பாவம் செய்பவர்கள் யார் 4
அல்லாஹ்வுடைய பெருமை மேலாடை தொட்டவர்களும்,
கண்ணியம் என்ற ஆடையை தொட்டவர்களும்
உலகில் கண்டிப்பாக அழிவார்கள், அழிவு இல்லாவிட்டாலும் இழிவாவது இருக்கும்.
பெருமை,கண்ணியம் இந்த இரண்டிலும் பாவம் இரகசியமாகவும் செய்ய முடியும், பகிரங்கமாகவும் செய்ய முடியும்.
இரகசியத்திற்கும்,பகிரங்கத்திற்கும் அல்லாஹ் குர் ஆனில் வேறு வேறாக பெயர் வைத்தது போல் தான் உள்ளது ஏனென்றால் அந்தந்த பாவம் என்று சொல்ல கூடிய அரபு வார்த்தைக்கு பின்பு சொல்லக்கூடிய வரலாற்றுடைய வீரியம் அவ்வளவு பெரிதாக உள்ளது
இந்த தலைப்பில் அல்லாஹ் பாவம் என்று சொல்லக்கூடிய (بِذُنُوْبِهِمْ,بِذَنْبِهٖ,لِذَنْبِكَ,ذُنُوْبِكُمْ,ذُنُوْبَنَا,بِذُنُوْبِ)
பாவங்களை பட்டியல் இடுவோம், இந்த அரபு சொல்லில் நிகழ்கலாம், கடந்தகலாம் வருங்காலம் எல்லாம் ஒன்றாக இருக்கும்,
இந்த வார்த்தைகள் கொண்ட பாவம் குர் ஆனில் பெரிதாக பேசக்கூடிய பாவத்தை இரகசிய தரமாக இருக்கிறது.
உதாரணமாக அல்லாஹ்வின் சட்டத்திட்டங்களை மீரக்கூடிய இடத்திலும் இந்த(ذُنُوْبِهِمْ) என்ற வார்த்தைத்தான்.
இந்த சட்டத்திட்டங்களை மீரக்கூடியது என்பதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் கை வைப்பதுதான்.
இந்த வார்த்தைகளின் முழு விளக்கமும் அல்லாஹ்வே அறிவான்.
இந்த பாவத்தின் வார்த்தை வீரியத்திற்கு கொடுத்த தண்டனை மட்டுமே பட்டியலாக தொகுக்க படுகிறது.
இதில் ஒவ்வொரு வசனத்தையும் அரிஞ்சர்கள் விளக்கத்ததோடு பதிவுகளை பார்த்தோமானால் கடல்பொல் எழுதவேண்டி வரும்.
படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கவே இங்கு வசனங்களை தொகுத்துள்ளோம்.
இந்த வார்த்தைகள் கொண்ட பாவங்கள் மக்கள் بِذُنُوْبِهِمْ செய்தால் அவர்களுடைய இதயங்களின் மீது அல்லாஹ் முத்திரை இட்டுவிடுவான்.
நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் (بِذُنُوْبِهِمْ) காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்,( 7:100)
முத்திரை இடும் அளவுக்கு அப்படி என்ன பாவம் இது
முத்திரை இடக்கூடிய இந்த பாவத்தில் இருந்து பயப்பக்தியுடையவர்கள் அல்லாஹ்விடம் காப்பாற்ற சொல்லி துஆ கேட்பார்களா?
இந்த 3:16 வசனத்தில் பாவமன்னிப்பு பாவம் என்ற ஒன்று வேறு ஒரு வார்த்தை பயன்படுத்தாமல் ஏன் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.
இதற்க்கு முன்னால் கூறப்பட்ட வசனத்தின் ஆழம் அப்படி
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு,( 3:14)
இந்த உலக வாழ்வின் அலங்காரம் பயப்பக்தியுடையவர்களை மயக்கி விடக்கூடாது என்பதற்க்காகவே (3:16) இல் கூறப்பட்டுள்ள துஆ.
இந்த உலக அலங்காரம் முதல் முதலில் இரகசியமான பாவத்தை செய்ய தூண்டும்.
ஃகாரூன் , ஃபிர்அவ்ன், ஹாமான் இவர்களின் மூவருடைய பாவங்களை தனித்தனியாக பேசக்கூடிய இடத்தில் இந்த வார்த்தை பயன்படுத்த படுகிறது.
இந்த மூவருமே பெருமையை அளவுகோலாக பயன்படுத்தி வந்தார்கள்.
இவ்வாறு, நாம் ஒவ்வொருவரையும் அவரவர் செய்த பாவத்தின் (بِذَنْبِهٖ) காரணமாகப் பிடித்தோம்,( 29:40)
ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் (بِذُنُوْبِهِمْ) காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான்
, ( 3:11)
இன்னும் அல்லாஹ் அருள் செய்த (சட்ட திட்டத்)தைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக; அவர்களுடைய மன இச்சைகளைப் பின்பற்றாதீர்கள்; அல்லாஹ் உம்மீது இறக்கிவைத்ததில் சிலவற்றை விட்டும் அவர்கள் உம்மைத் திருப்பிவிடாதபடி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக; (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், சில பாவங்களின் (ذُنُوْبِهِمْ) காரணமாக அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக; ( 5:49)
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் (بِذُنُوْبِهِمْ) காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; (8:52)
மூஸா நபி தெரியாமல் ஒரு பாவம் செய்தார் அல்லாஹ் மூஸா நபியை மன்னிப்பு கேட்க சொன்னன் அந்த பாவம் (لِذَنْبِكَ) இதுதான்.
ஒரு கொலையை தவறுதலாக செய்தார்கள் அல்லவா!
அந்த பாவத்திற்காக பாவமானிப்பு ........
ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக (لِذَنْبِكَ) மன்னிப்புக் கோருவீராக; மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹு (துதி) செய்து கொண்டு இருப்பீராக!
,(40:55)
எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் (ذَنْبِهٖۤ பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
(55:39)
ஜின்கள் பேசக்கூடிய வசனம் (தன் இனத்தை பார்த்து பாவமன்னிப்பு கேட்க சொல்லுகிறது) .
“எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து (ذُنُوْبِكُمْ) உங்களுக்கு மன்னிப்பளிப்பான்
,(46:31)
எனவே மரணிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக; இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை (بِذُنُوْبِ) அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.
(25:58)
எனவே பயப்பக்தியுடையவர்கள் இந்த (ذُنُوْبَنَا) (துனூப்) பாவத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும்.
இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை (ذُنُوْبَنَا) மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள். (3:16)
அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையெல்லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம்; பிறகு அவர்களின் பாவங்களின் (بِذُنُوْبِهِمْ) காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறைகளை உண்டாக்கினோம். (6:6)
விபச்சாரத்திற்கு தூண்ட கூடிய பாவமும் இந்த (لِذَنْبِكِ) வார்த்தைத்தான்.
(என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக (لِذَنْبِكِ) மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.
( 12:29)
நூஹ், ஆது, ஸமூது அல்லாஹ்வை ஏற்க மறுக்கிறார்கள் அதற்க்கு அந்த கூட்டதார்க்கு அல்லாஹ்வுடைய தூதர்கள் நிராகரிப்பவர்களை பார்த்து பாவமன்னிப்பு கேட்க சொல்லுகிறான்.
அதற்கு, (இறைவன் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை (ذُنُوْبِكُمْ ) மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள். (14:10)
மக்களுக்கு இந்த பகுதியில் ஒரு கேள்வி எழலாம்,
ஃகாரூன் , ஃபிர்அவ்ன், ஹாமான் இவர்களெல்லாம் செய்தது எல்லாம் பகிரங்கமான பாவம்
அப்போது நீங்கள் எப்படி இரகசியமான பாவம் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று நீங்கள் எங்களிடம் கேட்கலாம்.
ஒருவர் பகிரங்கமான பாவம் செய்ய வேண்டுமென்றால் இரகசியமான சிந்திக்க வேண்டும்.
சில பேர் இரகசியமான பாவம் மட்டுமே செய்வார்கள் பகிரங்கமாக செய்ய நினைக்க மாட்டார்கள்.
ஆகவே அல்லாஹ் இரகசியத்தையும் பகிரங்கத்தையும் விட சொல்கிறான்.
இந்த ذُنُوْبِكُمْ என்பது இரகசியத்தை மட்டுமே பேசுகிறது என்று வரலாறு நமக்கு காண்பிக்கிறது.
இதன் முழு உள் அர்த்தத்தை அல்லாஹ்வே அறிந்தவன்.
புஹாரி :
6308. ஹாரிஸ் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட் டார்கள். மற்றொன்றைத் தாமாகக் கூறினார்கள். (அவையாவன:)
1. இறைநம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம்மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தனது மூக்கின்மேல் பறந்துசெல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான். -இதைக் கூறியபோது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் தமது மூக்குக்கு மேலே (ஈயை) விரட்டுவதுபோலத் தமது கையால் சைகை செய்தார்கள்.-
Comments
Post a Comment