உஸ்மான் ரலி அவர்கள் காலத்தில் நடந்த குழப்பங்கள், முற்றுகை, நிகழ்ச்சி
மொழிபெயர்ப்பில் சிறிய பிழை இருக்க வாய்ப்புள்ளது ஆகவே இந்த ஹதீதை ஆய்வு செய்துகொள்ளுங்கள்
Mussannaf ibn abi shayba 38846
حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو مِحْصَنٍ أَخُو حَمَّادِ بْنِ نُمَیْرٍ ، رَجُلٌ مِنْ أَہْلِ وَاسِطَ، قَالَ: حَدَّثَنَا حُصَیْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : حَدَّثَنِی جَہْمٌ رَجُلٌ مِنْ بَنِی فِہْرٍ ، قَالَ : أَنَا شَاہِدُ ہَذَا الأَمْرِ ، قَالَ : جَائَ سَعْدٌ وَعَمَّارٌ فَأَرْسَلُوا إِلَی عُثْمَانَ أَنِ ائْتِنَا ، فَإِنَّا نُرِیدُ أَنْ نَذْکُرَ لَکَ أَشْیَائَ أَحْدَثْتہَا، أَوْ أَشْیَائَ فَعَلْتہَا، قَالَ: فَأَرْسَلَ إلَیْہِمْ أَنَ انْصَرَفُوا الْیَوْمَ ، فَإِنِّی مُشْتَغِلٌ وَمِیعَادُکُمْ یَوْمَ کَذَا وَکَذَا حَتَّی أَشْزنَ ، قَالَ أَبُو مِحْصَنٍ : أَشْزنَ : أَسْتَعِدُّ لِخُصُومَتِکُمْ ۔
2۔ قَالَ : فَانْصَرَفَ سَعْدٌ ، وَأَبَی عَمَّارٍ أَنْ یَنْصَرِفَ ، قَالَہَا أَبُو مِحْصَنٍ مَرَّتَیْنِ ، قَالَ : فَتَنَاوَلَہُ رَسُولُ عُثْمَانَ فَضَرَبَہُ ، قَالَ : فَلَمَّا اجْتَمَعُوا لِلْمِیعَادِ وَمَنْ مَعَہُمْ ، قَالَ لَہُمْ عُثْمَان مَا تَنْقِمُونَ مِنِّی ، قَالُوا : نَنْقِمُ عَلَیْک ضَرْبَک عَمَّارًا ، قَالَ : قَالَ عُثْمَان : جَائَ سَعْدٌ وَعَمَّارٌ فَأَرْسَلْت إلَیْہِمَا ، فَانْصَرَفَ سَعْدٌ ، وَأَبِی عَمَّارٌ أَنْ یَنْصَرِفَ ، فَتَنَاوَلَہُ رَسُولٌ مِنْ غَیْرِ أَمْرِی فَوَاللہِ مَا أَمَرْت وَلاَ رَضِیت ، فَہَذِہِ یَدِی لِعَمَّارٍ فَلْیَصْطَبِر ، قَالَ أَبُو مِحْصَنٍ : یَعْنِی : یَقْتَصُّ ۔
3۔ قَالُوا : نَنْقِمُ عَلَیْک أَنَّکَ جَعَلْت الْحُرُوفَ حَرْفًا وَاحِدًا ، قَالَ : جَائَنِی حُذَیْفَۃُ ، فَقَالَ : مَا کُنْت صَانِعًا إِذَا قِیلَ : قِرَائَۃُ فُلاَنٍ وَقِرَائَۃُ فُلاَنٍ وَقِرَائَۃُ فُلاَنٍ ، کَمَا اخْتَلَفَ أَہْلُ الْکِتَابِ ، فَإِنْ یَکُ صَوَابًا فَمِنَ اللہِ ، وَإِنْ یَکُ خَطَأً فَمِنْ حُذَیْفَۃَ ۔
4۔ قَالُوا : نَنْقِمُ عَلَیْک أَنَّک حَمَیْت الْحِمَی ، قَالَ : جَائَتْنِی قُرَیْشٌ ، فَقَالَتْ : إِنَّہُ لَیْسَ مِنَ الْعَرَبِ قَوْمٌ إِلاَّ لَہُمْ حِمًی یَرْعَوْنَ فِیہِ غَیْرَنَا ، فَفَعَلْت ذَلِکَ لَہُمْ فَإِنْ رَضِیتُمْ فَأَقِرُّوا ، وَإِنْ کَرِہْتُمْ فَغَیِّرُوا ، أَوَ قَالَ : لاَ تُقِرُّوا شَکَّ أَبُو مِحْصَنٍ۔
5۔ قَالُوا : وَنَنْقِمُ عَلَیْک أَنَّک اسْتَعْمَلْت السُّفَہَائَ أَقَارِبَک ، قَالَ : فَلْیَقُمْ أَہْلُ کُلِّ مِصْرٍ یَسْأَلُونِی صَاحِبَہُمَ الَّذِی یُحِبُّونَہُ فَأَسْتَعْمِلُہُ عَلَیْہِمْ وَأَعْزِلُ عَنْہُمَ الَّذِی یَکْرَہُونَ، قَالَ: فَقَالَ أَہْلُ الْبَصْرَۃِ : رَضِینَا بِعَبْدِ اللہِ بْنِ عَامِرٍ، فَأَقِرَّہُ عَلَیْنَا ، وَقَالَ أَہْلُ الْکُوفَۃِ : اعْزِلْ سَعِیدًا ، وَقَالَ الْوَلِیدُ شَکَّ أَبُو مِحْصَنٍ : وَاسْتَعْمِلْ عَلَیْنَا أَبَا مُوسَی فَفَعَلَ ، قَالَ : وَقَالَ أَہْلُ الشَّامِ : قَدْ رَضِینَا بِمُعَاوِیَۃَ فَأَقِرَّہُ عَلَیْنَا ، وَقَالَ أَہْلُ مِصْرَ : اعْزِلْ عَنَّا ابْنَ أَبِی سَرْحٍ، وَاسْتَعْمِلْ عَلَیْنَا عَمْرَو بْنَ الْعَاصِ ، فَفَعَلَ ، قَالَ: فَمَا جَاؤُوا بِشَیْئٍ إِلاَّ خَرَجَ مِنْہُ ، قَالَ : فَانْصَرَفُوا رَاضِینَ۔
6۔ فَبَیْنَمَا بَعْضُہُمْ فِی بَعْضِ الطَّرِیقِ إذْ مَرَّ بِہِمْ رَاکِبٌ فَاتَّہَمُوہُ فَفَتَّشُوہُ فَأَصَابُوا مَعَہُ کِتَابًا فِی إدَاوَۃٍ إِلَی عَامِلِہِمْ أَنْ خُذْ فُلاَنًا وَفَُلاَنًا فَاضْرِبْ أَعْنَاقَہُمْ ، قَالَ : فَرَجَعُوا فَبَدَؤُوا بِعَلِیٍّ فَأَتَوْہُ فَجَائَ مَعَہُمْ إِلَی عُثْمَانَ ، فَقَالُوا : ہَذَا کِتَابُک وَہَذَا خَاتَمُک ، فَقَالَ عُثْمَان : وَاللہِ مَا کَتَبْت وَلاَ عَلِمْت وَلاَ أَمَرْت ، قَالَ : فَمَنْ تَظُنُّ؟ قَالَ أَبُو مِحْصَنٍ : تَتَّہِمُ ، قَالَ : أَظُنُّ کَاتِبِی غَدَرَ ، وَأَظُنُّک بِہِ یَا عَلِیُّ ، قَالَ : فَقَالَ لَہُ عَلِیٌّ : وَلِمَ تَظُنُّنِی بِذَاکَ، قَالَ : لأَنَّک مُطَاعٌ عِنْدَ الْقَوْمِ ، قَالَ : ثُمَّ لَمْ تَرُدَّہُمْ عَنِّی ۔
7۔ قَالَ : فَأَبَی الْقَوْمُ وَأَلَحُّوا عَلَیْہِ حَتَّی حَصَرُوہُ ، قَالَ : فَأَشْرَفَ عَلَیْہِمْ ، وَقَالَ : بِمَ تَسْتَحِلُّونَ دَمِی فَوَاللہِ مَا حَلَّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلاَّ بِإِحْدَی ثَلاَثٍ : مُرْتَدٌّ ، عَنِ الإِسْلاَم ، أَوْ ثَیِّبٌ زَانٍ ، أَوْ قَاتِلُ نَفْسٍ ، فَوَاللہِ مَا عَمِلْتُ شَیْئًا مِنْہُنَّ مُنْذُ أَسْلَمْتُ ، قَالَ : فَأَلَحَّ الْقَوْمُ عَلَیْہِ ، قَالَ : وَنَاشَدَ عُثْمَان النَّاسَ أَنْ لاَ تُرَاقَ فِیہِ مِحْجَمَۃٌ مِنْ دَمٍ ۔
8۔ فَلَقَدْ رَأَیْت ابْنَ الزُّبَیْرِ یَخْرُجُ عَلَیْہِمْ فِی کَتِیبَۃٍ حَتَّی یَہْزِمَہُمْ ، لَوْ شَاؤُوا أَنْ یَقْتُلُوا مِنْہُمْ لَقَتَلُوا ، قَالَ: وَرَأَیْت سَعِیدَ بْنَ الأَسْوَدِ بْنِ الْبَخْتَرِیَّ وَإِنَّہُ لَیَضْرِبَ رَجُلاً بِعَرْضِ السَّیْفِ لَوْ شَائَ أَنْ یَقْتُلَہُ لَقَتَلَہُ ، وَلَکِنَّ عُثْمَانَ عَزَمَ عَلَی النَّاسِ فَأَمْسَکُوا ۔
9۔ قَالَ : فَدَخَلَ عَلَیْہِ أَبُو عَمْرِو بْنِ بُدَیْلٍ الْخُزَاعِیُّ وَالتُّجِیبِیُّ ، قَالَ : فَطَعَنَہُ أَحَدُہُمَا بِمِشْقَصٍ فِی أَوْدَاجِہِ وَعَلاَہُ الآخَرُ بِالسَّیْفِ فَقَتَلُوہُ ، ثُمَّ انْطَلَقُوا ہِرَابًا یَسِیرُونَ بِاللَّیْلِ وَیَکْمُنُونَ بِالنَّہَارِ حَتَّی أَتَوْا بَلَدًا بَیْنَ مِصْرَ وَالشَّامِ ، قَالَ : فَکَمِنُوا فِی غَارٍ ، قَالَ : فَجَائَ نَبَطِیٌّ مِنْ تِلْکَ الْبِلاَدِ مَعَہُ حِمَارٌ ، قَالَ : فَدَخَلَ ذُبَابٌ فِی مِنْخَرِ الْحِمَارِ ، قَالَ : فَنَفَرَ حَتَّی دَخَلَ عَلَیْہِمَ الْغَارَ ، وَطَلَبَہُ صَاحِبُہُ فَرَآہُمْ : فَانْطَلَقَ إِلَی عَامِلِ مُعَاوِیَۃَ ، قَالَ : فَأَخْبَرَہُ بِہِمْ ، قَالَ : فَأَخَذَہُمْ مُعَاوِیَۃُ فَضَرَبَ أَعْنَاقَہُمْ۔
அறிவிப்பாளர்களில் ஒருவர் ஜாஹ்ம் ஃபஹ்ரி அவர்கள் கூறுகிறார்:
பின்பு நடக்கக்கூடிய நான் இந்த விவகாரத்தை நேரில் கண்டேன்.
ஒருமுறை ஸஅத் மற்றும் உமாரா ஆகியோர் ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களுக்கு செய்தி அனுப்பினார்கள். “நீங்கள் எங்களிடம் வர வேண்டும், நீங்கள் நாங்கள் புதிதாக கொண்டு வந்த சில விஷயங்களைப் பற்றி நாங்கள் உங்களிடம் சொல்ல விரும்புகிறோம்” என்று கூறினார்கள்.
அதற்க்கு ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “இன்று நீங்கள் செல்லுங்கள், நான் இன்று பிஸியாக இருக்கிறேன். இன்னுமொரு நாளில் உங்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான் உங்களுடன் உரையாடலுக்கு தயாராக இருக்க வேண்டும்” என்று பதில் செய்தி அனுப்பினார்கள்.
அறிவிப்பாளர் அபூ முஹ்ஸின் அவர்கள் கூறுகிறார்கள் மூலத்தில் அஷ்ஜனின் பொருள், “நான் உங்களுடன் வாக்குவாதத்திற்குத் தயாராக இருக்க வேண்டும்” என்று விளக்கமளித்தார்.
அந்த நேரத்தில் ஸஅத் திரும்பிச் சென்றார், ஆனால் அம்மார் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டார்.
இதை அபூ முஹ்ஸின் இரண்டு முறை கூறினார். எனவே, ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் தூதர் அம்மாரைப் பிடித்து அடித்தார். பின்னர், குறிப்பிட்ட நாளில் அனைவரும் ஒன்று கூடினர். அப்போது ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “எதற்காக நீங்கள் என் மீது கோபமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நீங்கள் அம்மாரை அடித்ததற்காக நாங்கள் கோபமாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “ஸஅத் மற்றும் அம்மார் வந்தார்கள். நான் அவர்களை திரும்பிச் செல்லும்படி செய்தி அனுப்பினேன். ஸஅத் திரும்பிச் சென்றுவிட்டார், ஆனால் அம்மார் மறுத்துவிட்டார். என் தூதர் என் அனுமதி இல்லாமல் அவரை அடித்தார். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் இதற்கு உத்தரவிடவும் இல்லை, இதற்கு நான் உடன்படவும் இல்லை. இருப்பினும், நான் இப்போது உங்களிடம் இருக்கிறேன்! அம்மார் தனது பழிக்குப் பழி என்மீது வாங்கிக்கொள்ளலாம்” என்று கூறினார். அபூ முஹ்ஸின் அவர்கள், “லி யஸ்தபிர்” என்பதற்கு பழிக்குப் பழி வாங்குதல் என்று பொருள் என்று கூறுகிறார்.
அதன் பின்னர் வேறு ஒரு குற்றசாட்டு அவர்கள், குர்ஆனை “நீங்கள் பல ‘ஹுரூஃப்களை’ (அரபு உச்சரிப்பு) ஒரு ஹுர்ஃபாக மாற்றிவிட்டீர்கள் என்பதற்காக நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “ஹுதைஃபா (ரலி) என்னிடம் வந்து, ‘ஒருவர் இன்னோருவரின் கிராஅத், இன்னும் இன்னோருவரின் கிராஅத் என்று கூறும்போது நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? என்றும் எப்படி வேதக்காரர்கள் தங்கள் வேதங்களில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ, அதேபோல் நீங்கள் வேறுபட போகிறீர்களா?' என்று அவர் என்னிடம் கேட்டார்.
குர் ஆனை ஒன்று சேர்ப்போம் இந்த செயல் (அரபிகளை ஒரே ‘கிராஅத்தில்’ ஒன்று சேர்ப்பது) சரியானது என்றால், அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. தவறானது என்றால், அது ஹுதைஃபா (ரலி) அவர்களின் புறத்திலிருந்து வந்தது” என்று கூறினார்.
பிறகு வேறு ஒரு குற்றசாட்டு அவர்கள், “நீங்கள் மேய்ச்சல் நிலங்களை (புல்வெளிகளை) ஒதுக்கி வைத்துள்ளீர்கள் என்பதற்காகவும் நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “குறைஷிகள் என்னிடம் வந்து, அரபு சமூகத்தில் ஒவ்வொருவரிடமும் மேய்ச்சல் நிலங்கள் உண்டு, எங்களைத் தவிர. எனவே, நான் அவர்களுக்காக மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கினேன். நீங்கள் இப்படி செய்ததை விரும்பினால், அதைத் தொடரலாம். உங்களுக்கு விரும்பவில்லை என்றால், அதை மாற்றிக் கொள்ளுங்கள்” அல்லது “நீங்களே அதை ஒதுக்க வேண்டாம்” என்று கூறினார்.
அபூ முஹ்ஸின் அவர்கள் இதில் குழப்பத்தில் இருக்கிறார். என்று கூறினார்
பிறகு ஒரு குற்றசாட்டு அவர்கள், “நீங்கள் எங்களின் மீது அறிவில்லாத உங்கள் உறவினர்களை ஆளுநர்களாக நியமித்து விட்டீர்கள் என்பதற்காகவும் நாங்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
அதற்க்கு ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “ஒவ்வொரு நகரத்தைச் சேர்ந்தவர்களும் எழுந்து, அவர்களுக்குப் பிடித்தமானவர்களை எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் அவர்களை ஆளுநர்களாக நியமிப்பேன். பிடிக்காதவர்களை பதவியிலிருந்து நீக்கிவிடுவேன்” என்று கூறினார்.
பஸ்ரா வாசிகள், “நாங்கள் அப்துல்லாஹ் இப்னு ஆமிர் மீது திருப்தியாக உள்ளோம், அவரையே தொடர வையுங்கள்” என்று கூறினார்கள்.
பிறகு கூஃபா வாசிகள், “ஸஈத் அவர்களை பதவியிலிருந்து நீக்குங்கள் (அபூ முஹ்ஸின் அவர்களுக்கு சந்தேகம் வந்ததாக வலீத் கூறுகிறார்), மேலும் அபூ மூஸா (ரலி) அவர்களை எங்களுக்கு ஆளுநராக நியமியுங்கள்” என்று கூறினார்கள். அதன்படியே ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்.
ஷாம் வாசிகள், “நாங்கள் ஹஸ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் மீது திருப்தியாக உள்ளோம், அவரையே எங்களுக்காக தொடர வையுங்கள்” என்று கூறினார்கள்.
மேலும், எகிப்து வாசிகள், “இப்னு அபூ ஸர்ஹ் அவர்களை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களை ஆளுநராக நியமியுங்கள்” என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் அவ்வாறே செய்தார். அவர்கள் எதைக் கேட்டார்களோ, அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் திரும்பினர்கள் .
அவர்கள் வழியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குதிரை வீரன் அவர்களைக் கடந்து சென்றான். அவர்கள் அவனைக் கண்டு சந்தேகித்து, அவனிடம் விசாரித்தபோது, அவனிடமிருந்த ஒரு தோல் பையில் இருந்து அவர்களின் ஆளுநருக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதன் உள்ளடக்கம் என்னவென்றால் , “நீங்கள் இன்னின்னாரைக் கழுத்தறுத்து விடுங்கள்” என்று இருந்தது.
அவர்கள் திரும்பிச் சென்று, அலி (ரலி) அவர்களிடம் சென்றனர். பிறகு அலி (ரலி) அவர்களுடன் சேர்ந்து ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றார்.. அப்போது அவர்கள் ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களிடம், “இது உங்களின் கடிதம் என்றும் , இது உங்களின் முத்திரை” என்று கூறினார்கள்.
ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் அந்தக் கடிதத்தை எழுதவும் இல்லை, அதைப்பற்றி அறியவும் இல்லை, அதற்கு நான் உத்தரவிடவும் இல்லை” என்று கூறினார்.
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள், “அப்படியானால், அதை எழுதியவர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அபூ முஹ்ஸின் அவர்கள், “நீங்கள் யாரை குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கூறினாரோ என்று கூறுகிறார். ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள், “என் எழுத்தர் ஏமாற்றிவிட்டதாக நான் நினைக்கிறேன்,
அலியே, நான் உன்னைச் சந்தேகிக்கிறேன்” என்று கூறினார். ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள், “மக்கள் உங்களை பின்பற்றுபவர்கள்” என்று கூறினார்.
ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள், “அப்படியானால், நீங்கள் அவர்களை ஏன் என்னிடமிருந்து திருப்பி அனுப்பவில்லை?” என்று கேட்டார்.
அவர்கள் அவரை நம்பவில்லை,
தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தனர்.
இறுதியில் ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களை முற்றுகையிட்டனர்.
பிறகு ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் அவர்களை நோக்கி, “நீங்கள் என் இரத்தத்தை ஹலாலாக்கிக் கொண்டீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஒரு முஸ்லிமின் இரத்தம் மூன்று காரணங்களுக்காக மட்டுமே ஹலால்:
ஒன்று, அவர் இறைமறுப்பாளராக மாறினால்.
இரண்டாவது, திருமணம் செய்துகொண்ட பிறகு விபச்சாரம் செய்தால்.
மூன்றாவது, ஒருவரைக் கொன்றால்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் இஸ்லாத்திற்கு வந்ததிலிருந்து இந்த மூன்றில் எதையும் நான் செய்ததாக எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
அறிவிப்பாளர் அவர்கள், கூறுகிறார்கள் “அவர்கள் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தனர்” என்று கூறுகிறார். பிறகு ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களிடம் இரத்தக் களரியில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.
அறிவிப்பாளர் அவர்கள், “நான் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களை ஒரு படைப்பிரிவில் கண்டேன். அவர்கள் அந்த எதிர்ப்பாளர்களை அடக்க வெளியே வந்தனர். அவர்கள் விரும்பியிருந்தால், அந்த எதிர்ப்பாளர்களை கொன்றிருக்கலாம்.
நான் ஸஈத் இப்னு அஸ்வத் அவர்களைக் கண்டேன். அவர்கள் தங்கள் வாளின் அகலமான பகுதியால் ஒரு மனிதனை அடிக்க விரும்பியிருந்தால், அடித்திருக்கலாம்.
ஆனால், ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களைத் தடுத்ததால், மக்கள் அப்படியே இருந்தனர்” என்று கூறுகிறார்.
பிறகு அபூ அம்ர் இப்னு மத்ஹல் குஜாஈ மற்றும் தஜீபி ஆகியோர் உள்ளே நுழைந்தனர்.
அவர்களில் ஒருவன் அகலமான நுனி கொண்ட ஈட்டியால் ஹஸ்ரத் உஸ்மான் (ரலி) அவர்களின் கழுத்து நரம்புகளை அறுத்தான். மற்றவன் வாளால் அவரைத் தாக்கி அவரை மேலே தூக்கி எறிந்து அவரைக் கொன்றுவிட்டான். பிறகு அவர்கள் ஓடிவிட்டனர். அவர்கள் இரவில் பயணித்து பகலில் ஒளிந்து கொண்டனர்.
அவர்கள் எகிப்து மற்றும் ஷாம் இவற்றுக்கிடையே ஒரு இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஒரு குகையில் ஒளிந்திருந்தபோது, ஒரு நப்தீ அந்தப் பகுதியை விட்டு வெளியேறினான். அவனுடன் ஒரு கழுதையும் இருந்தது. அந்தக் கழுதையின் நாசியில் ஒரு ஈ நுழைந்தது. அது அதிர்ச்சியடைந்து ஓடி, அந்தக் குகைக்குள் நுழைந்தது.
கழுதையின் உரிமையாளர் அதைக் கண்டுபிடிப்பதற்காக அங்கு வந்தபோது, அவன் அவர்களைப் பார்த்தான். அந்த மனிதன் ஹஸ்ரத் முஆவியா (ரலி) அவர்களின் ஆளுநரிடம் சென்று, அவர்களைப் பற்றி அவரிடம் கூறினான். பிறகு ஹஸ்ரத் முஆவியா (ரலி) அவர்கள் அவர்களைப் பிடித்து கொன்றுவிட்டார்.
Comments
Post a Comment