செல்வம் என்பது என்ன? 2

 செல்வம் என்பது என்ன?



பாகம் 2



மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்;


(அல்குர்ஆன் : 57:10)



எங்களுடைய ஆயிவின் அடிப்படையில் மக்கா வெற்றிக்கு முன்னர் உள்ள ( நபி ஸல் அவர்களின் தோழர்களையும் ) மக்களையும் மக்கா வெற்றிக்கு பின்னர் உள்ள தலைவர்களையும் (மக்கா வெற்றிக்கு முன்னர் தீனுக்காக தியாகம் செய்தவர்களை அல்லாஹ் கூறிய குர் ஆனின் கூற்றுப்படி பதிவியால் மிகுதி படுத்தி வைத்துள்ளான் என்பதை நிரூபிக்க ) நபி ஸல் அவர்கள் வித்தியாசமாக ( செல்வத்தின் மூலம் )கவனித்தார்கள்.



மக்கா வெற்றிக்கு முன் செய்த நபி ஸல் அவர்களின் தோழர்கள் செய்த தியாகங்கள்  ஏற்கனவே ( மக்களாகிய ) உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும்.

 இருந்தாலும் எங்களுக்கு தெரிந்ததை உங்களுக்கு பின்வருமாறு கூறுகிறோம்.



அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்களே ஒரு சமயத்தில் கூறியுள்ளார்கள் அவருக்கு முன் உண்பதற்க்கு உணவு கொண்டு வரப்படுகிறது.



அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்கள் ( முஸ்அப் பின் உமைர் ரலி ) அவர்கள் இருந்த நிலைமை யோசித்து பார்த்து விட்டு அதற்க்கு முன் அவர் இருந்த நிலையை யோசித்து பார்த்து விட்டும் அவர் என்ன வார்த்தை கூறுகிறார் என்று பாருங்கள்.



அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் அறிவிக்க கூடிய ஹதீத் 


 நிச்சயமாக, நமது நன்மைகளுக்கான (கூலி) இவ்வுலக வாழ்விலேயே நமக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுவிட்டதோ என்று நான் அஞ்சுகிறேன்." பிறகு அவர்கள் அழலானார்கள்.



ஸஹீஹுல் புகாரி : 1274



அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்கள் சாதாரண உணவு அவர் முன் கொண்டு வரப்படுகிறது அதற்க்கு அவர் பயப்படுகிறார்.


மறுமையில் தரப்படுவது இங்கயே அல்லாஹ் கொடுகிறனா என்று பயப்படுகிறார் என்றால் அப்போது அவர்களின் தரத்தை நபி ஸல் அவர்கள் என்ன நிலைமையில் வைத்தார்கள் என்று யோசித்து கொள்ளுங்கள்.


இப்படி பட்ட இவரைதான் பின் வரும் நாளில் ஆட்சியை தேர்ந்தெடுப்பதில் ஒருவராக இருந்தார்.



வேறு ஒரு ஹதீதில் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும், முஆவியா ரலி அவர்களுக்கும் நடந்த உரையாடலில் ஒன்று உண்டு.


அதில் இப்னு உமர் (ரலி) மக்கா வெற்றிக்கு முன் உள்ளவர்களின் (தியாகத்தை ) நிலமையை எப்படி தரம் பிரித்து தன்னுடைய மனதில் வைத்துள்ளார் என்று பாருங்கள்.


மக்கள் பிரிந்திருக்கும் நிலையில்  முஆவியா (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள்:


'இந்த விவகாரம் (ஆட்சி அதிகாரம்) குறித்துப் பேச விரும்புபவர் யாரேனும் இருந்தால் அவர் நம்முன் வரட்டும்! ஏனெனில், அவரையும் அவர் தந்தையையும் விட நாமே இதற்குத் ( இந்த ஆட்சிக்கு ) தகுதியானவர்கள்' என்று கூறினார்கள்.


அதற்கு இப்னு உமர் அவர்கள்  முஆவியா (ரலி) அவர்களிடம் 'இஸ்லாத்திற்காக உங்களுடனும் உங்கள் தந்தையுடனும் போரிட்டவரே உங்களை விட இதற்கு அதிகத் தகுதியுடையவர்' என்று சொல்ல முற்பட்டார் .


ஆனால், அவர் சொல் (மக்களிடையயே) பிரிவினையை உண்டாக்கி, இரத்தம் சிந்தப்பட்டு, இப்னு உமர் நாடியதற்கு மாற்றமாக அது புரிந்து கொள்ளப்பட்டு விடுமோ என்று அஞ்சினார்.


மேலும், சுவர்க்கங்களில் அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளவற்றை நினைவு கூர்ந்தார் (அதனால் அமைதியாக இருந்துவிட்டார்)'


ஸஹீஹுல் புகாரி : 4108



நபி ஸல் அவர்களின் கூட நெருக்ககமாக இருந்தவர்களுக்கு நபி ஸல் அவர்களின் செயல் என்னவென்று தெரியும்.



ஹுசைன் (ரஹ்) அவர்கள் வாயிலாக அறிவிக்ககூடிய ஒரு ஹதீதில் 


ஹாத்திப் (ரலி) அவர்கள் ஒரு ரகசியத்தை மக்கா காஃபிர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கிறார்.


அவரை பிடித்து விசாரித்து நபி ஸல் அவர்களிடம் இந்த செய்தி தெரிய படுத்தும்போது.



அவரை பற்றி நபி ஸல் அவர்கள் கூறினது என்னவென்றால்.



 ஹாத்திப் (ரலி) அவர்களை பற்றி  நபி ஸல் அவர்கள் "அவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர் அல்லவா? உமக்குத் தெரியுமா? அல்லாஹ் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களை எட்டிப்பார்த்து, 'நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்; நான் உங்களுக்குச் சொர்க்கத்தை உறுதியாக்கிவிட்டேன்' என்று கூறிவிட்டான்" என்றார்கள்.


ஸஹீஹுல் புகாரி : 6939


அப்போது பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு எந்த அளவு அல்லாஹ் முக்கியதுவம் கொடுத்துள்ளான் என்று யோசித்து கொள்ளுங்கள்.



பத்ருப் போர் என்பது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் அல்லாஹ்வுடைய தீனுக்காக வாழ்வை அர்ப்பணிந்தவர்கள்.



பத்ருப் போரை தவிர மீதி எந்த போருக்கும் இப்படி ஒரு சலுகை இல்லை.


அதன் பின்பு வந்த போர்கள் நபி ஸல் அவர்கள் ஜெயித்ததர்க்கு பின்பு


அவர்கள் ஜெயித்ததை பார்த்து வந்தவர்கள்.



நபி ஸல் அவர்கள்  மக்கா வெற்றிக்கு முன் நடந்து முடித்த சில மக்களை அல்லாஹ்வின் கட்டளை படி வித்தியாசங்களை மக்களுக்கு காட்டினார்கள்.



பத்ருப் போரில் தீனுக்காக கலந்து கொண்டவர்களை ஒவ்வொருவரையும் எடுத்து தனித்தனியே ஆராய்ந்து பாருங்கள்.



செல்வம் பொறுத்தவரை நபி ஸல் அவர்கள் மக்கா வெற்றிக்கு முன் தியாகம் செய்த மக்களுக்கு செல்வத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களாக ஆக்கவில்லை.



செல்வத்தை மக்கா வென்று வரும் முன் மக்களும், நபி ஸல் அவர்களும் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி முஸ்லீங்களுக்கு மத்தியில் நடத்தினார்கள் என்பதுதான் பாடம்.



ஆயிஷா (ரழி) அவர்கள் மீது மக்கள் அவதூறு பேசிய விவகாரத்தில் போது ஈடுபட்டவர்களில் ஒருவர்தான் மிஸ்தஹ் (ரலி) அவர்கள். 


அவர்களுக்குதான் அபூபக்ர் (ரலி) அவர்கள் மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஒருபோதும் எந்த உதவியும் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். பிறகுதான் அல்லாஹ் இந்த தெய்வீக வசனத்தை அருளினான்: "உங்களில் நல்லவர்களும் செல்வந்தர்களும் (அதாவது அபூபக்ர் (ரலி) அவர்கள்) தங்கள் உறவினர்களுக்கும், தேவையுள்ளவர்களுக்கும் (அதாவது மிஸ்தஹ் (ரலி ) அவர்கள்) (எந்த உதவியும்) கொடுக்க மாட்டோம் என்று சத்தியம் செய்ய வேண்டாம்... #அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா?


மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன்." (24:22)


அதன்பின்பு , அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஆம், அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இறைவனே! நீ எங்களை மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்கள்.


எனவே அபூபக்ர் (ரலி ) அவர்கள் மிஸ்தஹ் (ரலி ) அவர்களுக்கு முன்பு கொடுத்து வந்த செலவினத்தை மீண்டும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.


ஸஹீஹுல் புகாரி : 4757




இன்று நாம் நம்மளை யோசித்து கொள்வோம் குறை பேசி தெரியும் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ்வின் உதவி ஒரு சமூகத்திற்கு வரவேண்டுமென்றால் ஒவ்வொருகுள்ளும் கருணையை ஏற்படுத்த வேண்டும்.



இப்போது அந்த எல்லையை உலகம் தாண்டி விட்டது.


சரியான தீர்வு காண ஒவ்வொருவருக்குள்ளே உள்ள குறோதத்தை விடுங்கள்.



அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் மதீனாவில் உள்ள அன்சாரிகளிலேயே அதிகமான பேரீச்சந் தோட்டங்களைக் கொண்ட செல்வந்தராக அபூ தல்ஹா (ரலி) திகழ்ந்தார்கள் என்று கூறினார்கள்.


அவரது சொத்துக்களிலேயே அவருக்கு மிகவும் விருப்பமானதாக ‘பீருஹா’ (எனும் தோட்டம்) இருந்தது. அது பள்ளிவாசலுக்கு எதிரே அமைந்திருந்தது.


இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அபூ தல்ஹா நிச்சயமாக, எனது சொத்துக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமானது ‘பீருஹா’ ஆகும். அது அல்லாஹ்வுக்காக (அளிக்கப்படும்) தர்மமாகும். அதன் நன்மையையும், அல்லாஹ்விடம் அதற்கான சேமிப்பையும் நான் எதிர்பார்க்கிறேன்.


 எனவே, இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தங்களுக்குக் காட்டியபடி இதைத் தாங்கள் நாடிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்


ஆனால் நபி ஸல் அவர்கள் நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு செலவழித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள்.



ஸஹீஹுல் புகாரி : 2318



இங்கு அபூ தல்ஹாவின் தியாகத்தை பாருங்கள்.




அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரலி அவர்கள் மக்காவில் எவ்வளவு பெரிய செல்வந்தர் என்று அவருடைய வரலாறை பார்த்தால் தெரியும் அப்படிப்பட்டவர் மதினாக்கு ஒன்றும் இல்லாமல் வருகிறார்.


அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, நபி (ஸல்) அவர்கள் அவருக்கும் ஸஅத் பின் அர்-ரபீஃ அல்-அன்சாரி (ரழி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். ஸஅத் (ரழி) அவர்கள் (அன்சாரிகளிலேயே) பெரும் செல்வந்தராகத் திகழ்ந்தார்கள். எனவே அவர்கள் அப்துர் ரஹ்மான் (ரழி) அவர்களிடம், "நான் எனது செல்வத்தை இரண்டு பங்குகளாகப் (பிரித்து) உமக்குத் தருகிறேன்; மேலும் உமக்குத் திருமணமும் செய்து வைக்கிறேன்" என்று கூறினார்கள்.


ஸஹீஹுல் புகாரி : 2049






நபியுடைய குடும்பத்திற்க்கு ( ஜக்காத் ) ஹராம்.


நபி ஸல் அவர்கள் சல்மான் பின் ஃபார்சியை என்னுடைய குடும்பம் என்று சொல்லியுள்ளார்கள்.



இதிலிருந்து இப்படியும் புரியலாம் நபி ஸல் அவர்களுடைய குடும்பமாக இருக்க ஆசைப்படுகிறவர்கள்


ஜக்காத்தை விரும்பக்கூடாது.



இவ்வுலகில் நபி ஸல் அவர்கள் மக்களின் தியாகத்தை பொறுத்து அவர்களை இஸ்லாத்தில் என்னுடைய குடும்பம் என்றும் சொல்வார்கள்.


உண்மையாக அந்த இப்ராஹிம் அலை அவர்களின் வாரிசு என்ற அடிப்படையிலும் குடும்பம் என்றும் சொல்வார்கள்.


குடும்பம் என்றால் வாரிசு அடிப்படையிலேதானே வரும் நீங்கள் சொல்வது போன்று வராதே என்று நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்டால்.


ஒரு சமயம் நபி ஸல் அவர்கள் நான் இறந்ததற்கு பிறகு என்னுடைய முகத்தை பார்க்காமல் இஸ்லாத்தை பின்பற்ற கூடிய என்னுடைய சகோதர்களை நினைத்து அழுகிறேன் என்று சொல்லியுள்ளார்களே அது ஏன் கூறினார்கள்?


நபி ஸல் அவர்களின் அருகில் கூடே உள்ளவர்கள் தோழர்கள்,


பின்வரும் உம்மத் சகோதரர்கள்.


சல்மான் பின் ஃபார்சியை ஏன் என்னுடைய குடும்பம் என்று சொல்லி இருக்க வேண்டும்.



என்னுடைய குடும்பம் என்றால் = இஸ்லாமில் என்னுடைய குடும்பம்



மேலும் ஒரு சில நிகழ்வில் என்னுடைய குடும்பம் என்றும் சொல்லியுள்ளார்கள்.


அதுவேண்டுமென்றால் உண்மையாக வாரிசு அடிப்படையில் வரக்கூடிய குடும்பம் என்று சொல்லலாம்.




சல்மான் பின் ஃபார்சியை என்னுடைய குடும்பம் என்று சொல்ல காரணம் இஸ்லாமில் அவர் பண்ணின தியாகத்திர்க்காக என்னுடைய குடும்பத்தில் சேர்ந்துவிட்டார் என்று பொருள் எடுத்து கொள்ளலாம்.


எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.








அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸதகா (ஜகாத்) கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் பின் அல்-வலீத் மற்றும் அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் ஆகியோர் (ஜகாத் தர) மறுக்கின்றனர் என்று கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இப்னு ஜமீல் ஏழையாக இருந்தார்; அல்லாஹ்வும் அவனது தூதரும் அவரைச் செல்வந்தராக்கினார்கள் என்பதைத் தவிர, (ஜகாத் தர மறுப்பதற்கு) அவரிடம் குறை காண வேறெதுவும் இல்லை. ஆனால் காலித், (அவர் விஷயத்தில்) நீங்கள் அநியாயம் செய்கிறீர்கள். அவர் தமது கவசங்களையும் போர் சாதனங்களையும் அல்லாஹ்வின் பாதையில் (அறக்கொடையாகத்) தடுத்து வைத்துவிட்டார். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப், அல்லாஹ்வின் தூதருடைய சிறிய தந்தையாவார். எனவே, அது (ஜகாத்) அவர்மீது கடமையாகும்; அதனுடன் அது போன்றதொரு மடங்கும் (உள்ளது)."



ஸஹீஹுல் புகாரி : 1468



இந்த ஹதீதில் ஜக்காத்  குடும்பத்தாருக்கு  ஒரு விதமாகவும் ஏழையாக இருந்தவருக்கு வேறு விதமாகவும் நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.




செல்வம் எப்படி பட்டது என்பது பற்றி (புஹாரி =6441,2842,6427) இல் முன்பே பார்த்தோம்.


அல்லாஹ்வின் வழியில் செல்வத்தை செலவழிக்கும் முறை  என்பது தர்மம் ஆகும்.


அந்த செல்வத்தை   உயிர் தொண்டைகுழியை அடையும் போது செய்வது?


தர்மமாக ஏற்றுக்கொள்ளபடமாட்டாது..........



அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எந்த வகையான தர்மம் சிறந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள்: "சிறந்த தர்மம் என்பது, நீர் உடல் நலத்துடனும், (தமது செல்வத்தின் மீது) கஞ்சத்தனம் கொண்டவராகவும், செல்வந்தராக ஆகவேண்டும் என்று ஆசைப்படுபவராகவும், வறுமை வந்துவிடுமோ என்று அஞ்சுபவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதாகும். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள், இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்' என்று நீர் கூற ஆரம்பிக்கும் (மரணத்)தருவாய் வரை தர்மம் செய்வதைத் தாமதப்படுத்தாதீர்கள்; ஏனெனில், அந்த நேரத்தில் அந்தச் சொத்து (உண்மையில்) இன்னாருக்குரியதாக (அதாவது உங்கள் வாரிசுகளுக்குரியதாக) ஆகிவிட்டிருக்கும்."



ஸஹீஹுல் புகாரி : 2748



மரண தருவாயில் அந்த சொத்து வாரிசுதாரர்களுக்கு வந்துவிடும்.



ஸஅத் பின் அபி வக்காஸ் ரலி அவர்கள் நோய் வாய் பட்டிருக்கும் போது தர்மம் செய்வது பற்றி நபி ஸல் அவர்களிடம் கேட்கிறார்கள்.



ஆனால் நபி ஸல் சொன்ன பதில்.



ஸஃது பின் அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:


"விடைபெறும் ஹஜ்ஜின் ஆண்டில் எனக்கு ஏற்பட்ட கடுமையான நோயின் காரணமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். நான் (அவர்களிடம்), 'எனக்கு நோய் முற்றிவிட்டது என்பதைத் தாங்கள் காண்கிறீர்கள். நான் செல்வந்தன். எனக்கு ஒரு மகளைத் தவிர வேறு வாரிசு இல்லை. எனவே, என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'கூடாது' என்றார்கள். 'பாதியையாவது (செய்யலாமா)?' என்று கேட்டேன். அதற்கும் 'கூடாது' என்றார்கள்.


பிறகு, 'மூன்றில் ஒரு பங்கு (வேண்டுமானால் செய்யலாம்); அந்த மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான் (அல்லது பெரியது). உன் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக நீ விட்டுச் செல்வதை விட, அவர்களைச் செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். 



ஸஹீஹுல் புகாரி : 1295
















அல்லாஹ் குர் ஆனில் செல்வத்தை குறித்து கடுமையாக எச்சரிக்கிறான்.


நபி ஸல் அவர்களும் தெளிவாக கூறிவிட்டார்கள்.


அப்படி இருந்தும் ஏன் முஸ்லீங்களுக்கு மத்தியில் செல்வத்தின் மீது இப்படி ஆர்வம் வந்தது.



இஸ்லாமில் கருத்து வேறுபாடு என்பது இப்போது வந்ததல்ல அது ஹுதைஃபா பின் அல்-யமான் காலத்திலே வந்துவிட்டது.


 

ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

    "இன்றைய நயவஞ்சகர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவர்களை விட மோசமானவர்கள். அக்காலத்தில் அவர்கள் (தங்கள் நயவஞ்சகத்தை) மறைத்து வந்தார்கள்; ஆனால் இன்றோ அவர்கள் வெளிப்படையாகச் செயல்படுகிறார்கள்."



ஸஹீஹுல் புகாரி : 7113



இப்போது உள்ள கருத்து வேறுபாடு என்பது உச்சம்.


மனிதர்கள் குர் ஆனின் வார்த்தையை கேட்கவே தயாராக இல்லை.......


முஸ்லீங்களாகிய நாம் குர் ஆனில் கூறப்படும் சட்டங்களை எடுத்து செயல்படுத்தினாலே அல்லாஹ் நமக்கு கூறின செயலை செய்துவிட்டோம் என்று முஹ்மீன்களுக்கு திருப்த்தி வந்துவிடும் மீதி செயல்கள் அல்லாஹ்வை கொண்ட காரியங்கள்.


முஸ்லீங்களுக்கு மத்தியில் குர் ஆனை தவிர மீதி எல்லா காரியங்கலிலும் சட்டம் எடுத்துக்கொள்கிறோம்.



நீங்கள் எங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாம்.



நபி ஸல் அவர்கள் சொன்ன ஹதீதும் இஸ்லாம்தானே அதிலிருந்து சட்டம் எடுத்தால் என்ன தவறு என்று?



அல்லாஹ் குர் ஆனில் கூறுகிறான் உங்களிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் அல்லாஹ்வுடைய கயிறை பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான் ஏன் என்று புரியவில்லையா?


இல்லையென்றால் மக்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு இல்லை என்று இன்னும் நினைத்து கொண்டு இருக்கிறீர்களா?



நபி ஸல் அவர்கள் காலத்தில் யூதர்களுக்குள் நடந்த பிரச்சனைக்கு தவ்ராத்திலிருந்துதான் யூதர்களுக்கு நிறைவேற்றினார்கள்.


ஏன் குர் ஆனில் இருந்து நிறைவேற்ற வேண்டியதானே.........



ஏன் செய்யவில்லை?



ஏனென்றால் குர் ஆனிலும் அதே சட்டம் தான்.......


குர் ஆனும், தவ்ராத்தும் ஒன்றுதான்.....


யூதர்களுக்கு ஏன் அவ்வாறு செய்தார்களேன்றால் அவர்களுக்கு தவ்ராத்தின் மீது நம்பிக்கை அதனால் அவ்வாறு செய்தார்கள்.


💓தீனின்💓 மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினாலதான் நபி ஸல் அவர்களை படிக்க சொல்லும்போது அந்த ஒரு பகுதி வந்ததும் மறைத்து விட்டு படித்தனர்.



அதனால்தான் நாங்கள் முன் ஒரு பதிவில் கூறினோம்

(தீனும், அக்கீதாவும்) ஒன்றில்லை............




இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


விபச்சாரம் செய்த ஒரு யூத ஆணையும் பெண்ணையும் நபி (ஸல்) அவர்களிடம் (யூதர்கள்) கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் யூதர்களிடம், "இவ்விருவர் விஷயத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நாங்கள் அவர்களின் முகங்களைக் கறுப்பாக்கி, அவர்களை அவமானப்படுத்துவோம்" என்று கூறினர்.


நபி (ஸல்) அவர்கள், *"ஃபஃதூ பித்-தவ்ராதி ஃபத்லூஹா இன் குந்தும் ஸாதிகீன்"* (நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதனை ஓதுங்கள்) (அல்குர்ஆன் 3:93) என்று கூறினார்கள்.


அவர்கள் (தவ்ராத்தைக் கொண்டு) வந்தனர். தங்களில் (மார்க்க அறிஞராக) பொருந்திக்கொண்ட ஒருவரிடம், "ஏ ஒற்றைக் கண்ணரே! ஓதுவீராக!" என்று கூறினர். அவர் ஓதினார். (ரஜ்ம் தொடர்பான) ஒரு இடத்தை அடைந்ததும், அதன் மீது தன் கையை வைத்துக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள், "உம் கையை உயர்த்தும்!" என்றார்கள். அவர் தன் கையை உயர்த்தியதும், அங்கே கல்லெறிந்து கொல்லும் தண்டனைக்குரிய (ரஜ்ம்) வசனம் தெளிவாகத் தெரிந்தது.


உடனே அவர், "முஹம்மதே! அவர்கள் இருவர் மீதும் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) உண்டுதான். ஆயினும், நாங்கள் எங்களுக்குள் அதை மறைத்து வருகிறோம்" என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவ்விருவருக்கும் (கல்லெறி தண்டனை நிறைவேற்ற) கட்டளையிட்டார்கள்; இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டனர். அப்போது அந்த ஆண், அந்தப் பெண்ணின் மீது (விழும் கற்களைத் தடுப்பதற்காக) அவள் மீது சாய்ந்து கொள்வதை நான் பார்த்தேன்.



ஸஹீஹுல் புகாரி : 7543





நபி ஸல் அவர்கள் யூதர்களுக்கு நடந்த பிரச்சனைகளை தவ்ராத் சட்டத்தின் மூலம் தீர்த்து வைத்ததுதான் 💓தீன் 💓



மீதி விஷயங்களை நம்மளுடைய அக்கீதாவைதான் யூதர்களும் பின்பற்றவேண்டும்.




முஸ்லீம்கள் மத்தியில் அப்படி இல்லையே என்று நாம் யாரும் நினைக்க வேண்டாம்.



நாம் மக்கள் முன்பு அல்லாஹ் குர் ஆனில் இப்படி கூறுகிறான் இதை செய்யாதீர்கள் என்று சொல்லும்போது அவர்கள் பதில் ஏதும் சொல்லாமல் 🫢அமைதியாக 🫢உள்ளார்கள்.


இந்த இடம்தான் ஃபாஸிக்கீன்கள் தொடங்க கூடிய இடம்.



இன்றைய கால கட்டம் அப்படி இல்லை (ஃபாஸிக்கீன்) வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.



ஒருவருக்கு சூரா ஃபாத்திஹாவிற்கு அர்த்தம் புரிந்தால்


மீதி 😍 குர் ஆன் 😍 அழகாக புரியும்.



புரிந்தால் மட்டுமே போதாது.



செயல் முறை மட்டுமே இஸ்லாமை அழகு படுத்தும்.

Comments