எல்லா மேகங்களும்,மலைகளும் ஒன்றல்ல ........
இமாம் புஹாரி: (3206.,4829. )
قَاصِفًا=உடைத்தெரியக் கூடியது(17:69).
لَوَاقِحَ=கருக்கொள்ள வைக்கக் கூடியதாக(15:22).
اِعْصَارٌ=புயல் காற்று(2:266).
صِرٌّ=கடுமையான குளிர்(3:117)
بُشْرًۢا=நற்செய்தியாக((7:57),
அளவற்ற அருளாலனனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் கூறு கின்றான்:
அவன்தான் தனது அருளுக்கு (மழைக்கு) முன்னர் காற்றுகளைப் பரவ லாக (புஷ்ரன்) அனுப்புகின்றான். (7:57)
உங்கள்மீது புயல் காற்றை (காஸிஃப்) அனுப்புவான் (17:69).
அதாவது அது ஒவ் வொரு பொருளையும் முறித்துப் போட்டு விடும். சூல் கொண்ட காற்றுகளை (லவாகிஹ்) நாம் அனுப்புகிறோம் (15:22).
அதாவது மழைக்காற்றுகளை அனுப்புகிறோம். அதில் புயல் காற்று (இஃஸார்) வீசியது (2:266).
கீழிருந்து மேல்நோக்கி தூண்போல வீசும் நெருப்புக் காற்று. குளிர்காற்று (ஸிர்ருன்). (3:117)
பரவலான (புஷ்ரன்). (7:57)
4829. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், ‘‘ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (‘ஆத்’ எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்துவிட்டு, ‘இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்’ என்றே கூறினர்” எனப் பதிலளித்தார்கள்.
3206. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார் கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர் களின் முகம் மாறிவிடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். ஆகவே, (ஒருமுறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டுவந்தேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆத் சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்துகொண்டு), ‘‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேக மாகும்” (46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக்கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.
(46:21,22,23,24)
“ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
Comments
Post a Comment