சமூகத்தில் 5 விஷயங்களை பயந்து கொள்ளுங்கள்

 சமூகத்தில் 5 விஷயங்களை பயந்து கொள்ளுங்கள்.



1.மறைவான செயல்கள் வெளிப்படையாக நடத்தல் (முதலில் கண்ணியம்)

2.அளவையிலும், எடையிலும்  மோசடி (இரண்டாவது சம பங்கு)

3.ஜகாத்தை கொடுக்காதபோது (மூன்றாவது ஏழைகள் அதிகரிப்பார்கள்)

4.அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறும்போது (நான்காவது அரசியலை விட்டு விலகுதல்)

5.தலைவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல் (ஐந்தாவது தலைவர்கள் இல்லாமல் போகுதல்)


ஸுனன் இப்னு மாஜா 4019 


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் திரும்பி, "மக்களே! ஐந்து விஷயங்கள் உள்ளன. நீங்கள் அவற்றில் சிக்கிக்கொண்டால் (அதற்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்). அந்தத் தீய விஷயங்கள் உங்களை அடைவதிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்."


 * எந்த ஒரு சமூகத்திலும் மறைவான செயல்கள் வெளிப்படையாக நடக்கும்போது, பிளேக் மற்றும் அவர்களின் முன்னோர்களுக்கு இல்லாத நோய்கள் அவர்களிடையே பரவுகின்றன.


 * எந்த ஒரு சமூகத்தினர் அளவையிலும், எடையிலும் குறைக்கும்போது, வறட்சி, வாழ்வாதாரத்தில் சிரமம் மற்றும் ஆட்சியாளரின் கொடுமை மூலம் தண்டிக்கப்படுகிறார்கள்.


 * எந்த ஒரு சமூகத்தினர் தங்களின் செல்வத்தின் ஜகாத்தை கொடுக்காதபோது, வானத்திலிருந்து வரும் மழை அவர்களுக்குத் தடுக்கப்படுகிறது. விலங்குகள் இல்லையென்றால் அவர்களுக்கு ஒருபோதும் மழை கிடைக்காது.


 * எந்த ஒரு சமூகத்தினர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறும்போது, மற்ற சமூகத்தாரிலிருந்து ஒரு எதிரி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இவர்களிடமிருந்த அனைத்து உடைமைகளையும் பறித்துக்கொள்கிறார்கள்.


 * எந்த ஒரு சமூகத்தினரின் தலைவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தின்படி ஆட்சி செய்யாமல் மற்றும் அல்லாஹ் இறக்கியருளியதை கடைப்பிடிக்காதபோது, அல்லாஹ் அவர்களிடையே பரஸ்பர சண்டையை ஏற்படுத்துகிறான்.

Comments