பாவம் செய்பவர்கள் யார் 2
பாவங்கள் என்பதை அல்லாஹ் குர் ஆனில் அரபு வார்த்தையில் பல வார்த்தைகளாக பிரிக்கிறான்.
மனிதன் குர் ஆனில் உள்ள அந்த பாவங்களை மிகவும் அர்ப்பமானதாக கருத்துகிறோம்.
ஆனால் அல்லாஹ் குர் ஆனில் பேசக்கூடிய பாவங்களை கொண்ட வார்த்தைகளை பார்த்தால் மிகவும் பாரதூரமான விஷயமாக தெரிகிறது.
அந்த பாவத்தை செய்தவர்களை அல்லாஹ் மனித வாழ்வில் பழங்கால கதைகள் பேசக்கூடிய வரலாறாக மாற்றி விட்டான்.
குர் ஆனில் ( நிகழ்கலாம், கடந்த காலம், வரும்காலம்) இப்படி பேசக்கூடிய வார்த்தைகளை கவனியுங்கள்.
இந்த தலைப்பில் சில வார்த்தைகளை பார்ப்போம்.
(وَالْفُسُوْقَ,فُسُوْقٌ,لَفِسْقٌ,فِسْقًا,فَاسِقًا,فِسْقٌ,فَسَقُوْۤا,الْفٰسِقُوْنَ,يَفْسُقُوْنَ)
(பாவம், பாவிகள், குற்றம், தீயவர்கள் இது போன்று வார்த்தைகள் தமிழ் மொழிபெயர்ப்பில் வரும்.
அல்லாஹ் குர்ஆனில் குற்றங்களை (பாவங்களை ) வகைப்படுத்துகிறான் இப்படி பேசுகின்ற எல்லா குற்றங்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த வார்த்தை கொண்டுள்ளதாகவே உள்ளது.
எல்லாமே அல்லாஹ்வே அறிந்தவன்.
இப்போது பாவம் என்று குர் ஆன் சொல்லக்கூடிய நிகழ்காலவார்த்தையை பார்ப்போம்.
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவரும் சோதனை செய்து தங்களுடைய அறிவை வளர்த்து கொள்ளுங்கள்.
முதலில் முஸ்லீமாகிய நாம் மனதில் ஈமான் கொண்டவர்களாக இருந்தால் (وَالْفُسُوْقَ) இந்த வார்த்தைகளை கொண்ட பாவங்களை வெறுக்க வேண்டும்.
அல்லாஹ் ஈமானை கொண்டவர்களுக்கு குஃப்ரையும் (நிராகரிப்பையும்) பாவத்தையும் (وَالْفُسُوْقَ) , மாறுபாடு செய்வதையும் வெறுப்பாகவும் ஆக்கினான் ( 49:7)
நம்முடைய மனது இந்த வார்த்தை கொண்ட பாவத்தை வெறுக்க கூடியதாக இருக்க வேண்டும்.
அந்த பாவங்களை பின்வருமாறு பார்ப்போம்.
1.கடன் கொடுக்கல் வாங்களில் சாட்சியை வைத்து கொள்ளும் போதும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்களில் மனிதர்களை சாட்சி வைத்து கொள்ளலாம்.
அப்போது அந்த சாட்சியை (நீங்கள் அடிக்கிறதோ, துன்பப்படுத்துவந்தாகவோ ) இருந்தால்................ அந்த செயல் பாவமாகும் (فُسُوْقٌ)
அப்படிப்பட்ட செயலை செய்யக்கூடிய பாவம்தான்====(فُسُوْقٌ) (2:282)
நாம்தான் சாட்சிகளை வைக்கவே இல்லையே அப்போது இந்த பாவம் செய்யவில்லையே என்று நினைக்க நாம்.
அல்லாஹ் கூறும் இந்த சட்டத்தை செயல்படுத்தவே இல்லையே என்ற எண்ணம் வரவில்லையே ஏன்?
அப்போது நாம் குற்றவாளி இல்லை என்று எண்ணிக்கொண்டுள்ளோமா?
2. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும் (لَفِسْقٌ)
( 6:121)
2. அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் (فِسْقًا)(அதுவும் தடுக்கப்பட்டுள்ளது)
( 6:145)
முஃமினானவர் பாவியைப் (فَاسِقًا) போல் ஆவாரா? சமமாக மாட்டார்கள்.
( 32:18)
3. (தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், விலங்குகள் கடித்தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; எதை நீங்கள் அறுத்தீர்களோ அதைத் தவிர; சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) இவையாவும் பாவங்களாகும் (فِسْقٌ) ( 5:3)
5. சிலைகளை வைத்து வணங்குகிரவர்களுக்கும் பாவம் (فَسَقُوْۤا) செய்கிறரவர்கள் தான்.
இந்த வசனத்திலும் இந்த வார்த்தைதான் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
இதைத்தான் இதன் முன், பின் வசனமும் இவர்கள் இணைவைக்கிறார்கள் என்று கூறுகிறது.
மனிதனுக்கு தேவையான எல்லா தேவைகளையும் யார் நிறைவேறுகிறார்கள் என்று அவர்களிடம் மக்களாகிய நாம் கேட்டால் அவர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள்.
அப்படி சொல்லிவிட்டு அவர்கள் இணைவைக்கிறார்கள்.
இதை (10:33) வசனத்தில் இந்த வார்த்தை இதை பாவம் (فَسَقُوْۤا)என்று கூறுகிறான்.
அவர்களை பார்த்துதான் இந்த வார்த்தையை அல்லாஹ் கூறுகிறான்.
நிகழ்காலத்தை பற்றி பேசும்போது.(فَسَقُوْۤا) போன்ற வார்த்தைகளை அல்லாஹ் கூறுகிறான்.
இது வரை எதெல்லாம் பாவங்கள் என்றும் பார்த்தோமோ அந்த வார்த்தைகள் கடந்த காலத்தை இலக்காக வைத்து பேசுனவையாகும்.
ஒரு மனிதன் கடந்த காலத்தில் நிகழ்க்கலாம், வருங்காலம் பற்றி எப்படி பேசுவது என்று சிறிய ஒரு உதாரணம் பின்வருமாறு தருகிறோம்.
1.நான் நேற்று சாப்பிட்டு முடித்த போது இவர் வந்தார் (நேற்று நடந்தது பற்றி )
2. நான் நேற்று சாப்பிட்டு கொண்டிருந்த போது இவர் வந்து கொண்டு இருந்தார் ( இதுவும் நேற்றுதான்)
3. நான் நேற்று சிறிது நேரத்திற்குள் சாப்பிட்டு விட்டுருந்திருப்பேன் அதே நேரத்திற்குள்ளும் அவர் வந்து இருப்பார்.
இந்த வாசகத்தின் அளவுகோல் புரிகிறதா?
(فَسَقُوْۤا,فِسْقٌ,فَاسِقًا,فُسُوْقٌ)இது அல்லாஹ்வின் வார்த்தை
மேலே உதாரணமாக பேசிய தோரணைத்தான் இந்த அரபு வாக்கிய எழுத்தாகும்.
அப்போது அல்லாஹ்வின் குர் ஆன் வார்த்தை எப்படி இருக்கும் என்று சிந்தித்து கொள்ளுங்கள்.
இனி முழுவதும் கடந்த காலத்தை பற்றி பேசக்கூடிய வார்த்தைகளை பார்ப்போம்
அந்த வார்த்தை குர் ஆனில் இது (الْفٰسِقُوْنَ) போன்ற வார்த்தைகள் அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
எல்லாரையும் சேர்த்து சொல்வதர்க்கும் இந்த (الْفٰسِقُوْنَ) வார்த்தையை பயன்படுத்துகிறான்
மேலும் மூஸா அலை அவர்களுக்கும் (الْفٰسِقُوْنَ) பாவிகளை காண்பிப்பேன் என்று கூறக்கூடிய இடத்திலும் இந்த வார்த்தையை பயன்படுத்துகிறான்.
அதை சார்ந்த வசனங்களையும் பின்வரும் வரிசையாக காண்பிக்கிறோம்.
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.
(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் (الْفٰسِقُوْنَ) தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.
(2:99)
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ அவர்களும் பாவிகள் ஆவார்கள்
இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (الْفٰسِقُوْنَ (5:47
இன்ஜீலில் அருளப்பட்ட சட்டங்கள் படி அவர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் அவர்கள் தீர்ப்பளிக்கவில்லையாயின் அவர்கள் பாவிகள் இது (5:47 வசனமும்,5:49 வசனமும் பேசுகிறது )
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; மேலும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே(الْفٰسِقُوْنَ) இருக்கின்றனர். ( 5:49)
இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை (الْفٰسِقِيْنَ) நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். (63:6)
இங்கு சொல்லக்கூடிய (الْفٰسِقِيْنَ) வார்த்தைகள் பாவம் செய்யும் சமூகம் என்பது காட்டவே அல்லாஹ் கூறுகிறான்.
இந்த குர் ஆனில் அல்லாஹ்வின் வார்த்தைகளை மட்டுமே எடுத்து ஆராய்ந்தால் மார்க்கம் என்பது தெளிவாகும்.
(الْفٰسِقِيْنَ) வார்த்தையை மட்டுமே எடுத்து விவரித்தால் மிகப்பெரிய பதிவு தொகுக்க வேண்டிவரும்.
இந்த (الْفٰسِقِيْنَ) வார்த்தைகள் கொண்ட நிகழ்வுகளை சில விஷயத்தை மட்டுமே எடுத்து காண்பித்துள்ளோம்
இந்த பதிவில் கடந்த காலத்தை பற்றி பேசும் வசனத்தையும் அதில் உள்ள அல்லாஹ்வின் வார்த்தையும் நிகழ்காலத்தின் போது அல்லாஹ் பயன்படுத்துகிற வார்த்தையும் பார்த்தோம்.
இனி பாவிகளை பற்றி வருங்காலம் சம்பந்தமாக பேசக்கூடிய வார்த்தைகளையும், வசனத்தையும் பற்றி பார்ப்போம்.
இந்த வருங்காலத்தை பற்றி பேசக்கூடிய வசனம் முஸ்லீங்களுக்கும் பொருத்தமாகவும் அமையும்.
(எல்லாமே அல்லாஹ் அறிந்தவன் )
10. எவர் நம் திருவசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களை அவர்கள் செய்து வரும் பாவங்களின் (يَفْسُقُوْنَ) காரணமாக வேதனைப் பிடித்துக் கொள்ளும்.
(6:49)
இன்னும் நாம் கூறினோம் “ இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி “ஹித்ததுன்” (-“எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்”) என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது பாவம் (يَفْسُقُوْنَ) செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.
(2:59)
(2:59) இல் பேசக்கூடிய (يَفْسُقُوْنَ) என்பது வருங்காலத்தை பற்றித்தான் பேசுகிறது.
அது எப்படி என்றால்.......
அல்லாஹ் நபி ஸல் அவர்களுக்கு கடந்த காலத்தை பற்றி நினைவூட்டி அதில் அவர்கள் அக்கிரமம் செய்தார்கள் நான் தண்டனை கொடுத்தோம் என்று வருங்கால (pronunciation) ஆக பயன்படுத்திகிறான்.
இதுவும் வருங்கால வார்த்தைத்தான்.
இந்த வசனத்தை போன பதிவில் விளக்கி விட்டோம்.
சனிக்கிழமை வரம்பு மீறினவர்கள் செய்தது பாவம்
அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்,
மிக மோசமான பாவமா?
நம்மளுடையை பார்வையில் மிகவும் லேசான விஷயம்.
ஆனால் அல்லாஹ்வுக்கு இது பெரியது.
தடுக்கப்பட்ட நாளில் மீன் பிடித்தார்கள்.
அதனால் அவர்கள் அந்த
பாவத்தின் (يَفْسُقُوْنَ) காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.(7:163)
இப்படி ஒவ்வொரு வசனங்களும் ஒரு பெரிய வரலாறை பற்றி பேசக்கூடியதாக இருக்கிறது.
இந்த வார்த்தைகளை ஏன் இங்கு கூறுகிறோம் என்றால் பாவத்திற்க்கான வார்த்தைகள் அல்லாஹ் கூறும்போது ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு வார்த்தையை பயன்படுத்துகிறான்.
அல்லாஹ் குர் ஆனில் ஒரு சமூகத்தை எந்த செயலுக்காக அழித்தான் என்று சொல்கிறானோ அந்த அரபு வார்த்தையை கவனிக்கவே இந்த பதிவு.
Comments
Post a Comment