“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
தஜ்ஜால்
பாகம் 6
இதுவரை தஜ்ஜால் சம்பந்தமான வரலாறுகளில் பாகம் 1 இல் கூறப்பட்டுள்ள அறிஞ்சர்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கி இருந்தோம்.
ஆனால் இப்போது தொகுக்கக்கூடிய தஜ்ஜால் சம்பந்தமான ஹதீத்கள் அத்தனையும் Islam 360 APP இல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இது மக்களாகிய உங்களுக்கு மூலத்தில் இருந்து புரிய இலகுவாக இருக்கும்.
இங்கு கூறக்கூடிய தஜ்ஜால் சம்பந்தமான ஹதீஸ் நிகழ்வுகள் எல்லாம் அந்த அறிஞ்சர்களில் இருந்து கற்று கொண்ட கல்வியில் இருந்து தனிப்பட்ட ஒருவர் சிந்தனையில் அடிப்படையில் இப்படியும் நடக்க வாய்ப்பு உண்டு என்று மட்டுமே கூறபோகிறோம்.
இதை முடிவாக எடுக்காமலும் ஒதுக்கி புறம்தல்லாமலும் ஒவ்வொருவரும் இதற்காக முயற்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மறுமை நாளின் அருகே வரக்கூடிய தஜ்ஜாலுக்கும், யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ்க்கும் சம்பந்தம் உள்ளது.
அது பின்வருமாறு காண்போம்.
ஆகவே இதில் சொல்லக்கூடிய தஜ்ஜாலுடைய ஹதீஸ் அவனின் குழப்பங்களாக காணுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் தவறு செய்தாலும் உண்மையான செய்திகளை சொல்லாமல் இருக்க முடியாது என்ற அடிப்படையில் அப்படியே எங்களுக்கு வந்த உண்மையை கூறும்போது சில கசப்பான சிந்தனைகள் மக்களாகிய உங்களுக்கு எழலாம்.
ஆகவே உம்மத்தின் இழப்பாக சிந்திக்காமல் தஜ்ஜாலுடைய குழப்பங்களாக சிந்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஹதீத்களை எளிதாக புரிய சற்று கூடுதலாக விளக்கியுள்ளோம்.
நாங்கள் கூறுவதை அப்படியே நம்ப வேண்டாம்.
மேலும் இதை நீங்களும் சிந்தித்து சோதனை செய்து (படித்து ) கொள்ளுங்கள்
தவறு இருந்தால் எங்களுடைய அறிவின் குறையாக நினைத்து எங்களை அல்லாஹ்வுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள்.
Abudhawood 4292,4242, 4286,4294,
mushnad ahamad 12835,12847
silsilathul sayha 2083,
ibnumaza 4084,
Buhari 3723,7222,5383,7460,3346,
Theermithzi 2238
Musleem 5553,5638,5629,5608,5520
தஜ்ஜாலும், யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் அவர்கள் வந்தால் நமக்கென்ன என்று இருப்பதும் பெரிய தவறாகும்.
அது ஏதோ ஒரு காலத்தை பற்றி பேசப்படுகிறது என்றும் நினைக்க வேண்டாம்.
இது அரபுங்களுக்காக நபி ஸல் அவர்கள் 6 ஆம் நூற்றாண்டில் சொன்னது அதனால் நமக்கு பாதிப்பு இல்லை என்றும்
அவர்களுக்காகதான் போர்கள் எல்லாம் நடக்கிறது என்றும்
தஜ்ஜால், யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் வரப்போவது கடைசி காலகட்டத்தில்தான் என்றும்
ஆகவே நாம் கவலை பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இருக்க கூடியவர்கள் சற்று தங்கள் செயலை குறித்து சிந்தித்து கொள்ளவும்.
நபி ஸல் அவர்கள் செய்து காட்டிய செயலை செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றாலும் அவர்கள் செய்த செயலை (கூட்டாமலும், குரைக்காமலும், மறைக்காமலும்)மக்களிடம் அப்படியே கூறவேண்டும்.
ஆனால் நாம் இந்த இரண்டு செயலையும் நாம் செய்யவில்லை.
அப்போது அல்லாஹ்வின் முன்னிலையில் நமக்கு உண்டான கேள்வி கணக்கு எப்படி இருக்கும் என்று சிந்தித்து கொள்ளுவோம்.
இந்த இரண்டு செயல்களை விட்டத்தினால்தான் உம்மத் இவ்வளவு ( இழப்பு ) இழிவுக்குள்ளாகிறது
அரபுகள் செய்த சில தவறினால்தான் யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் சுவர் இந்த அளவுக்கு திறந்துவிட்டது என்று தன் கையை வலையமிட்டு நபி ஸல் அவர்கள் காட்டினார்கள்.
ஆகவே யஹ்ஜுஜ், மஹ்ஜுஜ் என்பவர்கள் மனிதர்கள் (அரபுகள்) செய்த தவிறினால்தான் திறந்து விடப்பட்டார்கள் என்ற அடிப்படை புரிந்தால்தான் மீதி புரியும் இந்த அடிப்படை புரியவில்லையென்றால் எதுவுமே புரியாது.
ஏனென்றால் அல்லாஹ்வே அரபுகளை தேர்ந்தெடுத்தான்.
அரபுகள் என்ன தவறு செய்தார்கள் என்று நாங்கள் ஹதீதை தருகிறோம் பார்த்துக்கொள்ளுங்கள்.
யாஃகூப் அலை அவர்களின் வழி வந்த 12 மகன்களின் சந்ததிகள் முஸ்லீமாக மாறி இருந்தால் இந்த சோதனை முழுமை பெற்றிருக்கும்.
யூதர்களின் 12 தலைவர்களை பற்றி நபி ஸல் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
நபி ஸல் அவர்கள் காலத்திலேயே யூதர்களின் தலைவர்களில் 2 பேர் இஸ்லாமை தேர்ந்தெடுத்துவிட்டார்கள்,
1. அப்துல்லாஹ் பின் சலாம்
2. சஅத் பின் முஆத் (ரலி)
மீதி இருந்த 10 பேர் பற்றி நபி ஸல் அவர்கள் கூறினது
புஹாரி
5383. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யூதர்களில் (முக்கியப் பிரமுகர்கள்) பத்துப் பேர் என்னைப் பின்பற்றியிருப்பார்களாயின், பூமியின் மீதுள்ள அனைத்து யூதர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல் அவர்கள் கூறக்கூடிய இந்த 12 பேர்கள் யஃகூப் அலை அவர்களது அந்த 12 மகன்களின் வாரிசா என்று பலரும் சிந்திக்கலாம். (இவர்கள் அந்த 12 பேருடைய வாரிசுத்தான் என்று நாங்கள் நம்புகிறோம்)
ஆகவே மேலே கூறப்பட்டுள்ள பனி இஸ்ரலேர்களின் இரண்டு தலைவர்களின் சமூகமே இஸ்லாமை ஏற்றது அதில் சில நயவஞ்சகர்களை தவிர...........
இப்போது மேலே கூறப்பட்டுள்ள முஸ்லீங்களையும் சேர்த்து
நபி ஸல் அவர்கள் இறந்த பின்பு.... உலகம் முடியும் நாள்வரை என்னென்ன நடக்கும்.
அதில் முஸ்லீம்கள் எப்படி இருக்க வேண்டும், அநியாயகாரர்கள் எப்படி இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் இரண்டு தரப்பு மக்களுக்கும் வெவ்வேறு வகையான அறிவுரைகளை கூறிவிட்டார்கள்.
இதுவரை தந்த தொகுப்பில் மொத்த உம்மத்தும் எப்படி தடம் மாறியது என்று பார்த்தோம்.
இப்போது நபி ஸல் அவர்கள் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை காணலாம்.
அவர்கள் காலத்திலிருந்து அவர்களின் குழப்பங்களும் மறுமையின் அருகில் வரக்கூடிய தஜ்ஜால் வரை உள்ள குழப்பங்களும் ஒன்று சேருகிறது.
முதலில் நபி ஸல் அவர்கள் முஸ்லீம்களுக்கு சொல்லக்கூடிய அறிவுரையை பார்ப்போம்.
இஸ்லாத்திற்காக உதவி செய்த (அதாவது உயிர் தியாகம் செய்த அதுவும் எப்படிப்பட்ட உயிர்த்தியாகம் ஒவ்வொரு போரிலும் குறைந்தது 70 பேராவது ஷஹீத் அந்தஸ்து பெற்ற) அன்சாரிகளுக்காக........
நபி ஸல் சொன்ன அறிவுரை
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளிடம்)“உங்களுக்கு பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களைவிடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப்படுவதையும், நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்கள்.
மக்கள், “அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்கள், என்று அல்லாஹ்வின் தூதரே?” கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கிவிடுங்கள்; உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று கூறினார்கள்.
இஸ்லாத்திற்காக அன்சாரிகளும், முஹாஜீர்களும் செய்த தியாகம் போன்று வேறு யாரும் செய்திருக்க முடியாது அவர்களுக்கே இப்படிபட்ட அறிவுரையென்றால்................
நம்முடைய நிலமை என்ன?
வரலாற்றில் நபி ஸல் அவர்கள் முன்னறிவிப்பு செய்தபடியே முஸ்லீம்கள் (முஹ்மீன்கள்) செய்தார்கள்.
அப்போது நல்ல ஆட்சியாளர்களை நபி ஸல் அவர்கள் மறைமுகமாக மக்களுக்காக தேர்ந்தெடுத்தும் கொடுத்துவிட்டார்கள்.
இந்த விஷயத்தை மக்களாகிய நாம் நபி ஸல் அவர்கள் நேரடியாக (அபூபக்கர், உமர், உஸ்மான், அலி இவர்களிடத்தித்தான் ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ) ஹதீதில் சொல்லவில்லை அதனால் நாங்கள் நம்பமாட்டோம் என்று கூறும் மக்களும் நம்மில் இருக்கிறார்கள்.
முஸ்லீங்களாகிய நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்.
அன்று முஸ்லீம்கள், முஹ்மீன்கள் என்று இரண்டு தரப்பு மக்கள் இருந்தார்கள்.
அன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள், முஹ்மீன்கள் ஒன்று இல்லை,
ஆகவே அல்லாஹ்விடமிருந்து நபி ஸல் அவர்களுக்கு வரக்கூடிய நற்செய்தி முஹ்மீன்களுக்கு மட்டுதான் புரியக்கூடிய அளவிற்கு இருக்கும்.
நமக்கு அன்று உள்ள முனாஃபிக்களை பற்றி தெரியவில்லையென்றால் நாம் முஹ்மீன்கள் இல்லை.
நாம் பெயரளவில்தான் முஸ்லீம்கள்.
இந்த செய்திகளை மக்கள் மத்தியில் நாங்கள் சொல்லும்போது மக்களாகிய நீங்கள் எங்களை முஹ்மீன்கள் என்று சிந்திக்க வேண்டாம்.
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நாங்கள் முனாஃபிக்குகளாக இருக்க கூடாது என்று அல்லாஹ்விடம் துஆ கேட்கிறோம்.
வல்ல ரஹ்மான் நம்மளை பாதுகாப்பானாக..........
முந்திய காலத்தில் குடும்பம்,சொத்து, கடன், இது போன்ற விஷயங்களை குர்ஆனில் இருந்துதான் சட்டங்கள் எடுக்கப்பட்டன.
இப்போது குர் ஆனின் அர்த்தங்கள் கூட நமக்கு தெரியவில்லை.
உதாரணமாக குர்ஆனில் கடன் கொடுப்பது பற்றி சட்டம் வருகிறது.
நம்மில் ஒருவராவது இதை செய்கிறோமா?
அப்போது நாம் முஸ்லீமா? முஹ்மீனா?
கடனை பற்றி எந்த மாறி சட்டங்களை இயற்ற வேண்டும் என்பதை இந்த வசனத்தை விட விவரிக்க வேறு ஒரு வசனம் தேவை இல்லை.(அல்குர்ஆன் : 2:282)
நம்மில் இரண்டு முஸ்லீம்கள் இந்த கடன் விஷயத்தில் இறைவன் சொல்லுவது போல் நிறைவேற்றவாவது ஆசை பட்டோமா?
இல்லை!
இதை ஒரு சிலர் தவிர பெரும்பாலானவர்கள் இந்த வசனம் போன்று பின்பற்றுவதே இல்லை.
இந்த வசனங்கள் எங்களுக்கு புரியவில்லை......என்று கூட சொல்லமுடியாது.
தஃப்சீர் இல்லாமல் கூட ஒரு சாதாரண பாமர மனிதரால் கூட இந்த வசனத்தை புரிய முடியும்.
இது போன்ற வசனங்களை எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்து வைக்க நம்மை தடுப்பது எது?
இதையெல்லாம் தஜ்ஜால் தலைப்பில் கொண்டுவர காரணம் ஒரு முஸ்லீம் எப்படி பட்ட குர்ஆன் வசனங்களையெல்லாம் நிராகரிக்கிறான் என்பதை சிந்திப்பாதற்காக மட்டுமே............
இதையே நம்மளால் கடைபிடிக்க முடியவில்லையென்றால் அல்லாஹ்வின் ஆட்சியின் உள் அர்த்தங்கள் எப்படி புரியவரும்.
அல்லாஹ் குர் ஆனில் யாரை எந்த தரத்தில் வைத்துள்ளான் என்பதற்க்கு இந்த வசனம் மட்டும் உதாரணமாக எடுத்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
ஆகவே நபி ஸல் அவர்கள் நல்ல ஆட்சியாளர்களை நேரடியாக வாய் வார்த்தையாக சொல்லாமல் கூட (முஹ்மீன்கள் புரிந்து கொள்ள கூடிய அளவுக்கு) தேர்ந்தெடுத்து விட்டார்கள்.
இப்போதைய முஸ்லீம்கள் சில பேர் அதை ஒப்புக்கொண்டர்கள்.
அதோடு நபி ஸல் அவர்கள் கெட்ட ஆட்சியாளரகள் கையில் அல்லாஹ் ஆட்சி கொடுப்பான் என்றும் கூறிவிட்டார்கள்.
அடுத்து நபி ஸல் அவர்கள் அறிவித்த அறிவுரையை பார்ப்போம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மறுமைநாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும் . அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீதில் அல்லாஹ் நபி ஸல் அவர்கள் வழியாக (மறைமுகமாக) ஒரு சொல் கூறியுள்ளான்.
இதில் 12 ஆட்சி தலைவர்களும் தீனை நிலைநாட்டுவார்கள் என்று கூறவில்லை (மாறாக அவர்கள் காலத்தில் தீன் நிலைபெற்றிருக்கும் என்று கூறினார்கள்)
ஆக இதில் இருந்து புரியகூடியது என்னவென்றால் 12 குறைசிய தலைவர்களுக்குமே தீனை நிலைநாட்டுவார்கள் என்று பொருள் வரவில்லை.
இந்த ஆட்சியாளர்கள் காலத்தில் தீன் நிலைபெற்று இருக்கும் என்பதற்க்கும், ஆட்சியாளர்கள் தீனை நிலைநாட்டுவார்கள் என்பதற்கும் இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
மேலும், அந்த ஹதீதில் முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் (பாரசீக மன்னன்) குஸ்ரூவின் அல்லது குஸ்ரூ குடும்பத்தாரின் கோட்டையான வெள்ளை மாளிகையை வெற்றிகொள்வார்கள்.
மேலும், மறுமை நிகழ்வதற்கு முன் பெரும் பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.
மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை ("அல் கவ்ஸர்" தடாகத்தின் அருகில்) எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறினார்கள்.
இந்த செயல் அந்த தலைவர்கள் காலத்தில் உள்ள ஒரு குழுவை பேசப்படுகிறது.
அநியாயகார விஷயத்தில் நபி ஸல் அவர்கள் முஸ்லீம்களை பார்த்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹ் உங்களுக்கு செல்வத்தை வழங்கினால் உங்கள் குடும்பத்திற்கு செலவழிக்கட்டும் ( வார்த்தையை கவனித்து கொள்ளுங்கள் ) என்று தன்னுடைய தோழர்களுக்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள்
அதன் பிறகு நபி ஸல் அவர்களுடைய அதே தோழர்களுக்கு கெட்ட குறைசிய ஆட்சியாளர்கள் யார் என்றும் கூறிவிட்டார்கள்.
குறைசியர்களின் கெட்ட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்று நபி ஸல் அவர்களோடு இருந்த சில குறிப்பிட்ட நபி தோழர்களுக்கு மட்டுமே தெரியும் என்று மறைமுகமாக இந்த ஹதீதே கூறுகிறது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் “உண்மையாளரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் ‘என் சமுதாயத்தாரின் அழிவு குரைஷி இளைஞர்களின் கரங்களில் தான் உள்ளது’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள். அப்போது மர்வான், “இந்த இளைஞர்களின் மீது சாபம் உண்டாகட்டும்” என்று சொன்னார். உடனே அபூஹுரைரா (ரலி) அவர்கள் “நான் நினைத்தால் (அந்த இளைஞர்கள்) இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள் என்று குறிப்பிட்டு சொல்ல முடியும்” என்று கூறினார்கள்.
[அறிவிப்பாளர்களில் ஓருவரான அம்ர் பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்]
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இப்படி நல்ல ஆட்சியாளர்களையும் கெட்ட ஆட்சியாளர்களையும் இனம் காண்பித்து விட்டார்கள்.
இந்த வரலாறுகளை தஜ்ஜாலின் தலைப்பில் கொண்டுவர காரணம்.
நபி ஸல் அவர்கள் பின்பு யாருடைய ஆட்சி நபி ஸல் அவர்களால் அங்கீகரிக்கபட்டது என்று தெரிவதற்கும்.
அதில் இருந்து முஸ்லீம்களாகிய நாம் எப்படி உசூல் (அழகிய முன்மாதிரி) எடுக்க வேண்டும் என்ற சிந்தனைக்காகவும் மட்டுமே............இந்த நிகழ்வுகளை தஜ்ஜாலின் தலைப்பில் கூறுகிறோம்.
நாம் முதலில் கூறியது போல் இதை முஸ்லீங்களின் குறையாக பார்க்காமல் தஜ்ஜாலின் குழப்பமாக பாருங்கள், ( முன் சென்றவர்களின் செயல் முன் சென்றவர்களுக்கு) அவர்களை வைத்து இப்போது அரசியல் செய்ய வேண்டாம்.
இதில் இருந்து நாம் புரியகூடியது குறைசியர்களிடத்தில் ஆட்சி இருந்தாலும் அவர்கள் தீனை நிலைநாட்டுவார்கள் என்று கூறவில்லை ( தீன் நிலைத்திற்கும் என்று கூறினார்கள்) இதை இப்படி புரிந்து கொண்டால் மட்டுமே தீன் என்றால் என்ன என்பது மெல்ல மெல்ல புரிய வரும்.
இப்படி நாங்கள் புரிந்து இருப்பது தவறு என்று யார் மொழிபெயர்கிறார்களோ அவர்களிடத்தில் ஒரு கேள்வி?
நபி ஸல் அவர்கள் செய்த அந்த வாழ்க்கை சம்பந்தமான ஆட்சியை போன்று பின் வந்த குறைசியர்கள் அத்துணை பேரும் அதே முறையில் ஆட்சி செய்து காட்டிவிட்டார்களா?
இதை விமர்சனமாக வைப்பவர்களுக்கு இதற்க்கு பதில் தந்தால் நன்றாக இருக்கும்.
அப்படி அவர்கள் செய்து காட்டினார்கள் என்றால் அவர்களின் ஆட்சி அற்புதங்களை மக்கள் மத்தியில் கூற தயாராக இருப்போம்.
இல்லையென்றால் உண்மையான தீனை மக்கள் மத்தியில் சேர்ப்போம்.
நபி ஸல் அவர்கள் சமுதாயத்தில் அழிவு குறைசியர்களின் இளைஞ்சர்களின் கையில் தான் என்று சொன்னது பொய்யா?
ஆகவே அல்லாஹ் அரேபியர்களிடம் கொடுத்த தீனை அவர்களிடமிருந்து (அவர்களுக்கு இருந்த ) அந்த வேலை (அப்பாசியா கலீஃபா காலத்தோடு) பறிக்கப்பட்டு விட்டது.
அதன் பின் அல்லாஹ் அவனின் தீனை பாதுகாக்க ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு சமூகத்திற்கு ஆட்சி பொறுப்பை கொடுத்தான்.
இந்த முறை சிறிது காலம் அவர்களை உலகில் சுகபோகமாக வாழ அல்லாஹ் விட்டு விட்டான்.
அப்போது அல்லாஹ்வின் தீன் நிலைத்து நிற்கவில்லையா?
என்று கேட்டால் அதற்க்கும் நபி ஸல் அவர்கள் பதில் தருகிறார்கள்.
அதற்கு உதாரணம் இந்த ஹதீத்
புஹாரி 7460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் கட்டளையை நிலைநிறுத்தும் ஒரு குழுவினர் என் சமுதாயத்தாரிடையே இருந்துகொண்டேயிருப்பர். அவர்களை நம்ப மறுப்பவர்களும் சரி, அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களும் சரி அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருந்துகொண்டிருக்க அல்லாஹ்வின் கட்டளை (மறுமை நாள்) வந்துவிடும்.
இதை முஆவியா (ரலி) அவர்கள் அறிவித்தபோது அங்கிருந்த மாலிக் பின் யுகாமிர் (ரஹ்) அவர்கள், “முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டில் இருப்பார்கள்’ என்று சொல்ல நான் கேட்டேன்” என்று கூற, முஆவியா (ரலி) அவர்கள், “இதோ, இந்த மாலிக் ‘இந்தக் குழுவினர் ஷாம் நாட்டிலிருப்பார்கள்’ என்று முஆத் அவர்கள் சொன்னதாகக் கூறுகிறார்” என்றார்கள்.
இந்த ஒரு குழு அல்லாஹ்வின் கட்டளையை உலகம் முடியும் காலமாக யோசித்தாலும் சரி,இல்லையென்றால் அல்லாஹ்வின் கட்டளை அரபுகளிடமிருந்து எடுத்து ஓட்டமன் சமூகத்திடம் ஆட்சியை கொடுத்த காலம் முதல் உலகம் முடியும் வரை அந்த குழு போராடிக்கொண்டே இருக்கும்.
ஏனென்றால் அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது என்று நாம் சொல்லும்போது.
நம்மளுடைய சிந்தனை உலக முடிவு நாளை நோக்கி திரும்புகிறது அது அப்படி இல்லை.
அது முடிவு நாள் இல்லை
அந்த முடிவு நாள் அல்லாஹ்வின் கட்டளை தொடங்கிவிட்டது.
அந்த கட்டளை தொடங்கிய காலம் ஓட்டமன் சமூகத்திடம் ஆட்சி ஒப்படைக்கபட்டதுதான்.
இனி முடிவு காலம் விரைவில்.........
எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.
இந்த ஹதீதிலும் குறைசியர்கள் என்று கூறவில்லை மாறாக அல்லாஹ்வின் கட்டளையை நிலைநிறுத்தும் ஒரு குழுவினர் என்று தான் சொன்னார்கள் அதுவும் ஷாம் நாட்டில் தான் உலகம் அழியும் வரை இருப்பார்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளை= ஒரு குழுவினர்
இப்போதைய ஷாம் தேசத்தில் முஸ்லீம் குறைவாக இருக்கிறார்கள் இவர்கள் மட்டும்தான் அல்லாஹ்வின் குழு என்று கூட நினைக்காதீர்கள்.
இனியும் முஸ்லீம்கள் நசுக்கபடுவார்கள் இன்னும் முஸ்லீம்களின் எண்ணிக்கை குறையும்.
பனி இஸ்ரேல்களின் எண்ணிக்கை கூடும் அவர்களிலிருந்து அல்லாஹ் தன் அடியார்களை தன்னுடைய வேலைக்காக தேர்ந்தெடுக்க கூட வாய்ப்பு உண்டு அல்லாஹ்வே அறிவான்.
இதை நாங்கள் எங்களுடைய சிந்தனையின் அடிப்படையில் கூறவில்லை.
ஹதீதின் அடிப்படையில் கூறுகிறோம்.
இந்த விஷயத்தை வேறு ஒரு ஹதீதில்.........
இஷ்ஹாக்கின் வம்சவழியில் இருந்து வரும் 70000 பேர்களும் தஜ்ஜாலை எதிர்த்து போராடுவார்கள் என்றும் உள்ளது இதுவும் ஷாம் நாடாக இருக்க வாய்ப்புள்ளது. இன்ஷாஅல்லாஹ் அது அடுத்த தலைப்பில் இந்த ஹதீதை முழுவதும் தருகிறோம்.
இதிலிருந்து நாங்கள் கூறுவது என்னவென்றால்
பாலஸ்த்தீனம் என்ற ஒன்று முழுவதுமாக நீக்கப்பட்டுவிட்டால்.
அல்லாஹ்வின் வேதனையை எதிர்பார்ப்போம் (அதுதான் மல்ஹமாவாகும்)
குழப்பதிலிருந்து முஸ்லீம் மக்கள் அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக......
பாலஸ்த்தீனம் என்ற ஒரு நாடு அழிக்கப்பட்டுகொண்டுஇருக்கிறது. நாம் கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம் (மல்ஹமாவும் இன்னும் சில வருடங்களில் தொடங்கும்)
அல்லாஹ்வே அறிந்தவன்.
தஜ்ஜாலை கொல்லுவதற்கு கூட ஈஸா அலை அவர்களை அல்லாஹ் நிறுவியுள்ளான்.
அரேபியர்களை பற்றி நபி ஸல் அவர்கள் தஜ்ஜாலை எதிர்த்து போராடக்கூடிய கூட்டத்திலும் கூட அரேபியர்கள் என்ற வார்த்தையை கூறவில்லை மாறாக அரேபியர்களின் உள்ள ஒரு குலத்தை மட்டும் கூறினார்கள்.(அதுதான் பனு தமீம்)
புஹாரி 2543. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம்’ குலத்தார் பற்றிக் கூறிய மூன்று விஷயங்களைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்க லானேன். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்கள் (பனூ தமீம் குலத்தார்) என் சமுதாயத்தாரிலேயே அதிகக் கடுமையுடன் (மகா பொய்யன்) தஜ்ஜாலை எதிர்த்துப் போராடுவார்கள்” என்று கூறினார்கள்.
புஹாரி 4366. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அரேபியர்களுடைய ஒரு குலம் பனு தமீம் மட்டுமே தஜ்ஜாலை எதிர்த்து போராட கூடியவர்கள் (அல்லாஹ்வே அறிந்தவன்)
ஆகவே இப்போது உள்ள சவுதி அரேபியாவை இஸ்லாத்தின் தூண்கள் என்று நினைக்காதீர்கள், அவர்களில் சிலரை தவிர.....
தஜ்ஜால் வரக்கூடிய காலகட்டத்தில் அரபுகளின் எண்ணிக்கை எப்படி இருக்கும் என்று கவனியுங்கள்.
முஸ்லீம் 5644. உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "மக்கள் தஜ்ஜாலிடமிருந்து வெருண்டோடி மலைகளுக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறக்கேட்டேன். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! (இறைவழியில் போராடும்) அரபியர் அப்போது எங்கே இருப்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்போது அவர்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருப்பார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தஜ்ஜால் வரும் முன்பே அரபுகளுக்கு வரக்கூடிய அல்லாஹ்வின் ஒரு வேதனை ஒன்று மீதம் உள்ளது.
ஒன்று நோயினால் இருக்கப்போகிறது , ஒன்று போரினால் இருக்கப்போகிறது.
அந்த வேதனை தான் மல்ஹமா வாகும்,
இன்ஷாஅல்லாஹ் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
Comments
Post a Comment