ஷைத்தான்கள் ரமளானில் விலங்கிடபடுகின்றனவா? 2

ஷைத்தான்கள் ரமளானில் விலங்கிடபடுகின்றனவா?  2 



பாகம் 2



ரமலானில் நரகத்தின் வாசல் மூடப்படுகின்றன, சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.



அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்."



ஸஹீஹுல் புகாரி : 1899



உண்மையாகவே நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றனவா?


சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றனவா?



ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டால் ஷைத்தான்களுடைய இடைஞ்சல் இருக்காதல்லவா?


 அப்படியென்றால் பின்வரும் ஹதீதில் நபி ஸல் அவர்கள் மனிதன் தீய செயல்கள் செய்ய முடியும் அவன் அதை கட்டுப்படுத்தாதவரை அவன் நன்மை செயலை அடைய முடியாது என்று ஏன் கூறுகிறார்கள்?



அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் பொய்யான பேச்சையும், அதன்படி நடப்பதையும் கைவிடவில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை."


ஸஹீஹுல் புகாரி : 1903



அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "யார் பொய்யான கூற்றுக்களையும் (அதாவது பொய் சொல்வது), தீய செயல்களையும், பிறரிடம் தீய வார்த்தைகள் பேசுவதையும் கைவிடவில்லையோ, அவர் தமது உணவையும் பானத்தையும் விடுவதில் (நோன்பு) அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை."


ஸஹீஹுல் புகாரி : 6057




ஷைத்தான்கள் விலங்கிடபடுகிறது என்றால் ஒரு மனிதன் தீய செயல்களையும், பிறரிடம் தீய வார்த்தைகளையும் எப்படி பேச முடியும்?



இது யாரவது சிந்தித்தீர்களா?




இங்கு ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்றால் ரமலான் மாதம் பொதுவாக எல்லாரும் நோன்பு வைப்பார்கள்.....

தொழுகுவார்கள்......


ஆகவே இப்படிப்பட்ட நிலையிலும் தீய செயல்கள் செய்யக்கூடிய மக்கள் தீய செயல் செய்வதற்காக உள்ள நேரமோ? சூழ்நிலையோ? அவர்களுக்கு அமையாது.


இது நபி ஸல் அவர்களுக்கு அவர்களின் செயல் காரணமாக கொடுத்த பரிசு அல்லாஹ்.


அப்படிப்பட்ட நோண்பில் நாம் நமக்காக என்ன மெருகேற்றுகிறோம் என்பது அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பதாகும்.



ஆகவே அந்த சூழ்நிலையிலும் ஒருவர் தீய செயல் செய்கிறார்கள் என்றால் அவருக்குத்தான் நோன்பு வைத்து அதன் நற்பலன் அவர் அடையமாட்டார் என்று பொருள்.


ரமலான் மாதத்தில் உலகில் ஆடல், பாடல் இடங்கள் மூடப்பட்டு விடுமா?


இல்லை. 


இல்லையன்றால் மதுபான கடை அடைத்து விடுவார்களா?


இல்லை. 


விபச்சாரம் செய்யும் இடம் மூடி விடப்படுமா?


இல்லை. 


 ஷைத்தான்கள் உண்மையில் சங்கிலியாலோ, கயிறாலோ கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்று சிந்தித்தால் அது தவறு அவர்கள் கட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை!


 அப்படி இருந்தால் நாங்கள் இங்கு கூறிய ஹதீத்கள் முரண்பாடாகும்.


ஆகவே ஷைத்தான் சாதாரணமானவன் இல்லை நம் முன்னோரான ஆதம் அலை அவர்களையும் அவ்வா அலை அவர்களையும் நல்ல விஷயம் கூறி கெடுத்தவன்


ஆகவே அவனையோ அவனுடைய கூட்டத்தாரையோ சாதரணமாக என்ன வேண்டாம்......



இப்லீஸ் மனித வாழ்வில் நல்லவர்களுக்கு (நன்மை நாடிகிறவர்களுக்கு )நன்மை நாடிவனாகவும்,


தீய செயல் செய்பவனுக்கு தோழனாகவும் வருவான்.



"நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் ஓடுவதைப் போல் ஓடுகிறான். மேலும், அவன் உங்கள் உள்ளங்களில் ஏதேனும் (தீய எண்ணத்தை) போட்டுவிடுவானோ என்று நான் அஞ்சினேன்" என்று கூறினார்கள்.


ஸஹீஹுல் புகாரி : 2038, 2039,2035, 3101, 3281, 7171,6219,



ஷைத்தான் மனிதனின் உடலில் இரத்தம் ஓடுவதைப் போல் ஓடுகிறான்



ஆகவே இதிலிருந்து நாங்கள் சொல்லக்கூடிய விஷயம் என்னவென்றால் பசி(நோன்பு வைப்பதன்) மூலம் ரத்த ஓட்டத்தை தடை செய்யுங்கள்.


இது ரமலான் மாதத்தில் மட்டும் இல்லை மீதி உள்ள மாதங்களிலும்............



நோன்பு வைப்பதன் மூலம் தான் ஷைத்தானை தடை செய்யலாம் ஆகவே குர் ஆனில் நோன்பை குறித்து கூட...........


அந்த  நோன்பின் நன்மை அறிந்தால் மக்களுக்கு நன்மையாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்.


ஆகவே நாம் வைக்கக்கூடிய நோன்பை விட நம்மளுடைய "தக்வா" தான் முதலில் இறைவனிடத்தில் சேரும்.


நாம் நோன்பு வைக்கும்போது சில காரியங்கள் செய்யக்கூடாது என்ற வரைமுறையை நாம் பேணுவதுதான் அல்லாஹ்வின் மீது வைத்துள்ள பயம்.



ஆகவே ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவர்கள் தேடிக்கொள்ளட்டும்.





இனிமேல் ஷைத்தானுடைய செயல்களை பார்க்கலாம்.


அவனை சாதாரணமாக எண்ணாமல் ஒவ்வொரு நொடியும் கவனித்து கொண்டே இருக்க வேண்டும்.



கணவன் மனைவிக்கு இடையே ஷைத்தான்.


ஒரு குடும்பம் தொடங்கும் முதல் இடம் குழந்தைகள் தான்

அக்குழந்தைகள் பிறப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் எல்லாம் நாம் எடுத்து இருப்போம்.


அக்குழந்தைகள் ஷைத்தானுடைய தீங்கில் மாட்டி விடகூடாது என்று பெரும்பாலான நபர்களிடம் எண்ணம் இல்லை 


அது யாருக்கு இருக்கிறதோ.



அவர்கள் இந்த துவாவை ஓதிக்கொள்ளட்டும்.



இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவரேனும் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளும்போது,


*‘பிஸ்மில்லாஹ்! அல்லாஹும்ம ஜன்னிப்னஷ் ஷைத்தான, வஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்தனா’*


(பொருள்: அல்லாஹ்வின் பெயரால். யா அல்லாஹ்! ஷைத்தானிடமிருந்து எங்களை விலக்கி வைப்பாயாக; மேலும் எங்களுக்கு நீ அருளும் (சந்ததியிலிருந்தும்) ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!)


என்று கூறினால், பிறகு அவ்விருவருக்கும் ஒரு குழந்தை விதிக்கப்பட்டால், அக்குழந்தையை ஷைத்தான் ஒருபோதும் தீங்கு செய்யமாட்டான்.”



ஸஹீஹுல் புகாரி : 141



மக்களாகிய நாம் இப்லீஸின் அவனின் படைகளையும் அவனின் செயலையும் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும்.



அதனால்தான் முதலில் நபி ஸல் அவர்கள் ஒருவருடைய ஆன்மாவை கட்டுப்படுத்த சொன்னார்கள்.



கோபம், கவலை, கஞ்சத்தனம், துக்கம், சோம்பல் இதுபோன்ற விஷயத்தில் கூட


 நபி ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் துஆ கேட்டு இருக்கிறார்கள் ..........




அடுத்து தொழுகையில் ஷைத்தானுடைய செயல்.


 தொழுது கொண்டிருக்கும்போது, ஒருவருக்கு முன்னால் யாரேனும் கடக்க முயன்றால் அவரைத் தடுக்கட்டும். அவர் (விலக) மறுத்தால் அவருடன் சண்டையிடட்டும்! ஏனெனில், நிச்சயமாக அவன் ஒரு ஷைத்தான்."


ஸஹீஹுல் புகாரி : 509



அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அதான் சொல்லப்படும்போது, அதானொலியைக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் சப்தத்துடன் காற்றைப் பிரித்தவாறு புறமுதுகிட்டு ஓடுகிறான். அதான் முடிவடைந்ததும் அவன் திரும்பி வருகிறான். இகாமத் சொல்லப்படும்போது மீண்டும் புறமுதுகிட்டு ஓடுகிறான், அது முடிவடைந்ததும் அவன் மீண்டும் திரும்பி வந்து, மனிதனின் இதயத்தில் (அவனது தொழுகையிலிருந்து அவனது கவனத்தைத் திசை திருப்புவதற்காக) அவன் ஊசலாட்டத்தை ஏற்படுத்தும் வரை, தொழுகைக்கு முன் அவன் நினைத்துப் பார்க்காத விஷயங்களை அவனுக்கு நினைவூட்டுகிறான், அதனால் அவன் எவ்வளவு தொழுதான் என்பதை அவன் மறந்து விடுகிறான்."


ஸஹீஹுல் புகாரி : 608



 

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையில் அங்குமிங்கும் பார்ப்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அது ஒரு பறித்தலாகும்; அடியாரின் தொழுகையிலிருந்து ஷைத்தான் அதைப் பறித்துக்கொள்கிறான்" என்று பதிலளித்தார்கள்.



ஸஹீஹுல் புகாரி : 751




அடுத்து தன்னுடைய சகோதரனிடம் எப்படி இருக்க வேண்டும்.



எந்த சூழ்நிலையிலும் நம் சகோதரனிடம் ஆயுதம்...............இருக்கவே கூடாது.



புஹாரி


7072. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்ய வேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி)விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்து விடக்கூடும்.




இரவு நேரத்தில், நம்மையும்,குழந்தைகளையும் எப்படி வைத்து இருக்க வேண்டும்.


புஹாரி



5623. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


‘இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால்’ அல்லது ‘அந்திப் பொழுதாகி விட்டால்’ உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல) விட்டுவிடுங்கள்.


மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். (அப்போது) அல்லாஹ் வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்.


உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின்மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள்.



உறங்கி எழுந்த பிறகு என்ன செய்ய வேண்டும்.



புஹாரி

     

3295. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் இரவில் தங்குகிறான்.




கொட்டாவி விட்டால் என்ன செய்ய வேண்டும்.



புஹாரி


3289. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:


கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்படும்போது தம்மால் முடிந்தவரை அவர் அதைக் கட்டுப் படுத்திக்கொள்ளட்டும். ஏனெனில், யாரேனும் யிஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான்.



ஒரு மனிதர் கோபப்படும்போது என்ன செய்ய வேண்டும்.



புஹாரி


3282. சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:


நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் ஏசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரது கழுத்து நரம்புகள் புடைத்துவிட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்,  ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்’ (அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தான்) என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற் பட்டுள்ள கோபம் போய்விடும்” என்று கூறினார்கள்.


ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘‘நபி (ஸல்) அவர்கள், ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக்கோருவீராக!› என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள். அதற்கு அவர், ‘‘எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?” என்று கேட்டார்.



ஆயத்துல் குர்ஸீ’யை ஓதுங்கள் என்று ஷைத்தான் இவ்வளவு அழகான வார்த்தையில் கூறுவனா?


புஹாரி


3275,2311 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமளானின் ஸகாத் பொருளைப் பாதுகாத்தி டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே நான் அவனைப் பிடித்துக்கொண்டேன்; ‘‘உன்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்...)


இறுதியில் அவன், ‘‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது  ஆயத்துல் குர்ஸீ’யை (2:255) ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டே இருப்பார். காலை நேரம் வரும்வரை ஷைத்தான் உங்களை நெருங்கமாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) ‘‘அவன் பொய்யனாயிருந்தும், உம்மிடம் உண்மையே பேசியுள்ளான். அவன் ஷைத்தான்தான்” என்று கூறினார்கள்.




மனிதனிடம் இறைவனை படைத்தது யார் என்று?


ஷைத்தான் கேட்க கூடிய கேள்வி




புஹாரி


3276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


உங்களில் ஒருவரிடம் ஷைத்தான் வந்து, ‘‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?” என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘‘உன் இறை வனைப் படைத்தவர் யார்?” என்று கேட் பான். இந்தக் கட்டத்தை அவன் அடையும் போது, அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும்! (இத்தகைய சிந்தனை’லிருந்து) விலகிக்கொள்ளட்டும்!


இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.




நபி ஸல் அவர்களை கனவில் காணமுடியுமா?



புஹாரி


6993. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார். (ஏனெனில்) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.


அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:


“நபி (ஸல்) அவர்களுக்குரிய தோற்றத்தில் (அவர்களின் அங்க அடை யாளங்களுடன்) அவர்களைக் கண்டால் தான் (நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கருதப்படும்)” என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.



இதனால் இப்போது ஒருவர் நான் நபி ஸல் அவர்களை கனவில் கண்டுள்ளேன் என்று ஒருவர் கூற முடியுமா?



அவர் அப்படி கூறினால்


அவர் உலக ஆகாயத்திற்கு எதையாவது அடைய அதை கூறுவார்.


ஆகவே நாம் அதை புரிந்து கொள்ளலாம்.



யாரேனும் பதவி கேட்டு வந்தால் கொடுக்கக்கூடாது என்ற விஷயத்தை நபி ஸல் அவர்கள் பின்பற்றினார்கள்.



எந்த உலக ஆகாயம் இல்லாமல் ஒருவர் நபி ஸல் அவர்களை கனவில் கண்டேன் என்று கூறினால் அது அவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடைப்பட்ட விஷயமாக மாறிவிடும்.


அதனால் அது அவருடைய தனிப்பட்ட அமல் சம்பந்த பட்ட விஷயமாகும்.



புஹாரி


6995. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ் விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, எவரேனும் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது. மேலும், ஷைத்தான் என் (நபி ஸல் )உருவத்தில் காட்சி தரமாட்டான்.


இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.



சூனியம்...............?



ஒருவர் சூனியம் இருக்கிறது என்று நம்புகிறார்.


ஒருவர்  சூனியம் இல்லை என்று நம்புகிறார்.



சூனியம் நபி ஸல் அவர்களுக்கு செய்யபட்டது அதை அல்லாஹ் காப்பாற்றி விட்டான்,


சூனியம் குறித்த முரண்பாடு என்பது இந்த ஹதீதை ஆழமாக சிந்திக்காததினால் வந்த விளைவு  ஆகும்.



சூனியம் என்பதை விளக்க மட்டுமே எங்களுக்கு பெரிய பதிவு தேவைப்படுகிறது.


அதனால் இங்கே சூனியம் குறித்து பேச வேண்டாம்


இப்போது ஒருவர் சூனியம் இருக்கிறது என்று நம்பினால்


சூனியத்தால் வைக்க கூடிய செயலை விட இறைவனுக்கு ஆற்றல் இருக்கிறது என்று நம்ப வேண்டும்.



புஹாரி


5765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவி யரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.


-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-


(ஒருநாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக்கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்துகொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், ‘‘இந்த மனிதரின் நிலையென்ன?” என்று கேட்டார். மற்றவர் ‘‘சூனியம் செய்யப்பட்டுள்ளார்” என்று சொன்னார்.


அதற்கு அவர், ‘‘யார் அவருக்குச் சூனியம் வைத்தார்?” என்று கேட்டார். மற்றவர், ‘‘யூதர்களின் நட்புக் குலமான ‘பனூ ஸுரைக்’ குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்” என்று பதிலளித்தார். அவர், ‘‘எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்க, மற்றவர், ‘‘சீப்பிலும் சிக்கு முடியிலும்” என்று பதிலளித்தார். அவர், ‘‘எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்க, மற்றவர், ‘‘ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் ‘தர்வான்’ குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.


பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளைஉறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பிவந்த) நபி (ஸல்) அவர்கள், ‘‘இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்சமரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன” என்று சொல்லிவிட்டுப் பிறகு ‘‘அந்தப் பேரீச்சம்பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது” என்றும் கூறினார்கள்.


நான், ‘‘தாங்கள் (பாளைஉறையை) ஏன் உடைத்துக்காட்டக் கூடாது?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திó ருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை” என்று சொல்லிவிட்டார்கள்.


இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.



இதிலும் நபி ஸல் அவர்கள் அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான் கூறிவிட்டார்கள்.



இதை விளக்க வேண்டிய அவசியம் இல்லை.



இப்லீஸ் தாக்கம் எப்படி இருக்கிறது என்ற விஷயத்தை கூறவே இந்த பதிவு



மனித குலத்தின் முதல் மனிதருக்கே இப்லீஸின் குழப்பம் இருந்தது என்றால்


இங்கு நம்முடைய நிலமை என்ன?



இங்கு எல்லாரும் பிறக்கும் போது தூய மார்க்கத்தில் பிறக்கிறோம் என்று நினைக்கிறோம்.


சில பேருக்கு ஒரு குழந்தை பிறக்கும் போது இஸ்லாமில் பிறக்கிறது என்ற ஹதீத் ஞாபகம் வரும்!


சில பேருக்கு பிறக்கும் குழந்தையின் இடுப்பில் ஷைத்தான் குத்துகிறான் அதனாலே அது அழுகிறது என்ற ஞாபகம் வரும்.


இரண்டும் முரண்பாடு இல்லை.


குழந்தை பிறக்கும் போது இஸ்லாத்தில் தான் பிறக்கிறது  அதன் பின்பு ஷைத்தான் தீண்டுகிறான் (நபி ஈஸா அலை அவர்களை தவிர.............)


அதனால் அவனை சாதாரணமாக எண்ண வேண்டாம்.



தூங்கும் முன்...,..................



புஹாரி


1142. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு” என்று கூறி (உங்களை விழிக்க விடாமல் உறங்கவைத்து)விடுகிறான்.


அவர் (அவனது கூற்றை ஏற்காமல்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (இரவுத் தொழுகையோ ஃபஜ்ரோ) தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகின்றன. அவர் உற்சாகத்துடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையெனில், மந்தமான மனநிலையுடனும் சோம்பலுட னும் காலைப் பொழுதை அடைவார்.





இப்லீஸை குறித்து அவனுடைய குழப்பதை குறித்து ஆழ்ந்து சிந்தித்தால்தான் அவனிடம் எச்சரிக்கையாக இருக்க முடியும்............

Comments