நபி ஸல் அவர்கள் இறந்து போனார்களா?
உயிர் தியாகம் செய்தார்களா?
இரண்டில் எது உண்மை?
இரண்டும் உண்மைதான்
மனிதர்களாகிய நம்மளுடைய கண் பார்வைக்கு சிலருக்கு அவர்கள் இயற்க்கையான முறையில் இறந்தார்கள் என்றும்
சிலர் அவர் உயிர் தியாகம் செய்தார்கள் என்றும் கூறுகிறார்கள்.
இந்த விஷயம் இறைவனுக்கு ஒரு பொருட்டே இல்லை
அல்லாஹ்வுக்கு இந்த இரண்டு விஷயமும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.
எப்படி என்று தெளிவாக பார்ப்போம்.
முதலில் அல்லாஹ் எப்படி இதை செய்ய முடியும் என்று யோசித்தாலே ஈமானின் படித்தரம் மிகவும் சொர்ப்பம்தான்.
அல்லாஹ் எப்படி பட்டவன் என்பதை பார்க்க
அவன் அரியாசனம் எவ்வளவு நீளமானது அதை எப்படிபட்டது
அந்த அரியாசனம் நீரின் மீது உள்ளது
அந்த அரியசானத்தின் உள்ளேதான் வானம் பூமி எல்லாம் உள்ளது.
English இல் சொல்ல போனால் earth,
sun,
sun family,
star,
every star one galaxy,
every galaxy one dot,
every dot one galaxy family,
milky way இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
இந்த பிரபஞ்சதை காண்பது என்பது வெறும் = 3%
மீதி 16 முதல் 35 dark mater ( இருட்டில் பொருள்கள் உள்ளன )
மொத்தம் மீதி 65 முதல் 70 வரை dark energy ( இருட்டில் காணப்படக்கூடிய ஆற்றல்)
படித்தவர்களுக்கு இந்த விஷயங்கள் புரியும்.
படிக்காதவர்களுக்கும் வானம் பூமி நீளம், அகலம் எல்லாம் பார்த்தாலே புரியும்.
அப்படிப்பட்டவனுக்கு அல்லாஹ்வுடை தூதரை (இறந்தார்கள் என்றும் (ஷஹீத்) ஆனார்கள் என்றும் மனிதனுக்கு காட்டுவது சுலபமா? இல்லையா?
நாம் நம்மளுடைய கல்வி அறிவுக்கு உட்பட்டு விளக்கம் கேட்டால் கிடைக்காது
அந்த விடையை உணரலாம்.
பின் வரும் அதை தெளிவாக காணலாம்
முதலில் அல்லாஹ் அவ்வாறு செய்ய தகுதியுடையவனா?
சில ஹதீஸ் ஆதாரங்களை வைத்து காண்போம்.
"சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன; ஒவ்வொரு இரு படித்தரங்களுக்குமிடையிலான தொலைவு வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ள தொலைவைப் போன்றதாகும்; அதற்கு மேலே அளவற்ற அருளாளனின் அர்ஷ் இருக்கிறது;
புகாரி : 7423
இரவும் பகலும் அல்லாஹ்வின் வலது கரம் நிரம்பியுள்ளதை எடுத்து வாரி வழங்கினாலும் அவனது வலது கையில் இருந்து செலவு செய்தது அதைக் குறைத்துவிடுவதில்லை. வானங்களையும் பூமியையும் படைத்ததிலிருந்து அவன் என்ன செலவு செய்துள்ளான் என்பதை நீங்கள் கவனித்தீர்களா?
நிச்சயமாக அவனது வலது கரத்தில் உள்ளதை அது குறைக்கவில்லை. அவனது 'அர்ஷ்' (சிம்மாசனம்) நீரின் மீது இருக்கிறது. அவனது மற்றொரு கையில் அருட்கொடை —அல்லது பிடிப்பு— உள்ளது. அவன் அதை உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்."
ஸஹீஹுல் புகாரி : 7419
அர்ஷின் மீது வைக்கப்பட்டுள்ளது அவனது புத்தகம்
ஸஹீஹுல் புகாரி : 7404
நீரின் மீது அரியாசனம் (அர்ஷ்)
அந்த அரியாசனம் (அர்ஷ்) மீது புத்தகம்
அதன் மீது இந்த வானம், பூமி எல்லாம்
அதன் பின்பு பூமியில் உள்ள படைப்பினங்களை 7 நாளில் படைத்தான்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு கூறினார்கள்:
"கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், சனிக்கிழமையன்று மண்ணைப் படைத்தான்; அதில் ஞாயிற்றுக்கிழமையன்று மலைகளைப் படைத்தான்; திங்கட்கிழமையன்று மரங்களைப் படைத்தான்; செவ்வாய்க்கிழமையன்று வெறுக்கத்தக்கவற்றைப் படைத்தான்; புதன்கிழமையன்று ஒளியைப் படைத்தான்; வியாழக்கிழமையன்று அதில் விலங்கினங்களைப் பரவச் செய்தான்; வெள்ளிக்கிழமையன்று அஸ்ருக்குப் பிறகு, படைப்புகளின் இறுதியில், வெள்ளிக்கிழமையின் கடைசி நேரத்தில் - அதாவது அஸ்ருக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் - ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான்."
ஸஹீஹ் முஸ்லிம் : 2789
அவனுடைய அத்தாட்சிகளை நபி ஸல் அவர்களே விளக்கிவிட்டார்கள்.
அல்லாஹ் ஆதம் நபி முதல் அந்த (குன் ஃப யக்கூன்) ஒற்றை வார்த்தையில் இயங்கி கொண்டுள்ள இந்த உலகில் நபி ஸல் அவர்களுடைய அந்த உயிர் பிரிந்த நிகழ்ச்சியை மக்களுக்கு மத்தியில்
இயற்க்கையான முறையாகவும், உயிர் தியாகம் ( ஷஹீத் ) செய்தவராகவும் காண்பிப்பது என்பது மிக மிக சுலபம்.
முதலில் நம்மில் எத்தனை பேருக்கு ( ஷஹீத் ) என்பதின் அர்த்தம் தெரியும்.
நம்மில் பெரும்பாலான பேர் ( ஷஹீத் ) என்பது அல்லாஹ்வுடைய தீனை பிறரிடம் சொல்லும்போது அதற்க்காக அவர் உச்சபட்ச கோவம் கொண்டு ஒருவரை கொலை செய்தால் அதனுடைய அர்த்தம் மட்டும் தான் ( ஷஹீத் ) என்று எண்ணுகிறார்கள்.
ஆனால் அல்லாஹ் குர் ஆனில் அல்லாஹ்வுடைய பாதையில் இறந்துபோவோற்கு கூறும் சொல்லை கேளுங்கள்.
وَلَا تَقُوْلُوْا لِمَنْ يُّقْتَلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتٌ بَلْ اَحْيَآءٌ وَّلٰـكِنْ لَّا تَشْعُرُوْنَ
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:154)
وَلَٮِٕنْ قُتِلْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
(அல்குர்ஆன் : 3:157)
وَلَٮِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَا۟ اِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ
நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் : 3:158)
குர் ஆனில் அல்லாஹ் அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லபட்டவர்களை என்ற வார்த்தைக்கு =( கத்ல்,குதிலு, குதில்த்தும்,குதில) இதே போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறான்.
ஆனால் அல்லாஹ் உண்மையில் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் உயிர் தியாகம் செய்யுங்கள் என்பதற்க்கு அர்த்தம் = ( ஷஹீத், ஷஹாதத், ஷஹுத்,ஷாஹிதீன்,ஷஹீதன்)
شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا بِالْقِسْطِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் : 3:18)
رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ
“எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
(அல்குர்ஆன் : 3:53)
لٰـكِنِ اللّٰهُ يَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَيْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ وَالْمَلٰٓٮِٕكَةُ يَشْهَدُوْنَ وَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًا
(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான்; அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான்; மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள்; மேலும் சாட்சியங் கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன்.
(அல்குர்ஆன் : 4:166)
( ஷஹீத் ) என்பதற்க்கு உண்மையான அர்த்தம் சாட்சி சொல்லுதல்
நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வுடைய தீனுக்காக வாழும் போதே சாட்சி சொல்லிவிட்டார்கள்.
அவர்கள் இயற்க்கையான முறையில் இறந்தாலும் அது "ஷஹாதத்"தான்
சாட்சி சொல்வதில் மிகவும் உயர் தரத்தில் உள்ளதுதான் அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வது
அதுதான் மகத்தான வெற்றியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
அதை நபி ஸல் அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் physical ஆகவும் நிராகரிப்பாளர்கள் அவர்களை கொல்ல வேண்டும்.
இதை எல்லாம் அல்லாஹ் உண்மையில் செய்தும் காட்டிவிட்டான்.
சாதாரண மனிதர்களுக்கு இதை physical முறையாகவும் அல்லாஹ் புரிய வைத்துவிட்டான்.
எப்படியென்றால் நபி ஸல் அவர்களுக்கு அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளாத ஒரு யூத பெண் மூலம் விஷம் கொடுக்கப்பட்டு அதன் வீரியம் மூலமும் இறக்கும் படி செய்து விட்டான்.
இதனால் மக்கள் நாங்கள் சொல்வதுதான் பெரியது என்று பிரிவினையில் உள்ளார்கள்.
பொதுவாக இஸ்லாமில் சில கருத்து வேறுபாடு வரும் என்று அல்லாஹ் கூறியபோது
மனிதன் என்னுடைய மூளைக்கு சரி என்று பட்டால் மட்டுமே நம்புவேன் என்று தீவிரமாக இருப்பது எவ்வளவு பெரிய பிரிவினை இது மிக பெரிய முட்டாள்தனம் .
எங்களுக்கு தெரிந்ததை கூறுகிறோம், இனி இந்த பிரிவினையை (கருத்து வேறுபாடை) அல்லாஹ்வை தவிர மீதி யாரவது ஒன்று சேர்க்க முடியுமா?
ஆகையால் இனி வரும் காலங்களிலும் இஸ்லாத்தினுள் பெரிய பெரிய விஷயங்கள் இருக்கிறது, அதை கருத்து வேறுபாடாக நினைத்து அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம்.
தலைக்கனம் ஏதற்க்கு
மேலும் இந்த (ஷஹீத் ) என்ற வார்த்தை தெளிவாக புரிய
وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 4:69)
இங்கு நபிமார்களோடு இருப்பவர்களை அல்லாஹ் பட்டியல் இடுகிறான்
அப்போது இவர்கள் எல்லாரும் அந்த ( ஷஹீத் ) என்ற அர்த்ததிற்க்கு உகந்தவர்களா? இல்லையா?
அதே போலவே ( ஷஹீத் ) என்பதை நபி ஸல் அவர்கள் யாரோடு ஒப்பீடுகிறார்கள் என்று பாருங்கள்.
அபூ ஸயீத் அல்குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(ஒருவர்), “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் தன் உயிராலும், தன் செல்வத்தாலும் அறப்போர் (ஜிஹாத்) புரியும் ஒரு இறைநம்பிக்கையாளர் (முஃமின்)” என்று பதிலளித்தார்கள். அவர்கள், “பிறகு யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “மலைப்பாதைகளில் ஒன்றில் (ஒதுங்கி), அல்லாஹ்வை அஞ்சிக்கொண்டு, தன் தீங்கிலிருந்து மக்களை விட்டுவிடுபவர்” என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹுல் புகாரி : 2786
(ஷஹீத் ) என்ற அர்த்ததிற்கு மலை பாதையில் அல்லாஹ்வை அஞ்சி வாழ்பவரும் வருவார்.
அறப்போர் புரிவாதற்க்காக செல்லும் நபர் வழியில் இறந்துவிட்டாலும் ( ஷஹீத்) அந்தஸ்தாகும்.
ஆகவே ( ஷஹீத் ) உயிர் தியாகம் என்பது
சாட்சி சொல்பவர்களும் அந்த வரிசையில் வருவார்கள்
ஆகவே நபி ஸல் அவர்கள் அல்லாஹ்வுக்கு ( ஷஹாதத் ) உரைத்துவிட்டார்கள்.
அல்லாஹ்வும் அவனுடைய வார்த்தைகளில் மாற்றம் செய்பவன் இல்லை.
இறைவனுக்காக சாட்சி சொல்பவர்களே முஸ்லீமில் முதலாமானவர்கள் (ஷஹீத் ) அந்தஸ்தை கொண்டவர்கள்
Comments
Post a Comment