பாவங்கள் செய்பவர்கள் யார் 5
அல்லாஹ்வுடைய பெருமை மேலாடை தொட்டவர்களும்,
கண்ணியம் என்ற ஆடையை தொட்டவர்களும்
உலக அழிவும் மறுமையில் அழிவும் என்பது நிச்சயம்.
இந்த خَطِٓيْئٰتِهِمْ வார்த்தை பகிரங்கமான செய்யக்கூடியவர்களுக்கு அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
உலகத்தில் வேதனை கொடுத்து அழித்தவர்களை பார்த்து பேசக்கூடிய (بِالْخَـاطِئَةِ) பாவத்தின் வார்த்தை ஆகும்.
ஈருலகிலும் வேதனை கொடுக்க பட்ட சமூகத்திற்கும் இந்த ( بِالْخَـاطِئَةِ) வார்த்தை என்றும் சொல்லலாம்.
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் (بِالْخَـاطِئَةِ) செய்து வந்தனர். (69:9)
தலை கீழாக புரட்டப்பட்ட ஊர் லூத் நபி அவர்களுடைய சமூகமாகும்.
பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.
(15:74)
நூஹ் நபி சமூகத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனையின் போது இந்த பாவம் (خَطِٓيْئٰتِهِمْ) செய்தவர்கள் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான்.
ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் (خَطِٓيْئٰتِهِمْ) மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை. ( 71:25)
முஸ்லீம் மக்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றினால் அவன் மன்னிக்க கூடிய விஷயங்கள் என்னவெல்லாம் இருக்கிறது என்று அடுத்த பாகம் பார்ப்போம்.
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள் (وَالْمُنْكَرِ) அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
(16:90)
இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.
(16:91)
Comments
Post a Comment