பாகம் 1
ஷைத்தான்கள் ரமளானில் விலங்கிடபடுகின்றனவா?
இந்த விஷயத்தை பார்ப்பதற்கு முன்னால் ஒரு ஒரு வரலாற்று சுவடு பார்த்து விடுவோம்.
நபி யஃகூப் அலை அவர்களுடைய மகன் யூசுப் ஆவர்
அவர் மீது யஃகூப் அலை அவர்கள் மிகவும் பாசமாக இருப்பார்கள்.
யூசுப் அலை அவர்கள் தம் தந்தையிடம் கனவு கண்டதாக கூறுகிறார்கள்.
அவர் நீ கனவு கண்டதை மீதி சகோதர்களிடம் கூறாதே என்று கூறுகிறார்.
அவர்களது சகோதர்கள் யூசுபை கிணற்றில் தூக்கி போட்டு சதி செய்கிறார்கள்.
நபி யஃகூப் அலை அவர்கள் மீதி 10 சகோதர்களையும் பார்த்து என்ன கூறுகிறார்கள் என்று பாருங்கள்.
உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 12:18)
யஃகூப் அலை அவர்கள் அதே மகன்களிடம் (பின்யாமினுக்கு ) செய்த செயலையும் குறித்து எப்படி அழகான முறையில் பேசுகிறார்கள் பாருங்கள்.
உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 12:83)
இந்த நிலைமையில் யஃகூப் அலை அவர்களுடைய "கண்" எப்படி இருந்தது.
“யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
(அல்குர்ஆன் : 12:84)
இதெல்லாம் யூசுப் சிறிய வயசில் இருந்து பெரிய அரசாரகிய காலம் வரை நடந்ததாகும்.
இதிலிருந்து சொல்ல வருவது என்னவென்றால்
யஃகூப் அலை அவர்கள் யூசுப் அலை அவர்கள் மீது மிகுந்த பாசம் இருந்தும்
ஷைத்தானின் தூண்டுதலால் மீதி 10 மகன்கள் செய்ததை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுத்து கொண்டார்களே அதே போன்ற பொறுமையைத்தான் அல்லாஹ் நம்மளிடம் உள்ள பிரச்சனைகளில் எப்படி பொறுமையாக இருக்கிறோம் என்று எதிர்பார்க்கிறான்.
இப்போது நாம் பாக்க கூடிய விஷயத்திற்கும் இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு
ஷைத்தான் அவனுடைய குழப்பம் ஒரு குடும்பத்தினுள் ஒரு மகன் மீது தந்தை பாசமாக இருப்பதை பார்த்து மீதி மகன்கள் அவரை கொல்லக்கூடிய சூழ்நிலை வரை அவர்களுக்கு கொண்டு போய் உள்ளது என்றால்.............
(இப்லீஸ்) அவனுடைய குழப்பத்தை மனிதன் சாதாரணமாக எண்ணுக்கொண்டு இருக்கிறான்.....................
Comments
Post a Comment