முஆவியா அவர்கள் அஸர் தொழுகை தொழவேண்டாமென கூறுகிறார்கள்.
ஆனால் ரஸூறுல்லாஹ் அஸர் தொழுதார்கள்.
587. ஹும்ரான் பின் அபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நீங்கள் ஒரு தொழுகையைத் தொழுது கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டிருந்த நாங்கள், நபி (ஸல்) அவர்கள் அத்தொழுகையைத் தொழக் கண்டதில்லை. (ஏன், நீங்கள் தொழுது வரும்) அந்த இரு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்” என முஆவியா
(ரலி) அவர்கள் கூறினார்கள். அதாவது அஸ்ருக்குப் பின்னால் இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்தார்கள்
590. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களை இறக்கச் செய்த (இறை)வன் மீதாணையாக! (அஸ்ர் தொழு கைக்குப் பின்னுள்ள அந்த) இரண்டு ரக்அத் தொழுகையை அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை நபி (ஸல்) அவர்கள் விட்டுவிடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் -தாம் அஸ்ருக்குப் பின்னர் தொழும் அந்த இரண்டு ரக்அத்களை- அமர்ந்து கொண்டே தொழுவார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்அத்களையும் தொழுவார்கள்; ஆனால், பள்ளிவாச-ல் அதைத் தொழமாட்டார்கள். தம் சமுதாயத் தாருக்குச் சிரமம் ஏற்படுத்துவதை அஞ்சி யதே இதற்குக் காரணம். தம் சமுதாயத் தாருக்கு எளிதானதையே அவர்கள் விரும்புவார்கள்
591. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (என்னிடம்), “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு சஜ்தாக்கள் (ரக்அத்கள்) தொழுவதை என்னிடம் இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை” என்று சொன்னார்கள்
592. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், இரண்டு தொழுகைகளை இரகசியமாகவும் விட்டதில்லை; பகிரங்கமாகவும் விட்டதில்லை. (அவை:) சுப்ஹு தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள், அஸ்ர் தொழுகைக்குப்பின் இரண்டு ரக்அத்கள்.
593. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழு கைக்குப்பின் எந்த நாளில் என்னிடம் (என் வீட்டிற்கு) வந்தாலும் அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்த தில்லை.28
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
Comments
Post a Comment