இறைவனைக் காண முடியுமா?
பகவத் கீதையில், அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் கேட்கிறான்;
"இறைவனது விஷ்வரூபத்தை நான் இங்கே பார்க்க முடியுமா?"
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர்;
"உனது இந்தக் கண்களால் இங்கே நீ இறைவனது விஷ்வரூபத்தைக் #காண_முடியாது. அதற்கு, திவ்யமான கண்கள் வேண்டும்." என்று கூறுகிறார்.
மேலும் ஓர் கீதை வசனம்;
"பகவானின் தோற்றத்தை அசுரர்களோ, தேவர்களோ கூட உணர்ந்ததில்லை"
திருக்குர்ஆன் என்ன சொல்கிறது?
பார்வைகள் இறைவனை அடைய முடியாது. ஆனால், அவனோ எல்லாருடைய பார்வைகளையும் அடைகிறான். அவன் நுட்பமானவன்!
நன்கு அறிந்தவன்!
[திருக்குர்ஆன் - 6:103].
கடவுளை இங்கே பார்க்க முடியும் என்று நம்புவதால்தான், போலிச் சாமியார்களால் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
"நா கடவுளோட அவதாரம். கடவுளுக்கு நெருக்கமானவன். என்ன நம்பு! என்ன வணங்கு! என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்க.. என்கிட்ட பணத்த கொண்டு வந்து கொட்டு, கடவுள் உனக்கு நல்லது செய்வார்" இப்படியெல்லாம் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். புரோகிதக் கூட்டங்கள் இடைத் தரகர்களாக மாறித் திரிகின்றனர். குருதட்சணை, புண்ணிய தானம் என்கிற பெயரில் ஆன்மீகச் சுரண்டல்களைச் செய்கின்றனர்.
எது எப்படியோ, எந்தவொரு மனிதராலும் இறைவனை இவ்வுலகில் காணவே முடியாது; கண்டதும் கிடையாது! கடவுளைப் பார்த்ததாக ஒருவன் கூறினால், அவனை நம்ப வேண்டியதில்லை. அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம். மறுமையில், தான் நாடியவர்க்கு #இறைவன்_காட்சியளிப்பான் என்பது இஸ்லாத்தின் கூற்று. முஸ்லிம்களின் நம்பிக்கையும் இதுதான். இதன் மூலம் ஆன்மீகச் சுரண்டல்கள் தடுக்கப் படுகிறது.
இறைவனை, இவ்வுலகில் காண முடியுமா? யாராவது பார்த்ததுண்டா?
இதுபற்றி வேதங்கள் என்ன சொல்கின்றது?
#இந்து!
"ஆதி பகவானின் உருவத்தை தேவர்களோ, அசுரர்களோ உணர்ந்தவர்கள் அல்ல."
- பகவத் கீதை [10:14]
"இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை."
- அதர்வண வேதம் [32:3]
#கிறிஸ்தவம்!
"தேவனை ஒருவரும் ஒருக்காலும் கண்டதில்லை."
[யோவான் - 1:18]
"தேவனை யாருக்கு (இணையாக) ஒப்பிடுவீர்கள்? எந்த சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்!"
[ஏசாயா - 40:17,18]
#இஸ்லாம்!
"பார்வைகள் அவனை அடைய முடியாது. அவனோ எல்லாருடைய பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானம் உடையவன்."
[திருக்குர்ஆன் - 6:103]
வேதங்கள் இப்படிக் கூறியிருக்க, எந்த ஆதாரத்தை வைத்து இவர்கள் சிலைகள் வடித்து வணங்குகின்றனர்? இறைவனை எவருமே பார்த்ததில்லை. தேவனை யாருமே பார்த்ததில்லை; எந்தச் சாயலையும் அவருக்கு ஒப்பிட முடியாது என்று பைபிள் கூறியிருக்க, எதைவைத்து இந்த கிறிஸ்தவர்கள் சிலைவைத்து வணங்குகின்றனர்? சிந்திக்க மாட்டார்களா?
இந்துக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
இந்து - கிறிஸ்தவர்கள் தங்களது வேதங்களைப் பின்பற்றுவதில்லை. மனம் போன போக்கில் திரிகிறார்கள். இறைவனின் இறுதிவேதமான திருக்குர்ஆனை, முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர். இறைவனுக்கு இணை வைப்பதில்லை. இந்த முஸ்லிம்கள் மட்டுமே தங்களது வேதத்தைப் பின்பற்றுகின்றனர். மற்ற மதத்தினர் நிலைதடுமாறி ஷைத்தானது வலைக்குள் விழுந்து சிக்கிக் கொண்டார்கள்.
இந்து - கிறிஸ்தவ நண்பர்களே! இறைவனை எவருமே பார்த்ததில்லை. கற்பனையான உருவத்தில் வடித்த சிலைகள், புகைப்படங்களையும், இயற்கைப் பொருட்களையும் வணங்காதீர்கள்.
படைத்த ஏக இறைவனை மட்டுமே வணங்குங்கள். இறைவனுக்கு இணையாக மற்றதை வணங்குவோர்க்கு நிரந்தர நரகம் என்று இறுதிவேதம் கூறியுள்ளது. படைத்த இறைவனை மட்டுமே வணங்குங்கள்! சொர்க்கம் செல்லலாம்; இறைவனின் நாட்டத்துடன்!
Comments
Post a Comment