தஜ்ஜால் பாகம் 8

இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!


“என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!


“என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!


“என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!




பாகம் 8


தஜ்ஜால்



 தஜ்ஜாலின் பாகங்களை முடிக்கக்கூடிய  பாகங்கள் வந்துவிட்டது எங்களுடைய தனிப்பட்ட விளக்கங்கள் இல்லாமல் இந்த பகுதியில் ஹதீத்களை மட்டும் கூறுகிறோம்.


தஜ்ஜால் வரும் முன் மஹதி அலை அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும்.


அவர்கள் வரும் முறையை ஹதீத்களிலிருந்து சிறிய தொகுப்பாக பார்ப்போம்.


ஹதீத் 


ஒரே ஒரு பொக்கிஷத்திற்காக முதலில் 3 கலீபாவிற்கு மத்தியில் போட்டி போட்டு சண்டையிட்டு கொள்வார்கள்,அந்த 3 பேரில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கலீபாவின் மகனாக இருப்பார்கள் அந்த பொக்கீஷம் யாருக்கும் கிடைக்காது, இதற்க்கிடையில் ஒரு கலீபாபின் மரணம் ஏற்படும்,


பின்னர் மதீனாவாசிகளில் ஒருவர் மக்காவுக்குப் பறந்து வருவார்.  மக்காவாசிகளில் சிலர் ஒருவரிடம் வந்து, அவருடைய விருப்பத்திற்கு மாறாக அவரை வெளியே அழைத்து வந்து,  மக்காமா இப்ராஹிமிற்கும் (மூலைக்கும்) இடையே அவருக்கு விசுவாசமாக சத்தியம் செய்வார்கள். 


அப்போது சிரியாவிலிருந்து அவருக்கு எதிராக ஒரு படையெடுப்பு அனுப்பப்படும், ஆனால் மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள பாலைவனத்தில் அந்த அனுப்பப்பட்ட படை விழுங்கப்படும்.


 மக்கள் அதைப் பார்க்கும்போது அதை புரிந்துகொள்வார்கள், ​​​​மேலும் சிரியாவின் புகழ்பெற்ற துறவிகளும், ஈராக்கின் சிறந்த மக்களும் முன்னர் தன் விருப்பத்திற்கு மாறாக பைய்யத் செய்யப்பட்டு இருந்தாரே அவரிடம் வந்து, மூலைக்கும் மகாமுக்கும் இடையில் அவருக்கு விசுவாசமாக (பைய்யத்) சத்தியம் செய்வார்கள்.



அப்போது கிழக்கிலிருந்து கறுப்புக் கொடிகள் தோன்றி, இதுவரை யாரும் செய்யாத வகையில் உங்களைக் (அவர்கள் அரபுகளாக இருக்க வாய்ப்புண்டு ) அவர்களை கொன்றுவிடுவார்கள்.''


பின்னர் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : "நீங்கள் மஹதியை பார்க்கும்போது, ​​​​நீங்கள் பனியில் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தாலும், அவரிடம் விசுவாசத்தை உறுதியளிக்கவும், ஏனென்றால் அவர் அல்லாஹ்வின் மஹ்தியாக இருப்பார்."


பின்னர், குரைஷியின் ஒரு மனிதன் எழுவான், அவனது தாய்வழி மாமன்கள் கல்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் மஹதிக்கு எதிராக ஒரு படையை அனுப்புவார்கள், அது அவர்களால் வெல்லப்படும், அதுதான் கல்பின் பயணம்.  கல்பின் கொள்ளைப் பொருளைப் பெறாதவன் ஏமாற்றமடைவான்.  அவர் (அந்த போர்செல்வங்களை ) சொத்தைப் பிரித்து, அவர்களின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின்படி மக்களை ஆட்சி செய்து பூமியில் இஸ்லாத்தை நிலைநாட்டுவார்.


இதே போன்ற ஒரு சம்பவம் வேறு ஒரு ஹதீதில்

அரபு தீபகத்திற்கு எதிராக போறிடுவீர்கள் வெற்றி பெறுவீர்கள். என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 


Silsilathul sayha :2083


, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அரேபிய தீபகற்பத்தில் ஜிஹாத் நடத்துவீர்கள், அல்லாஹ் வெற்றியைத் தருவான்.


பின்னர் போர்செல்வங்களை கொள்ளயடிப்பீர்கள் என்றும் நபி ஸல் அவர்கள் கூறினார்கள்


மேலும் இதை தொடர்ந்து மஹதி அலை அவர்கள் பூமியில் ஏழு ஆண்டுகள் இருப்பார், பின்னர் இறந்துவிடுவார், மேலும் முஸ்லிம்கள் அவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். 


அபூதாவூத் இமாம் கூறினார்கள் : சில ஹிஷாமிலிருந்து ஒன்பது ஆண்டுகள் என்றும் மற்றும் சில ஏழு ஆண்டுகள் என்றும் பரவுகின்றன.


Musnad ahamad 12847


 யாத்ரிப் ( யஸ் ரீப், மதீனா ) பாழடையும் ,


இது வரை தஜ்ஜால் பகுதியில் மதினா பாழைடைவது வரை நாம் பார்த்தோம் இதன் பின்பு ஹதீதில் வரும் மீதியை அப்படியே காண்போம்.



இரத்தக்களரி போன்று போர் நடக்கும் , அதன் பின்பு கான்ஸ்டான்டினோப்பிளின் வெற்றி   ( இந்த வெற்றியில் மஹதி அலை அவர்கள் இருக்க வாய்ப்புண்டு, இப்போது இருக்கக்கூடிய துருக்கி)


மற்றும் கான்ஸ்டான்டினோப்பிளின் வெற்றி ஆகிய இதெல்லாம் தஜ்ஜாலின் முன்னோடியாக இருக்கும்.



Abudhawood 4294



யத்ரீப் பாழாகும் அது பாழாகும் போது பெரும் போர் வரும், ​​(பெரும் போர் வெடிக்கும்)


அதன் பின்பு கான்ஸ்டான்டினோப்பிளின் மற்றும் தஜ்ஜால் (ஆண்டிகிறிஸ்ட்) வெளிவரும்போது கான்ஸ்டான்டினோப்பிளின் வெற்றி.



Theermithi 2238


பெரிய மல்ஹாமா ஒன்று வரும் அதன் பின்பு கான்ஸ்டான்டினோப்பிளின் வெற்றி மற்றும் தஜ்ஜாலின் வருகை ஆகியவை ஏழு மாதங்களில் நிகழும்.



மக்ஹூலும் இப்னு அபு ஜகாரியாவும் காலித் பின் மதனை நோக்கிச் சென்றனர், நானும் அவர்களுடன் சென்றேன் என்று ஹஸன் பின் அதியா கூறுகிறார்.  எனவே ஜுபிர் பின் நஃபிர் என்பவரிடமிருந்து சமரசம் தொடர்பான ஒரு ஹதீஸை காலித் கூறினார்.  அப்போது ஜூபிர் கூறினார்: நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஹஜ்ரத் தி முகபர் (ரஹ்) அவர்களிடம் செல்வோம்.  நாங்கள் அவரை அடைந்தபோது, ​​ஜூபிர் அவரிடம் சமரசம் பற்றி கேட்டார்.  எனவே அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை நான் கேட்டேன்:


"நீங்கள் ரோமானியர்களுடன் அமைதியான சமரசத்தை ஏற்படுத்துவீர்கள்." ( இதை அரிஞ்சர்கள் UAE, Sauthi Arabia, qatar, kuwait,அரபு நாடுகள் சேர்ந்து Israel என்ற நாடை இருப்பதாக  ஆபிரகாம் ஒப்பந்தம் செய்தது பற்றி அறிஞ்சர்கள் சம்பந்த படுத்தி கூறுகிறார்கள்.)


இது வரை உள்ளதை ஹதீதோடு ஒப்பிட்டு நாங்கள் கூறினோம் இதன் பின்பு வரக்கூடிய உலக அரசியலை கண்காணித்து கொள்ளுங்கள்.


ரோமர்களோடு அமைதி ஒப்பந்தம் கழிந்த பின்னர் அவர்களுடன் சேர்ந்து உங்களுக்குப் பின்னால் இருக்கும் எதிரியை எதிர்த்துப் போராடுவீர்கள், நீங்கள் அவர்களை வெற்றி பெறுவீர்கள், நீங்கள் (போர் செல்வங்களை) கொள்ளையடிப்பீர்கள், நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள், பின்னர் நீங்கள் அங்கிருந்து திரும்பி வந்து மேடுகளுடன் ஒரு வயலில் இறங்குவீர்கள்.  பின்பு கிறிஸ்தவர்களில் ஒருவர் சிலுவையை உயர்த்தி, சிலுவை வென்றது என்று கூறுவார்.  அப்போது முஸ்லிம்களில் ஒருவர் கோபமடைந்து அவரைக் கொன்றுவிடுவார்.  எனவே இந்த சந்தர்ப்பத்தில் ரோமானியர்கள் ஏமாற்றி போருக்கு கூடுவார்கள்


Abudhawood 4292



Silsilathul sayha :2083



நாஃபி பின் உத்பா பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அதிகாரத்தின் பேரில், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நீங்கள் அரேபிய தீபகற்பத்தில் ஜிஹாத் நடத்துவீர்கள், அல்லாஹ் வெற்றியைத் தருவான்.  நீங்கள் பெர்சியாவுக்கு எதிராகப் போரிடுவீர், அல்லாஹ் வெற்றியைத் தருவான், பிறகு ரோமுக்கு எதிராகப் போரிடுவாய், அல்லாஹ் வெற்றியைத் தருவான்.  பிறகு நீங்கள் தஜ்ஜாலுக்கு எதிராகப் போரிடுங்கள், அல்லாஹ் அவருக்கு எதிராக வெற்றியைத் தருவான்.



முஸ்லீம்


5553. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரோம பைஸாந்தியர், அஃமாக் மற்றும் தாபிக் ஆகிய இடங்களில் நிலைகொள்ளாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களை நோக்கி மதீனாவிலிருந்து ஒரு படை புறப்படும். அன்றைய நாளில் பூமியில் வசிப்போரில் அவர்களே சிறந்தவர்களாயிருப்பர். அவர்கள் அணி வகுத்து நிற்கும்போது ரோமர்கள், எங்களுக்கும் எங்களில் சிறைக்கைதிகளாகப் பிடிக்கப் பட்டோருக்குமிடையே நாங்கள் போர் செய்ய எங்களை விட்டு விடுங்கள்" என்று கூறுவார்கள்.

அப்போது முஸ்லிம்கள், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! எங்கள் சகோதரர்கள் மீது போர் தொடுக்க உங்களை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்" என்று சொல்வார்கள்.

ஆகவே, ரோமர்கள் முஸ்லிம்கள் மீது போர் தொடுப்பார்கள். அப்போது முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினர் தோற்று வெருண்டோடுவார்கள். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் கொல்லப்படுவார்கள். அவர்கள் அல்லாஹ்விடம் மிகச் சிறந்த உயிர்த்தியாகிகளாவர்; மூன்றிலொரு பகுதியினர் (ரோமர்களை) வெற்றிகொள்வார்கள். அவர்கள் (அதன் பின்னர்) ஒருபோதும் சோதனைக்குள்ளாக்கப் படமாட்டார்கள். இவ்வாறு அவர்கள் கான்ஸ்டாண்டிநோபிளை வெற்றி கொள்வார்கள்.

அவர்கள் தம் வாட்களை ஆலிவ் மரங்களில் தொங்கவிட்டுப் போர்ச்செல்வங்களை பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது,அவர்களிடையே ஷைத்தான், "நீங்கள் புறப்பட்டு வந்த பின் உங்கள் குடும்பத்தாரிடையே மசீஹ் (தஜ்ஜால்) வந்துவிட்டான்" என்று குரலெழுப்புவான்.

உடனே அவர்கள் தம் குடும்பத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால், அது பொய்யான செய்தியாயிருக்கும். அவர்கள் ஷாமுக்கு (சிரியா) வரும்போது "மசீஹ்" (தஜ்ஜால்) புறப்படுவான். இந்நிலையில் அவர்கள் போருக்காக ஆயத்தமாகி அணிகளைச் சீர் செய்து கொண்டிருக்கும்போது, தொழுகைக்காக இகாமத் சொல்லப்படும். அப்போது மர்யமின் புதல்வர் ஈசா (அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி வந்து அவர்களுக்குத் தலைமையேற்பார்கள்.

அவரை அல்லாஹ்வின் விரோதி (தஜ்ஜால்) காணும்போது, தண்ணீரில் உப்பு கரைவதைப் போன்று கரைந்துபோவான். அவனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்கூட அவன் தானாகக் கரைந்து அழிந்துவிடுவான். ஆயினும், ஈசாவின் கரத்தால் அவனை அல்லாஹ் அழிப்பான். அப்போது ஈசா (அலை) அவர்கள் தமது ஈட்டி முனையில் படிந்துள்ள அவனது இரத்தத்தை மக்களுக்குக் காட்டுவார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



முஸ்லீம்    5556. யுசைர் பின் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை இராக்கிலுள்ள) கூஃபாவில் அனல்காற்று வீசியது. அப்போது ஒரு மனிதர், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களே! யுகமுடிவு வந்துவிட்டது" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே வந்தார். உடனே சாய்ந்துகொண்டிருந்த அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நேராக எழுந்து அமர்ந்து, "சொத்துகள் பங்கு போடப்படாத நிலையும் போர்ச்செல்வத்தின் மூலம் மகிழ்ச்சியடையாத நிலையும் ஏற்படாத வரையில் யுகமுடிவு ஏற்படாது" என்று கூறிவிட்டு, தமது கரத்தால் (ஷாம் நாட்டின் திசையை நோக்கி) சைகை செய்து, "இஸ்லாமியரைத் தாக்குவதற்காக எதிரிகளின் படையொன்று ஒன்றுதிரளும். அவர்களை எதிர்கொள்வதற்காக இஸ்லாமியரும் ஒன்றுதிரளுவர்" என்று கூறினார்கள்.

உடனே நான், "ரோம (இத்தாலியக் கிறித்தவ)ர்களையா (எதிரிகள் என்று) கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அந்தப் போரின்போது கடுமையான பலப்பிரயோகம் இருக்கும். அப்போது முஸ்லிம்கள் முதலில் ஒரு படையை அனுப்புவார்கள். ஒன்று வீர மரணம், அல்லது வெற்றியை இலக்காகக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருக்கும்போது இரவு நேரம் குறுக்கிட்டுவிடும். ஆகவே, அவர்களில் எவரும் வெற்றி பெறாமல் இரு அணியினரும் (தாக்குதலை நிறுத்திவிட்டுத் தமது முகாமிற்குத்) திரும்பிவிடுவர். ஆனால்,முதலில் சென்ற படையினர் (போரில்) அழிந்துவிடுவர்.

பிறகு (மறுநாள்) முஸ்லிம்கள், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றி என்ற இலக்கில் மற்றொரு படையை முதலில் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) போரிட்டுக்கொண்டிருப்பார்கள். இரவு குறுக்கிடும்போது அவர்களில் எவருமே வெற்றி பெறாமல் திரும்பி விடுவர். ஆனாலும், முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.

பிறகு (மூன்றாம் நாளு)ம், ஒன்று வீர மரணம் அல்லது வெற்றியை இலக்காக்கி மற்றொரு படையை முஸ்லிம்கள் அனுப்புவார்கள். அவர்கள் (சென்று) மாலை நேரமாகும் வரை போரிட்டு எவருக்கும் வெற்றிகிட்டாமல் திரும்பிவிடுவர். அப்போதும் முதலில் சென்ற அணியினர் அழிந்துவிடுவார்கள்.

நான்காம் நாளாகும்போது முஸ்லிம் (படை)களில் எஞ்சியிருப்பவர்கள் எதிரிகளை நோக்கி முன்னேறிச் செல்வார்கள். அப்போது அவர்களுக்கு அல்லாஹ் தோல்வியையே தருவான். (இருந்தாலும்) அவர்கள் ஏராளமான பேரைக் கொன்றுவிட்டிருப்பார்கள். அதைப் போன்ற ஓர் உயிரிழப்பை உலகம் கண்டிராது. எந்த அளவுக்கென்றால், அவர்களைச் சுற்றி பறவைகள் பறக்கும். அவற்றில் ஒன்றுகூட அவர்களைக் கடந்து செல்ல முடியாமல் செத்து விழும் (அந்த அளவுக்குப் பெரிய பரப்பளவில் அவர்கள் மடிந்து கிடப்பார்கள்). நூறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் ஒரேயொருவர் மட்டுமே எஞ்சுவார்.

அப்போது எந்தப் போர்ச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சி ஏற்படும்? அல்லது எந்தச் சொத்து பங்கிடப்படும்? இவ்வாறே அவர்கள் இருந்துகொண்டிருக்கும்போது இதைவிட மிகப்பெரிய பேராபத்து ஒன்றைப் பற்றி அவர்கள் கேள்விப்படுவார்கள். அப்போது ஒருவர் (வந்து), "உங்கள் குடும்பத்தாரிடையே தஜ்ஜால் வந்துவிட்டான்" என்று கூவியறிவிப்பார். உடனே அவர்கள் தம் கைகளிலுள்ளவற்றை அப்படியே போட்டுவிட்டு (தம் குடும்பத்தாரை) முன்னோக்கிவருவார்கள். முன்னதாக (தஜ்ஜாலைப் பற்றி அறிவதற்காக) பத்துக் குதிரை வீரர்களை உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் அவர்களுடைய பெயர்களையும் அவர்களுடைய தந்தையரின் பெயர்களையும் அவர்களுடைய குதிரைகளின் நிறங்களையும் நன்கறிவேன். அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள குதிரை வீரர்களில் அவர்களே சிறந்தவர்கள்; அல்லது அன்றைய நாளில் பூமியின் மீதுள்ள சிறந்த குதிரை வீரர்களில் அவர்களும் அடங்குவர்.


முஸ்லீம்  5597.


நபி (ஸல்) அவர்கள், "இஸ்ஹாக் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களில் எழுபதாயிரம் பேர் அந்நகரத்தின் மீது போர் தொடுக்காத வரை யுக முடிவுநாள் வராது. அவர்கள் வந்து (அந்நகரத்தில்) இறங்கும்போது அவர்கள் எந்த ஆயுதத்தைக் கொண்டும் சண்டையிட மாட்டார்கள்; அம்பெய்யவுமாட்டார்கள். அவர்கள் "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றே கூறுவார்கள். உடனே அந்நகரத்தில் கடலிலுள்ள ஒரு பகுதி வீழ்ந்துவிடும்.

பிறகு அவர்கள் இரண்டாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அதன் மறுபகுதி வீழ்ந்துவிடும். பிறகு அவர்கள் மூன்றாவது முறை "லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்" என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்கு வழி திறக்கும். அதில் நுழைந்து போர்ச்செல்வங்களைத் திரட்டுவார்கள். அவர்கள் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக்கொண்டிருக்கும்போது ஒருவர் வந்து உரத்த குரலில், "தஜ்ஜால் புறப்பட்டுவிட்டான்" என்று அறிவிப்பார். உடனே அவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு (தஜ்ஜாலை நோக்கி) திரும்பிச் செல்வார்கள்.


புஹாரி


1881. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


மக்காவையும் மதீனாவையும் தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது



7124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


தஜ்ஜால் வருவான்; வந்து மதீனாவின் ஓர் ஓரத்தில் இறங்குவான். பிறகு மதீனா மும்முறை குலுங்கும். உடனே ஒவ்வோர் இறைமறுப்பாளனும் நயவஞ்சகனும் அவனை நோக்கிப் புறப்படுவார்கள்.


இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



7124 புஹாரி ஹதீதில் பூகம்பம் சம்பந்தமாக பேசக்கூடியது போன்று உள்ளது அப்போது மதினாவில் பூகம்பம் வரும் அதில் இருக்கக்கூடிய முஸ்லீம்கள் பூகம்பமும் அல்லாஹ்வால் ஏற்படுகிறது என்று நினைத்து கொண்டு மதினா உள்ளில் இருக்க வேண்டும்


அந்த பூகம்பத்திற்கு பயந்து வெளியே ஓடினால் தஜ்ஜாலிடம் தான் புகலிடம் இருக்கும் என்றும் கூட அர்த்தம் எடுத்துக்கொள்ளலாம்.


ஆகவே நாம் இருக்கும் இந்த சூழ்நிலையில் பூகம்பம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?


நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.



இங்கு குறிப்பிட்ட ஹதீத் எல்லாம் உருது மொழியில் இருந்து எடுக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் தமிழில் புரிந்து கொல்லுவதற்க்காக சில விளக்கங்களை சேர்த்துள்ளோம்.


ஹதீதை அப்படியே புரிந்துகொள்ள அதனுடைய நம்பரையும் எடுக்கப்பட்ட இடமான இஸ்லாம் 360 மொபைல் அப்ளிகேஷன் பெயரையும் குறிப்பிட்டுள்ளோம்


எல்லாமே அல்லாஹ்வே அறிந்தவன்.



9 ஆம் பாகம் தொடரும்

Comments