பாவம் செய்யக்கூடியவர்கள் யார் 6
அல்லாஹ்வே உங்களை மன்னிப்பேன் என்று சொல்லக்கூடிய பாவங்கள்.
முன்பு சொன்ன என்ற வார்த்தைகள் கொண்ட பாவத்தைதான் மன்னிப்பதாக கூறுகிறான்.
இது அல்லாஹ்வே நான் செய்வேன் என்று சொல்லுகிற இடத்தில் இப்படி பயன்படுகிறது. (كَبٰٓٮِٕرَ سَيِّاٰتِكُمْ, كَبٰٓٮِٕرَ الْاِثْمِ,سَيِّاٰتِهِمْ,سَيِّاٰتِكُمْ,سَيِّاٰتِهٖ)
ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக பற்றி பாடம் படித்து கொள்ளுங்கள்.
நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை (كَبٰٓٮِٕرَ سَيِّاٰتِكُمْ) தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம். (4:31)
(நன்மை செய்வோர் யார் எனின்) எவர்கள் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் ( كَبٰٓٮِٕرَ الْاِثْمِ) மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; (53:32)
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை (سَيِّاٰتِهِمْ) அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். ( 25:70)
அவர்களின் பாவங்களையும் ( سَيِّاٰتِهِمْ ) அவர்களை விட்டு நீக்கி விடுவான்
(48:5)
தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் (سَيِّاٰتِكُمْ ) நீக்கும் ,(2:271)
நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை (سَيِّاٰتِكُمْ ) மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; ( 5:12)
வேதமுடையவர்கள் மெய்யாகவே ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்கு) அஞ்சி, நடந்தார்களானால், நிச்சயமாக நாம் அவர்களுடைய பாவங்களை (سَيِّاٰتِهِمْ) அவர்களை விட்டும் மன்னித்து, அவர்களை (நிலையான) இன்பங்கள் மிகுந்த சுவனபதிகளில் நுழைய வைப்போம்.
(5:65)
ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை (سَيِّاٰتِهٖ) அவரை விட்டும் நீக்குவான், (64:9)
65:1 முதல் 65:4 வரை ஒரு பெண்ணை தலாக் கொடுத்தால் அப்பெண்ணுக்கு செய்யக்கூடிய செயலை அல்லாஹ் கட்டளையாக விளக்குகிறான்.
இதுவே அல்லாஹ்வின் கட்டளையாகும் - இதை அவன் உங்களுக்கு இறக்கியருளினான். எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுகிறாரோ, அவரை அவருடைய பாவங்களை (سَيِّاٰتِهٖ) விட்டும் நீக்கி, அவருக்கு (நற்) கூலியையும் மகத்தானதாக்குகின்றான்.
(65:5)
ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை (سَيِّاٰتِكُمْ) உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான், ( 66:8)
Comments
Post a Comment