருவார்கள்
எதற்க்காக என்றால் 17:104 அல்லாஹ் ஃபிர் அவுனுக்கு கொடுத்த வேதனை போன்று அதைவிட அதிகமாகவோ அந்த அநியாயகார சமூகத்தை அதே போன்று இஸ்ரேல் என்ற நாட்டுக்கு வேதனை கொடுக்க ஒன்று சேர்க்கபட்டுகொண்டிருக்கிறார்கள்.
இதை சில அரிஞ்சர்கள் இதற்க்கு பிறகு வரக்கூடிய வசனத்தை வைத்து அது கடைசி நாள் இல்லை என்று கூறுகிறார்கள்.
அதற்கு கீழ் உள்ள இந்த வசனத்தை உதாரணமாக காண்பிக்கிறார்கள்.
(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்:) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
(அல்குர்ஆன் : 21:97)
இந்த மறுமை வாக்குறுதி நெருங்கினால் என்ற வார்த்தையை இன்னும் சில அரிஞ்சர்கள் அதை முடிவுநாள் கடைசி நேரம் என்று புரிந்து கொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்.
இந்த மொத்த தலைப்புக்கும் மாற்று விளக்கங்கள் கொடுகிற இந்த அறிஞ்சர்களின் விளக்கங்களை நாங்களும் எடுத்து கொள்கிறோம்.
ஆகவே இந்த தலைப்புகளுக்கு மாற்றம் இல்லாமல் மக்கள் எப்படி புரிய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
உதாரணமாக குர் ஆனில் கீழ் கொடுக்கப்படுகிற இந்த வசனத்தை இப்படியும் புரியலாம்
அல்லாஹ் "குன்" என்று இந்த வானம், பூமி 7 நாள்களில் உண்டாகிறது என்று கூறுகிறான்.
உலகம் உண்டாகுவதற்கு முன்பு முதல் உலகம் அழியும் உள்ள அந்த ஒரு நேரம் வரை கொண்ட நிகழ்வை அந்த ஒரே ஒரு "குன்" ஆகுக என்றும் மக்கள் புரியலாம்
அதே வார்த்தையை அல்லாஹ் மாறி மாறி கூறுவதாகவும் எடுக்கலாம்.
அதே போல் மேலே கூறப்பட்டுள்ள மறுமை வாக்குறுதி நெருங்கினால் என்பதை உலகம் கடைசி முடிய போகிற அந்த ஒரு நொடியாகவும் கருத்தலாம்.
அல்லாஹ் அந்த கடைசி உலகம் முடிப்பதற்கு நாம் வாழக்கூடிய ஆண்டுகள் கணக்கின் படி தோராயமாக 300 வருடங்கள் முன்பும் அந்த நேரத்தை குறிக்கலாம்.
இதனால் அந்த இரண்டு அறிஞ்சர்களின் புரிதல் மாறுபட்டதாக ஆகாது.
இப்படி குர் ஆனின் வசனங்களை எல்லாரும் நாம் உலகத்தில் வாழக்கூடிய காலங்களில்,நாளில், நேரங்களில், அடிப்படையில் புரிவது சிறந்ததா?
இல்லை
அல்லாஹ் கூறின வார்த்தையை (குர் ஆனை ) பூட்டி வைப்பது சிறந்ததா?
ஆகவே இப்படி நாங்கள் போடக்கூடிய கணக்குகள் அல்லாஹ்வே அறிந்தவன்.
இருந்தாலும் வரலாறுகளோடு ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் சம்பந்தமாக மேலும் தவறாக புரிந்த ஒரு ஹதீத் பாருங்கள்.
ஈஸா அலை அவர்கள் வரும்போதுதான் யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews) வருவார்கள்.
அதற்கு முன் எப்படி வருவார்கள் என்ற கேள்விக்கு.
தவறாக புரிந்ததன் மூலம் இந்த கேள்விகள் தோன்றுகிறது.
இதை சரியாக புரிய வேண்டுமென்றால்.
ஈஸா அலை அவர்கள் வரும்போது யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews) அதிகாரத்தில் இருந்தவர்கள் போர் புரிய வருவார்கள் என்ற ஹதீதை நாம் தவறாக புரிந்து வைக்கவும் வாய்ப்புண்டு
ஈஸா அலை அவர்கள் வரும்போது யஹ்ஜுஜ் (jews) மஹ்ஜுஜ் (jews) என்பவர்கள்
தூல்கர்னைன் காலத்தில் கட்டப்பட்ட அந்த சுவரை உடைத்து கொண்டு வருவதை அந்த ஹதீத் கூறவில்லை.
மாறாக யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் ஒவ்வொரு (உலகின் உயர் பதவியில்) உயரத்திலும் சென்று அதிகாரத்தில் இருந்ததை அது கூறுகிறது.
இதை இப்படித்தான் புரியவேண்டும்.
ஈஸா அலை அவர்கள் இறங்கி வந்ததும் யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் போரிட தயாராகி வருவார்கள் என்று புரிவதே (நிகழ்காலத்திற்கு மாற்றம் இல்லாமல் இருக்கும்)
வரலாறுகளை கற்பனை காலத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு பார்ப்போம்.
நாம் கணக்கிடக்கூடிய அந்த சாதாரண நாளான தஜ்ஜால் வரக்கூடிய நாளை அடுத்த பாகத்தில் காணலாம்.
ஆகவே அல்லாஹ் மீது முழுமையாக நம்பிக்கை வைப்போம்.
மக்களாகிய நமக்கு இறைநம்பிக்கை மட்டும் இருந்து நற்செயல் நம்மளிடம் இல்லையென்றாலும் நஷ்டம்தான்.
நற்செயல் மட்டும் இருந்து இறைநம்பிக்கை இல்லையென்றாலும் நஷ்டம்தான்.
எல்லாம் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அறிந்தவர்கள்.
Comments
Post a Comment