மறைமுகமாக ரஸூறுல்லாஹ் பேசுவார்களா ?

மறைமுகமாக ரஸூறுல்லாஹ் பேசுவார்களா ?


நாங்கள் கூறக்கூடிய ரஸூறுல்லாஹ் நபி ஸல் அவர்கள் மட்டும் இல்லை.


எல்லா இறைதூதர்கள் (ரசூல்மார்களும்) ஆவார்கள்.


நாங்கள் இங்கே இறைதூதர்கள் மறைமுகமாக பேசுவார்களா? இல்லையா?


மறைமுகமாக பேசுவார்கள் என்றால் மறுமைநாளின் அடையாளங்களில் பெரும்பாலும் நபி ஸல் அவர்கள் கூறிய ஹதீத்கள் எல்லாம் தெளிவாக விளக்கிய பின்பும் சாதாரண முஸ்லீம்கள் (அதாவது உலக ஆதாயத்துக்காக போராடும் முஸ்லீங்களுக்கு புரியாது)


குர் ஆனில் அல்லாஹ் ஒரு 4 விஷயங்களை கூறுவான் சூரா லூக்மானில் 34 வசனம் அந்த 4 விஷயத்தை தவிர ரஸூல் மார்களுக்கு தன்னுடைய தோழர்களுக்கு பல பேர்களுக்கும் தெரியாத விஷயங்களை கூறியுள்ளான்.


முதலில் இறைதூதர்கள் மறைமுகமாக பேசுவார்களா என்று பார்ப்போம்.


அதன் பின்பு மறுமை நாளின் அடையாளங்களில் உள்ள ஹதீத்களில் எவ்வளவு விளக்கங்கள் ஒளிந்துள்ளது என்று பார்ப்போம்.


குர் ஆனில் உள்ள இறைதூதர் மறைமுகமாக பேசியுள்ளதை பார்ப்போம்.


நபி யூசுப் அலை அவர்களிடம் சிறையில் இருப்பவர்கள் கேட்ட கேள்வி.


அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).

(அல்குர்ஆன் : 12:36)




அவர்கள் சொன்ன பதில்



“சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).

(அல்குர்ஆன் : 12:41)



விளக்கம்:


இங்கு யூசுப் அலை அவர்கள் மறைமுகமாக பேசவில்லை.



மற்ற மக்களுக்கு தெரியாத மறைமுகமான விஷயத்துக்கு யூசுப் அலை அவர்கள் விளக்கம் சொன்னார்கள் என்றால் அவருக்கு மறைமுகமான விஷயத்தை அல்லாஹ் அறிவித்து கொடுத்துள்ளான்.


இங்கே மறைமுகமான விஷயம் தெரியும் என்றால் அல்லாஹ்வுக்கு தெரிந்த மறைமுகமான விஷயம் இல்லை சாதாரண மக்களுக்கு தெரியாத மறைமுகமான விஷயம் என்று புரிய வேண்டும். இதுதான் இந்த தலைப்பின் தொகுப்பு.


இதே போன்று யூசுப் அலை அவர்கள் சூரியன், சந்திரன் என்று மேலும் சில கனவுகளுக்கு விளக்கம் அந்த சூராவில் கூறியுள்ளார்கள் கூறியுள்ளார்கள்.



இப்போது இப்ராஹிம் அலை அவர்களை காண்போம்.








இப்ராஹிம் அலை அவர்கள் இஸ்மாயில் அலை அவர்களின் மனைவியிடம் ஒரு செய்தியை கூறுகிறார்கள்.


அந்த செய்தி இஸ்மாயில் அலை அவர்களுடைய மனைவி வழியாக இஸ்மாயில் அலை அவர்களுக்கு கூற சொல்லி இப்ராஹிம் அலை அவர்கள் கூறினார்கள்.


ஆனால் இஸ்மாயில் அலை அவர்களுடைய மனைவிக்கு அது புரியவில்லை அதன் பின்புதான் அவர்களுடைய மனைவிக்கு இஸ்மாயில் அலை அவர்கள் கூறித்தான் அது தெரியவருகிறது.



இது ஒரு பெரிய ஹதீத் இதில் இறைதூதர்கள் மறைமுகமாக பேசுவார்களா என்ற தலைப்புக்கு இந்த நிகழ்வு தேவைபடுகிறது.



புஹாரி 3364


இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச்சென்ற (தம் மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார்.


பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றிவிடும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதுபோல் உணர்ந்தார்கள்.


ஆகவே, ‘‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவ ருடைய மனைவி, ‘‘ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள்கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம், உங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?› என்று கேட்டார். நான் அவரிடம், நாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்குத் தமது சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, உன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார்.


இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தைதான். உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை மணவிலக்குச் செய்துவிட்டார்.



விளக்கம்:


இங்கு இப்ராஹிம் நபி எப்படியெல்லாம் பேசுவார்கள் என்று அதுவும் கை குழந்தையாக இருக்கும் போது அந்த பாலைவனத்தில் விட்டு வந்த  இஸ்மாயில் அலை அவர்களுக்கு எப்படி தெரியும்.


இதுவே இறைத்தூத்துவர்களின் மகிமை............



நபி முஹம்மது ஸல் அவர்கள் மறைமுகமாக பேசுவேன் என்று நேரடியாகவே ஹதீதில் கூறியுள்ளார்கள்.


 இந்த உம்மத்துக்கு மறைமுகமாக வார்த்தைகள் கூற எனக்கு அனுமதிக்க பட்டுள்ளது என்று நபி ஸல் அவர்களே கூறியுள்ளார்கள்.








புஹாரி 

7013. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றிய மதிப்பும்)அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. நான் (நேற்றிரவு) உறங்கிக்கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் என்னிடம் கொண்டுவரப்பட்டு என் கையில் வைக்கப்பட்டன.


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்: ‘ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள்’ (ஜவாமிஉல் கலிம்) என்பதற்கு விளக்கமாவது: நபி (ஸல்) அவர்களது காலத்திற்கு முன்னால் ஏடுகளில் (நீளமான வார்த்தைகளால்) எழுதப்பட்டுவந்த பெரும் பெரும் கருத்துகளை(யும் தத்துவங்களையும்) ஓரிரு வார்த்தைகளில் ஒருங்கிணைத்து (இரத்தினச்சுருக்கமாக)ப் பேசுகின்ற ஆற்றலை நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்-என எனக்குச் செய்தி எட்டியது.



விளக்கம் :


இங்கு பூமியின் கருவூலம் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். இங்கு கருவூலம் என்று சொன்னால் பல அர்த்தங்களை நாம் தரமுடியும் இங்கு இதை நான் கூறவரவில்லை


நபி ஸல் அவர்களும் மற்ற மனிதர்களுக்கு தெரியாமல் மறைமுகமாக பேசுவார்கள்


அல்லாஹ்வின் நாட்டப்படி நபி ஸல் அவர்கள் மற்ற மனிதர்களுக்கு கூறுவார்கள்.


அது எப்படி என்றும் காணலாம்.


புஹாரி 


131. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


“மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வ தில்லை. அது முஸ்லிமுக்கு உவமை யாகும். அது என்ன மரம் என்று சொல் லுங்கள்!” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். காட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று எனக்குத் தோன்றியது. (மூத்தவர்கள் மௌனமாய் இருக்கும் அவையில் நான் எப்படிச் சொல்வது என்று) வெட்கப்பட்டுக்கொண்டு (அமைதியாக) இருந்துவிட்டேன்.


பிறகு மக்கள் “அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, “அது பேரீச்ச மரம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


பின்னர் என் தந்தை (உமர் (ரலி) அவர்கள்) இடம் என் மனதில் தோன்றிய விஷயத்தை நான் கூறினேன். அதைக் கேட்ட என் தந்தை “நீ அதைக் கூறி யிருந்தால் இன்னின்னவை எனக்குக் கிடைப்பதைவிட அது எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்” என்றார்கள்.



விளக்கம்:


அப்துல்லாஹ் பின் உமர் (இப்னு உமர் அறிவிக்க கூடிய ஒரு செய்தி) நபி ஸல் அவர்கள்  இலை உதிர் வில்லாத மரம் தெரியுமா என்று கேட்க அங்கு உள்ள யாருக்கும் தெரியவில்லை இப்னு உமரை தவிர


நபி ஸல் அவர்களும், அவர்களுடைய தோழர்களும் கற்று கொடுத்த அறிவு எப்படி பயன்பெறும் என்ற விளக்கம் இதுவே..........


இதில் இப்னு உமருக்கு தெரிவதால் அவருக்கு எல்லாம் தெரியும் என்றும் எண்ணிவிட கூடாது.


நாம் சமூகத்திலும் (மொத்த மனிதர்களிடத்திலும்) சில கெட்ட பழக்கம் இருக்கிறது.


ஒருவருக்கு ஒரு விஷயம் தெரிந்தால் அவருக்கு எல்லாம் தெரியும் என்றும்.


ஒருவர் ஒரு விஷயத்தில் தவறிழைத்தால் எல்லாத்திலும் தவறு இழைப்பார் என்றும் நம்பும் மனிதர்கள்தான் நாம்..........


ஆகவே இந்த ஹதீத் பொறுத்தவரை இதுமட்டுமே அவருக்கும் தெரியும்.



அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எதை மனிதருக்கு கற்று கொடுத்தார்களோ அதில் மட்டும்தான் அவர்கள் வல்லவர்கள்............


இதை நாம் சமூகம் புரியவேண்டும்..







புஹாரி 


120. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகைப் பைகளை (கல்விகளை) மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பிவிட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால், இந்த உணவுக் குழாய் வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர்பானவை.



விளக்கம்:


இந்த ஹதீத்லிருந்து நமக்கு தெரிய வருவது அபூஹுரைரா ரலி அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் அரசியல் சம்பந்தமான சில செய்திகள் மறைக்க அனுமதிக்கபட்டுள்ளது.


அல்லாஹ் அதை முஹ்மீன்களுக்கு வெளிப்படுத்தியும் செய்திருக்கிறான்.


அதனால்தான் அபூஹுரைரா ரலி அவர்கள் அப்படி கூறி இருக்கிறார்கள்.


அபூஹுரைரா ரலி அவர்கள் வேறு ஒரு செய்தியில் குழப்பம் பண்ணக்கூடியவர்களை அறிவிக்கவும் என்னால் முடியும் என்றும் கூறியுள்ளார்கள்.







புஹாரி 


116. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளின் இறுதிக் காலத்தில் (ஒரு நாள்) எங்களுக்கு இஷா தொழுகை நடத்தி னார்கள். சலாம் கொடுத்து முடித்ததும் எழுந்து நின்று, “உங்களது இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இன்றி லிருந்து (சரியாக) ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது பூமியின்மேல் இருக்கக்கூடியவர்களில் ஒருவர்கூட எஞ்சியிருக்கமாட்டார்கள்” என்று கூறினார்கள்.26


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


புஹாரி


601. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் இறுதி நாட்களில் (ஒரு நாள்) இஷா தொழுகை நடத்தினார்கள். சலாம் கொடுத்(து தொழுகையை முடித்)ததும் எழுந்து நின்று, “இந்த இரவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? (இன்றிலிருந்து) நூறாம் ஆண்டின் துவக்கத்தில், இன்று பூமியில் இருக்கும் யாரும் எஞ்சியிருக்கமாட்டார் கள்” என்று கூறினார்கள்.


மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் களில் நூறாண்டைப் பற்றிய இந்த ஹதீஸைத் தவறாகப் புரிந்து(கொண்டு, நூறு ஆண்டுகளுக்குப்பின் உலகம் அழிந்து விடும்போலும் என்று புரிந்து)கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் கூறியது, இன்று பூமியில் இருப்பவர்களில் யாரும் நூறு ஆண்டுகளுக்குப்பின் இருக்கமாட்டார்கள் என்ற பொருளில்தான்




விளக்கம்:


இந்த ஹதீதில் ஒரு நூற்றாண்டின் ஆரம்பத்தில் அழியும் என்று கூறியுள்ளார்கள் அது எப்போது என்று அறிவதில்லை அல்லாஹ்வின் நாடியுள்ள தூதர்களை தவிர..........


புஹாரி 


52. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது. தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் (முஷப்பஹாத்) இருக்கின்றன. அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறியமாட்டார் கள். எனவே, யார் சந்தேகத்திற்கு இடமான வற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற் கிடமானவற்றில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவற்றில் தலையிடு கிறார்.) வேலியோரங்களில் (கால்நடை களை) மேய்ப்பவரைப் போன்று. அவர் (ஒரு நாள்) வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) விட்டுவிட நேரும்.


அறிக! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை உண்டு. அல்லாஹ்வின் பூமியில் அவனது எல்லை (வேலி) அவனால் தடை விதிக்கப்பெற்றவையே. அறிக! உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீரடைந்துவிட்டால் முழு உடலும் சீரடைந்து விடும். அது சீரழிந்துவிட்டால் முழு உடலும் சீரழிந்துவிடும். அறிக! அதுவே இதயம்.


இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


விளக்கம்:



குர் ஆனில் ஹலால் ஹராம் பற்றி அல்லாஹ் கூறியுள்ளான்.அதேபோல் இவ்விரண்டுக்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் கூறப்படவில்லை அவற்றை மக்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.


 இதிலும் மறைவான விஷயம் மறைக்க பட்டுள்ளது அது வேறு யாருக்கும் வெளிப்படுத்தவும் இல்லை............ (முர்சலீன்களை தவிர )



புஹாரி 

23. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:


(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டி ருக்கும்போது (கனவில்), மக்கள் (பல விதமான) சட்டைகளை அணிந்தவர்களாக எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அவற்றில் (அவர்களுடைய) மார்பை எட்டக்கூடியவையும், மார்பை எட்டாத வையும் இருந்தன. உமர் பின் அல்கத்தாப் அவர்கள் (தரையில்) இழுபடும் அளவுக்கு (நீளமான) சட்டையொன்றை அணிந்தவராக எனக்குக் காட்டப்பட்டார்” என்று கூறினார்கள்.


மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இதற்கு நீங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்தச் சட்டைகள் அவர்களுடைய) மார்க்கத்தை (மார்க்க உணர்வையும் செயல்பாடுகளையும்) குறிக்கும்” என்று பதிலளித்தார்கள்.



விளக்கம்:


உமர் ரலி அவர்கள் இறக்கும் நேரத்தில் கூட ஒருவர் தன்னுடைய ஆடை தரையில் படாமல் இருக்க தாவா செய்தார்கள்.


ஆகவே இங்கே நீளமான சட்டையை மார்க்கம் என்று சொல்லப்பட்டுள்ளது


நபி ஸல் அவர்கள் இந்த மார்க்கம் என்ற வாழ்க்கையை ஒப்பீடுகிறார்களா, ஆட்சியை ஒப்பீடுகிறார்களா என்ற வார்த்தைக்கு முஹ்மீன்களுக்கு மட்டும் அர்த்தம் தெரியும்.



நம்மளை போன்று சாதாரண முஸ்லீங்களுக்கு புரியாது.



புஹாரி 

7046. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:


ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) நான் நேற்றிரவு கனவில் மேகம் ஒன்றைக் கண்டேன். அந்த மேகத்திலிருந்து நெய்யும் தேனும் சொட்டிக்கொண்டிருந்தன. உடனே மக்கள் தங்கள் கைகளை நீட்டி அவற்றைப் பிடித்துக்கொண்டிருக்கக் கண்டேன். (அவர்களில்) அதிகம் பிடித்தவர்களும் உண்டு; குறைவாகப் பிடித்தவர்களும் உண்டு. அப்போது ஒரு கயிறு பூமியிலிருந்து வானம்வரைப் போய்ச் சேர்ந்தது. அப்போது (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் அந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே சென்றுவிடக் கண்டேன். பிறகு மற்றொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொண்டு அவரும் மேலே சென்றுவிட்டார்.


பிறகு (மூன்றாவதாக) இன்னொரு மனிதரும் அதைப் பற்றிக்கொண்டு அதனுடன் மேலே சென்றுவிட்டார். பிறகு (நான்காவதாக) இன்னொரு மனிதர் (வந்து) அதைப் பற்றிக்கொள்ள அந்தக் கயிறு அறுந்து (விழுந்து)விட்டது. பிறகு (மீண்டும்) அக்கயிறு (வானத்துடன்) இணைக்கப்பட்டது” என்று சொன்னார்.


அப்போது (அங்கிருந்த) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தக் கனவிற்கு விளக்கம் அளிக்க என்னை அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “(சரி) இதற்கு விளக்கம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள்.


அபூபக்ர் (ரலி) அவர்கள், “அந்த மேகம்தான் இஸ்லாமாகும். (மேகத்திலிருந்து) சொட்டிக்கொண்டிருந்த தேனும் நெய்யும் குர்ஆனாகும். அதன் இனிமை சொட்டிக்கொண்டிருக்கிறது. குர்ஆனிலிருந்து அதிகம் பெற்றவர்களும் உள்ளனர்; குறைவாகப் பெற்றவர்களும் உள்ளனர். வானிலிருந்து பூமிவரை நீண்டு செல்லும் அந்தக் கயிறானது, நீங்கள் இருந்துவருகின்ற சத்திய (மார்க்க)மாகும். அதை நீங்கள் பற்றுகிறீர்கள். அல்லாஹ் உங்களை (வானளவிற்கு) உயர்த்திவிடுகிறான்.


பிறகு உங்களுக்குப் பின்னால் இன்னொரு மனிதர் அதைப் பற்றுகிறார். அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார். அதன் பின்னர் இன்னொரு மனிதர் அதைப் பற்றிக்கொண்டு அதன் மூலம் உயர்ந்துவிடுகிறார். அதை (நான்காவதாக) மற்றொருவர் பற்றுகிறார். (ஆனால்) அது அவரோடு அறுந்துவிடுகிறது. பின்னர் அவருக்காக அக்கயிறு இணைக்கப்படுகிறது. அதன் மூலம் அவரும் உயர்ந்துவிடுகிறார்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். (நான் சொன்ன விளக்கம்) சரியா? அல்லது தவறா?” என்று கேட்டார்கள்.


நபி (ஸல்) அவர்கள், “சிலவற்றைச் சரியாகச் சொன்னீர்கள்; சிலவற்றைத் தவறாகச் சொல்லிவிட்டீர்கள்” என்றார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தவறாகக் கூறியதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் “(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)” என்றார்கள்.




விளக்கம்:


இங்கே நபி ஸல் அவர்கள் கூறின வார்த்தைகள்


வானத்திலிருந்து தேனும், நெய்யும், மேலும் கயிறு என்றும் பின் வந்த நபர்கள் யார் என்றும் நபி ஸல் அவர்கள் தெளிவுபடுத்தவே இல்லை


அதை நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் “(இனி) சத்தியம் செய்து கேட்காதீர்கள் (நான் சொல்லப்போவதில்லை)” என்றார்கள்.


ஆகவே இன்னும் சில நிகழ்வுகள் (ஹதீத்கள்) கூட யாருக்கும் (அறிவிக்கவில்லை) சொல்லவில்லை.


அபூபக்கர் ரலி அவர்கள் சித்தீக் ஆவார்கள் அவருக்கே நபி ஸல் அவர்கள் கூறவில்லையென்றால் வேறு யாருக்கு கூறியீருப்பார்கள்.



புஹாரி 


5011. பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:


ஒரு மனிதர் ‘அல்கஹ்ஃப்’ எனும் (18ஆவது) அத்தியாயத்தை (தமது இல்லத்தில் அமர்ந்து) ஓதிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் இரு கயிறுகளால் குதிரையொன்று கட்டப்பட்டிருந்தது. அதை ஒரு மேகம் சூழ்ந்துகொண்டு, குதிரையை மெல்ல மெல்ல நெருங்கலாயிற்று. மேலும், அவரது குதிரை மிரளத் தொடங்கியது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தார்.


அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது” என்று சொன்னார்கள்.


விளக்கம்:


இந்த சூரா ஓதினால் இந்த செயல்கள் எல்லாம் இதிலுள்ளது போன்று நடக்குமா? மனிதற்களாகிய நாம் இப்போதைக்கு நம்புவோமா?


உண்மையான ஈமான் இருந்தால் நிச்சயமாக நடக்கும் 


காரணம் நான் உட்பட நமக்கு ஈமான் என்பது இல்லையே.......



புஹாரி 


557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


உங்களுக்குமுன் வாழ்ந்த சமுதாயத்தாரோடு நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடுகையில் நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது, அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவே ஆகும்.


‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. (அதன்படி) அவர்கள் நண்பகல்வரை செயல்பட்டார் கள். பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலி யாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பட்டது.


பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அஸ்ர் தொழுகைவரை செயல்பட்டு விட்டுப் பின்னர் ஓய்ந்துபோனார்கள். (கூலியாக) அவர்களுக்கும் ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப்பட்டது.


பிறகு நமக்கு குர்ஆன் வழங்கப் பெற்றது. நாம் (அஸ்ரிலிருந்து) சூரியன் மறையும்வரை (அதன்படி) செயல்பட் டோம். நமக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கப்பட்டன.


எனவே, வேதம் அருளப்பெற்ற அவ்விரு சமுதாயத்தாரும், “எங்கள் இறைவா! இவர்களுக்கு இரண்டிரண்டு ‘கீராத்’கள் வழங்கியுள்ளாய். எங்களுக்கோ ஒவ்வொரு கீராத் வழங்கியுள்ளாயே? நாங்கள் (இவர்களைவிட) அதிக நேரம் வேலை செய்திருந்தோமே?” என்று வினவினர். அதற்கு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “உங்களுக் குரிய கூ-யில் ஏதேனும் நான் (குறைத்து) உங்களுக்கு அநீதி இழைத்திருக்கிறேனா?” என்று கேட்டான். அவர்கள் “இல்லை” என்று கூறினர்.


அதற்கு அல்லாஹ், “அ(வ்வாறு முஸ்லிம்களுக்கு அதிகமாகக் கொடுத்த)து, எனது அருட்கொடை; நான் நாடியவர்களுக்கு அதை வழங்குகிறேன்” என்று கூறினான்.


இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


புஹாரி


558. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


முஸ்-ம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலை, (குறிப்பிட்ட கூ-க் குக் காலையி-ருந்து) இரவுவரை தமக்கு வேலை செய்வதற்காக ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது.


(அவர் முத-ல் ஒரு குழுவினரை கூ-க்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, “எங்களுக்கு உமது கூ- தேவையில்லை” என்று கூறிவிட்டனர். பிறகு அந்த மனிதர் இன்னொரு குழுவினரைக் கூ-க்கு அமர்த்தி, “இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள். (முதலாவது குழுவின ருக்கு) நான் தருவதாகப் பேசிய கூ-யை உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.


அதன்படி அவர்கள் வேலை செய்ய(த் தொடங்கி) அஸ்ர் தொழுகையின் நேரம் வந்தபோது, “உமக்காக நாங்கள் செய்த வேலை (வீணாகட்டும்)” என்றனர். எனவே, அந்த மனிதர் மற்றொரு குழுவினரை வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் அன்று (அஸ்ரி-ருந்து) சூரியன் மறையும்வரை உள்ள எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால் அவர்கள் முத-ரண்டு குழுவினரின் கூ-யையும் (சேர்த்து) முழுமையாகப் பெற்றுக்கொண்டனர்.


இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.




விளக்கம்:


இந்த நேரம், காலத்தை எப்படி மனிதன் விளக்க முடியும்............



நபி ஸல் அவர்களுக்கு முஹ்மீன்களுக்கு தெரியாத  சில மறைவான ஞானத்தை அல்லாஹ் கற்றுக்கொடுத்துள்ளான்.



மற்ற மனிதர்களுக்கு தெரியாத சில மறைவான ஞானத்தை நபி ஸல் அவர்கள் முஹ்மீன்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்கள்.



நாங்கள் 


நபி ஸல் அவர்கள் கூறக்கூடிய இந்த மறைவான செய்திகள் எல்லாம்  தனித்தனியாக மக்களிடத்தில் சொல்லாமல் (மொத்தமாக) பொதுவாக மக்கள் மத்தியில் இந்த சமூகத்திற்கு  நாங்கள்  கொண்டு வந்துள்ளோம்.


இதற்காக நாங்கள் அல்லாஹ்விடம் என்ன பதில் சொல்லப்போகிறோம் என்று எங்களுக்கு தெரியவில்லை................


சூழ்நிலையை கருத்தில் கொண்டே நாங்கள் இந்த ஹதீத்களை மக்கள் மத்தியில் தெரிவிக்கிறோம்.


எங்களுக்கு தெரிந்த நபி ஸல் செய்திகளை மறைத்த பாவத்திற்காக குற்றம் பிடிக்க படுவோமோ என்ற எண்ணத்தில் மட்டுமே இதை நாங்கள் கூறுகிறோம்.


அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவோம்.


இதே போன்று நிகழ்வு முஆத் பின் ஜபல் ரலி அவர்களுக்கு நடக்கிறது முஆத் பின் ஜபல் ரலி அவர்கள்  ஒரு ஹதீதை மரண தரறுவாயில் நபி ஸல் அவர்களிடம் இருந்து கற்ற கல்வியை மறைத்துவிடுவோமோ என்ற பயத்தில் கடைசியில் கூறினார்கள்.என்றால்...............


அந்த ஹதீதின் தரம் எப்படி பட்டது என்று நினைத்து கொள்ளுங்கள்.


நாங்கள்   முஆத் பின் ஜபல் கூறிய அந்த ஹதீதை இங்கு கூற விரும்பவில்லை.


இந்த சமூகத்தில் உள்ள செயலை கண்டு நாங்கள் முஸ்லீம் தரத்தில் உள்ளோமா என்று கூட சந்தேகம் உள்ளது.


ஏனென்றால் நிராகரிக்க கூடிய இந்த மக்கள் மத்தியில்  நாங்கள் வாழ்கிறோம்.



ஆகவே இந்த விஷயங்களை (ஹதீதை  முஆத் பின் ஜபலை பற்றி படிக்கும் நாம் சகோதரர்கள் புஹாரி இமாம் கூறிய ஹதீதில் தேடிக்கொள்ளுங்கள்.



கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹதீத் செல்வம் சம்பந்தமாக பேசப்படுகிறது அதிலும் நபி ஸல் அவர்கள் அபூதர் அல்ஃகிஃபாரீயிடம் ஒரு வார்த்தை கூறுகிறார்கள் (நபியவர்கள், “என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள்)


இதிலிருந்து என்ன தெரிகிறது  அல்லாஹ் சில விஷயங்களை வெளிப்படையாக தெரிவிக்க கூடாது என்று அல்லாஹ் நபி ஸல் அவர்களிடம் கூறியுள்ளான்.



புஹாரி : 6638, 6444. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் (இரவு நேரத்தில்) நபி (ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ‘ஹர்ரா’ பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூதர்ரே!’ என்று அழைத்தார்கள். நான் “இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச்சேர்ந்தேன் அப்போது அவர்கள் (இறையில்லம்) கஅபாவின் நிழலில் இருந்தவாறு, “கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக! அவர்கள் இழப்புக்குரியவர்கள், கஅபாவின் அதிபதிமீது சத்தியமாக அவர்கள் இழப்புக்குரியவர்கள்” என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், “என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகிறதா? (அப்படியானால்) என் நிலை என்னாவது?” என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன் அப்போது நபியவர்கள், “என்னால் பேசாமலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது” என்று கூறினார்கள். உடனே நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செல்வத்தைச் செலவிட்ட) சிலரைத் தவிர” என்று கூறியவாறு நபி (ஸல்) அவர்கள் “இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கழிந்துசெல்வதுகூட எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!” என்று கூறி, (என்று தம் முன் பக்கம் வலப் பக்கம் இடப் பக்கம்) கைகளால் சைகை செய்தார்கள்.


பிறகு (சிறிது தூரம்) நடந்துவிட்டு “(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ள வர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; இப்படி இப்படி யெல்லாம் (இறைவழியில் தமது செல்வத் தைச்) செலவிட்டவர்களைத் தவிர” என்று கூறி, தமது வலப் பக்கமும் இடப் பக்கமும் பின்பக்கமும் சைகை செய்தார்கள். “(ஆனால்,) இத்தகையவர்கள் சொற்பமானவர்களே” என்றும் கூறினார்கள்.


பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் “நான் வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்” என்று கூறிவிட்டு, இரவு இருளில் நடந்துசென்று மறைந்துவிட்டார்கள். அப்போது உரத்த குரல் ஒன்றை நான் கேட்டு நபி (ஸல்) அவர்களை யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் என்று அஞ்சினேன். அவர்களிடம் செல்லலாம் என்று நினைத்தேன். (ஆனால்,) என்னிடம் நபி (ஸல்) அவர்கள் “நான் வரும்வரை இங்கேயே இருங்கள்” என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது.


ஆதலால், அவர்கள் என்னிடம் வரும்வரை அங்கேயே இருந்தேன். (அவர்கள் வந்ததும்) “அல்லாஹ்வின் தூதரே! ஏதோ ஒரு குரலைக் கேட்டு நான் பயந்துவிட்டேன்” என்று கூறி, (நான் நினைத்தது பற்றியும்) அவர்களிடம் எடுத்துச் சொன்னேன்.


அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதை நீங்கள் செவியுற்றீர்களா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தான். அவர் என்னிடம் வந்து, “உங்கள் சமுதாயத்தாரில் யார் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார்” என்றார். நான் (ஜிப்ரீலிடம்), “அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?” என்று கேட்டேன். அவர் “(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் செல்வார்)” என்று பதிலளித்தார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.




விளக்கம்:


இந்த மறைவான விஷயங்களை சாதாரண முஸ்லீம்கள் புரிவதற்கு


அல்லாஹ்விடம் நம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.


முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே இந்த விளக்கங்கள் குறித்து புரிய அல்லாஹ் நமக்கு உதவி புரிவான்......



இதே போன்ற ஹதீத் தான் மறுமை நாளின் அடையாளங்கள் என்ற தலைப்பில் வரக்கூடிய ஹதீத்கள் எல்லா ஹதீத்களும் என்று சொல்ல வரவில்லை.


பல அர்த்தங்கள் கொடுக்க கூடிய ஹதீத் எல்லாம் அப்படித்தான் அல்லாஹ் யார் மீது பொருத்தம் கொண்டானோ அவர்கள் புரிந்தும் கொள்வார்கள் அல்லாஹ் அவர்களை எந்த சூழ்நிலையிலையிலும் அவர்களை பாதுகாத்து கொள்வான்.


இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பில் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ள ஹதீதை விரிவாக பார்ப்போம்

Comments