பாவம் செய்பவர்கள் யார் 3
இந்த தலைப்பில் அல்லாஹ் பாவம் என்று சொல்லக்கூடிய (وَ الْاِثْمَ,الْاِثْمَ,اَثِيْمٍۙ,اَثِيْمٍ, اِثْمٌ کَبِيْرٌ,بِاِثْمِىْ وَ اِثْمِكَ,الْاَثِيْمِ, وَّلَا تَاْثِيْمًا, كَبٰٓٮِٕرَ الْاِثْمِ,طَعَامُ الْاَثِيْمِ, اِثْمًا عَظِيْمًا,) நிகழ்கால மற்றும் தனி நபரை பேசக்கூடிய வசனம்.
இந்த வார்த்தையை பாவம் செய்தவர்களை அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்லாஹ்வே சொல்லக்கூடிய வார்த்தை போன்று இருக்கும்.(الْاِثْمَ)
இந்த (الْاٰثِمِيْنَ)வார்த்தைகள் பாவம் செய்தவர்களே அவர்களே.... தங்களுக்கு தாங்களே பேசக்கூடிய வார்த்தை போன்று இருக்கும் .
மேலும் ஒரு வார்த்தை (الْحِنْثِ الْعَظِيْمِ,الْحِنْثِ,) என்று இருக்கிறது.
இந்த الْحِنْثِ என்ற வார்த்தையும் الْاِثْمَ என்ற ஒரு வார்த்தையும் ஒன்றுதான்
மறுமைநாளில் மனிதனுக்கு கொடுக்கக்கூடிய உணவு
ஒரு சூராவில் பாவத்திற்கு ஜக்கூம் என்ற கள்ளிமரம் உணவிற்கு (الْحِنْثِ) என்றும்
ஒரு சூராவில் பாவத்திற்கு ஜக்கூம் என்ற கள்ளிமரம் உணவிற்கு (الْاِثْمَ) என்றும் வருகிறது.
அதனால்தான் الْحِنْثِ என்ற வார்த்தையும் الْاِثْمَ வார்த்தையும் ஒன்று என்று கூறுகிறோம்.
இந்த மொத்த வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் ( பாவம், குற்றம், குற்றவாளி, பெரிய பாவம், பகிரங்கமான பாவம்,தெளிவான பாவம்,) மொழிபெயர்ப்புகளில் வரும்.
இப்போது (الْاِثْمَ) என்று சொல்லக்கூடிய பாவத்தின் வகைகளை என்னவென்று பார்க்கலாம்.
எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.
இந்த வார்த்தைகளை கொண்ட பாவங்களையெல்லாம் மனிதன் மிகவும் சோம்பலாக நினைத்து கொள்கிறான்.
மனிதன் இந்த பாவங்களை செய்வதால் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று எண்ணிக்கொள்கிறான்.
அப்படி மனிதன் எண்ணுவதால் இந்த வார்த்தை கொண்ட பாவங்கள் மிகவும் சாதாரணமாக தெரிகிறது.
ஆகவே வார்த்தைகளை கொண்ட வசனத்தை தங்கள் முன்பு காட்டியுள்ளோம்.
மறுமை கொண்டுள்ள செயல்கள் எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.
“என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்; பாவங்கள்(وَ الْاِثْمَ) நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே; நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
( 7:33)
பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் (اَثِيْمٍۙ) மீதும் (ஷைத்தான்கள் ) அவர்கள் இறங்குகிறார்கள் (26:222)
அல்லாஹ் வட்டியை அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை பெருகச் செய்வான்; நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் (اَثِيْمٍ) எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (2:276)
அல்லாஹ்வின் வசனங்களை
பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் (اَثِيْمٍۙ) யாவருக்கும் கேடுதான். (45:7)
மதுபானத்தையும், சூதாட்டத்தையும்
பெரும் பாவம் ( اِثْمٌ کَبِيْرٌ) ( 2:219)
சாட்சியங்களை மறைத்தால் பாவிகளாயிவிடுவோம்“(الْاٰثِمِيْنَ (5:106)
ஒன்றுக்கு மேற்பட்டவர்களை கூறுவதற்கு உள்ள வார்த்தை (الْاٰثِمِيْنَ)
இல்லாத ஒன்றை செய்ததாக சொல்லிய பழி ஒரு பாவம் (الْاِثْمِ) (24:11)
என்னுடைய பாவத்தையும் உன்னுடைய பாவத்துடன் (بِاِثْمِىْ وَ اِثْمِكَ) நீ சுமந்து கொண்டு வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன். (5:29)
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே ( اِثْمًا عَظِيْمًا) கற்பனை செய்கின்றார்கள். (4:48)
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக (اِثْمٌ) இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம்.(49:12)
நீங்கள் ஒரு மனைவிக்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் - அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், ( وَّاِثْمًا مُّبِيْنًا,( 4:20)
ஒருவர் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி அவரை நோவினை செய்கிறார்களோ, அவர்களுக்கு பாவம் (وَّاِثْمًا) ஆகும். ( 33:58)
மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள், பேசினால் பாவம்.(بِالْاِثْمِ)
(58:9)
இது வரை (اِثْمٌ) என்ற வார்த்தை எந்தெந்த பாவத்தை குறிக்கிறது என்று பார்த்தோம்.
இந்த மொத்த பாவங்கள் எல்லாமே தெரிந்து செய்பவர்களுக்குதான்.
அப்படிப்பட்டவர்களுக்கு மறுமையில் நரகத்தில் கொடுக்க கூடிய நற்செய்திகள்.
(சத்தியத்தை புறக்கணித்துப்) பொய்க் கற்பனை செய்யும் பாவிகள் (اَثِيْمٍۙ) யாவருக்கும் கேடுதான். (45:7)
தன் மீது ஓதிக்காட்டப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கேட்கிறான்; பின்பு பெருமையடித்துக் கொண்டு அவன் அதைக் கேளாதது போல் (தன் நிராகரிப்பில்) பிடிவாதம் செய்கிறான்; அ(த்தகைய)வனுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயம் கூறுவீராக.
(45:8)
வெளிப்படையான பாவத்தையும் (الْاِثْمِ), அந்தரங்கமான பாவத்தையும் ( الْاِثْمِ) விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
(6:120)
முன்பே நாங்கள் கூறினோம் இப்பேர்ப்பட்ட பாவிகளுக்கு மறுமையில் கொடுக்கக்கூடிய உணவு, பானம் என்னவென்று அல்லாஹ்வே கூறுகிறான்.
இந்த பாவிகளுக்குரிய (طَعَامُ الْاَثِيْمِ ۛ)உணவு;
(44:44)
நிச்சயமாக, ஜக்கூம் (கள்ளி) மரம்
( 44:43)
அவர்களுக்கு கொடுக்கப்படும் நீர் அது உருக்கப்பட்ட செம்பு போல் இருக்கும்; வயிறுகளில் அது வெந்நீர் கொதிப்பதைப் போல் கொதிக்கும்.
(44:45)(44:46)
அந்த பாவம் செய்தவனை “பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
(44:47)
“பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள் என்று சொல்லப்படும். ( 44:48)
இந்த மேலே கொடுக்கப்பட்ட பாவத்திற்காக கொடுக்கப்படவிருக்கிற வேதனையை அல்லாஹ் கூறுகிறான்.
அதே பாவம் செய்து விட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழக்க தேவை இல்லை.
அல்லாஹ்வின் அடியார்களே அவன் கூறின நற் செயல்களை செய்து வாருங்கள்,
ஈமான் கொண்ட மக்களின் செயலை அல்லாஹ் பட்டியல் இடுகிறான்.
அவர்களோடு நாமளும் அதை செய்து வருவோம்,
அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், ( كَبٰٓٮِٕرَ الْاِثْمِ) மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.
( 42:38)
மறுமை நாளில் சொர்க்கவாசிகள் முதலாமானவர்கள் இந்த (تَاْثِيْمًا) பாவங்களை செவியேற்க்கவே மாட்டார்கள்.
மறுமை நாளில் மூன்று வகையாக மக்கள் பிரிந்து விடுவார்கள்.
ஒன்று முதலாமானவர்கள்,இரண்டு வலப்புறத்து தோழர்கள், மூன்று இடப்புறத்தார்கள்
எந்த பாவத்தையும் ( وَّلَا تَاْثِيْمًا) சொர்க்கவாசிகள் செவியிரமாட்டார்கள் (56:25)
அல்லாஹ் குர் ஆனில் பேசக்கூடிய இந்த பாவம் ( الْحِنْثِ الْعَظِيْمِ) செய்யக்கூடியவர்களின் நிலைமையை பற்றி கூறுகிறான்.
இவர்கள்தான் இடத்துப்புறத்தார்கள்...
(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் இருப்பார்கள். (56:42)
அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.(56:43)
(அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
(56:44)
நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
(56:45)
ஆனால், அவர்கள்தான் பெரும் பாவத்தின் ( الْحِنْثِ الْعَظِيْمِ) மீது நிலைத்தும் இருந்தனர்.
(56:46)
மேலும், அவர்கள் “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
(56:47)
“அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
(56:48)
(நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும். (56:49)
“குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.(56:50)
அதற்குப் பின்னர்: “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
(56:51)
ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
(56:52)
இந்த வார்த்தை கொண்ட பாவமும் (الْاَثِيْمِ) ஜக்கூம் மரத்திலிருந்தே புசிப்பார்கள் என்றும் (44:43) இல் கூறப்படுகிறது.
இந்த الْاَثِيْمِ வார்த்தை தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனை பற்றியும் பேசுகிறது.
இந்த الْحِنْثِ வார்த்தை மறுமை நாளில் மொத்தமாக இருக்க கூடிய இடது புறத்தார்களை பற்றி பேசுகிறது.
இதை தாண்டிய பாவம் என்று சொல்லக்கூடிய பெரிய வார்த்தை அல்லாஹ்வுக்கு மகன் உண்டு என்று சொல்வதும், அனாதைகளின் சொத்தை விழுங்ககூடிய பாவமும்,
அல்லாஹ் தனக்கேன ஒரு மகனை எடுத்துகொண்டான் (இந்த) வார்த்தை பெரும் பாவமானதாகும் (كَبُرَتْ) (18:5)
நீங்கள் அநாதைகளின் பொருட்களை தன்னுடைய பொருளை சாப்பிட்டு விடாதீர்கள் - அப்படி சாப்பிடுவது நிச்சயமாக இது பெரும் பாவமாகும் ( حُوْبًا كَبِيْرًا)
(4:2)
மூஸா நபியுடைய உம்மத்தார்களுக்கு இந்த இரண்டு சம்பவங்களுக்குத்தான் அல்லாஹ் வேதனையை கொடுத்தான்.
بِالسُّوْٓءِ =
மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடிய பாவம்.
(அல்குர்ஆன் : 12:53)
وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى =
பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது;
(அல்குர்ஆன் : 6:164)
وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى=
எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.
(அல்குர்ஆன் : 17:15)
Comments
Post a Comment