உண்மை, பொய், ஆரோக்கியம், பொறாமை, வெறுப்பு, உறவு தூண்டித்தல்
முஸ்னத் அஹமது 17
அவ்சத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு, அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் இந்த இடத்தில் கடந்த ஆண்டு நபி (ஸல்) நின்றார்கள் என்று கூறுவதைக் கேட்டதாகக் கூறினார். இதைக் கூறும்போது அவர் அழுதார்.
பின்னர் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
உண்மையைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ஏனெனில், உண்மை நன்மைக்கு வழிவகுக்கும், இந்த இரண்டும் சுவனத்தில் இருக்கும்.
பொய் சொல்வதிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், பொய் பாவம் நிறைந்த செயல், இந்த இரண்டும் நரகத்தில் இருக்கும்.
அல்லாஹ்விடம் ஆரோக்கியத்தைக் கேளுங்கள். ஏனெனில், ஈமானுக்குப் பிறகு ஆரோக்கியத்தை விடச் சிறந்த அருள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை.
மேலும் அவர்கள், ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள், வெறுப்புக் கொள்ளாதீர்கள், உறவுகளைத் துண்டிக்காதீர்கள், ஒருவரையொருவர் புறக்கணிக்காதீர்கள்.
அல்லாஹ்வின் அடியார்களே! ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் இருங்கள்.
Comments
Post a Comment