பாகம் 2
உணவின் ஃபித்னா
எங்கள் அறிவை கொண்டு உணவின் நேரங்களை தேடி பார்த்ததில்
ஒன்று மனிதன் உண்ணக்கூடிய உணவு என்பது காலையும், மாலையும் மட்டும்தான் என்பதை பின்வரும் குர் ஆயத்துகள் உண்மைப்படுத்துகிறது.
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
(அல்குர்ஆன் : 19:62)
இந்த வசனத்தில் சொர்க்கத்தில் அவர்களின் உணவு காலை, மாலை தான் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
அந்த சொர்க்கத்தில் தான் அப்படி உணவு இருக்கும் இவ்வுலகில் அப்படி இல்லை என்று மக்களில் பெரும்பாலானோர் சிந்திக்கலாம்
அப்படியென்றால் நோன்பின் உணவின் நேரங்களில் காலையும், மாலையும் என்று அல்லாஹ் விதி வைக்க வேண்டும்.
நம் சிந்தித்தோமா? இல்லை.......
அதனுடைய உள் அர்த்தங்கள் மக்களாகிய நாம் காலையும், மாலையும்தான் உண்ணவேண்டும் என்று அர்த்தர்களாகவும் இருக்கலாம்
அதனால்தான் இறைவன் நோன்பின் முக்கியத்துவம் நீங்கள் அறிவீர்களாயின் உங்களுக்கு நன்மை என்று கூறியுள்ளான்.
ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை) அறிவீர்களானால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்.
(அல்குர்ஆன் : 2:184)
இதனுடைய முழு விளக்கமும் அல்லாஹ் மனிதர்களுக்கு சொல்ல நாடவில்லை
இதை நாம் நபி ஸல் அவர்கள் வாழ்நாளிலும் அவர்களின் தோழர்களுடைய வாழ்விலும் பெரும்பாலும் காணலாம்.
ஓரிரு இடங்களின் மதிய உணவும் நபி ஸல் அவர்களின் தோழர்கள் எடுத்துக்கொண்டதாக காணலாம். இதை விமர்சிக்க வரவில்லை நாங்கள்.
அவர்கள் பெரும் பான்மையாக உள்ளதை வைத்தே இந்த தொகுப்புகளை கூறுகிறோம்.
இறைவனின் (குர் ஆன்) வார்த்தைகளிலும் நாம் காண்பிக்கிறோம்.
உண்மையை அல்லாஹ் அறிவான்.
எந்த நேரத்தில் உண்பது என்பதையும் ,எப்படி உண்பது என்பதையும் ,என்னவெல்லாம் உண்பது என்பதையும் ஹதீத்கள் மூலம் காணலாம்.
நபி ஸல் அவர்கள் செய்தார்கள் நாமளும் கண்மூடிக்கொண்டு செய்ய வேண்டும் ஏனென்றால் நபி ஸல் எது செய்தாலும் அது நன்மையே (அழகிய முன்மாதிரி)
உணவோடு நம்மளுடைய செயலையும் சீராக வைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் நம்மளுடைய உணவு ஹலால் ஆக்கப்படும் என்று கடந்த பதிவில் கண்டோம்.
இப்போது அதை தொடர்பான சில குர் ஆன், ஹதீஸ் வசனம், நம்பரை காணலாம்.
இந்த பதிவில் எங்களுடைய விளக்கம் அதிகமாக தேவைப்படாது ஏனென்றால் விளக்கம் சொன்னால் கூட அதுவும் குழப்பமாக வாய்ப்புள்ளது,
நபி ஸல் அவர்களே போதுமான அளவு விளக்கியுள்ளார்கள்.
சிந்திப்பதற்கு ஏற்றாற்போல் எங்களுடைய கேள்விகளே அதிகமாக இருக்கும்?
அந்த கேள்விகள் எல்லாம் உங்களை குழப்பம் அடைய செய்யும் என்று கூறவில்லை எங்களுடைய அறிவு குறைவின் காரணமாக கேள்வியாக பதிவிடுகிறோம்.
மக்கள் மத்தியில் இந்த வாதத்தை வைத்தால் அவர்கள் யோசிப்பார்கள் தீனில் மேலும் சில விடை கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த பதிவு காணப்படும்.
மூஸா அலை அவர்கள் ரசூலாக இருக்கலாம் அவர்களை தாண்டிய உலக அறிவை கிளிர் அலை அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்ததாக குர் ஆன் சூரா கஹ்ஃபில் காண்கிறோம்.
அப்படி எங்களை தாண்டிய அறிவு வேறு யாருக்காவது இருந்தால் சிந்தித்து இதை கேள்வியாக எடுத்து பதிலாக தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முதலில் ஆதம் அலை அவர்களின் வரலாற்றில் இருந்து பார்ப்போம்.
ஆதம் நபி முதலில் அவர் சோதனையாக அந்த பழத்தை நெருங்க கூடாது என்று சொன்ன இடம் சொர்க்கம் (ஜன்னத்) என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதை நம் அரிஞ்சர்கள் இரண்டு கருத்துகளாக வைக்கிறார்கள்.
அந்த ஜன்னத் என்ற வார்த்தை இடம் உலகத்தை குறிக்கும் என்றும்
சிலர் உலகம் அழிந்த பிறகு வரக்கூடிய அந்த உண்மையான சொர்க்கம் என்றும் சில அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.
ஆதம் அலை அவர்கள் அந்த சோதனையாக கொண்ட இடம் உலகம் அழிந்த பிறகு வரக்கூடிய அந்த உண்மையான சொர்க்கம்தான் என்று பெரும்பாலான மக்களும் நம்பியுள்ளோம் அப்படித்தானே?
இதை சொல்லுவதற்கு ஆதாரம் தேவையா? இல்லை
ஏனென்றால் அல்லாஹ் குர் ஆனில் ஜன்னத் என்று கூறியுள்ளான்.
ஆனால் அல்லாஹ் எந்த அர்த்தத்தில் சொன்னான் என்று யாரவது கூறமுடியுமா?
அந்த ஆதம் நபிக்கு சொல்லக்கூடிய சொர்க்கம் (ஜன்னத் ) உலகம் தான் (அதாவது உலகத்தில் ஒரு அழகான காட்சி தரக்கூடிய (தோட்டம் ) ஏதாவது ஒரு இடமாவது இருக்கலாம் என்று நாங்கள் இந்த தலைப்புக்கு எடுத்துள்ளோம்.)
அப்படியென்றால் ஆதம் நபிக்கு கொடுக்க பட்ட இடம் எந்த இடம் என்று எங்களிடம் கேட்காதீர்கள், நாங்களும் உங்களை போன்ற மனிதர்கள்தான் உண்மையான இடத்தை அல்லாஹ்வே அறிவான்.
இதிலிருந்து நாங்கள் சொல்லக்கூடியது இந்த ஜன்னத் என்ற வார்த்தையில் இரண்டு அர்த்தம் உள்ளது.(இதை அல்லாஹ்வே குர் ஆனில் கூறுகிறான்)
(இந்த தலைப்பு உணவுக்காக எடுக்கப்பட்டது ஆகவே சம்பந்தமில்லாமல் பேசுகிறோம் என்று என்ன வேண்டாம்
உணவு பின்வருமாறு கூறுகிறோம்.)
அல்லாஹ் ஜன்னத் என்று நம் இருக்கக்கூடிய உலகத்தை கூறுவானா என்று பின்வருமாறு குர் ஆன் வசனத்தையும் காண்பிக்கிறோம்.
முதலில் சைத்தான் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்க்காக விரட்டப்பட்டான் எங்க இருந்து? சொர்க்கத்தில் இருந்து?
அப்போது அவன் சொர்க்கத்திற்கு தகுயானவன் இல்லை அப்படித்தானே?
அப்படியானால் அல்லாஹ் குர் ஆனில் சொர்க்கம் (ஜன்னத் )என்று சொல்லியுள்ளானே அது எப்படி தவறாகும்? என்ற கேள்வி பல பேருக்கு தோன்றும்.
ஆனால் இதே (சொர்க்கம் )ஜன்னத் என்ற வார்த்தையை இந்த உலக வரலாற்றை பற்றி கூறும்போதும் பயன்படுத்தி உள்ளான்.
இது முரண்பாடு இல்லை என்பதை விளக்கவே மேலும் விளக்க வேண்டி வரும்.
இப்போது குர் ஆன் வசனத்தை பார்ப்போம்.
பாருங்கள்.
இங்கு நாங்கள் சொல்லக்கூடிய வசனத்தில் (ஜன்னத் ) என்ற வார்த்தையை உலகத்தில் உள்ள அழகான தோட்டத்திற்கும் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
جَنَّتَيْنِ
(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.
(அல்குர்ஆன் : 18:32)
جَنَّتَهٗ
(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.
(அல்குர்ஆன் : 18:35)
جَنَّتَكَ
“மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை - என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -
(அல்குர்ஆன் : 18:39)
(உலகில் இரு மனிதர்களுக்கு தோட்டம் இருந்ததாக அல்லாஹ் கூறுகிறான் இதில் (ஜன்னத்) என்ற வார்த்தை வருகிறது )
جَنَّتٰنِ
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
(அல்குர்ஆன் : 34:15)
(இங்கு ஸபா நாட்டில் இருந்தவருக்கும் தோட்டம் இருந்ததாக இதில் (ஜன்னத்) என்ற வார்த்தை அல்லாஹ் கூறுகிறான்.)
جَنَّةٍ
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:265)
(இங்கு ஸதக்கா, ஸக்காத் கொடுப்பதற்கு உதாரணம் பூமியில் ஒரு (ஜன்னத் ) என்ற வார்த்தை பயன்படுத்துகிறான்.)
وَّجَنّٰتٍ
அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.
(அல்குர்ஆன் : 6:99)
(இதிலும் (ஜன்னத்) என்ற வார்த்தை வருகிறது)
جَنَّةٌ
“அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
(அல்குர்ஆன் : 17:91)
இதிலும் (ஜன்னத்) என்ற வார்த்தை வருகிறது.
இதே போன்று நிறைய வசனம் குர் ஆனில் எங்களால் காட்ட இயலும்.
இப்போது விஷயத்திற்கு வருவோம்.
இதில் நாங்கள் கூறவந்தது
அல்லாஹ் ஆதம் நபிக்கு சொன்ன (ஜன்னத்) உலகமாகவும் இருக்கலாம்
முதலில் நாங்கள் சொன்னதுபோன்று சைத்தான் அந்த உண்மையான ஜன்னதிலிருந்து விரட்டப்பட்டது என்ற அல்லாஹ்வின் வார்த்தையை இரண்டு அர்த்தங்கள் தரக்கூடியதாகவும் பேசி இருக்கலாம் (அல்லாஹ்வே அறிந்தவன் )
ஆகவே இந்த அல்லாஹ்வின் ஜன்னத் என்ற வார்த்தை இந்த உலகத்திற்கு தான் என்று பொருத்தமாக இருந்தால் பின்வரும் இந்த செயல்பாடுகள் எல்லாம் மனிதனுக்கு எதிராக அமையும்
சத்தியத்தை அல்லாஹ்வே அறிந்தவன்.
ஆதம் நபிக்கு உள்ள அந்த பழம் சோதனை இந்த உலகத்தில் உள்ள ஜன்னத் என்று வைத்து கொண்டால்
இது வரை அந்த பழம் என்ன வென்று அல்லாஹ் தெளிவு படுத்த வில்லை?
அதை சார்ந்த மீதி விஷயம் தெளிவு படுத்தி யுள்ளான்.
ஆதம் நபியை பார்த்து அல்லாஹ்
“நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர்.
இதில் நீர் தாகிக்கவும், வெயிலில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்).
(அல்குர்ஆன் : 20:118,119)
அல்லாஹ் அந்த பழத்தை உன்னக்கூடாது என்று சொன்னதோடு இந்த பசி, வெயில், தாகம், நிர்வாணம் வார்த்தையை குர் ஆனில் ஏன் கூற வேண்டும்?
சிந்தியுங்கள்!
அப்போது சூரியன் இருக்கிறது என்று அர்த்தம் உங்கள் மீது படாது என்று தானே புரியலாம்?
பசி, தாகம் எடுக்கும் ஆனால் உங்களுக்கு எடுக்காது என்றுதானே அர்த்தம்?
நிர்வாணம் ஆக்கபடுவாய் அந்த பழத்தை திங்காதவறை என்றுதானே அர்த்தம்?
இப்படி இது உலகத்தில் இப்படி ஒரு குழப்பம் நடந்தது என்றால் அந்த குழப்பம் உலகத்தில் விட்டு வைக்க பட்டுள்ளது.
இன்னும் சந்தேகமா?
ஆதம் நபி இரண்டு மகன்களின் ஒருவர் செய்த கொலை அவர்கள் செய்தது என்றாலும்
கொலை என்ற ஃபித்னா உலகத்தில் விட்டு வைக்கப்பட்டுள்ளதா?
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "எவரொருவர் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டாலும், அந்தக் கொலையின் பாவத்தில் ஆதமுடைய (அலை) முதல் மகனுக்கு ஒரு பங்கு உண்டு. ஏனெனில், அவர்தான் கொலை செய்யும் வழக்கத்தை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்."
ஹதீஸ் தரம் : null
ஸஹீஹுல் புகாரி : 3335
நூஹ் நபி சமுதாயத்தில் உள்ள முதல் அந்த சிலை வழிபாட்டின் ஃபித்னா தான் இப்போது நாம் நம் அருகில் பார்க்கக்கூடிய சிலை வழிபாடு
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்தில் இருந்த சிலைகள், பிற்காலத்தில் அரபியரிடமும் வந்து சேர்ந்தன. ‘வத்’ (எனும் சிலை) ‘தவ்மத் அல்ஜன்தல்’ என்னுமிடத்தில் ‘கல்ப்’ குலத்தாருக்கும், ‘ஸுவாஉ’ (எனும் சிலை) ‘ஹுதைல்’ குலத்தாருக்கும், ‘யகூத்’ (எனும் சிலை) ‘முராத்’ குலத்தாருக்கும், பின்னர் (யமன் நாட்டின்) ‘ஸபா’வுக்கு அருகிலுள்ள ‘அல்ஜுர்ஃப்’ என்னுமிடத்தில் ‘பனூ குதைஃப்’ குலத்தாருக்கும், ‘யஊக்’ (எனும் சிலை) ‘ஹம்தான்’ குலத்தாருக்கும், ‘நஸ்ர்’ (எனும் சிலை) ‘ஹிம்யர்’ குலத்தைச் சேர்ந்த ‘ஆல் தில் கலாஉ’ குடும்பத்தாருக்கும் உரியதாக இருந்தன.
இவை நூஹ் (அலை) அவர்களின் சமுதாயத்திலிருந்த நல்லடியார்களின் பெயர்களாகும். அவர்கள் மரணமடைந்தபோது, ஷைத்தான் அவர்களுடைய சமுதாயத்தாரிடம், ‘அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த சபைகளில் அவர்களுக்கு ஞாபகார்த்தச் சின்னங்களை நிறுவுங்கள்; அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்’ என்று (உள்ளுணர்வு மூலம்) தூண்டினான். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். (தொடக்கத்தில்) அச்சிலைகள் வணங்கப்படவில்லை. ஆனால், (சிலைகளைச் செய்த) அம்மக்கள் மரணமடைந்து, (அச்சிலைகள் பற்றிய உண்மை) அறிவு மறைந்தபோது அவை வணங்கப்பட்டன.”
ஹதீஸ் தரம் : null
ஸஹீஹுல் புகாரி : 4920
இப்படி ஆது கூட்டத்திற்கு கொடுத்த வலிமை, பெருமை என்ற ஃபித்னா
தொடர்ந்து வருகிறதா? இல்லையா?
ஸுஹைப் அலை அவர்கள் சமூகத்தார்கள் விட்டு சென்ற எடை அளவு மோசடி
தொடர்ந்து வருகிறதா? இல்லையா?
லூத் அலை அவர்கள் சமூகம் விட்டு சென்ற கண்ணியத்தை சிதைத்தல் என்ற ஃபித்னா
தொடர்ந்து வருகிறதா? இல்லையா?
இப்படி எல்லா சமூகமும் விட்டு சென்ற ஃபித்னா தங்கிவிடும் அது மறுமையில் மட்டுமே தீர்வுகாணப்படும்.
இப்படி விட்டு சென்ற ஃபித்னாதான் ஆதம் அலை அவர்கள் சிக்கிகொண்ட உணவு
இதை பெரும்பாலான நபர்கள் சிந்திப்பது இல்லை.
ஆதம் நபி சோதனைக்கு உண்டான இடம் மறுமையில் உள்ள சொர்க்கம் என்றால் இப்போது மக்கள் உணவின் மூலம் இவ்வளவு குழப்பங்களை சந்திக்க காரணம் என்ன?
இதை போதுமான முறையில் நாங்கள் கேள்வியாக கேட்டுள்ளோம்.
அல்லாஹ் உணவை எப்படி தெளிவாக உண்ணவேண்டும் என்று நமக்கு தெளிவாக கூறமாட்டான்.
காரணம் நம்முடைய நிலையான வாழ்க்கை இந்த உலகத்தில் இல்லை (அல்லாஹ்வுடைய ஃபித்ரத்தில் இல்லை) மறுமை மட்டுமே
இப்போது நபி ஸல் அவர்கள் வாழ்க்கையோடு சம்பந்தப்படுகிற ஹதீதை மேற்கோள் காட்டுகிறோம்.
அதிலிருந்து படித்து சிந்தித்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.
Comments
Post a Comment