ஜக்காத்
ஜக்காத் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை விளக்க ஒரே ஒரு ஹதீத் போதும்.
புஹாரி 25 நபி ஸல் அவர்கள் கூறினார்கள் தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்காத வரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன்.
இந்த வசனம் எதற்க்காக இறக்கப்பட்டுள்ளது, என்பதை பின்பு விளக்குகிறோம்.
நபி ஸல் அவர்கள் எதற்க்காக உலகத்திற்கு அனுபப்பட்டார்கள் என்பதை அபூசுஃப்யானோடு நடக்கக்கூடிய உரையாடலில் Roman empire இன் அரசனான ஹிராக்களியசுக்கு தெரிந்ததை நமக்கு ஒரு ஹதீத் விளக்குகிறது.
பின்பு வரக்கூடிய ஹதீஸில் அபூசுஃப்யான் என்ற பெயரில் அபூசுஃப்யானை பற்றி பேசும்போது மக்கள் புரிந்துகொள்ள இலகுவாக இருக்க. அவரோட பெயரை அபூசுஃப்யான் என்று கூறியிருப்போம் சந்தேகம் உள்ளவர்கள் நேராக புஹாரி ஹதீதை படித்துக்கொள்ளவும்
புஹாரி 7. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்க கூடியது
(மக்கா குறைஷித் தலைவர்களில் ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம் (இப்னு அப்பாஸிடம்)தெரிவித்தார்கள்
அபூசுஃப்யான் அவர்களை அழைத்துவரும்படி (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் ஆளனுப்பினார்.அவரும் அவருடைய ஆட்களும் ‘ஈலியா’வில் (பைத்துல் மக்தஸில்) இருந்தார்கள். (கிழக்கு) ரோமானிய அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச)வைக்கு வரும்படி எங்களை (அபூசுஃப்யானையும் அவரது கூட்டத்தையும் )ஹிரக்ளீயஸ் அழைத்தார். (நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்ததுடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.
ஹிரக்ளீயஸ் (தம் அதிகாரி களிடம்), “அபூசுஃப்யானை என் அருகே அழைத்துவாருங்கள்; (அவருடன் வந்தி ருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனதருகில் கொண்டுவந்து இவரது முதுகுக்குப் பின்னால் அவருடைய நண்பர்களை நிறுத்துங்கள்” என்று கூறினார்.
பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் “நான் இந்த மனிதரை (முஹம்மதை)ப் பற்றி இவரிடம்(அபூசுஃப்யானிடம்)கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால், உடனே ‘அவர் பொய் சொல்கிறார்’ என்று கூறிவிட வேண்டும்” என அவருடைய நண்பர் களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.
அபூசுஃப்யான் பொய் சொன்னால் அவருடைய நண்பர்கள் அவரை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்ற வெட்கம் மட்டும் அவருக்கு அப்போது இல்லாதிருந்தால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக!அவர் நபியவர்களைப் பற்றிப் பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பார்.
அந்த நேரத்தில் ஹிராக்லியஸ் மன்னன் அபூசுஃப்யானை பார்த்து பல கேள்விகள் கேட்கிறான்.
அந்த பல கேள்வியில் ஒரே ஒரு கேள்வி பதில் மட்டும் கூறுகிறேன். (காரணம் இந்த தலைப்புக்கு கேள்வி பதில் ஒற்றுமையாக உள்ளது)
ஹிராக்லியஸ் அபூசுஃப்யானை பார்த்து நபி ஸல் அவர்களை மக்களில் மேட்டுக் குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்ட வர்கள்) பின்பற்றுகின்றனரா?” என்று மன்னர் கேட்டார். அதற்கு அபூசுஃப்யான் ‘இல்லை; பலவீனர்கள்தான் (அவரைப் பின்பற்றுகின்றனர்)” என்று சொன்னார். “அவரைப் பின்பற்றுவோர் அதிகரித் துக்கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்துகொண்டே போகின் றார்களா?” என்று கேட்டார்.அதற்க்கு அபூசுஃப்யான், “இல்லை; அவர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்” என்று கூறினார்.
பிறகு ஹிரக்ளீயஸ் மன்னனே தம் மொழி பெயர்ப்பாளரிடம் அபூசுஃப்யானிடம் கூறச்சொல்லி (பின்வருமாறு) கூறினார்:
நான் உம்மிடம் “மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்ற னரா? அல்லது பலவீனர்களா (ஒடுக்கப் பட்டவர்களா)?” என்று கேட்டேன். அதற்கு நீர் “ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்” என்று பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள் தான் இறைத்தூதர்களைப் பின்பற்று வோர் ஆவர்.
இங்கு ஹிரக்ளீயஸ் மன்னனுக்கே தெரிகிறது பலகீனர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டும்தான் (தூதர்களை பின்பற்றுவர்கள்) என்று சொல்கிறார்,
அப்படியென்றால் எப்போது ரசூல் வந்தாலும் பலகீனர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பின்பற்றுவர்கள் என்று அர்த்தம்.
ரசூல் வருகிறார்கள் என்றால் அவரது முதல் வேலை பணம் மிகுந்த மக்களிடம் இருந்து பணம் இல்லாதவர்கள் பலகீனர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதை பகிர்ந்து கொடுக்கவே அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான்.
பணம் இல்லாதவர்கள் பலகீனர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அதிகமான பேர்கள் தனக்கு இறைதூதர் உதவி புரிவார் என்ற நோக்கத்தோடு அவர் மீது நம்பிக்கை வைப்பார்கள்
இந்த அல்லாஹ்வின் தீனை செயல்படுத்த உதவியாளர்கள் தேவை அதற்க்கு மூலதனமாக இருப்பதுதான் தொழுகை
இந்த தொழுகை என்பது நபி ஸல் அவர்களுடன் சேர்ந்து இந்த வேலையை செய்ய மக்களை எல்லாரையும் அல்லாஹ் அவனின் பக்கம் அழைக்கின்றான்.
மக்களுக்குள் எத்தனை பிரிவு இருந்தாலும் இந்த வேலையை செய்வதற்காக நபி ஸல் அவர்களுக்கு உதவி புரியவும் தொழுகையை (ஒற்றுமைக்காக) மூலதனமாக ஆக்கி உள்ளான்.
தொழுகையும், ஜக்காத்தும் முக்கியத்துவம் என்பது மக்களுக்கு தெளிவு படுத்த இந்த ஹதீதை போதுமானது.
“(இறைவனுக்கு இணைகற் பிக்கும்) அவர்கள் பாவமீட்பு பெற்று, தொழுகையைக் கடைப் பிடித்து, ஸகாத்தையும் வழங்கி னால், அவர்களது வழியில் (அவர்களை) விட்டு விடுங்கள்” (9:5) எனும் இறைவசனம்
புஹாரி 25. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்” என உறுதிமொழிந்து, (கடமையான) தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் (எனும் கட்டாய தர்மத்)தை வழங்காத வரை (இணைவைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன்.
இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால், தம் உயிரையும் உடைமை களையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் எல்லை மீறினால்) தவிர! மேலும், (இரகசியமாகக் குற்றமிழைத் தால்) அவர்களின் விசாரணை அல்லாஹ் வின் பொறுப்பில் உள்ளது.
9:5 வசனம் மூலம் இரண்டு விஷயம் புரியலாம்
ஒன்று உறுதிமொழி, தொழுகை, ஜக்காத் இந்த 3 ஐ விட்டாலும் நபி ஸல் அவர்கள் போர் புரிவார்கள்.
இஸ்லாத்தில் மீதி விஷயங்கள் அல்லாஹ் மன்னிக்கவில்லை, அது அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது என்று கூறினார்கள்.
இரண்டு
9:5 இந்த வசனம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கி அல்லாஹ் கூறுகிறான்.
ஆனால் நபி ஸல் அவர்கள் அந்த சமூகத்தை மட்டும் சொல்லாமல் நான் இந்த வேலைக்காகதான் மக்களிடம் அனுப்பப்பட்டேன் என்று கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ஷிர்க்கை மட்டுமே எதிர்த்து போறிட வரவில்லை
ஒரு சமூகம் தொழுகை, ஜக்காத் இதை செய்ய மறுத்தால் நான் போர் செய்யும் படி கட்டளையிடப்பட்டுள்ளேன்,
மேலும் மீதி இஸ்லாத்தில் மனிதன் செய்யக்கூடிய தவறுகளின் விஷாரணையை அல்லாஹ்விடம் உள்ளது என்று நபி ஸல் அவர்களே கூறின பிறகு
இந்த ஹதீதை எப்படி மக்கள் புரியவேண்டும் என்று சொல்லுவதை விட்டுவிட்டு அவர்கள் மத்தியில் இமாம்களின் பயான் எப்படி கொடுக்க படுகிறது
இந்த ஹதீதை ஒருவர் கூட ஜும்மா பயானில் கூற நாங்கள் கேள்விப்படவில்லை.
இம்மாம்கள் தொழாதவரோயோ , ஜக்காத் கொடுக்காதவரோயோ அவர்களுக்கு நன்மையை நாடி நபி ஸல் அவர்கள் எதற்க்காக தொழுகை, ஜக்காத் கொடுக்க சொன்னார்கள் என்பதை மக்களிடம் சொல்கிறவர்கள் மிகவும் குறைவானவர்களே.
ஆனால் இப்போது உள்ள இமாம்கள் மனிதர்களில் ஒருவன் தொழுகையில் சிறு தவறு செய்தால் போதும் அதை பெரிதாக ஊதி அவனை காஃபிர் என்று கூட சட்டம் இயற்றிவிடக்கூடிய சமுதாயத்தில் தாம் நாம் வாழ்கிறோம்.
அதைத்தான் நாங்கள் கூறுகிறோம் எதை மனிதனிடம் எப்படி தாவா செய்வது என்று சற்று கூடுதலாக படிக்க வேண்டும்.
இந்த 9:5 வசனம் மட்டும் இல்லை 9:29 வசனமும் பேசுகிறது.
இந்த இரண்டு வசனமும் இரண்டு தரப்பை பற்றி பேசுகிறது ஒன்று வேதம் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வேற ஒரு சமூகம் பற்றி கூறப்படுகிறது.
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
(அல்குர்ஆன் : 9:29)
இந்த வசனம் எந்த சமூகத்திற்கு இறக்கப்பட்டதோ அவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நம்மில் பல பேர்கள் கூறலாம்
இந்த வசனங்களை வைத்து நாம் பலவராக விளக்கங்களை யும் கொடுக்கலாம்.
இது மட்டும் இல்லை குர் ஆனில் எத்தனை வசனங்கள் உள்ளதோ அத்தனை வசனங்களும் நபி ஸல் அவர்கள் காலத்தில் அவர்களுக்குதான் இறக்கப்பட்டது.
இதில் வித்தியாசம் என்னவென்றால் எந்தெந்த வசனங்கள் எந்தெந்த தவறுக்காக இறக்கப்பட்டதோ நாம் சமூகத்தில் அதே தவறு நாம் செய்தால் அந்த வசங்களும் நமக்கு பொருந்தும்.
இப்போது இன்றைய காலகட்டத்தில் ரசூல் ஒருவர் வந்தால் என்னவெல்லாம் அமல்படுத்தப்படும் என்று யோசித்து கொள்ளுங்கள்.
ரசூல் ஒருவர் இப்போது உலகத்தில் இல்லை என்று தீனில் புதியதாக கொண்டுவந்ததற்க்காக மறுமையில் ஒவ்வொருவரையும் நபி ஸல் அவர்கள் நாம் மீது அல்லாஹ்வின் கருணையை அகற்ற சொல்லி அல்லாஹ்விடம் துவா கேட்பார்கள்.
ஆகவே உலகம் அழியும் முன், அறியாமை காலத்திலும் ஒரு தனி மனிதன் இஸ்லாமில் பேணக்கூடிய 3 விஷயம் செய்தால் சிறந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்
புஹாரி 63. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்; கேள்வியில் கடுமை காட்டப்போகிறேன். அதற்கு நீங்கள் என்மீது கோபப்பட்டுவிடக் கூடாது” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “உமது மனதில் பட்டதைக் கேளும்” என்றார்கள்.
அப்போது அம்மனிதர், “உம்முடைய, உமக்குமுன் இருந்தவர்களுடைய இறைவன்மீது ஆணையாகக் கேட்கி றேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பி னானா?” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள்.
அடுத்து அவர் “அல்லாஹ்வை முன் வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகை களை நாம் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டி ருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக” என்றார்கள்.
அவர் “அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ் தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த (ரமளான்) மாதத்தில் நாம் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றார்கள்.
அவர், “அல்லாஹ்வை முன்வைத்து உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்களில் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?” என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “ஆம், அல்லாஹ் சாட்சியாக!” என்றார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர், “நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டுவந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்” என்று கூறிவிட்டு, “நான், என் கூட்டத்தாரில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவன் ஆவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரில் ஒருவரான ளிமாம் பின் ஸஅலபா” என்றும் கூறினார்.
செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று வரியவர்களிடம் கொடுக்கத்தான் நபி ஸல் அவர்கள் உலகிற்கு வந்தார்கள்.
ஆகவே அறியாமை காலத்திலும் ஒரு வேளை அல்லாஹ் இந்த 3 ஐ பேனினால் நமக்கு நன்மை செய்வான் என்று நன்மை வைப்போம்.
நம்மில் யாரவது உலக முடிவு நாள் அந்த ஒரு நேரம் யாருக்கு தெரியும்.
இந்த 3 இல் ஒன்று குறைந்தாலும் நமக்கு அல்லாஹ்விடமிருந்து நன்மை கிடைப்பது (அவன் நாடினால் தவிர) மிகவும் கடினம்
ஆகவே உலகில் எல்லாருக்கும் செல்வம் பெருகி வழியும் முன் ஜக்காத்தை கொடுத்து விடுவோம்.
புஹாரி 1412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவுக்கெனில், அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தான் வாங்கப்போகிறார் என்று கவலை கொள்வார். யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால், அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார்.
அந்நாளில் ஒருவர் ஜக்காத் கொடுக்க நினைப்பார் அவரால் முடியாது கவலை கொள்வார்.
அல்லாஹ்வே நேரடியாக குர் ஆனில் கூறுகிறான்
நாட்டுபுறத்து அரபிகள் நபி ஸல் அவர்களிடம் வந்து ஈமான் கொண்டோம் என்று கூறுகிறார்கள்.
அதற்க்கு அல்லாஹ் நீங்கள் ஈமான் கொள்ளவில்லை, இஸ்லாத்தில் தழுவியுள்ளோம் என்று வேண்டுமென்றால் சொல்லிக்கொள்ளுங்கள் என்று கூறுகிறான்.
மாறாக ஈமான் கொண்டவர்கள் யார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
“நாங்களும் ஈமான் கொண்டோம்” என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் “நாங்கள் வழிபட்டோம்” (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக. “ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய்கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்” நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
(அல்குர்ஆன் : 49:14)
நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.
(அல்குர்ஆன் : 49:15)
இதிலும் தன்னிடம் உள்ள பொருளை என்ன செய்ய வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அதுமட்டும் இல்லாமல் நம்முடைய ஹலாலான வழியில் வந்த பொருளுடைய தானம் யாருக்கு சென்றடைய தகுதியான ஒன்று என்று பார்த்தால்.
அதுவும் அல்லாஹ்வே கூறுகிறான்.
பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 2:273)
இந்த விஷயம் இப்படி இருக்க மக்கள் மத்தியில் ஜக்காத் என்ற ஒரு விஷயம் இந்த உம்மதுக்கு இவ்வளவு பெரிய பலகீனமாக மாறிஉள்ளது அது எப்படி என்று யோசித்துள்ளோமா?
நபி ஸல் அவர்கள் பின்பு நமக்கு வந்த இஸ்லாம் எதுவென்றால் தொழுகை, இபாதத் மட்டுமே
பள்ளி பயான்களில் ஜக்காத் பற்றி பெரும்பாலாக பேசி இருந்தாலும். தனி மனிதனிடம் அல்லாஹ்வின் பயம் இல்லாமல் போனது எப்படி?
தனி தனி குடும்பங்களில் இதனை ரஸூறுல்லாஹ் வலியுறுத்தியது போன்று வலியுறுத்த வில்லை ஏன்?
(தனிமையில் அல்லாஹ் நம்மை பார்க்க வில்லை என்று நினைத்து மனோ இச்சையை எடுத்துகொண்டோம் ) (இப்லீஸ் மிக தெளிவான பகைவன் என்பதை மறந்து விட்டோம்)
ஜக்காத் மட்டும் இல்லை இப்போது தொழுகையும் மக்கள் மத்தியில் விட்டுக்கொண்டே செல்கிறது.
அல்லாஹ்விடம் தனிப்பட்ட செயலிலும், அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்லிக்கொடுத்தோம் என்பதிலும் மாட்டிக்கொண்டோம்.
தவ்பா செய்து மீழுவோம்.
ஜக்காத் கொடுப்பதை நம்மை தடுப்பது எது?
முதலில் ஆசை ஆகும்.
அதை இப்லீஸ் மிகவும் இலகுவாக செய்து விடுவான்.
தன்னுடைய விருப்பமான பொருளை தானம் செய்யாதவறை சொர்க்கம் புக முடியாது என்ற நபி மொழி கேள்விப்பட்ட ஒன்று இங்கு ஞாபக படுத்துகிறேன்.
ஆசையை ஒருவர் விடாதவரை அவர் தானம் செய்ய மனம் வராது,
ஒருவர் முழு மனதோடு தானம் செய்தால் இறைவன் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டு.
ஆசையை இப்லீஸ் கடை தெருவின் மூலம் எப்படி தன் கட்டுக்கோப்பில் வைத்துள்ளான் என்பதை பாருங்கள்.
கடைத்தெருவுக்கு சென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழ் வரும் ஹதீத் விளக்குகிறது.
புஹாரி 4846. அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள், "உங்களால் இயன்றால் கடைத்தெருவுக்குள் நுழையும் முதல் ஆளாகவும் அதைவிட்டு வெளியேறும் இறுதி ஆளாகவும் இருக்காதீர்கள். ஏனெனில், கடைத்தெருவே ஷைத்தானின் போர்க்களமாகும். அங்குதான் ஷைத்தான் (முகாமிட்டு) தனது சேனையின் கொடியை நட்டுவைக்கிறான்" என்று கூறினார்கள்.
ஜக்காத் கொடுக்காமல் இருப்பதும் வரம்பு மீறுதலாக இருக்க வாய்ப்புண்டு, அதை கொடுக்காமல் தடுப்பதும் வரம்பு மீறுதல்தான்
அல்லாஹ்வின் ஃபித்ரத் (இயற்க்கை) படி உலகத்திற்கு நபி அனுப்பப்படனுமேயானால் அந்த சமூகமே வரம்பு மீறவேண்டும்.
சமூகம் மாறிவுள்ளதா என்று உலகத்தை கண் கொண்டு பார்ப்போம்.
ஒரு தனி மனிதனாக வரம்பு மீறுகிறவனே அல்லாஹ் எச்சரிக்கிறான்
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்; அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்; மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.
(அல்குர்ஆன் : 4:14)
ஒரு சீர் செய்யப்பட்ட சமூகத்தில் ஒருவரோ, இருவரோ இல்லை அல்லாஹ் நாடும் அளவுகோ வரம்பு மீறும்போது நன்மை ஏவி தீமை தடுக்க கூடியவர்கள், அல்லாஹ்வின் வேலையை செய்து விடுவார்கள்.
ஆனால் ஒரு சமூகமே பழகீனமாக்கப்பட்டு அதில் ஒருவன் ஆதிக்கம் செலுத்தி மற்ற நபர்களை தன்னுடைய இறைவனுக்கு நன்றி செலுத்த விடாமல் தடுப்பானேயானால், அவனையும் சேர்த்து அந்த மக்களுக்கு ஒரு நபி அனுபக்கூடிய தேவை வருகிறது (மூஸா அலை அவர்கள் வரலாறு படி)
இப்போது காஷாவில் நடக்கக்கூடிய இன அழிப்பில் பங்கு கொண்ட நெதன்யாகு போல் (இப்போது வரம்பு மீறிய சமூகம்)
அதற்கு உதாரணம் ஃபிர்அவ்ன்
“நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:43)
அல்லாஹ் அவன் வரம்பு மீறுனதையும் கூறுகிறான்.
அவன் வரம்பு மீறுனது எதில் என்றும் கூறுகிறான்.
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
(அல்குர்ஆன் : 28:4)
ஃபிர்அவ்ன் வரம்பு மீறினான் மூஸா அலை அவர்கள் அனுபப்பட்டார்கள்.
மேலும் லூத் அலை அவர்களுடைய சமூகம் வரம்பு மீறுனது எதில்
“மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்.”
(அல்குர்ஆன் : 7:81)
லூத் அலை அவர்கள் அவர் சமூகத்திற்கு வரம்பு மீறியதால் அவர் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
நாம் நினைக்கும் சிறிய சிறிய நிகழ்வையும் அல்லாஹ் வரம்பு மீறுதல் என்று கூறுகிறான்.
“வேதமுடையவர்களே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் உண்மையில்லாததை கூறி வரம்பு மீறாதீர்கள்; (உங்களுக்கு) முன்பு வழிதவறிச் சென்ற கூட்டதாரின் மனோ இச்சைகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; அநேகரை அவர்கள் வழி தவறச் செய்ததுடன், தாங்களும் நேர் வழியை விட்டு விலகி விட்டனர்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 5:77)
உணவிலும் ஹலால் ஹராம் பார்ப்பதில்லை
முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 5:87)
அல்லாஹ்வின் வரம்புகள் குர் ஆனில் நிறைய உள்ளது.
இதே போன்ற வரம்பு மீறல் இந்த சமூகத்தில் இந்த உலகத்தில் நடக்கிறதா இல்லையா?
இதை சமூகத்தில் விதைத்த சமூகம் எது என்று எல்லாருக்கும் தெரிந்த விஷயம் ஆகும்.
👊👊👊👊👊👊👊👊அது மேற்கிந்திய உலகம் ஆகும்.👊👊👊👊👊👊👊
இப்போது நடக்கக்கூடிய நிகழ்வு எல்லாம் வரம்பு மீறுதலா இல்லையா?அல்லாஹ்வின் ஃபித்ரத்தில் இப்போது நபி வரக்கூடிய சூழ்நிலையா இல்லையா?
ஆனால் நபி ஸல் அவர்கள் இனி நபி என்று ஒருவர் வரப்போவது இல்லை என்று முன்னாடியே கூறிவிட்டார்கள்.
ஆனால் அல்லாஹ்வின் ஃபித்ரத்தில் இப்போது நபி வரக்கூடிய சூழ்நிலையாகும்.
சூழ்நிலை முரண்பாடுகிறதா இல்லையா?
சூழ்நிலை முரண்படவில்லை ஏனென்றால் அல்லாஹ்வின் ஃபித்ரத்தில் இப்போது நபி அனுப்பமுடியாது
இனிமேல் ரஸூலுக்கு பதிலாக அனுப்பக்கூடிய ஒன்று உலக அழிவு ஆகும்.
அதற்குண்டான அடையாளம் எங்கள் கணக்கின் படி 90 % முடிந்துவிட்டது.
அதற்குண்டான ஆதாரம் முன்வரலாற்றில் இருந்து இன்னைக்கு உள்ள வரலாறு மாற்றம்தான்
உலக அழிவின் ஆதாரம் எங்கு பார்த்தாலும் வழிந்து கிடக்கிறது நாம் கண்கொண்டு காண மறுக்கிறோம்.
அப்படிப்பட்ட உலக அழிவு அடையிளங்களின் முதன்மையாக உள்ள மிக பெரிய தஜ்ஜால், யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் பற்றி நாம் காண்போம் நம்மளுடைய உயிர் எவன் கையில் உள்ளதோ அந்த அல்லாஹ் நாடினால் தவிர............
Comments
Post a Comment