வாழ்வில் முக்கியம் உணவா?அல்லாஹ்வின் கட்டளையா? 2, உணவின் ஃபித்னா 3

 பாகம் 3


உணவு



இனிமேல் நபி ஸல் அவர்களும், அவர்கள் வீட்டார்களும், அவர்களது தோழர்களும், ஊர் மக்களும் சாப்பிட்டு வந்த உணவுகளை காண்போம்.


நாம் உண்ணக்கூடிய உணவு முறை என்பது வாழ்க்கை வாழ்வதற்காகவும் உண்ணுகிறோம், சில பேர் உண்பதற்காகவும் வாழ்கிறாம். 


ஆனால் நபி ஸல் அவர்களும், அவர்களுடைய தோழர்களும், அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் சமயத்தில் உண்ண நேரம் கிடைக்கும் போது மட்டுமே உண்டார்கள்.


ஆகவே இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ளவேண்டும்.


 மக்களாகிய நாம் நபி ஸல் அவர்களின் உணவையும், அதை உண்ணும் முறையும், அதை சார்ந்த வழிமுறையும், உண்ணும் நேரத்தையும், தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் பின்வரும் ஹதீதில் உள்ள ஏதாவது உணவை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.


அல்லாஹ் நம்மளுடைய வாழ்வில் பரக்கத் அளிப்பனாக.



ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் ஒரே நாளில் இரண்டு வேளை உணவு உண்டதில்லை; அவ்விரண்டில் ஒரு வேளை பேரீச்சம்பழமாக இருந்ததே தவிர.


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 6455



அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் உணவைக் கொண்டுவந்தால், அப்பணியாளரைத் தம்முடன் அமரவைக்கவில்லை என்றாலும், அவருக்கு ஓர் உணவையோ அல்லது இரு உணவுகளையோ, அல்லது ஒரு கவளத்தையோ அல்லது இரு கவளங்களையோ எடுத்து அவர் கொடுக்கட்டும். ஏனெனில், அவர்தான் அதன் வெப்பத்தையும் (சமைக்கும்) சிரமத்தையும் தாங்கிக்கொண்டார்."


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 5460



அனஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் தையல்கார இளைஞர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றேன். அந்தத் தையல்காரர் நபி (ஸல்) அவர்களுக்கு 'தரீத்' என்ற உணவுப் பண்டம் நிறைந்த ஒரு பாத்திரத்தைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, தனது வேலையைத் தொடர்ந்தார். நபி (ஸல்) அவர்கள் (அதில் இருந்த) சுரைக்காய்த் துண்டுகளைத் தேடி எடுக்கத் தொடங்கினார்கள். நானும் அவற்றைத் தேடி எடுத்து, அவர்களுக்கு முன்பாகச் சேகரித்து வைக்கலானேன். அன்றிலிருந்து நான் சுரைக்காயை விரும்பிச் சாப்பிடத் தொடங்கினேன்.


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 5420



அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் (ரழி) அவர்கள் கூறியதாவது:


அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா (திண்ணைத் தோழர்கள்) ஏழைகளாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள், "யாரிடம் இருவருக்கான உணவு உள்ளதோ அவர் (அவர்களிலிருந்து) மூன்றாமவரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நால்வருக்கான உணவு உள்ளதோ அவர் ஐந்தாமவரை அல்லது ஆறாமவரை அழைத்துச் செல்லட்டும்" என்று கூறினார்கள்.


ஸஹீஹுல் புகாரி : 602



அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "இரவு உணவு பரிமாறப்பட்டால் மஃரிப் தொழுகையை தொழுவதற்கு முன் அதை உண்ணத் தொடங்குங்கள், அதை முடிப்பதில் அவசரப்பட வேண்டாம்."


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 672


671. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


இரவு உணவு உங்களுக்குமுன் வைக்கப்பட்டிருக்க, தொழுகைக்கு ‘இகாமத்’ சொல்லப்பட்டுவிட்டால், முத-ல் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழச் செல்லுங்கள்.)


இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



602. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:                                                                                                                                                                                                  அபூபக்ர் (ரலி) அவர்கள் (விருந்தினருக்கு உணவளிக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு), நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷா தொழுகை நடைபெறும்வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும்வரை காத்திருந்துவிட்டு, இரவில் அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்தபிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள்.


344. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:                                                                                                                                                                                                                                        அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங் கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (ஏராளமான) உணவுப் பண்டங்களைத் திரட்டி(க் கொண்டுவந்து), அவற்றை ஒரு துணியி-ட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்தில் அமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர்.



அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:


நபி (ஸல்) அவர்கள் ‘சுகுர்ருஜா’ (எனும் சிறிய தட்டில்) வைத்து ஒருபோதும் சாப்பிட்டதில்லை; அவர்களுக்காக மெல்லிய ரொட்டி சுடப்பட்டதும் இல்லை; அவர்கள் உணவு மேசையிலும் உண்டதில்லை.


(அறிவிப்பாளர்) கத்தாதா (ரஹ்) அவர்களிடம், "அப்படியானால் அவர்கள் எதன் மீது (வைத்துச்) சாப்பிடுவார்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "தோல் விரிப்புகளில்தான்" என்று பதிலளித்தார்கள்.


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 5386




அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபிய்யா (ரழி) அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்து, பின்னர் அவர்களை மணந்துகொண்டார்கள். அவர்களின் விடுதலையையே அவர்களின் மஹராக ஆக்கினார்கள். மேலும், 'ஹைஸ்' (வெண்ணெய், பாலாடைக்கட்டி மற்றும் பேரீச்சம்பழங்களால் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு உணவு) கொண்டு திருமண விருந்தளித்தார்கள்.


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 5169



ஸுவைத் இப்னு அந்நுஃமான் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


அவர் கைபர் (போர்) ஆண்டில் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்; அவர்கள் கைபரின் கீழ்ப்பகுதியிலுள்ள அஸ்ஸஹ்பா என்னும் இடத்தை அடையும் வரை (பயணித்தார்கள்). அவர்கள் (அங்கே) அஸர் தொழுகையை நிறைவேற்றினார்கள், பிறகு நபி (ஸல்) அவர்கள் உணவு கொண்டுவரச் சொன்னார்கள். ஸவீக் மாத்திரமே நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. ஆகவே, அவர்கள் அதை மென்று சாப்பிட்டார்கள், மேலும் தண்ணீர் அருந்தினார்கள். அதன்பிறகு நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தங்கள் வாயைக் கொப்பளித்தார்கள், அவர்களும் தங்கள் வாய்களைக் கொப்பளித்தார்கள், பின்னர் தொழுதார்கள்.


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 2981


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உணவு கொண்டுவரப்பட்டால், “அது அன்பளிப்பா அல்லது ஸதகாவா (தர்மப் பொருளா)?” என்று கேட்பார்கள். அது ஸதகா என்று கூறப்பட்டால், தம் தோழர்களிடம் “நீங்கள் உண்ணுங்கள்” என்று கூறுவார்கள்; தாம் உண்ணமாட்டார். ஆனால், அது அன்பளிப்பு என்று கூறப்பட்டால், தமது கையை நீட்டி அவர்களுடன் சேர்ந்து உண்பார்கள்.


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 2576



அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


நிச்சயமாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது கவசத்தை வாற்கோதுமைக்காக அடமானம் வைத்தார்கள்.


நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வாற்கோதுமை ரொட்டியையும், நாட்பட்ட உருக்கிய கொழுப்பையும் கொண்டு சென்றேன். மேலும் அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்:


""முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒன்பது வீடுகளாக இருந்தபோதிலும், காலை மற்றும் மாலை உணவுகளுக்காக ஒரு ஸா (அளவு உணவுப் பொருளைத்) தவிர வேறு எதையும் கொண்டிருக்கவில்லை.""


ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 2508


ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தனக்குரிய விளைநிலத்தில் உள்ள நீரோடைகளின் கரைகளில் 'சில்க்' (ஒரு வகைக் கீரை) பயிரிடுவார். வெள்ளிக்கிழமையானால் அவர் அந்த 'சில்க்' கீரையை வேர்களுடன் பிடுங்கி ஒரு பாத்திரத்தில் போடுவார். பிறகு, அவர் அரைத்த ஒரு கைப்பிடி அளவு பார்லியை அதன் மீது இடுவார். அந்த 'சில்க்'கின் வேர்களே அதற்கு இறைச்சியாக அமைந்திருக்கும். நாங்கள் ஜுமுஆ தொழுகையிலிருந்து திரும்பியதும் அவருக்கு ஸலாம் சொல்வோம். அவர் அந்த உணவை எங்களுக்குக் கொடுப்பார்; நாங்கள் அதை உண்போம். அந்த உணவுக்காகவே நாங்கள் வெள்ளிக்கிழமையை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.



ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 938


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முஸ்லிம் ஒரு குடலில் உண்கிறான் (அதாவது, அவன் சிறிதளவு உணவில் திருப்தியடைகிறான்), ஆனால் ஒரு காஃபிர் (நிராகரிப்பாளர்) ஏழு குடல்களில் உண்கிறான் (அதிகமாக உண்கிறான்)."

ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 5396



வாற்கோதுமை ரொட்டியையும், சுரைக்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி கலந்த குழம்பையும் ,பேரீச்சம்பழம்,ஒரு (பெரிய, நீல திமிக்கலம் போன்று ) மீன்,மாவு, ஆட்டு இறைச்சி,பார்லி,இறைச்சி, ரொட்டி,சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு, மீனின் கல்லீரலில்,இறைச்சி; பானம் தண்ணீர்",ஜம்ஜம்,



ஹதீஸ் தரம் : null

ஸஹீஹுல் புகாரி : 2483,3329,4102,3365,2618,5439

Comments