வாழ்வில் முக்கியம் உணவா?அல்லாஹ்வின் கட்டளையா? உணவின் ஃபித்னா 1

பாகம் 1



உணவு


இன்றைய காலகட்டத்தில் உணவு என்பதை பெரும்பாலான மக்கள் தெளிவாக புரிந்து கொண்டு உணவை மருந்தாக எடுத்து கொள்கிறார்கள்.


பெரும்பாலான உணவை தவிர்ந்தும் வாழ்கிறார்கள்.


மிகவும் நல்லதாக யோசிக்க தொடங்கியுள்ளார்கள்.


அல்ஹம்துலில்லாஹ் நாங்கள் வரவேற்கிறேன்.


இதில் மனிதனாகிய நாம் மேலும் சில விஷயங்களை சிந்திக்க கடமைபட்டிருக்கிறோம்


காரணம் எதெல்லாம் சாப்பிட்டால் மனிதனுக்கு நோய் வராது என்று சிந்திப்பதோடு......


ஒரே ஒரு மிக முக்கியமான காரணத்தை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.


நமக்கு உடம்பில் உணவு ஒத்துபோகாததற்கு மிக முக்கிய காரணம் அல்லாஹ்வின் வார்த்தையே (கட்டளையை ) மீறியதே காரணம்.....


அல்லாஹ்வின் வார்த்தையை யார் நிராகரிக்கிறார்களோ அவர்கள் உண்ணும் உணவை நிச்சயமாக அல்லாஹ் ஹராமாக (தடுத்துவிடுவான்) ஆக்கிவிடுவான் என்பது சிந்தனைக்கு ஏற்று கொள்ள கூடிய விஷயம்.


இதை நாங்கள் சொந்தமாக சொல்லவில்லை குர் ஆன் வசனமே உள்ளது.


இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக பின்வருமாறு கூறுகிறேன்.


அதற்க்கு முன் உதாரணமாக ஒன்று சொல்கிறோம்


நாம் உணவு உண்ணும் போது தொடக்கத்தில் ஒரு துஆ (பிரார்த்தனை) உள்ளது அதில் நாம் பின்பற்றக்கூடிய ஒன்றுதான் பிஸ்மில்லாஹ்........ இதை சாப்பிடும் முன்  சொல்லி ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.


ஒரு வேளை நாம் சாப்பிடும் முன் நாம் (பெருமையின் காரணமாக ) சொல்ல மறுக்கிறோம் என்றாலும் அல்லது (மறதியின் காரணமாக ) சொல்ல மறக்கிறோம் என்றாலும்,


எப்படி இருந்தாலும் இந்த இரண்டு செயலிலும் உணவு உண்ணும் முன் பிஸ்மில்லாஹ் சொல்லவில்லை என்பதுதான் உண்மை

இதில் மனிதன் சிந்திக்க வேண்டும்.


அந்த பிஸ்மில்லாஹ் சொல்லாத நாம் சாப்பிட்ட உணவு நமக்கு உடம்பில் (அந்த அல்லாஹ்வின் natural manufacturing function body இல் ) ஹலாலாக உடம்பில் கொண்டு சேர்க்குமா? இல்லை ஹராமாக கொண்டு சேர்க்குமா?


அப்படி ஹராமாக சேருவது போல்  நமது உடம்பை இயற்க்கையாகவே உலகத்தின் சூழ்நிலையை வைத்து அல்லாஹ் தயார் செய்து வைத்து இருந்தால் நாம் என்ன செய்வது?


அப்போது நாம் உணவு முறையை மாற்றுவத்தோடு மட்டும் நமது உணவை ஹலால் ஆகிக்கொள்ள முடியுமா?


இல்லை அல்லாஹ் நமக்கு கொடுத்த கட்டுப்பாட்டை மனிதனாகிய நாம் சரிசெய்யாத வரை உடம்பில் நோயை சரி செய்வது சாத்தியமில்லாதது.


இங்கு நாம் கேக்கலாம் நோயை தீர்க்க அல்லாஹ்விடம் துஆ கேட்டால் போதும்தானே சரி ஆகிவிடும்தானே என்று?


நம்மளுடைய செயல் மாறாதவறை அல்லாஹ் நமக்கு உதவி செய்யமாட்டான்....... (அல்லாஹ் குர் ஆனில்  எல்லா நபிமார்களுக்குமே இதேபோன்ற நடைமுறையை பயன்படுத்துகிறான்)


உதாரணமாக நிறைய சொல்லலாம் தபுக் போரின் போது எல்லாரையும் நபி ஸல் அவர்கள் போருக்காக தயார் செய்தார்கள் அப்போது கையில் எவ்வளவு பொருள், பணம் உள்ளதோ அதோடு தயார் செய்தார்கள்.


அங்கு சென்ற உடன் எல்லாருக்குமான உணவு இல்லாமல் இருந்தது அப்போது பசி ஏற்பட்டது அப்போது நபி ஸல் அவர்கள் எல்லாருக்காகவும் துஆ கேட்டார்கள் அப்போது எல்லாருடைய கையில் எவ்வளவு உணவு உள்ளதோ அதை முழுவதும் தட்டில் கொட்டி துஆ கேட்டதும் அங்கே இருக்கக்கூடிய எல்லாரும் உண்டார்கள்.


இப்போது புரியவேண்டியது என்னவென்றால் நபி ஸல் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் கையில் இருக்கக்கூடியாதோடு போருக்கு கிளம்பி சென்றார்கள் உணவை அல்லாஹ் தயார் செய்தான்.


இதுதான் உதவி..........


ஆனால் நாம் அல்லாஹ் நமக்கு சொன்ன அறிவுரையை என்னவெல்லாம் நிராகரித்துள்ளோம் என்று சிந்திப்போம்.


ஆதம் நபி தொடங்கி இப்போது வரை மனிதர்களாகிய நமக்கு எத்தனையோ நபி வந்துள்ளார்கள்.


நாம் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும், ஏன் நாம் சொந்த ஊரிலும் கூட நபி வந்திருக்கலாம் நபி வரவில்லையென்று அடித்து கூறமுடியுமா?...........


பனி இஸ்ரவேலர்களுக்கும், அரபுகளுக்கும் அல்லாஹ் நபியை அனுப்பினான், நம்மில் சில பேர் நமக்கு நபி அனுப்பவில்லை என்று சிந்தித்து கொண்டுள்ளார்கள் .


நாம் அவ்வளவு தூய்மையானவர்கள் இல்லை என்பதை சிந்தித்து கொள்ள வேண்டும்.


நமக்கும் சேர்த்துதான் முஹம்மது நபி ஸல் அவர்கள் வந்துள்ளார்கள் அதனால் நாம் அவ்வளவு தூய்மையானவர்கள் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.


எத்தனை நபி மார்கள் வந்திருந்தாலும் நாம் அவர்களை யார் என்றும் அவர்கள் பெயர் என்னவென்றும் தெரியவேண்டிய அவசியமும் இல்லை.


நமக்கு தெரிய வேண்டிய விஷயம் என்னவென்றால் அல்லாஹ் நமக்கு என்ன செய்ய சொல்லி கட்டளை விதிக்கிறான் என்றும் நாம் அல்லாஹ்வின் வார்த்தையை என்ன மறுக்கிறோம் என்பது மட்டுமே புரிய வேண்டும்........


அல்லாஹ் எதை தடுத்தானோ அதை நாம் செய்தால் ஹராம் என்பது மட்டும் ஞாபகம் இருக்கவேண்டும்.......


முதலில் அல்லாஹ் முஸ்லீங்களாகிய நமக்கு என்ன அறிவுரை கூறுகிறான் என்று பார்ப்போம்......



“பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன்” என்று நீர் கூறுவீராக;

(அல்குர்ஆன் : 15:89)


(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,

(அல்குர்ஆன் : 15:90)


இந்த குர்ஆனை பலவாறாகப் பிரிப்போர் மீதும் (வேதனையை இறக்கி வைப்போம்).

(அல்குர்ஆன் : 15:91)


பொதுவாக இந்த வசனங்கள் எல்லா இடத்திற்கும் பயன்படுத்தலாம் ஏனென்றால் இந்த வசனத்தின் வீரியம் அப்படி குர் ஆன் யார் கையில் உள்ளதோ அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


சொல் செயல்கள் மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.



வேதக்காரர்கள் வேதத்தை பிரித்தார்கள் நீங்களும் பிரிப்பீர்கள் என்றால்.


வாழ்வு,

பொருளாதாரம்,

ஆரோக்கியம்,

சட்டத்திட்டங்கள்,

உணவு,

மனித நேரிமுறை வாழ்க்கைக்கு சம்பந்தமாக எதுவெல்லாம் உள்ளதோ அதையெல்லாம் பிரித்தாலும் அவர்களுக்கும் எச்சரிக்கைத்தான்.......


வேதத்தை பிரித்தார்கள் என்பது (அல்லாஹ்வின் வார்த்தையை (கொடுத்த அறிவுரையை ) தங்களுடைய மனோ இச்சைக்கு தகுந்தது போல் மாற்றுவதே இதன் பொருளாகும்.


அவனின் அறிவுரையை பனி இஸ்ரவேலர்கள் மீறினார்கள் அவர்களுக்கு வேதனை கொடுத்தான் அதே போன்று இந்த குர்ஆன் வேதத்தை பிரிப்பவர்கள் மீது வேதனையை இறக்குவான் என்று கூறுகிறான்.


அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறினால் நீங்கள் உண்ணும் உணவையும் ஹராம் ஆக்குவேன் என்றும் எடுத்து கொள்ளலாம்.(உணவு தவறாக ஆகினாலும் நமக்கு வரக்கூடிய நோய் என்பது அல்லாஹ்வின் புறத்தில் இருந்துதான் வருகிறது)


ஆகவே நம்மளுடைய செயலை அல்லாஹ் கூறினது போல் மாற்றினால் இன்ஷாஅல்லாஹ் உணவை நமக்கு அல்லாஹ் ஹலாலாக மாற்றுவான்.


முதலில் அல்லாஹ் வேதம் கொடுத்தவர்களுக்கு அவர்கள் மீறின வரம்பின் காரணமாக எந்த உணவை ஹராம் ஆக்கினான் என்று பார்ப்போம்


எனவே யூதர்களாக இருந்த அவர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக அவர்களுக்கு (முன்னர்) ஆகுமாக்கப்பட்டிருந்த நல்ல (ஆகார) வகைகளை அவர்களுக்கு ஹராமாக்கி (விலக்கி) விட்டோம்; இன்னும் அவர்கள் அநேகரை அல்லாஹ்வின் பாதையில் செல்லவிடாது தடுத்துக் கொண்டிருந்ததனாலும் (அவர்களுக்கு இவ்வாறு தடை செய்தோம்.)

(அல்குர்ஆன் : 4:160)


இந்த வசனம் முஸ்லீங்களுக்கு ம் எடுத்து கொள்ளலாம்.


பனி இஸ்ரவேலர்களாகிய யூதர்கள் நபி ஈஸா அலை அவர்களை கொல்ல திட்டம் தீட்டினார்கள்


அல்லாஹ்வுடைய தீனுக்கு வாருங்கள் என்று சொன்னவரை கொலை செய்வது என்பது எவ்வளவு பெரிய அநியாயம் 


இதைவிட ஒரு பெரிய அக்கிரமம் உள்ளதா என்ன அப்போது அல்லாஹ் அவர்களின் ஆகுமாக்கபட்ட உணவு ஹராம் அல்லாஹ் ஆக்குவான் என்று சொன்னது சரியா? தவறா?


இந்த வசனத்தில் அல்லாஹ் உணவு ஹராம் ஆக்கினேன் என்றும் கூறினான்.


அல்லாஹ்வின் பாதையில் மக்களை செல்லவிடாது தடுத்து கொண்டு இருந்ததாலும் அவர்களுக்கு  ஹராம் ஆக்கினேன் என்றும் கூறுகிறான்.


பனி இஸ்ரேல்கள் செய்த அட்டூழியம் எல்லாம் முன்னர் ஒரு பெரிய விளக்கத்தின் (கட்டுரையின் ) மூலம் கண்டோம்.


முதலில் பனி இஸ்ரவேலர்களாகிய யஃகூப் அலை அவர்களுடைய சந்ததிகளுக்கு தங்களுக்கு தாங்களே உணவு ஹராம் ஆனது என்று இப்போது பார்ப்போம்.


மூஸா அலை அவர்களுக்குதான் தவ்ராத் அருளப்படுகிறது அந்த தவ்ராத் அருளபடுவதற்கு முன்னால் அவர்களுக்கு ஹராமான உணவு என்பது 


ஒட்டக இறைச்சியும், அதனுடைய பாலும்தான் 


இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.

(அல்குர்ஆன் : 3:93)


இந்த இடத்தில் அந்த ஹராமான உணவு ஒட்டக இறைச்சியும், அதனுடைய பாலும்தான் என்று எப்படி கூறுகிறோம் என்றால்..........


இப்னு கசீர்  என்ற தஃப்ஸீரில் உள்ளது.


யூதர்களின் அநீதி மற்றும் அத்துமீறல்களால், பெரும் பாவங்களை செய்ததன் காரணமாக, முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில சட்டபூர்வமான, தூய்மையான பொருட்களை அல்லாஹ் தடை செய்தான் என்று அல்லாஹ் கூறுகிறான். இந்த தடை ஒரு தீர்மானமாக மட்டுமே இருக்கலாம், அதாவது யூதர்கள் தங்கள் வேதத்தை தவறாக விளக்கவும், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவை பற்றிய தகவல்களை மாற்றவும் அல்லாஹ் அனுமதித்தான். இவ்வாறு, அவர்கள் மதத்தில் மிகைப்படுத்துதல் மற்றும் தீவிரவாதத்தின் காரணமாக, அவர்கள் சில விஷயங்களை தங்களுக்குத் தாங்களே தடை செய்து கொண்டனர். அல்லது தவ்ராத்தில், முன்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட சில விஷயங்களை அல்லாஹ் தடை செய்தான் என்றும் இதன் பொருள் இருக்கலாம். அல்லாஹ் கூறினான்,


அல்லாஹ் கூறுகினான், நாம் யூதர்களுக்கு பிளவுபடாத குளம்புகளைக் கொண்ட ஒவ்வொரு பறவையையும் விலங்கையும் தடை செய்தோம், அதாவது ஒட்டகம், தீக்கோழி, வாத்து போன்றவை. அல்லாஹ் இங்கு கூறினான்,


وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَآ


(மேலும் நாம் அவர்களுக்கு மாடு மற்றும் ஆட்டின் கொழுப்பை தடை செய்தோம்...) யூதர்கள் இந்த வகையான உணவுகளைத் தடை செய்தனர், ஏனெனில் இஸ்ராயீல் அல்லது யஃகூப் (அலை) அவர்கள் தமக்காக அவற்றைத் தடை செய்திருந்தார்கள் என்று கூறி அவர்களும் அவற்றைத் தடை செய்தனர். இதை அஸ்-ஸுத்தி குறிப்பிட்டார். அலீ பின் அபீ தல்ஹா அறிவித்தார், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்,


كُلُّ الطَّعَامِ كَانَ حِـلاًّ لِّبَنِى إِسْرَءِيلَ إِلاَّ مَا حَرَّمَ إِسْرَءِيلُ عَلَى نَفْسِهِ مِن قَبْلِ أَن تُنَزَّلَ التَّوْرَاةُ


(தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்பு, இஸ்ராயீல் தனக்குத் தானே தடை செய்து கொண்டதைத் தவிர, எல்லா உணவும் இஸ்ராயீல் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.) நாம் இந்த வசனத்தை முன்பு குறிப்பிட்டோம், இதன் பொருள் என்னவென்றால், தவ்ராத் வெளிப்படுத்தப்படுவதற்கு முன்பு, இஸ்ராயீல் தனக்குத் தானே தடை செய்து கொண்ட ஒட்டகத்தின் இறைச்சி மற்றும் பால் தவிர, அனைத்து வகையான உணவுகளும் இஸ்ராயீல் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. பின்னர், தவ்ராத்தில் அல்லாஹ் பல விஷயங்களைத் தடை செய்தான். சூரத் அல்-அன்ஆமில் (அத்தியாயம் 6) அல்லாஹ் கூறினான்,


நபி ஸல் அவர்களிடம் யூதர்கள் நம் நபி வாழ்ந்த காலத்தில் கேட்ட கேள்வி ஹதீதிலிருந்து 


இமாம் அஹ்மத் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாக பதிவு செய்துள்ளார்கள்: "யூதர்களின் ஒரு குழு அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து 



'நாங்கள் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்கப் போகிறோம். அவற்றை ஒரு நபி மட்டுமே அறிந்திருப்பார்' என்று கூறினர்.


அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள். ஆனால், யஃகூப் (அலை) அவர்கள் தம் பிள்ளைகளிடம் வாக்குறுதி வாங்கியது போல், நான் உங்களுக்கு ஏதேனும் சொல்லி அதன் உண்மையை நீங்கள் அறிந்தால் என்னைப் பின்பற்றி இஸ்லாத்தை ஏற்பீர்கள் என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி அளியுங்கள்' என்றார்கள்.



அவர்கள், 'சரி' என்றனர்.


 நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்' என்றார்கள்.


அவர்கள், 'நான்கு விஷயங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்: 1. இஸ்ராயீல் தனக்குத் தானே தடை செய்த உணவு வகைகள் எவை?

2. ஆணின் விந்தும் பெண்ணின் சுரப்பும் எப்படி இருக்கும்? ஆண் அல்லது பெண் குழந்தை பிறப்பதில் அவை எவ்வாறு பங்காற்றுகின்றன?


 3. எழுத்தறிவற்ற இந்த நபியின் தூக்க நிலையைப் பற்றிச் சொல்லுங்கள்.


4. வானவர்களில் யார் அவரது வலீ (ஆதரவாளர்)?' என்று கேட்டனர்.



நபி (ஸல்) அவர்கள் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்தால் தம்மைப் பின்பற்றுவதாக அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அவர்களும் ஒப்புக்கொண்டனர்.


நபி (ஸல்) அவர்கள், 'மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அவன் மீது சத்தியமாக, இஸ்ராயீல் ஒரு முறை கடுமையாக நோய்வாய்ப்பட்டார் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவரது நோய் நீடித்தபோது, அல்லாஹ் அவரது நோயைக் குணப்படுத்தினால் தனக்கு மிகவும் பிடித்தமான உணவையும் பானத்தையும் தனக்குத் தானே தடை செய்து கொள்வதாக நேர்ந்து கொண்டார். அவருக்கு மிகவும் பிடித்த உணவு ஒட்டக இறைச்சியும், மிகவும் பிடித்த பானம் ஒட்டகப் பாலும் அல்லவா?' என்று கேட்டார்கள்.


அவர்கள், 'ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக' என்றனர்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களுக்கு எதிராக நீ சாட்சியாக இரு' என்றார்கள்.


பிறகு நபி (ஸல்) அவர்கள், 'அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை, மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ஆணின் விந்து கெட்டியாகவும் வெண்மையாகவும் இருக்கும், பெண்ணின் சுரப்பு மஞ்சள் நிறமாகவும் மெல்லியதாகவும் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? இந்த இரண்டு திரவங்களில் எது மேலோங்குகிறதோ அதன்படி அல்லாஹ்வின் அனுமதியால் குழந்தையின் பாலினமும் ஒப்புமையும் அமையும். எனவே, ஆணின் விந்து பெண்ணின் சுரப்பை விட அதிகமாக இருந்தால் அல்லாஹ்வின் அனுமதியால் குழந்தை ஆணாக இருக்கும். பெண்ணின் சுரப்பு ஆணின் விந்தை விட அதிகமாக இருந்தால் அல்லாஹ்வின் அனுமதியால் குழந்தை பெண்ணாக இருக்கும்' என்றார்கள்.


அவர்கள், 'ஆம்' என்றனர்.


நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! இவர்களுக்கு எதிராக நீ சாட்சியாக இரு' என்றார்கள். பிறகு, 'மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அவன் மீது சத்தியமாக, இந்த எழுத்தறிவற்ற நபியின் கண்கள் உறங்கும், ஆனால் அவரது இதயம் உறங்காது என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்.


அவர்கள், 'ஆம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்றனர்.


நபி (ஸல்) அவர்கள், 'இறைவா! நீ சாட்சியாக இரு' என்றார்கள்.


அவர்கள், 'வானவர்களில் உங்கள் வலீ யார் என்பதை இப்போது எங்களுக்குச் சொல்லுங்கள். இதைப் பொறுத்தே நாங்கள் உங்களைப் பின்பற்றுவோமா அல்லது விலகிச் செல்வோமா என்பதைத் தீர்மானிப்போம்' என்றனர்.


நபி (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்விடமிருந்து வஹீ (இறைச்செய்தி)யைக் கொண்டு வரும் எனது வலீ ஜிப்ரீல் ஆவார். அல்லாஹ் எந்த நபியை அனுப்பினாலும் ஜிப்ரீல்தான் அவரது வலீ ஆவார்' என்றார்கள்.


அவர்கள், 'அப்படியானால் நாங்கள் உங்களை விட்டு விலகுகிறோம். உங்கள் வலீ ஜிப்ரீலை விட வேறு யாராக இருந்திருந்தால் நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்' என்றனர்.


அப்போது அல்லாஹ் இந்த வசனத்தை அருளினான்:



அல்லாஹ்வின் கூற்று:



(தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னர்) (3:93) என்பதன் பொருள், தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னரே இஸ்ராயீல் அதைத் தனக்குத் தானே தடை செய்து கொண்டார் என்பதாகும். இந்த வசனப் பகுதியை வெளிப்படுத்துவதற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன. முதலாவது, அவர் அல்லாஹ்வுக்காக தனக்கு மிகவும் பிடித்தமான பொருட்களைத் தனக்குத் தானே தடை செய்து கொண்டார். இந்த நடைமுறை அவரது சட்டத்தின் காலத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. எனவே, அல்லாஹ்வின் கூற்றுக்குப் பிறகு இதைக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.


இப்னு கசீர் விளக்கத்தின் அடிப்படையில் தவ்ராத் அருளப்படுவதற்கு முன்பு ஒட்டக இறைச்சி, அதனுடைய பால் ஆக எடுத்துக்கொள்வோம் இன்னும் சிலவற்றை கூட அல்லாஹ் கூறி இருக்கலாம்.


இந்த மொத்த விளக்கம் நாங்கள் கூறுவதற்கு காரணம் ஒரு ஊர் சீர்திருத்தங்கள் நடந்த பிறகு அந்த சீர்திருத்தங்களை மனிதர்கள் கெடுத்தால் அல்லாஹ் மனிதனுக்கு அனுமதித்த எல்லாத்தையும் தடை செய்து விடுவான்.


மேலும் அவர்களின் அட்டுழியங்களை அதிகமான தலைப்புகளில் நாம் விவரித்துள்ளோம்.


தவ்ராத் அருளப்பட்ட பின்பு (மூஸா அலை அவர்கள் இறந்த பின்பு ) அவர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக என்ன தடை செய்தான் என்பதை பார்ப்போம் 


நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.

(அல்குர்ஆன் : 6:146)


இதிலும் அக்கிரம் செய்த காரணத்தினால் பனி இஸ்ரவேலர்களுக்கு மேலே கொடுக்கப்பட்ட உணவை ஹராமக்கீனான் அந்த ஹரமாகிய உணவு நபி ஸல் அவர்கள் காலம் வரை பனி இஸ்ரேவலர்களுக்கு ஹராமாக்குனேன் என்று கூறுகிறான்.


இதன் பின்பு நபி ஸல் அவர்களை ஏற்றவர்களுக்கு, மேலும் அல்லாஹ் யார் மீது திருப்த்தி கொண்டானோ அவர்களுக்கும் அல்லாஹ் உணவை ஹலால் ஆக்குவான் (உண்மையை அல்லாஹ்வே அறிவான்)


இந்த வசனம் சூரா அன்ஆம் சூராவில் உள்ளது.


குர்ஆனில் சூரா அன்ஆம் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டும் அதை தொடர்ந்தும் அதை சார்ந்தும் கடைசியாக இறக்கப்பட்ட சூறாவாகும்.


இப்னு கசீர்


யூதர்களின் அநீதி மற்றும் தவறான செயல்களால் சில உணவுகள் அவர்களுக்கு தடை செய்யப்பட்டன







وَعَلَى الَّذِينَ هَادُواْ حَرَّمْنَا كُلَّ ذِى ظُفُرٍ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُومَهُمَآ إِلاَّ مَا حَمَلَتْ ظُهُورُهُمَآ أَوِ الْحَوَايَآ أَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ذَلِكَ جَزَيْنَـهُم بِبَغْيِهِمْ وِإِنَّا لَصَـدِقُونَ


(யூதர்களுக்கு, பிளவுபடாத குளம்புள்ள ஒவ்வொரு (விலங்கையும்) நாம் தடை செய்தோம், மேலும் மாடு மற்றும் ஆட்டின் கொழுப்பை அவர்களுக்குத் தடை செய்தோம், அவற்றின் முதுகுகளில் அல்லது குடல்களில் ஒட்டியிருப்பவை அல்லது எலும்புடன் கலந்திருப்பவை தவிர. இவ்வாறு அவர்களின் கலகத்திற்காக நாம் அவர்களுக்குப் பதிலளித்தோம். மேலும் நிச்சயமாக, நாம் உண்மையாளர்கள்.) இதன் பொருள், அவர்களின் அத்துமீறல், அநீதி, தங்கள் தூதரை எதிர்த்தல் மற்றும் அவருடன் தர்க்கித்தல் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் இதற்குத் தகுதியானதால் நாம் இந்த விஷயங்களை அவர்களுக்குத் தடை செய்தோம். எனவே அல்லாஹ் கூறினான்;


فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُواْ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَـتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيراً


(யூதர்களின் அநீதியின் காரணமாக, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில நல்ல உணவுகளை நாம் அவர்களுக்குத் தடை செய்தோம், மேலும் அவர்கள் பலரை அல்லாஹ்வின் வழியிலிருந்து தடுத்ததற்காகவும்.) இந்த வசனம், அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் உண்மையைப் பின்பற்றுவதிலிருந்து தடுத்தனர் என்றும், இது அவர்கள் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்குக் கொண்டு வந்த நடத்தை என்றும் கூறுகிறது. இதனால்தான் அவர்கள் தூதர்களின் எதிரிகளாக இருந்தனர், இன்னும் இருக்கிறார்கள், பல இறைத்தூதர்களைக் கொன்றனர். அவர்கள் முஹம்மத் (ஸல்) மற்றும் ஈஸா (அலை) ஆகியோரையும் மறுத்தனர். அல்லாஹ் கூறினான்,


وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُواْ عَنْهُ


(அவர்கள் வட்டி வாங்குவதை தடுக்கப்பட்டிருந்தும், அதை வாங்கியதற்காகவும்,) அல்லாஹ் அவர்களை வட்டி வாங்குவதிலிருந்து தடுத்தான், ஆனால் அவர்கள் பல்வேறு வகையான தந்திரங்கள், சூழ்ச்சிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைப் பயன்படுத்தி அதைச் செய்தனர், இவ்வாறு மக்களின் சொத்துக்களை அநியாயமாக உண்டனர். அல்லாஹ் கூறினான்,


وَأَعْتَدْنَا لِلْكَـفِرِينَ مِنْهُمْ عَذَاباً أَلِيماً


(அவர்களில் நிராகரிப்பவர்களுக்கு வேதனையான தண்டனையை நாம் தயார் செய்துள்ளோம்.) பின்னர் அல்லாஹ் கூறினான்,



யூதர்களின் மீறுதலுக்காக அவர்களுக்குத் உணவுகள் தடை செய்தான் என்று கூறுபடுகிறது.




إِلاَّ مَا حَمَلَتْ ظُهُورُهُمَآ


(அவற்றின் முதுகுகளில் ஒட்டியிருப்பதைத் தவிர) என்பது அவற்றின் முதுகுகளில் ஒட்டியிருக்கும் கொழுப்பைக் குறிக்கிறது. அடுத்து அல்லாஹ் கூறினான்,


أَوِ الْحَوَايَآ


(அல்லது அவற்றின் ஹவாயா) அதாவது குடல்கள், என்று அபூ ஜஃபர் பின் ஜரீர் கூறினார். மேலும் அவர் கூறினார், "இதன் பொருள், 'மேலும் மாடு மற்றும் ஆட்டிலிருந்து, நாம் யூதர்களுக்கு அவற்றின் கொழுப்பைத் தடை செய்தோம், அவற்றின் முதுகுகளில் உள்ள கொழுப்பு மற்றும் குடல்கள் சுமக்கும் கொழுப்பைத் தவிர." அலீ பின் அபீ தல்ஹா கூறினார், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ஹவாயா என்பது குடல்களாகும். இதே போன்று முஜாஹித், சயீத் பின் ஜுபைர் மற்றும் அழ்-ழஹ்ஹாக் ஆகியோரிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கூற்று,


أَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ


(...அல்லது எலும்புடன் கலந்திருப்பது.) என்பதன் பொருள், எலும்புகளுடன் கலந்திருக்கும் கொழுப்பை நாம் யூதர்களுக்கு அனுமதித்தோம். இப்னு ஜுரைஜ் கருத்து தெரிவித்தார், "வால் எலும்புடன் கலந்திருக்கும் பின்புறக் கொழுப்பு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டது, மேலும் கால்கள், தலை, கண்கள் மற்றும் எலும்புகளுடன் ஒட்டியிருக்கும் கொழுப்பும் அனுமதிக்கப்பட்டது." அஸ்-ஸுத்தியும் இதே போன்று கூறினார். அல்லாஹ் கூறினான்,


ذَلِكَ جَزَيْنَـهُم بِبَغْيِهِمْ


(இவ்வாறு அவர்களின் கலகத்திற்காக நாம் அவர்களுக்குப் பதிலளித்தோம்.) அதாவது, அவர்களின் கலகம் மற்றும் நமது கட்டளைகளை மீறியதற்காக நாம் இந்தக் கட்டுப்பாட்டை அவர்கள் மீது விதித்தோம். அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறினான்,


فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُواْ حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَـتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيراً


(யூதர்களின் அநியாயத்தின் காரணமாக, அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சில நல்ல உணவுகளை நாம் அவர்களுக்குத் தடை செய்தோம் - மேலும் அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து பலரைத் தடுத்ததற்காக) 4:160. அல்லாஹ்வின் கூற்று,


وِإِنَّا لَصَـدِقُونَ


(மேலும் நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்.) என்பதன் பொருள், நாம் அவர்களுக்குக் கொடுத்த தண்டனையில் நியாயமானவர்களாக இருந்தோம். இப்னு ஜரீர் கருத்து தெரிவித்தார், "முஹம்மதே! நாம் உங்களுக்குத் தெரிவித்த விஷயத்தில் நாம் உண்மையாளர்கள்; இந்த உணவுகளை அவர்களுக்குத் தடை செய்ததில், அவர்கள் கூறியது போல் இஸ்ராயீல் தனக்காக மட்டுமே இந்த விஷயங்களைத் தடை செய்தார் என்பதல்ல (அவர்கள் அவரைப் பின்பற்றினார்கள் என்று கூறினர்)."



நாம் இங்கு சொல்லகூடிய வசனங்கள் எல்லாம் பனி இஸ்ரவேலர்களுக்கு சொன்னது என்று பல பேர் சிந்தித்து வைத்துள்ளார்கள்.


இப்போது நமக்கு சொன்னதை பார்ப்போமா


17:22 அல்லாஹ்வை அல்லாது வேறு இறைவனாக ஆக்க வேண்டாம்


17:23 பெற்றோரை "சீ" என்று கூட சொல்ல வேண்டாம்.


17:24 பெற்றோருக்கான துஆ


17:26 ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்களுக்கு உரியது கொடுக்கவும்


17:27 விரையம் செய்பவர்கள் சைத்தானின் சகோதரர்கள்


17:28 யாசகம் கேட்டு வருபவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றும் இல்லையானால் கனிவான சொல்லை சொல்லுதல்


17:29 ஸதக்கா (ஸக்காத்) கொடுக்காமல் காஞ்சனாகவும் இருக்கக்கூடாது, மொத்தமாகவும் கொடுத்துவிட்டு ஒன்றுமில்லாதவறாகவும் இருக்க கூடாது


17:31 வறுமைக்கு பயந்து குழந்தைகளை கொலை செய்வது


17:32 விபச்சாரத்தை நெருங்காதீர்கள்


17:33 நியாயமின்றி ஒரு மனிதனை கொலை செய்வது


17:34 அனாதைகளின் பொருள்களை அபகரித்தல்


17:35 அளவை நிறுவயில் மோசடி


17:36 ஒருவருக்கு ஞானம் இல்லாதவை செய்ய தொடங்குதல்


17:37 பூமியில் பெருமையாய் நடப்பது


17:38 இதெல்லாம் இறைவனிடத்தில் (மக்ரூஃஹ்)  வெறுக்கப்பட்டது



இதெல்லாம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டது என்று சொன்னால் (தடுக்கப்பட்டதாகும்) ஹராம்


இதில் சொல்லப்பட்டுள்ள செயல்களை தடுக்கப்பட்டதா இல்லையா என்று கவனித்து கொள்ளுங்கள்.


இந்த செயல் எல்லாம் பனி இஸ்ரவேல் என்ற சூராவின் தலைப்பில் உள்ளது


அப்போது இது நமக்கு சொல்லப்பட்டதா?


பனி இஸ்ரவேல்களுக்கு சொல்லப்பட்டதா?


இல்லை இருவருக்கும் சொல்லப்பட்டதா?


இல்லை இறைவன் யாரை உலக மக்களுக்காக தேர்ந்தெடுத்தனோ அவர்களுக்கு சொல்லபட்டதா?


அப்போது புரிகிறதா?


முதலில் பனி இஸ்ரவேலர்களுக்கு முன்னால் ஒவ்வொரு நபிக்கும் ஒவ்வொரு செயல் செய்ய சொல்லி அல்லாஹ் கட்டளை இட்டான்


அதன் பின் பனி இஸ்ரவேளர்களுக்கு இதை எல்லாம் செய்ய சொன்னான்


அவர்கள் கட்டளை மீறினார்கள்


அவர்களின் உணவை ஹராமக்கினான்.


இதன் பின் நபி ஸல் அவர்களை ஏற்றுக்கொள்ள கூடிய உம்மதுக்கு இது கடமை ஆக்கினான்.


இந்த செயல்களை எல்லாம் முஸ்லீங்கள்தான் செய்கிறார்கள் என்று நாங்கள் சொல்லவேண்டிய அவசியம் இல்லை நாம் முஸ்லீம் மீறுகிறார்களா இல்லையா என்று நடைமுறையில் உள்ளவர்களை பார்த்தாலே தெரியும்.


இல்லையா?


அப்போது அல்லாஹ் கூறக்கூடிய வேதனை


நோய் வடிவிலும், பூகம்பம் வடிவிலும், மழை வடிவிலும், எரிமலை வடிவிலும், காற்று வடிவிலும் மேலும் பல வேதனை வடிவிலும் வருமா? வராதா?


இதெல்லாம் சேர்ந்துதான் இப்போதைய நடக்கக்கூடிய இயற்க்கை சீற்றங்கள் வருகிறது..



இதை மேலும் ஒரு ஹதீத் வலிமை படுத்துகிறது.


ஹஸ்ரத் அப்துல்லா பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அதிகாரத்தில் ஒரு ஹதீஸ் உள்ளது, அவர் கூறினார்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை நோக்கி திரும்பி கூறினார்கள்: “ஓ இஸ்லாமிய சமூகமே!  நீங்கள் ஒரு காலகட்டத்தில் அவற்றில் விழுந்தால் ஐந்து விஷயங்கள் உள்ளன (அவை நிச்சயமாகத் தண்டிக்கப்படும்) மேலும் அவை (கெட்டவை) உங்களைச் சென்றடைவதற்கு நான் அல்லாஹ்விடம் இருந்து பாதுகாவல் தேடுகிறேன்.

  ஒரு தேசத்தில் ஒழுக்கக்கேடு (தவறான செயல்கள் போன்றவை) பகிரங்கமாகத் தொடங்கும் போதெல்லாம், அவர்களின் முந்தைய பெரியவர்களிடம் இல்லாத கொள்ளைகளும் நோய்களும் அவர்களிடையே பரவுகின்றன.

  அவர்கள்( அந்த மக்களுடைய )அளவு குறையும் போதெல்லாம், அவர்கள் பஞ்சம், வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் மன்னரின் கொடுங்கோன்மை ஆகியவற்றால் தண்டிக்கப்படுகிறார்கள்.

  அவர்கள் தங்கள் செல்வத்திற்கு ஜகாத் கொடுப்பதை நிறுத்தினால், வானத்தின் மழை அவர்களிடமிருந்து நிறுத்தப்படுகிறது.  விலங்குகள் இல்லாவிட்டால் மழை பெய்யாது.

  அல்லாஹ்வினுடைய மற்றும் அவனது தூதரின் உடன்படிக்கையை அவர்கள் மீறும் போது, ​​பிற நாடுகளின் எதிரிகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டால், அவர்கள் தங்கள் கைகளில் இருந்து உள்ளதை அவர்களிடமிருந்து பறிக்கிறார்கள்.

  எப்பொழுதெல்லாம் அவர்களின் இமாம்கள் (தலைமைகள் மற்றும் தலைவர்கள்) அல்லாஹ்வின் சட்டத்தின்படி முடிவுகளை எடுக்கவில்லையோ, அல்லாஹ் வெளிப்படுத்தியதை ஏற்கவில்லையோ, அப்போது அல்லாஹ் அவர்களைத் தங்களுக்குள் போரிட்டுக் கொள்ளும் படி விட்டு விடுகிறான்.


 சுனன் இப்னு இ மாஜா#4019


இதுவரை சொன்னது இறைவனின் கட்டளையை மீறினவர்களின் செயல்


இதன் பின்பு கட்டளை மீறினவர்களையும்  தாண்டி இறைவனுடைய வழியில் ஒருவர் ஒரு விஷயம் செய்ய நினைக்கும் போது அதை தடுக்க நினைக்கும் மக்கள் நம்முடைய முஸ்லீம் மக்கள்


மற்றவர்களையும் தடுக்க நினைக்கும் மக்கள் யார் என்றால்?

முதலில் இப்லீஸ் இறைவனிடம் மனிதனை கெடுப்பேன் என்று தவனை கேட்டு வந்தவனின் குணத்தோடு சேர்ந்தவர்கள் ஆவர்கள்.


ஆகவே மக்களாகிய நாம் சைத்தானின் கூட்டந்தார்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.


இதுவரை யூதர்களின் அக்கிரமங்கள் நாங்கள் பல முறை கூறியுள்ளோம்.


இதே போன்று முஸ்லீங்களும் செய்கிறார்கள்.


பின்வரும் இந்த வசனம் ஏன் முஸ்லீங்களுக்கு பொருத்தமாக அமையக்கூடாது?


4:160 வசனத்தில் யூதர்களின் அநியாயத்தின் காரணமாக என்பதை (முஸ்லீங்களின் அநியாயத்தின் காரணமாக ) என்று படித்து பார்த்தால் புரியும்.


இப்போது முஸ்லீம்கள் எங்கு அநியாயம் செய்கிறோம் என்று நினைக்காதீர்கள்


இங்கு பெரும்பாலான முஸ்லீம்கள்தான் அநியாயம் செய்கின்றனர்.


மேலே கூறிய தடைசெய்ய பட்ட உணவு பொருள்கள் மட்டும் இல்லாமல் கூடுதலாக உணவு பொருள்கள் கூட அல்லாஹ் தடை செய்து இருக்கலாம். அல்லாஹ்வே அறிந்தவன்.


இதை  மனிதனாகிய நமக்கு  அல்லாஹ் விரிவாக சொல்ல நாடவில்லை.


இதிலிருந்து நாம் உணவை எப்படி உண்ணவேண்டும்?


மார்க்கத்தின் அடிப்படையில் எப்படி புரிய வேண்டும் என்றால்


மனிதர்களாகிய நாமெல்லாம் உணவை ஆராட்ச்சி செய்து மனிதன் உடம்பிற்கு என்ன தேவை என்பதை தேடி தேடி அலைந்து உண்ணுகிறோம்,


நம்மளோடு தேடி தேடி உணவை உண்ணுவதற்கு நமக்கு உதவிசெய்யும் கூட்டம் யார் என்றால் ஆங்கிலேயர்கள்


இதை நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.


அவர்கள் மேற்குஉலக நாட்டில் (இதில் அறிவியல் அடிப்படை ஆராட்ச்சியின் அடிப்படையில் செயலை செய்து ஒவ்வொரு நோயிக்கும் மருந்து கண்டுபித்தது கூறுகிறார்கள் அவர்களுக்கு பெருமை வேறு +  பக்க விளைவுகள் வேறு )


முஸ்லீங்களாகிய நம் அல்லாஹ்விடம் எப்படி உதவி தேடுகிறோம் என்று கவனியுங்கள்.


அவனிடம் ஒவ்வொரு தொழுகைலும் உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று கேட்டுவிட்டு தொழுகையில் இருந்து வெளியே வந்து


நம்மளுடைய சாதாரணமான எதார்த்தமான வேலையை பார்த்துக்கொள்ளுகிறோம்.


இதிலிருந்து நாம் மனிதர்களாகிய நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் அறிவுரை என்னவென்றால்


உணவை தேடுவதோடு, நாம் செய்யும் அக்கிரமங்களையும், அட்டுழியங்களையும், வரம்பு மீறுதலையும் குறைத்து கொள்ள வழிகளை தேடுவோம்.


அக்கிரமங்களையும், அட்டுழியங்களையும், வரம்பு மீறுதலையும் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாட்டிலும், உலகத்திலும் சீர்திருத்த பட்டால் மீண்டும் ஹராமக்கபட்ட ஆகார வசதிகள் எல்லாம் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் ஹலால் ஆக்கிவிடுவான்.



நம் முஸ்லீங்களின் பல பேர் இந்த 5:5 வசனத்தை வைத்து நபி ஸல் அவர்களுக்கு 

இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே என்று அல்லாஹ் கூறுகிறானே அப்போது நபி ஸல் அவர்களை  பிம்பற்றும் இந்த வசனம் பொருந்தும் அல்லவா? என்று கேட்பார்கள்.


நபி ஸல் அவர்களுக்கு நுபுவத் கிடைத்த  உடனே இந்த 5:5 வசனத்தை அல்லாஹ் இறக்க வில்லை


அவர்கள் வந்து மக்காவை ஜெயித்து நபி ஸல் அவர்கள் வந்த நோக்கத்தை முடித்த பின்புதான் அல்லாஹ்வின் இந்த வசனங்கள் இறங்குகிறது.


சூரா மயிதா இல்


இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;  

(அல்குர்ஆன் : 5:3)



இன்றைய தினம் உங்களுக்கு (உண்ண) எல்லா நல்ல தூய பொருட்களும் ஹலாலாக்கப் பட்டுள்ளன; வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே; உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே, முஃமின்களான கற்புடைய பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் அளிக்கப்ட்டவர்களிலுள்ள கற்புடைய பெண்களும் விலைப் பெண்டிராகவோ, ஆசை நாயகிகளாகவோ வைத்துக் கொள்ளாது, அவர்களுக்குரிய மஹரை அவர்களுக்கு அளித்து, மண முடித்துக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது; மேலும் எவர் ஈமானை நிராகரிக்கிறாரோ, அவருடைய அமல் (செயல்) அழிந்து போகும் - மேலும் அவர் மறுமையில் நஷ்டமடைந்தோரில் ஒருவராகவே இருப்பார்.

(அல்குர்ஆன் : 5:5)


அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு கொடுத்த வேலையை செய்து முடித்தார்கள் அவர்களுக்கு உணவை ஹலால் ஆக்கினான்.


நம்முடைய செயலும் நபி ஸல் அவர்களை போன்று இருந்தால் நமக்கும் இந்த 5:5 வசனம் பொருந்தும்.


பனி இஸ்ரேலுக்கு அல்லாஹ் அறிவுரை கூறினான் அவர்கள் மீறினார்கள், அவர்களின் உணவை ஹராமாக்கி விட்டான்.


இனிமேல் அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினால்


முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

(அல்குர்ஆன் : 5:87)


மனிதர்கள்  இனி அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவீர்கள் என்றால் 


அல்லாஹ்வும் தான் வேதனையை இறக்குவான்


அல்லாஹ்வின் நல் அடியார்களை தவிர தான் நாடியவர்களை அவன் காப்பாற்றுவான்


இந்த மொத்த கட்டுரையில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள கூடிய பாடம்.


அல்லாஹ்வின் கட்டளைகளை மீறினால்......


நமக்காக அல்லாஹ் ஹலால் ஆக்கிய உணவை கூட அவன் ஹரமாக மாற்றுவதற்கு வாய்ப்புண்டு............




ஆகவே உணவை தேடி செல்வதில் எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோமோ?  நாம் செய்யும் தவறுகளில் இருந்து கூட மீள நேரங்களை ஒதுக்க வேண்டும்



அல்லாஹ் நம்மளுடைய செயலை சீராக்கி நம்மளுடைய உணவையும் ஹலாலானதாக அமைய அருள் புரிவானாக

Comments