பாவம் செய்பவர்கள் யார்?
முதலில் நிராகரிப்பு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதை எப்படி என்று பார்ப்போம்......
பொதுவாக எல்லாரும் இருக்கக்கூடிய ஒரு சபையில் ஒருவர் வைக்கக்கூடிய வாதத்தை மீதி இருக்கக்கூடியவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமல் இருப்பதுதான் .....
நிராகரிப்பு ஆகும்......
அல்லாஹ்வை நிராகரிப்பது என்பது.......
அவன் வார்த்தையை அவனுடைய அடியார்களாகிய நாம் அதை கேட்காமல் இருப்பது........ஆகும்.
காஃபிர் என்பதும் = குஃப்ர் (நிராகரிப்பும் ) என்பதும் ஒன்றுதான்.
குஃப்ர் என்பது குர் ஆனில் எங்கேயெல்லாம் பயன்படுத்த படுகிறதோ.........
அங்கேயேல்லாம் நிகழ்காலத்தில் பேசக்கூடிய நிகழ்வுகளாக இருக்கும்.
காஃபிர் என்பது குர் ஆனில் எங்கேயெல்லாம் பயன்படுத்த படுகிறதோ........
அங்கேயேல்லாம் கடந்த காலம் சம்பந்தமான நிகழ்வுகளாக இருக்கும்.
எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.
குர் ஆனில் குஃப்ர் (அரபு வார்த்தைக்கு ) நிராகரிப்பு (தமிழ் வார்த்தையாக ) வருகிறது.
அந்த நிராகரிப்பு என்பது இரண்டு வகை இருக்கிறது.
அந்த இரண்டுமே நிராகரிப்புதான்.
1. அல்லாஹ்வுடைய வசனம் மனிதனுக்கு கூறப்பட்டால் அவன் அது தெரிந்தே செய்யமாட்டேன் என்று சொல்வதும் நிராகரிப்புதான்.
2. அதே அல்லாஹ்வுடைய வசனம் கூறப்பட்டால் செய்யமாட்டேன் என்று சொல்லமாட்டோமே தவிர செயல்கள் எல்லாம் வசனத்திற்கு மாற்றமாகவேதான் இருக்கும்.
அல்லாஹ்வின் பார்வையில் ஒரு காலகட்டத்தில் நிராகரிப்பு என்பது அதிகரிக்கும் போது
அவர்கள் முனாஃபிக்கீன்கள் வரிசைலயும், ஃபாஸிக்குகள் வரிசைலயும் வருவார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய நிலமையை மாற்றிக்கொள்ளாத வரை)
இதை அல்லாஹ் சூரா தவ்பாவில் கூறுகிறான்.
اِنَّ الْمُنٰفِقِيْنَ هُمُ الْفٰسِقُوْنَ
நிச்சயமாக நயவஞ்சகர்கள் பாவிகளே ஆவார்கள்.
(அல்குர்ஆன் : 9:67)
பாவிகள்* என்ற பெயரும் நயவஞ்சகர்கள் என்ற பெயரும் எப்படி ஒன்றாகிறது.
பாவிகள் என்ற பெயர் (எந்த காலத்தில் இருந்து ) (யாருடைய காலத்தில் இருந்து ) எங்கிருந்து தொடங்குகிறது என்று பார்த்தால்.
மூஸா அலை அவர்கள் காலத்தில் இருந்து பாவிகள் என்ற வார்த்தையை அல்லாஹ் (மக்களுக்கும் )(அவருக்கும் ) கூறுகிறான்.
குர் ஆன் வந்த பிறகு குர் ஆனும், தவ்ராத்தும் ஒன்றுதான் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மூஸா அலை அவர்கள் காலத்தில் பாவிகள் என்ற பெயர் வருகிறது.
الْفٰسِقِيْنَ =பாவிகள்
(அல்லாஹ் கூறுகிறான்.)நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி: “அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்” (என்று கூறினான்).
(அல்குர்ஆன் : 7:145)
மூஸா அலை அவர்களுடைய காலத்தில் உள்ள பாவிகளும் நபி ஸல் அவர்கள் காலத்தில் வாழக்கூடிய முனாஃபிக்கீன்களும் ஒன்றாகுகிறார்கள் மறுமை நாள் வரை
அதை ஒரு ஹதீதும் உறுதி படுத்துகிறது.
மறுமை நாளின் அருகில் மனிதர்கள் இரு பிரிவாக பிரிவார்கள்.
ஒரு பிரிவில் எந்தவிதமான கள்ளங்கவடமும் இருக்காது,
ஒரு பிரிவில் முனாஃபிக் தன்மை மட்டுமே இருக்கும்.
அல்லாஹ்வின் தீனில் இந்த பிரிவினை நடந்து கொண்டு இருக்கிறது.
அந்த முனாஃபிக் தன்மையும் பாவிகளுடைய தன்மையும் தெரிந்தால் மட்டுமே
மறுமை நாளில் அருகே வரக்கூடிய அந்த முனாஃபிக் பிரிவினையில் இருந்து நம்மளை பாதுகாத்து கொள்ள முடியும்.
முதலில்
பாவிகள் யார் என்பதையும்?
என்னென்ன பாவம் என்பதையும்?
எந்தெந்த பாவங்கள் மன்னிக்கபடும் என்பதையும்?
எந்தெந்த பாவம் அல்லாஹ்வை கோபபடுத்தும் என்பதையும்?
எந்தெந்த பாவம் அல்லாஹ் இந்த உலகிலேயே அல்லாஹ் வேதனை செய்வான் என்பதையும்?
எந்தெந்த பாவம் முத்திரை குத்தப்படும் என்பதையும்?
பாவிகள் பற்றி பின்வருமாறு விரிவாக பார்ப்போம்............
மனிதர்கள் அல்லாஹ்வின் ஒரே ஒரு வார்த்தை நிராகரிக்க பட்டால் கூட அல்லாஹ் என்ன செய்வான் என்று பாருங்கள்.
உதாரணம் மூஸா அலை அவர்களுடைய சமூகத்தார்களின் ஒரு பிரிவினர் செய்த பாவம்
அவர்கள் ஒரு வார்த்தை மட்டுமே மாற்றினார்கள்
அந்த வார்த்தையின் அர்த்தம் பின்வருமாறு
حِطَّةٌ = “ஹித்ததுன்”
மூஸா சமூகத்தாரிடம் "ஹித்ததுன்"என்ற வார்த்தையை மட்டும்தான் அல்லாஹ் கூற சொல்கிறான்
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
(அல்குர்ஆன் : (2:58)(2:59)
ஹித்ததுன் (அல்லாஹ் தலையை குனிந்து தாழ்த்தியவர்களாக நகரத்தில் நுழைய சொல்கிறான்)
ஆனால் அவர்கள் வேறு ஒரு வார்த்தையை கூறி தலையை உயர்த்தியவாரு நுழைகிறார்கள்.
ஹதீத்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பனீ இஸ்ராயீல்களுக்கு, 'நீங்கள் இந்த வாசலில் ஸஜ்தா செய்தவர்களாக நுழையுங்கள்; மேலும் 'ஹித்தத்துன்' என்று கூறுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம்' என்று கூறப்பட்டது. ஆனால் அவர்கள் (அக்கட்டளையை) மாற்றிவிட்டு, தங்கள் புட்டங்களின் மீது ஊர்ந்தவாறு நுழைந்து, 'ஹப்பத்துன் ஃபீ ஷஅரா (ரோமத்தில் ஒரு தானியம்)' என்று கூறினார்கள்."
ஸஹீஹுல் புகாரி : 4641
அல்லாஹ் இவர்களையும் பாவம் செய்தவர்கள் என்று கூறுகிறான்.
இவர்கள் இங்கு வார்த்தை மட்டும் மாற்றி சொல்லியதற்கே..........இப்படி என்றால்
நாம் நிலமை என்ன ?
நபி ஸல் அவர்களுடைய உம்மத் என்று சொல்லக்கூடிய நம்முடைய செயல் பெரிய பாவம் செய்தால் மட்டும்தான் தண்டிக்க கூடிய செயலில் வருமா?
அல்லது நாம் மற்றவரிடம் பேசக்கூடிய சாதாரண வார்த்தையில் கூட வருமா?
நம் மக்களுடைய யோசனையெல்லாம் ஃபிர்அவுன், நம்ரூத், காரூன், அபுலஹபு, இவர்களை போன்ற பெரிய பெரிய அநியாயகாரர்கள் பாவம் செய்தால்தான் அது பெரிய பாவம் என்று நினைக்கிறோம்.
அதற்காகத்தான் அல்லாஹ் நரகத்தில் போடுவான் என்று நினைக்கிறோம்.
அல்லாஹ்வின் இயற்க்கையான நிகழ்வில் உலகத்தில் வேதனை செய்யப்படும் என்ற ஒரு செயல் உண்டு.
ஃபிர்அவுன், நம்ரூத், காரூன், அபுலஹபு செய்வது மட்டும்தான் அநியாயம் என்று நினைப்பவற்க்கு கீழே உள்ள இந்த வசனத்தின் விளக்கம் தருகிறோம்.
இதில் அபுலஹபு போன்ற மனிதர்கள் மட்டுமே அநியாயகாரர்கள் இல்லை.
அல்லாஹ்வின் பார்வையில் சாதாரண மக்களும் ( அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணியாவிட்டால் ) அநியாயம் பண்ணுப்பவர்களில் அடங்கி விடுவார்கள்.
பத்ர் போரை பற்றி பேசக்கூடிய சூராவில் உள்ள வசனம் கீழே கொடுகிறோம்.
இங்கு வார்த்தையை கவனியுங்கள்
நபி ஸல் அவர்கள் உயிர் அளிக்கும் காரியத்தின் பால் அழைப்பதற்கு பதில் அளியுங்கள் என்று அல்லாஹ் முன் வசனத்தில் கூறுகிறான் ( 8:24)
இதற்க்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்குத்தான் அல்லாஹ்வின் பதில்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 8:25)
அப்படியென்றால் அல்லாஹ் கூறக்கூடிய வார்த்தையை மக்களாகிய நாம் மீறி இருப்பது எவ்வளவு பெரிய பாவம்.
அவனின் ஒரு வார்த்தையை மீறினால் கூட அல்லாஹ் கோபத்திற்கு உள்ளாகுவோமா என்ற பயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் நாம் எவ்வளவு வார்த்தை மீறியுள்ளோம்.
அல்லாஹ்வின் வேதனை நமக்கு வரவில்லையே என்று நினைக்க வேண்டாம்.
போர் என்பதும் அல்லாஹ்வின் வேதனைத்தான்.
நீர் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவீராக. உம்மைத் தவிர, வேறு யாரையும் நீர் கட்டாயப் படுத்துவதற்கில்லை;
(அல்குர்ஆன் : 4:84)
போர் என்பது முதலில் நபி ஸல் அவர்கள் காலத்தில்தான் கடமையானது என்று கூட பல பேர்கள் சிந்தித்து கொண்டு இருக்கிறோம்.........
அதே குர் ஆனில் சிறிது காலம் கழிந்து வேறு ஒரு வசனம் இறங்குகிறது.
நபியே! போர்புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக!
(அல்குர்ஆன் : 8:65)
இத்தோடு மட்டுமே முடியவில்லை
மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல;
(அல்குர்ஆன் : 9:120)
இப்படி வசனங்களை அல்லாஹ் மாற்றி கொண்டே இருப்பான்.
இது நபி ஸல் அவர்களுக்கு மட்டும்தானா என்று சிந்தித்தால் இல்லை.
பனி இஸ்ரேயில் காலத்திலேயே அது கடமையாக்கவிட்டது.
“போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?”
(அல்குர்ஆன் : 2:246)
பனி இஸ்ரவேலர்களுக்கு போர் என்பது அவர்களுக்கு இலைமறைவு, காய்மறைவாகவும் இருந்தது.
அதை நபி ஸல் அவர்கள் காலத்தில் (official ) ஆக அல்லாஹ் கடமையாக்கினான்.
இப்போது நபி ஸல் அவர்களுக்கு மட்டுமே போர் கடமை என்று நினைத்து கொண்டு இருக்கிறோமே அது இல்லை என்று புரிய வைக்க தான் இவ்வளவு விளக்கம்.
முன் இருந்த சமூகத்திற்கும் போர் இருந்தது.
அதன் பின்பு தஜ்ஜால் வரக்கூடிய நேரமும் போர் கடமையாக போகிறது ...........
ஆனால் இதற்க்கு இடைப்பட்ட வாழ்கிற மக்களுக்கு மட்டும் போர் கடமை இல்லை.
என்பது எவ்வளவு அறிவுபூர்வமாக சிந்தனையாகவும் பெரிய அநீதியாகவும் இருக்கிறது?
இதெல்லாம் சிந்திக்க வேண்டாமா?
சொர்க்கம் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடுமோ?
இப்போது இந்தியாவில் RSS என்ற ஒரு இயக்கம் முஸ்லீங்களின் மீது ஏன் இவ்வளவு கொலைவெறி தாக்குதல் நடந்துகிறது.
சிந்திக்க வேண்டாமா?
பாவம் என்ற தலைப்பில் இதை பேசுவது எங்களுக்கு கடமை உள்ளது.
ஏனென்றால் நாம் பாவம் செய்வதால்தான் நம்மீது ஒரு ஷாத்தனை சாட்டி விடுகிறான்.
அல்லாஹ் பனி இஸ்ரவேளர்களுக்கு எப்படி அவர்களின் பாவத்தின் காரணமாக *காஃபிர்களை*அவர்கள் மீது சாட்டிவிட்டானோ?
அதேபோன்று அதே பாவத்தின் எல்லை அல்லாஹ் விதித்திருந்த வரம்பை தாண்டும்போது நம் மீதும் RSS போன்ற காஃபிர்களை நம் மீது சாட்டி விடுகிறான்.
அதற்க்கு நாம் பயப்படதேவை இல்லை.
முஸ்லீம் என்று நாம் சொல்வோமானால் குர் ஆன் சொல்லும் முஸ்லீமாக முழுவதும் மாற வேண்டும்.
பாதி செயல் முஸ்லீம் பாதி செயல் குஃப்ராக இருந்தால் அதில் பயனும் இல்லை அல்லாஹ்வின் உதவியும் வராது.
தொழாதவர்கள்தான் " காஃபிர் " ஆகுவார்கள் என்று சொல்லமுடியாது.
அதுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.
ஒரு ஊரில் # ஜனாஸா தொழுகை ஒருவருக்கு கடமையா இல்லையா?
ஒருவருக்கு அது கடமை இல்லை தானே.........
இதே கடமை இல்லாத தொழுகை கூட அதே ஊரில் ஒருவர் மரணித்து விட்டால் அந்த ஊர் மக்கள் யாரும் ஜனாஸா தொழ வரவில்லை என்றால்..............
அங்கு அது எல்லாரின் மீதும் கடமையாகும்........
இப்போது அந்த ஊரே ஜனாஸா தொலைவில்லையென்றால்
அவர்களின் நிலமை என்ன?
யோசித்து கொள்ளுங்கள்..........
எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.
பாகம் 2 தொடரும்
Comments
Post a Comment