“இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
தஜ்ஜால்
பாகம் 7
அல்லாஹ் மறைவான ஞானங்களின் அறிவை அறிந்தவன்.
சூரா 31:34 இல் கூறப்பட்டுள்ள மறைவான ஞானத்தை தவிர அல்லாஹ் தான் நாடியவருக்கு சிலதை அறிவித்து தருவான்.
இந்த தஜ்ஜாலின் தலைப்பில் இதையும் கொண்டுவர காரணம்.
நபி ஸல் அவர்கள் ரசூலாக வந்த பின்பு கியாமநாள் வரை முனாஃபிக்கீன்கள்,முஹ்மீன்களுடைய பகுதி மட்டுமே இருக்கப்போகிறது.
இஸ்லாமில் முனாஃபிக்கீன்கள் எப்படிப்படடவர்கள் யாரெல்லாம் முனாஃபிக்கீன்கள் என்பதையும் அல்லாஹ் தன் தூதற்கு அறிவித்து விட்டான்.
தூதருக்கு மட்டும் இல்லை முஹ்மீன்களுக்கும் அறிவித்து கொடுத்து விட்டான்.
அல்லாஹ் எதை நாடுகிறானோ அதை தன்னுடைய ரஸூலுக்கு அறிவிக்கிறான்.
முஸ்லீங்களான நமக்குத்தான் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தினருகிறோம்.
அந்த அளவு இப்லீஸ் நம் சமூகத்தை கெடுத்து விட்டான்.
கெடுத்து விட்டது கூட தெரியாமல்தான் நாம் இருக்கிறோம் அல்லாஹ் பாதுகாத்தவர்களை தவிர.........
உஹது போரின் போது (ஏன் உஹது போர் வரை என்று கூட சொல்லலாம்) சில சோதனைகளுக்காக தீயவர்களை அதாவது முனாஃபிக்கீன்களை முஹ்மீன்களுக்கு அல்லாஹ் அறிவித்து கொடுக்க வில்லை.
உஹது போரின் வசனம் மட்டும் தஃப்சீரை காண்போம்.
முதலில் முஹ்மீன்களுக்கு தீயவர்களை (முனாஃபிக்கீன்களை) பிரிந்து காண்பிக்கவில்லை.
தீயவர்களை யார் யார் என்று தெரிவிக்க தான் தூதர்களில் தான் நாடியவரை தேர்ந்தெடுகிறான்.
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
(அல்குர்ஆன் : 3:179)
இதை வைத்துக்கொண்டு சில கூட்டம் முனாஃபிக்கீன்களை அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கும், முஹ்மீன்களுக்கும் இனம் காட்டவில்லை என்று சொல்லுகிறார்கள்.
இப்போது விளக்கங்களை பார்ப்போம்.
இப்னு கசீர்
مَّا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ
(தீயவர்களை நல்லவர்களிலிருந்து பிரித்தெடுக்கும் வரை, நீங்கள் இப்போது இருக்கும் நிலையில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை விட்டுவிட மாட்டான்.) 3:179, அதாவது, அவன் ஒரு பேரழிவு நிகழ அனுமதிக்கிறான், இந்த பேரழிவின் போது அவனது நண்பர் அறியப்படுகிறார் மற்றும் அவனது எதிரி அம்பலமாகிறார், பொறுமையான நம்பிக்கையாளர் அங்கீகரிக்கப்படுகிறார் மற்றும் பாவமிக்க நயவஞ்சகர் வெளிப்படுத்தப்படுகிறார். இந்த வசனம் உஹுத் போரைக் குறிக்கிறது, ஏனெனில் அந்தப் போரில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை சோதித்தான், இதன் மூலம் நம்பிக்கையாளர்களிடம் இருந்த நம்பிக்கை, சகிப்புத்தன்மை, பொறுமை, உறுதி மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிதல் ஆகியவற்றை அறியச் செய்தான். அல்லாஹ் நயவஞ்சகர்களை அவர்களின் எதிர்ப்பில், ஜிஹாதிலிருந்து திரும்புவதில், மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக அவர்கள் செய்த துரோகத்தில் அம்பலப்படுத்தினான். இதனால்தான் அல்லாஹ் கூறினான்,
مَّا كَانَ اللَّهُ لِيَذَرَ الْمُؤْمِنِينَ عَلَى مَآ أَنتُمْ عَلَيْهِ حَتَّى يَمِيزَ الْخَبِيثَ مِنَ الطَّيِّبِ
(நல்லவர்களிலிருந்து கெட்டவர்களை அல்லாஹ் பிரித்தெடுக்கும் வரை, நீங்கள் இருக்கும் நிலையில் இறைநம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு விடமாட்டான்.)
"உஹுத் போரின் நாளில் அவன் அவர்களுக்கிடையே வேறுபடுத்திக் காட்டினான்" என்று முஜாஹித் (ரழி) அவர்கள் கூறினார்கள். "ஜிஹாதிலும் ஹிஜ்ராவிலும் அவன் அவர்களுக்கிடையே வேறுபடுத்திக் காட்டினான்" என்று கதாதா (ரழி) அவர்கள் கூறினார்கள். அடுத்து அல்லாஹ் கூறுகிறான்,
وَمَا كَانَ اللَّهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ
(மேலும் அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை வெளிப்படுத்த மாட்டான்.)
அதாவது, நம்பிக்கையாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் இடையே வேறுபடுத்திக் காட்ட உங்களால் அல்லாஹ்வின் படைப்பினங்களைப் பற்றிய அவனது அறிவை அணுக முடியாது, ஆனால் அல்லாஹ் வெளிப்படுத்தும் ஒவ்வொரு வகையினரின் அடையாளங்களைக் கொண்டே அது முடியும். அல்லாஹ்வின் கூற்று,
وَلَكِنَّ اللَّهَ يَجْتَبِى مِن رُّسُلِهِ مَن يَشَآءُ
(ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களை தன் தூதர்களில் இருந்து தேர்ந்தெடுக்கிறான்.)
இது மற்றொரு சூரா ஜின் இன் கடைசி வசனத்தைப் போன்றதாகும்.
முஹ்மீன்களுக்கு தெரியாத சில மறைவான விஷயத்தை அறிந்தவர் நபி ஸல் அவர்கள் ஆவார்கள்.
அல்லாஹ் யாருக்கு மறைவான ஞானத்தை அறிவிக்க நாடுகிறானோ அதையும் நபி ஸல் அவர்கள் மூலமாக முஹ்மீன்களுக்கும் அறிவிப்பான்
இப்போது இருக்கக்கூடிய நம் மக்களுடைய பார்வையில் முஹ்மீன்கள் யார் என்றால் முன் சென்ற எல்லாருமே என்று கூறுவார்கள்.
ஆனால் நாம் அவர்கள் எல்லாரையும் முஹ்மீன்கள் என்று நினைத்ததையும் தாண்டி அவர்களுக்குள் படித்தரம் உள்ளது என்று அல்லாஹ்வே குர் ஆனில் கூறுகிறான்.
அன்சாரிகளுக்கு தெரியாத சில மறைவான ஞானம் முஹாஜிர்களுக்கு இருந்தது.
முஹாஜிர்களுக்குகும் தெரியாத மறைவான விஷயம் அபூபக்கர் ரலி அவர்களுக்கு தெரியும்.
அபூபக்கர் ரலி அவர்களுக்கும் தெரியாத மறைவான ஞானம் நபி ஸல் அவர்களுக்கு தெரியும்.
முஸ்லீங்களுக்கு இல்லாத சில மறைவான ஞானம் முஹாஜிர்களுக்கும், அன்சாரிகளுக்கும் இருந்தது.
மக்கா ஜெயிப்பதற்கு பின் வந்தவர்களிடம் இல்லாத சில மறைவான ஞானம் மக்கா ஜெயிக்கும் முன் இருந்தவர்களிடம் இருந்தது.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..............
ஆகவே எல்லாருக்கும் எல்லா மறைவான ஞானம் தெரிவதில்லை.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவித்தூதரும் வரையில்
இதை நாங்கள் சொல்லுவதற்கு காரணம்
இப்போது உள்ள நாம் இஸ்லாமையும் அதில் உள்ள சட்டங்களை குறித்து என்ன தெரிந்து வைத்துள்ளோம்.
ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை...
முன் சென்ற தாபியீன்கள், ஷாகாபாக்கள், குலஃபாய ராஷீதீன்கள் எல்லாரும் நம்மை போன்று தான் என்று நினைக்கிறோம்.
அதை விட பெரிதாக யோசித்து நபி ஸல் அவர்களும் நம்மை போன்றமனிதர்கள்தான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வாதங்களை கூற நம்மில் சில கூட்டம் உருவாகிவிட்டது.
மக்களாகிய நாம் நபி ஸல் அவர்களை சாதாரண மனிதராக யோசிக்கும் போது அல்லாஹ் நபி ஸல் அவர்களை கண்ணியமான முறையில் உயர்த்தி கூறுவான்,
அதே மக்களாகிய நாம் நபி ஸல் அவர்களுக்கு மட்டுமே எல்லா செயலும் செய்ய முடியும் என்று நினைக்க கூடிய சூழ்நிலையில் தள்ளும்போது அல்லாஹ் நபி ஸல் அவர்களை பற்றி அவர் ஒரு சாதாரண மனிதர் உங்களை போன்று உண்ணுகிறார், தண்ணீர் பருகுகிறார் என்று அல்லாஹ்வே குர்ஆனில் கூறியுள்ளான்.
மறைவான வற்றை நபி ஸல் அவர்களும் மட்டுமே அறிவார்கள் என்று நாம் மக்களிடம் கூறும்போது ( அல்லாஹ் மறைவான ஞானம் அறியாதவன் என்று அர்த்தம் வராது)
மொத்த மனிதர்களில் நபி ஸல் அவர்கள் மறைவானவற்றை அறிந்தவர்கள் ஆவார்கள் என்று அர்த்தம் வரும்.
இதை அல்லாஹ்வே குர் ஆனில் கூறுகிறான்.
“(அவன் தான்) மறைவானாவற்றை அறிந்தவன்; எனவே, தான் மறைத்திருப்பவற்றை அவன் எவருக்கும் வெளியாக்கமாட்டான்.
(அல்குர்ஆன் : 72:26)
“தான் பொருந்திக் கொண்ட தூதருக்குத் தவிர - எனவே அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் பாதுகாவலர்க(ளான மலக்குக)ளை நிச்சயமாக நடத்தாட்டுகிறான்.
(அல்குர்ஆன் : 72:27)
“தங்களுடைய இறைவனின் தூதுச் செய்திகளை, திட்டமாக எடுத்துச் சொல்லிவிட்டார்களா? என்று அறிவதற்காக - இன்னும் அவர்களிடமுள்ளவற்றை அவன் சூழ்ந்தறிந்து கொண்டிருப்பதுடன், அவன் சகல பொருளையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான்.”
(அல்குர்ஆன் : 72:28)
நபி ஸல் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறியுள்ளான்.
அல்லாஹ் அவன் நாடிய நேரம் நபி ஸல் அவர்களுக்கு மறைவான ஞானத்தை அறிவித்தான்.
அல்லாஹ் அவன் நாடிய நேரம் சில மறைவான விஷயங்களை முஹ்மீன்களுக்கு அறிவித்தும் கொடுத்தான்.
முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) தம் உள்ளங்களில் மறைத்து வைத்திருப்பவற்றை அவர்களுக்கு உணர்த்திவிடக்கூடிய ஓர் அத்தியாயம் இறக்கி வைக்கப்படுமோ என அஞ்சுகிறார்கள் - (நபியே!) நீர் கூறும்: “ நீங்கள் பரிகாசம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் அஞ்சிக் கொண்டிருப்பதை நிச்சயமாக அல்லாஹ் வெளிப்படுத்துபவனாகவே இருக்கின்றான்.”
(அல்குர்ஆன் : 9:64)
நிச்சயமாக உங்களைப் பற்றிய செய்திகளை எங்களுக்கு அல்லாஹ் (முன்னமேயே) அறிவித்து விட்டான்; சீக்கிரமே அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கவனிப்பார்கள்; மறைவானவற்றையும், வெளிப்படையானவற்றையும் நன்கறியும் அவனிடத்தில் பின்னர் நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்; அப்போது அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்” என்று (நபியே!) நீர் கூறும்.
(அல்குர்ஆன் : 9:94)
இது முனாஃபிக்குகள் சம்பந்தமாக இறங்கிய வசனம்.
அல்லாஹ் சில மறைவான விஷயத்தை முஹ்மீன்களான எங்களுக்கு அறிவித்து விட்டான் என்று முஹ்மீன்களை கூற சொல்கிறான்.
அதுவும் அல்லாஹ்வே கூறுகிறான்.
ஆகவே நாமளும் நம்மை போன்று தான் தாபியீன்கள், ஷாகாபாக்கள், குலஃபாய ராஷீதீன்கள் என்று சொல்லக்கூடியவர்களும் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.
தஜ்ஜால் சம்பந்தமான வரக்கூடிய எல்லா ஹதீத்களும் நமக்கு மறைவான ஞானம் கொண்டது ஆகும்.
இதை முஹ்மீன்களுக்கு விளக்கப்பட்டது.
முஹ்மீன்கள் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். முஹ்மீன்கள் இந்த சமூகத்திலும் இருக்கிறார்கள்.
அவர்களின் அடையாளங்கள் அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான்.
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
(அல்குர்ஆன் : 8:2)
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 8:3)
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
(அல்குர்ஆன் : 8:4)
இத்தகைய வசனத்தை உலகத்தில் யாருடன் பொருத்தி பார்த்து முஹ்மீன்களை இனம் கண்டுகொள்ளலாம்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் முஹ்மீன்களையும், முனாஃபிக்களையும் பிரித்து காட்டிய வசனங்களையும், ஹதீத்களையும் மட்டுமே நாங்கள் இங்கு கூறுகிறோம்.
இப்போது உள்ள சமூகத்திலும் முஹ்மீன்களும் முனாஃபிக்களும் இருக்கின்றனர் அவர்களையும் அல்லாஹ் அறிவான், முஹ்மீன்களும் அறிவார்கள்.
அல்லாஹ்வுடை தூதர் முஹம்மது நபி ஸல் அவர்கள் முனாஃபிக்கீன்களின் அடையாளங்களை கூறுகிறார்கள் கேளுங்கள்.
புஹாரி 34. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு குணங்கள் எவனிடம் உள்ள னவோ அவன் அப்பட்டமான நயவஞ்ச கன் (முனாஃபிக்) ஆவான். எவனிடம் அவற்றில் ஒரு குணம் உள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத் தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக் கும். (ஏதேனுமொன்றை) நம்பி ஒப்படைத் தால் (அதில்) மோசடி செய்வதும், பேசும் போது பொய் சொல்வதும், ஒப்பந்தம் செய்துகொண்டால் நம்பிக்கை துரோகம் செய்வதும், வழக்காடினால் நேர்மை தவறுவதும்தான் அவை (நான்கும்).
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
யா அல்லாஹ் எங்களை முனாஃபிக்களிருந்தும் காப்பாற்றுவாயாக
அல்லாஹ் இனி வரக்கூடிய காலகட்டம் ஒவ்வொரு மதத்தில் இருந்தும், ஒவ்வொரு இனத்திலிருந்தும், ஒவ்வொரு இயக்கத்திலிருந்தும், ஒவ்வொரு நாட்டில் இருந்தும் முஸ்லீம்களும் ,முனாஃபிக்களும் தனித்தனியாக பிரிதேடுக்க படுவார்கள்.
இனி இந்த தஜ்ஜாலூடைய தலைப்பை காண்போம்.
தஜ்ஜால்
பாகம் 7
தஜ்ஜாலின் கடந்த பாகத்தில் 40 நாளை குறித்து பொதுவாக பார்த்தோம்.
இப்போது அந்த 40 நாளில் நடந்த பெரிய நிகழ்வுகளை பார்ப்போம்
இதுவரை கடந்த காலத்தில் உள்ள முஸ்லீம்கள், முஹ்மீன்கள், முனாஃபிக்கள் பற்றி பார்த்தோம்.
இனிமேல் தஜ்ஜால் வரக்கூடிய உண்மையான நாள்களை பார்ப்போம்.
முதலில் மக்கள் தஜ்ஜாலின் அடையாளங்கள் (அவன் எப்படி இருப்பான் என்பது பற்றி )எல்லாருக்கும் தெரிந்ததே..... உள்ளார்கள்.
அதை நாங்கள் இங்கே விளக்க விரும்பவில்லை ஹதீத்களின் நம்பர் தருகிறோம் மீண்டும் கவனித்துக்கொள்ளுங்கள்.
ஹதீத்களை நேராக ஆழ்ந்து சிந்தித்து படித்தால் மட்டுமே நாங்கள் சொல்லக்கூடியது புரிய முடியும்.
முஸ்லீம் 5629,5638,5608
புஹாரி 6999,5902,3440,3355,1555
தஜ்ஜாலின் அடையாளங்களை (முஸ்லீம் 5629 ) ஹதீதில் பெரும்பாலான அரிஞ்சர்களால் மக்களுக்கு கூறப்படாத ( மக்கள் யாராலும் கவனிக்க படாத ) தஜ்ஜால் சம்பந்தமான விஷயம் ஒன்றை உங்களுக்கு கூறவிரும்புகிறேன். அது தஜ்ஜாலுக்கு குழந்தை இருக்காது என்ற ஒன்றை தான் என்று நாங்கள் உங்களுக்கு ஞாபகபடுத்துகிறோம்.
மேலும் ஹதீதில் நபி ஸல் அவர்கள் என்னுடைய தோழர்கள் என்று ஒரு வார்த்தை கூறிஇருப்பார்கள்,
அந்த (தோழர்கள்) என்று சொல்லக்கூடிய வார்த்தைகளை
நாம் தான் இந்த காலகட்டத்திற்க்கு (நிகழ்காலத்திற்க்கு) தகுந்தது போல் நபியுடைய தோழர்களை பொருத்தி பார்க்கவேண்டும்.
நபி ஸல் அவர்களுடைய தோழர்கள் யார் என்று அல்லாஹ் குர் ஆனிலே கூறுகிறான்.
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் யாரெல்லாம் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களே நபி தோழர்கள்,
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 4:69)
இதை முன் வரலாற்றிலும் காணமுடியும், நிகழ்காலத்திலும் காணமுடியும், வருங்காலத்திலும் காணமுடியும்.
அதற்க்கு மஹதி அலை அவர்கள் வரக்கூடிய அந்த நிகழ்வும் செயலும் அதனுடைய ஹதீதும் சான்றுக்கு போதுமானதாக அமையும்.
நாங்கள் கீழே ஒரு சில ஹதீதுகள் கொடுக்க போகிறோம் அந்த கொடுக்கப்படுகிற ஹதீதில் எங்களுடைய விளக்கம் ( box ) இதே போன்ற அடக்கத்தில் உள்ளில் இருக்கும்.
ஹதீத் = ஒரு நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் அமர்ந்து கொண்டு சோதனைகளைப் பற்றிப் நபி தோழர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதில் மேலும் அஹ்லாஸின் சோதனை உட்பட பல சோதனைகளையும் பற்றியும் நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அதில் ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே! ஃபித்னா அஹ்லாஸ் என்றால் என்ன?
அதற்க்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "ஃபித்னா-இ-அஹ்லாஸ்" என்றால் போர், மோதல், தோல்வி மற்றும் அழிவு காலம் என்று பொருள்.
மேலே கூறப்பட்ட சொல்லுக்கு விளக்கம் = (இதெல்லாம் முதல் உலக போரையும் , இரண்டாம் உலக போரையும் குறிக்கிறது )
(இதை அந்தந்த காலத்தில் வந்த சில அரிஞ்சர்கள் அப்போது நடக்கக்கூடிய உலக போர்களை பற்றி குறிப்பிடுகிறார்கள்)
(தோல்வி, அழிவு, மோதல் என்று அந்த ஹதீதில் நபி ஸல் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதை அரிஞ்சர்கள் கூறுகையில்.........
முதல் உலக போர் பற்றி சொல்லும்போது இவ்வளவு பெரிய இழப்பு என்பது நபி ஸல் இறந்ததுக்கு பின்பு வேறு எங்கும் இவ்வளவு பெரிதாக தோல்வி, அழிவு, மோதல், வந்ததே இல்லை என்று கூறிகிறார்கள்.
அதனால்தான் உலக போராக இருக்க வாய்ப்புண்டு என்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.)
ஹதீத் = ஆனால் அதன் பிறகு செழிப்பு மற்றும் ஆறுதல் ஆகியவற்றின் ஒரு ஃபித்னா வெளிப்படும்.
மேலே கூறப்பட்ட ஹதீதுகளின் விளக்கம் = ( முதல் உலக போர் ஐரோப்பா நாடுகளில் இடையே ஏற்பட்டது அது முடிந்த பின்புதான் அரபு (நாடுகள்) மத்தியில் செல்வம் என்ற ஒன்று எண்ணில்அடங்கா முறையில் பெறுக ஆராமித்தது இப்போது வரைக்கும் அந்த செல்வத்தின் குழப்பம் மாறினது இல்லை)
ஹதீத் = அதன் ஆரம்பம், முடிவு, பாதுகாப்பு , மற்றும் பொறுப்பு எல்லாம் ஒரு மனிதனின் கைகளில் இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்ட ஹதீதின்.
விளக்கம் = (இதன் பொருள் சவுதி ஷரீப் அல் ஹுசைன் என்றும், சிலர் சதாம் ஹுசைன் என்றும் அரிஞ்சர்கள் கூறுகிறார்கள்)
இதை நாம் சவூதி ஷரீப் அல் ஹுசைன் என்று எடுத்து கொள்ள போகிறோம்,
அது ஏனென்றால்
ஹதீத் = நபி ஸல் அவர்கள் கூறினார்கள் அவர் சொந்த கருத்துப்படி கூறுவார் அவர் என்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வந்தவர் என்றும் கூறுவார்.
ஆனால் அவர் என்னுடைய குடும்பத்தில் இருந்து வந்தவர் இல்லை என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்,
என்னுடைய நண்பர்கள் யார் என்றால் (சகோதர்கள் ) பக்த்தியுடையவர்கள் ஆவார்கள்.
மேலும் மக்கள் அத்தகைய நபருடன் சமாதானம் செய்வார்கள், அவர் ராஜ்ஜியத்திற்கு நிரந்தரமாக தகுதியுடையவராக நினைத்துகொள்வார் ஆனால் தகுதியுடையவராக இருக்கமுடியாது .
மேலே கொடுக்கப்பட்ட ஹதீதின் விளக்கம் = ( ஷரீப் அல் ஹுசைன் என்பவர்தான் நபியுடைய குடும்பத்தார் என்று கூறினார் அவர் மற்ற முஸ்லீம் நாடுகளிடம் இருந்து விலகி தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டார் இதன் பின்புதான் இஸ்லாமினுல் ஒரு தலைமையில் இருந்து தனியாக பிரிந்து போகலாம் என்ற பாடம் கற்பித்து கொடுத்தவரும் இவர்தான் என்று அரிஞ்சர்கள் கூறுகிறார்கள்.)
ஹதீத் = அதன் பிறகு, ஒரு பயங்கரமான பேரழிவுடன் ஒரு பேரழிவு தோன்றும், அது இந்த உம்மத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் உலுக்கும். சலனம் முடிந்துவிட்டது என்று மக்கள் சொல்லும்போது, அது வரம்பு மீறி வெளியே வரும்.
மேலே கொடுக்கப்பட்ட ஹதீதின் விளக்கம் = ( இந்த நிகழ்வை மார்க்க அரிஞ்சர்கள் வானொலி, TV, இன்டர்நெட், மொபைல், இது போன்ற விஷயம் மனிதர்களுக்கு பேரழிவு கொடுத்து விடும் என்று அரிஞ்சர்கள் கூறுகிறார்கள்)
(இப்போது வாழக்கூடிய மக்கள் இந்த பொருள்கள் எல்லாம் மனிதர்களுக்கு நல்லதாகத்தான் இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
நல்லதாகத்தான் தெரியும் அந்த நல்லது என்பது மிகவும் சிறியதுதான் ஆனால் இதனுடைய அழிவு என்பது இப்போதைய இந்த சமுதாயம் எந்த அளவு வழிதவறி சென்றுவிட்டது என்று மக்களாகிய நாம் பார்த்தால் புரியும் என்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.)
ஹதீத் = இதன் பின்பு ஒவ்வொரு முஸ்லீமும் காலையில் முஃமினாகவும், மாலையில் காஃபிராகவும் இருப்பான்.
மேலே கொடுக்கப்பட்ட ஹதீதின் விளக்கம் = ( இந்த நிகழ்வை பொருத்தமட்டில் அரிஞ்சர்கள் நாம் இருக்கும் காலகட்டமாக கூறுகிறார்கள்)
(உதாரணமாக ஒருவர் வீட்டில் காலையில் சுபுஹ் தொழுதிவிட்டு வீட்டில் இருந்து முஸ்லீமாக வெளியே வருவார் தன்னுடைய வருமானம், செயல், தொழுகை, கல்வி, வாழ்க்கை முறை இதெல்லாம் நபி ஸல் அவர்களை போன்றோ அவர்களுடைய தோழர்கள் போன்றோ இருக்காது மேலும் தன்னுடைய வருமானம் ஹலாலில் வருகிறதா ஹராமில் வருகிறதா என்று பார்க்காமல் தன் வீட்டிற்கு வதும்போது காஃபிராக வருவார் என்று அரிஞ்சர்கள் கூறுகிறார்கள் இதை எல்லாம் அவரவர் தன்னுடைய வாழ்வில் சோதித்து கொள்ளுங்கள்.)
ஹதீத் = இதன் பின்பு மக்கள் இரு பிரிவாகப் பிரிவார்கள்:
மேலே கொடுக்கப்பட்ட ஹதீதின் விளக்கம் = ( (இந்த பிரிவினை 2025 காலகட்டத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.)
ஹதீத் = அந்த இரு பிரிவில் ஒரு பிரிவினர் முஹ்மீன்களாக இருப்பார்கள், அதில் கபடம் இருக்காது,
மற்றொரு பிரிவினர் நயவஞ்சகர்களாக இருப்பார்கள்.
மேலே கொடுக்கப்பட்ட ஹதீதின் விளக்கம் = ( இந்த நிகழ்வு இனி வரபோகிற காலங்களை குறிக்கிறது)
இதே போன்ற சம்பவம் வேறு ஒரு ஹதீதிலிலும் வருகிறது அதை பின்வருமாறு கூறுகிறோம்.
ஹதீத் = அல்லாஹ்வின் தூதரிடம்! அஹ்லாஸின் சலனம் என்றால் என்ன? என்று ஷகாபாக்கள் கேட்டார்கள், அதற்க்கு நபி ஸல் அவர்கள் கூறினார் பெரிய மற்றும் தாராள மனப்பான்மை கொண்ட (செல்வம்) சோதனை வரும் என்று கூறினார்கள்.
அது என் குடும்பத்தின் ஒருவர் உறுப்பினரின்( ஒருவர் )காலடியில் இருந்து அது தோன்றும்.
அவர் என் குடும்பத்தார் இல்லை என்றாலும் அவர் என் குடும்பத்தில் இருந்து வந்ததாக என்று கூறுவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
பின்னர் நபி ஸல் அவர்கள் உண்மையில் பயபக்தியுள்ளவர்கள் யார் என்றால் , எனது பாதுகாவலர்களும் நண்பர்களும் பக்தியுள்ளவர்கள் (ஈமான் கொண்டவர்கள்) மட்டுமே ஆவார்கள்.
அப்போது மக்கள் விலா எலும்பில் (அரசியல் ) சமாதானம் செய்வது போல் அந்த மனிதனுக்கு சமாதானம் செய்வார்கள்! இன்னும் சொல்லப்போனால், சரீன் ஒரு விலா எலும்பில் ஓய்வெடுக்க முடியாதது போல், அவர் அந்த பதவிக்கு நியாயமற்றவராகவும், திறமையற்றவராகவும் இருப்பார்.
அப்போது ஒரு ஃபித்னா எழும், இருள் எழும், இந்த உம்மத்திலிருந்து யாரும்(கடைசி நபர் வரை ஒருவரும்) மிச்சப்பட மாட்டார்கள்.
ஆனால் அவர் அறையப்படுவார்(கொல்லப்படுவார்) எனவே இந்த சலனம்(ஃபித்னா)முடிந்தது என்று புரிந்து கொள்ளும்போது, அது மேலும் அதிகரிக்கும்.
அந்த காலகட்டத்தில் ஒரு நபர் காலையில் எழுந்தால், அவர் ஒரு விசுவாசி(ஈமான் உள்ளவராகவும்), மாலை என்றால், அவர் நம்பிக்கையற்றவராக (காஃபிர் ஆகவும் ) மாறுவார்,
மக்கள் கூட இரண்டு முகாம்களாக (கட்சிகளாக) பிரிந்து விடுவார்கள். ஒன்று நம்பிக்கையின்( முஹ்மீன் ) கூடாரம். இதில் போலித்தனம் இருக்காது.
மேலுள்ள ஹதீதின் விளக்கம் = இந்த இரண்டு பிரிவினைதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது என்று இப்போது உள்ள அரிஞ்சர்கள் கூறுகிறார்கள்.
மஹதி அலை அவர்கள் வரும் முன் முஹ்மீன்கள் , முனாஃபிக்கள் என்று இரண்டு பிரிவினை நடந்து கொண்டு இருக்கிறது.
(இந்த பிரிவினை நடந்து முடிந்த பிறகும், நடந்து கொண்டிருக்கும் இப்போது கூட மஹதி வெளிவரவாய்ப்புள்ளது எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்)
இதே காலகட்டத்தில் இஸ்ரேல் என்ற நாடும் மஹதி அலை அவர்கள் வரும் முன் செல்வசேழிப்போடு இருக்க வேண்டும்.
அது செல்வசேழிப்போடுதான் இப்போது உள்ளது மஹதி வரும் முன் இதெல்லாம் நடக்க வேண்டும்.
ஆகவே இப்போது வளரக்கூடிய இஸ்ரேலை மஹதி அலை அவர்களும், நபி ஈஸா அலை அவர்களை தவிர வேறு யாரும் அழிக்க முடியாது.
இதில் இப்போது போராடக்கூடிய முஸ்லீங்களுக்கு வெற்றி இல்லையா என்று கேட்டால்?
முஸ்லீங்களுக்கு மறுமையில் வெற்றி,
ஏனென்றால் இஸ்ரேலையும், தஜ்ஜாலையும் ஈஸா அலை கையில் அழிப்பதாக அல்லாஹ் வைத்திருப்பானேயானால், முஸ்லீங்களின் வெற்றி மறுமைத்தான்,
மறுமை நாளின் அடையாளமாக ஹதீதில் இஸ்ரேல் என்ற நாட்டின் பெயருக்கு பதிலாக ஜெருசலம் என்று வரும்.
Theermithi 2238
ஹதீத் = முஆத் பின் ஜபலின் தோழர் அபூ பஹ்ரிய்யா அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெரிய மல்ஹாமா
விளக்கம் = (இஸ்ரேலோடு ஒரு பெரிய போர் ஒன்று நடக்க வேண்டும்)
Abudhawood 4294
ஹதீத் = முஆத் இப்னு ஜபல் அவர்கள் கூறுகிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஜெருசலேமின் செழிப்பான நிலை யத்ரிப் பாழாகும் ,
Musnad ahamad 12847
ஹதீத் = அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பைத் அல்-மக்திஸின் மக்கள் தொகை, யத்ரிபின் (மதினா) அழிவு, பாழடைதல் யாத்ரிப்,
இஸ்ரேல் செழிப்படையும், மதினா தோல்வி அடையும்
விளக்கம் = தஜ்ஜால் புறப்பட கூடிய இடம் இஸ்ரேல் அருகில் உள்ள இடமாக இருப்பதால் தஜ்ஜாலை பற்றி சொல்லும் போது இஸ்ரேலை குறிப்பிட வேண்டியதாக உள்ளது.
ஹதீத் = முஸ்லீம் 5629. அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து, வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான்.
விளக்கம் = இந்த இடத்திலிரிந்து அவன் வரவேண்டும் என்றால் இதை சுற்றி உள்ள இடங்கள் எல்லாம் அவன் கையில் இருக்க வேண்டும்.
1980 களில் சிலுவை வீரர்கள் பனி இஸ்ரேலிடம் இடத்தை எப்படி ஒப்படைத்தார்களோ!
அதேபோன்று பனி இஸ்ரேல்கள் தஜ்ஜாலிடம் இங்கே குறிப்பிட்டுள்ள இடத்தை ஒப்படைப்பார்கள்.
2025 இந்த காலகாட்டத்தில் முஹ்மீன், முனாஃபிக் என்ற இந்த இரண்டு பிரிவினையும் நடந்து கொண்டு இருக்கிறது
ஜெருசலமின் வளர்ச்சியும் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது
ஜெருசலம் முழுவதுமாக வளர்ச்சியடைந்து முடித்ததும், மதினா பாழடையும்.
இந்த செய்திகள் எல்லாம் முஸ்லீம்கள் கேட்கும் போது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொன்னது நடக்க இருக்கிறது என்று நினைத்து மேலும் ஈமான் வலுவடைய வேண்டும்.
அநியாயகார கூட்டத்ததாரிடமிருந்து நம்மை பாதுகாக்க அல்லாஹ்விடம் துஆ கேட்போம்
Comments
Post a Comment