அதிசய பிராணி மனிதனிடம் பேசுமா (அது உண்மையில் மனிதனா அல்லது மிருகமா)
27:82 وَ اِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ اَخْرَجْنَا لَهُمْ دَآبَّةً مِّنَ الْاَرْضِ تُكَلِّمُهُمْۙ اَنَّ النَّاسَ كَانُوْا بِاٰيٰتِنَا لَا يُوْقِنُوْنَ
27:82. அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
மிஸ்ஹாத் ஹாக்கிம் (8493)
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ் தஆலாவின் வசனமான,
' وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ ' (அன்-நம்ல்: 82)
"அவர்கள் மீது (வேதனைக்கான) வார்த்தை உறுதியானதும், நாம் அவர்களுக்குப் பூமியிலிருந்து ஓர் உயிரினத்தை வெளிப்படுத்துவோம். அது மக்களிடம் பேசும், ஏனெனில் மக்கள் நம்முடைய வசனங்களை நம்பவில்லை" (இமாம் அஹ்மத் ரிஸா ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களின் கன்னூல் ஈமான் மொழிபெயர்ப்பு)
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம், மக்கள் நன்மையை ஏவ மறுக்கும்போதும், தீமையைத் தடுக்க மறுக்கும்போதும் நடக்கும்.
முஸ்னத் அகமது 22664 (volume 6,hadeeth 172)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியதாக ஹழ்ரத் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"தாப்பத்துல் அர்ழ் (பூமியின் மிருகம்) வெளியே வரும். அது மக்களின் முகங்களில் ஒரு அடையாளத்தை உருவாக்கும். மக்கள் அந்த அடையாளத்துடன் வாழ்வார்கள். ஒரு மனிதன் ஒட்டகத்தை வாங்கும்போது, 'இந்த ஒட்டகத்தை யாரிடமிருந்து வாங்கினாய்?' என்று மற்றொருவர் கேட்டால், 'அடையாளமிடப்பட்ட முகத்தைக் கொண்ட ஒருவரிடமிருந்து வாங்கினேன்' என்று பதிலளிப்பான்."
முஸ்னத் அஹமது 7924
ழய்வ்ப் (பழகீனமானது)
இப்னு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "கியாமத் நாளுக்கு நெருக்கமாக தபத்துல் அர்லின் வெளிப்பாடு நிகழும். அதன் வசம் மூசா (அலை) அவர்களின் கைத்தடி மற்றும் சுலைமான் (அலை) அவர்களின் மோதிரம் இருக்கும். அது காஃபிரின் மூக்கின் மீது முத்திரை பதித்து அடையாளமிடும், மேலும் முஸ்லிமின் முகத்தை கைத்தடி மூலம் ஒளிரச் செய்யும். இந்த நிலை ஏற்படும் வரை மக்கள் ஒரே மேசையில் அமர்ந்து ஒருவரையொருவர் 'யா முஃமின்' (இறைநம்பிக்கையாளரே) என்றும், 'யா காஃபிர்' (நிராகரிப்பவரே) என்றும் அழைப்பார்கள்."
8:22 اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ
8:22. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
சில மனிதர்களை அல்லாஹ் மிருகங்களாக மாற்றியுள்ளான் அவர்களில் ஒருவர்தான் தாப்பத்துல் அர்ழ்
இந்த உலகத்தில் சிலரை அல்லாஹ் அநியாயக்காரர்களாகவும்,மிருகங்களாகவும் ஆக்கி இருக்கிறான் அவர்களில் ஒருவன்தான் தாப்பத்துல் அர்ழ்
இது எல்லாம் மனிதனின் ஆய்வின் அடிப்படையில் கூறுகிறோம் மீதி அல்லாஹ்வே அறிந்தவன்
Comments
Post a Comment