செல்வம் என்பது என்ன?

 பாகம் 1



செல்வம் என்பது என்ன?


அந்த செல்வதை வைத்து கொள்வதற்கு இஸ்லாமில் அனுமதி உண்டா?



"இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமான (பழத்தைப்) போன்றது. யார் இதை பேராசையின்றி எடுத்துக்கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் இதில் பரக்கத் (அருள்வளம்) செய்வான். அதை முறையான வழியில் சம்பாதித்து, இறைவழியிலும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் செலவிட்டால் அது அவனுக்குச் சிறந்த தோழனாகும்.


அதற்கு உதாரணம் வசந்த காலத்தில் முளைக்கும் பயிர்கள் அனைத்தும், (அவற்றை அதிகமாக மேயும் கால்நடைகளை) வயிறு புடைக்கச் செய்து கொன்றுவிடும்; அல்லது கொல்லும் நிலைக்குக் கொண்டு சென்றுவிடும்; பசுமையான தாவரங்களை (மிதமாக) உண்ணும் அந்தப் பிராணியைத் தவிர! அது (வயிறு நிரம்ப) தின்று, அதன் விலாப்புறங்கள் உயர்ந்ததும், சூரியனை முன்னோக்கி (வெயிலில் படுத்து), அசைபோட்டு, கழிவு வெளியேற்றி, சிறுநீர் கழித்துவிட்டு, பிறகு (மீண்டும் சென்று) மேய்கிறது.


எவர் அதை முறையற்ற வழியில் அடைகிறாரோ, அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேலும், மறுமை நாளில் அச்செல்வம் அவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லும்."


அந்த செல்வத்தை யார் இதை பேராசையுடன் எடுத்துக்கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் இதில் பரக்கத் (அருள்வளம்) செய்யமாட்டான். மேலும், அவர் சாப்பிட்டும் ஒருபோதும் திருப்தியடையாதவரைப் போல ஆகிவிடுவார். மேலும், (கொடுக்கும்) உயர்ந்த கை, (வாங்கும்) தாழ்ந்த கையை விடச் சிறந்தது."


ஸஹீஹுல் புகாரி : 6441

ஸஹீஹுல் புகாரி : 2842

ஸஹீஹுல் புகாரி : 6427



(6441,2842, 6427) இந்த ஹதீதில் வரக்கூடிய செல்வத்தை பற்றி ஒரு வரமுறையோடு கூறப்படுகிறதா?


இனி வாருங்கள்  அல்லாஹ் செல்வத்தை பற்றி கேட்போம், அல்லாஹ் அதை எப்படி செலவிட  சொல்கிறான் என்று பார்ப்போம்.


செல்வம் எப்படி பட்டது என்பதை எவ்வளவு தெளிவாக விவரிக்கிறான் என்று பாருங்கள்.


சிந்திப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்கள் ஒரே ஒரு வசனம் போதும்......


ஆனால் முஹ்லஸீன்களுக்கு ஒரே ஒரு வார்த்தை கூட போதும்.......



அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது: ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது; அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.

(அல்குர்ஆன் : 2:261).


 

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:265)



“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் : 8:28)



அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?

(அல்குர்ஆன் : 23:55).


தன்னுடைய உம்மத்தை குறித்து நபி ஸல் அவர்கள் ஷிர்க்கை நினைத்து பயப்படவில்லை, உம்மதுக்கு மத்தியில் செல்வம் கொடுக்கப்பட்டு அதை வைத்து வருகிற குழப்பங்களை கண்டே பயந்தார்கள்.


ஜக்காத்தை பற்றி நாம் முன்பு ஒரு பதிவில் பார்த்தோம்.


இந்த பதிவில் ஜக்காத்தை பற்றி பெரிதாக விளக்க தேவையில்லை.



ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு சூழ்நிலை பற்றி பேசும்.


ஆனால் குர் ஆன் மொத்தமும் எடுத்துக்கொண்டால் செல்வத்தை கவனமாக கையாள்வதை குறித்து பேசும்.



குர் ஆன் முதல் பாதி மக்காவிலும், இரண்டாம் பாதி மதினாவிலும் அல்லாஹ்வுடைய தீனுக்காக நபி ஸல் அவர்களுடைய தோழர்கள் செல்வத்தை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதுதான் குர் ஆனுடைய ஓட்டுமொத்த சாரம்சம் என்று கூட சொல்லலாம்.


அதனால் கூட என்னவோ மக்கா வெற்றிக்கு முன் அல்லாஹ்வுடைய பாதையில் சென்றவர்களை பதவியில் அல்லாஹ் உயர்த்தி வைத்துள்ளான்.



சொல்லபோனால் நபி ஸல் அவர்கள் இறந்ததிற்கு பின்னால் ஆட்சி அதிகாரத்திற்க்கு தேர்ந்தெடுக்கும் தகுதி நபி ஸல் அவர்கள் பொருந்தி கொண்ட 5 பேரை மட்டுமே தகுதி உள்ளவர்கள் என்று உமர் ரலி அவர்கள் கூறினார்கள்.


ஆதாரம் :


அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்ககூடியது 


உமர் பின் அல்-கத்தாப் (ரலி)அவர்களிடம்   மக்கள், "அமீருல் மூமினீன் அவர்களே! வசிய்யத் (மரண சாசனம்) செய்யுங்கள்; (அடுத்த) கலீஃபாவை நியமியுங்கள்" என்றார்கள். உமர் (ரழி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவர்களைக் குறித்துத் திருப்தி அடைந்திருந்த நிலையில் மரணத்தைத் தழுவினார்களோ, அந்தக் குழுவினரை (அல்லது அந்த நபர்களைத்) தவிர, இந்த ஆட்சிப் பொறுப்புக்குத் தகுதியானவர்கள் என்று யாரையும் நான் காணவில்லை" என்று கூறி, அலீ, உஸ்மான், ஸுபைர், தல்ஹா, ஸஅத் மற்றும் அப்துர் ரஹ்மான் (பின் அவ்ஃப்) (ரழி அன்ஹும்) ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டார்கள். மேலும், "அப்துல்லாஹ் பின் உமர் உங்களுக்கு (கண்காணிப்பாளராக/சாட்சியாக) இருப்பார்; ஆனால் ஆட்சியில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை" என்று கூறினார்கள்


ஸஹீஹுல் புகாரி : 3700


அரேபிய மக்களை எல்லாரையும் நபி ஸல் அவர்கள் ஒரே மாதிரியான ஈமான் கொண்டவர்களை போல் கவனித்தது இல்லை.


( நபி ஸல் அவர்கள் )தன்னுடன்   எப்போதும் ஒன்றாக இருந்த தோழர்களுக்கு செல்வத்தை குறித்து எந்தவதமான ஆசையும் வளர்த்ததில்லை.


அரேபிய மக்களில் (குறைசியர்கள் குடும்பத்தின் கூட்டத்திலே ) வேறு சில பேர்களுக்கு அவர்கள் விரும்புகிற சில போர் கனிமங்களை அதிகமாக கொடுத்தார்கள்.



அப்படி நிறைய பேர்கள் உள்ளார்கள் முதலில்  அல் அக்ரஃ பின் ஹாபிஸ்  என்று ஒருவர் நபி ஸல் அவர்கள் வாழ்ந்த நேரத்தில் இருந்தார் இவரை பற்றி மட்டுமே பார்ப்போம் ஏனென்றால் மக்கள் (புஹாரி இமாம்) ஹதீத்களையே நம்புகிறார்கள்  ஆகவே அதிலிருந்து குறிப்புகளை சிறிய பதிவாக மக்களுக்கு புரிய வேண்டும் என்ற அடிப்படையில் கவனிப்போம்.


இவர் நஜ்த் தேசத்தின் தலைவராகவும் இருந்தார்.


இவரின் குணத்தை புரிய கீழ்கண்ட சில ஹதீத்களை மொத்தமாக தொகுத்து மேற்கோள் காட்ட விரும்புகிறோம் ஹதீத் நம்பரையும் தருகிறோம் கவனித்து கொள்ளுங்கள் 


ஸஹீஹுல் புகாரி : 5997

ஸஹீஹுல் புகாரி : 3516


 

 அல்-அக்ரஃ பின் ஹாபிஸ் அத்-தமீமீ (ரழி) அவர்கள் தங்களுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, அல்-ஹஸன் பின் அலீ (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அல்-அக்ரஃ, “எனக்குப் பத்து பிள்ளைகள் இருக்கிறார்கள்; அவர்களில் எவரையும் நான் ஒருபோதும் முத்தமிட்டதில்லை” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்து, “யார் கருணை காட்டவில்லையோ, அவர் மீது கருணை காட்டப்படமாட்டாது” என்று கூறினார்கள்.


அல்-அக்ரஃ பின் ஹாபிஸ், நபி (ஸல்) அவர்களிடம், "அஸ்லம், ஃகிஃபார், முஸைனா , கோத்தரதின் தலைவராகவும் இருந்தார்,


இந்த அஸ்லம், ஃகிஃபார், முஸைனா கோத்திரங்களைச் சேர்ந்தவார்கள் ஹஜ் பயணிகளைக் கொள்ளையடிப்போராகவும் இருந்தார்கள் இவர்கள் நஜித் தேசத்தில் உள்ளவர்கள்.



இப்படித்தான் இவர்களின் நிலமை இருந்தது.



நஜ்த் தேசத்தில் உள்ள அல்-அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களுக்கு மேல் உள்ள ஹதீதில் கூறப்பட்டுள்ள சில குணங்கள்  அவருக்கு இருந்தது,


ஆனால் நபி ஸல் அவர்கள் ,சில சகாபாக்களுக்கும்,குறைஷிகளுக்கும் , அன்சாரிகளுக்கும் அவர்கள்  போர் கனிம செல்வங்கள் கொடுக்க வில்லை ( வேறு ஒரு அறிவிப்பில் குறைஷிகளுக்கு கூட சில போர் செல்வங்கள் கொடுத்தார்கள்) ஆனால் ஹுனைன் மற்றும் அதற்க்கு அடுத்து வந்த சம்பவத்திலும் கொடுத்தார்கள்.


அதை பார்த்த அவர்களில் ஒருவர் கோபமடைந்து, "நபி ஸல் அவர்கள் நஜ்தின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; எங்களை விட்டுவிடுகிறார்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அவர்களின் உள்ளங்களை (இஸ்லாத்தின் பால்) ஈர்ப்பதற்காகவே (இவ்வாறு) செய்கிறேன்" என்று கூறினார்கள்.



அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


ஹுனைன் (போர்) நாளில், நபி (ஸல்) அவர்கள் (செல்வங்களைப்) பங்கிடுவதில் சிலருக்கு முன்னுரிமை அளித்தார்கள். அவர்கள் அல்-அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை வழங்கினார்கள்; உயைனா அவர்களுக்கும் அதே அளவு வழங்கினார்கள்; மேலும் அரபியர்களிலுள்ள முக்கியப் பிரமுகர்களுக்கும் வழங்கினார்கள். அன்றைய தினம் பங்கீட்டில் அவர்களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.


அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இந்தப் பங்கீட்டில் நீதி கடைப்பிடிக்கப்படவில்லை; இதன் மூலம் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை" என்று கூறினார்.


அதற்கு நான், "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன்" என்று கூறினேன்.


பிறகு நான் அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீதியாக நடக்கவில்லை என்றால், வேறு யார் நீதியாக நடப்பார்கள்? அல்லாஹ் மூஸாவுக்குக் கருணை புரிவானாக! அவர் இதைவிட அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்; ஆயினும் அவர் பொறுமை காத்தார்" என்று கூறினார்கள்.


அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:


அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு தங்கத் துண்டை அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நான்கு நபர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள்: (அவர்கள்) அல்-அக்ரஃ பின் ஹாபிஸ் அல்-ஹன்ளலீ அல்-முஜாஷிஈ, உயைனா பின் பத்ர் அல்-ஃபஸாரீ, ஸைத் அத்-தாஈ (இவர் பனீ நப்ஹான் குலத்தைச் சேர்ந்தவர்), மற்றும் அல்கமா பின் உலாஸா அல்-ஆமிர் (இவர் பனீ கிலாப் குலத்தைச் சேர்ந்தவர்).


அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும் கோபமடைந்து, "அவர் நஜ்தின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; எங்களை விட்டுவிடுகிறார்" என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் அவர்களின் உள்ளங்களை (இஸ்லாத்தின் பால்) ஈர்ப்பதற்காகவே (இவ்வாறு) செய்கிறேன்" என்று கூறினார்கள்.


பிறகு, குழி விழுந்த கண்களுடனும், உயர்ந்த கன்னங்களுடனும், துருத்திய நெற்றியுடனும், அடர்ந்த தாடியுடனும், மழிக்கப்பட்ட தலையுடனும் ஒரு மனிதர் வந்தார். அவர், "முஹம்மதே! அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்!" என்று கூறினார்.


அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நானே மாறுசெய்தால் அல்லாஹ்வுக்கு யார் கீழ்ப்படிவார்கள்? பூமியிலுள்ளவர்கள் விஷயத்தில் அல்லாஹ் என்னை நம்பியுள்ளான்; ஆனால் நீங்கள் என்னை நம்புவதில்லையா?" என்று கேட்டார்கள்.


அப்போது ஒரு மனிதர் - அவர் காலித் பின் அல்-வலீத் என்று நான் கருதுகிறேன் - அவரைக் கொல்ல (நபி (ஸல்) அவர்களிடம்) அனுமதி கேட்டார். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள்.


அம்மனிதர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இம்மனிதரின் வழித்தோன்றலில் - அல்லது இவருக்குப் பின்னால் - ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; (ஆனால்) அது அவர்களின் தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து அம்பு (வேகமாக) வெளியேறுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். அவர்கள் இஸ்லாமியர்களைக் கொல்வார்கள்; சிலை வணங்கிகளை விட்டுவிடுவார்கள். நான் அவர்களை அடைந்தால், 'ஆது' கூட்டத்தார் அழிக்கப்பட்டது போன்று அவர்களை நிச்சயமாக அழிப்பேன்."


ஸஹீஹுல் புகாரி : 3150,ஸஹீஹுல் புகாரி : 3344



மேல் உள்ள ஹதீதில் அல்-அக்ரஃ பின் ஹாபிஸை பற்றி அவர்களுக்கு செல்வத்தை கொடுப்பது பற்றியும் நபி ஸல் அவர்கள் ஏன் கொடுகிறேன் என்று மக்களுக்கு விளக்கி கூறினார்கள்.


அதன் பின் நபி ஸல் அவர்கள் அன்சாரிகளிடம் சென்று மறுமையே சிறந்தது என்றும் சமாதானம் கூறி செல்வத்தின் தன்மையை புரியவைத்தார்கள்.



அப்துல்லாஹ் பின் ஜைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:


ஹுனைன் நாளில் அல்லாஹ் தனது தூதருக்கு (ஸல்) அவர்களுக்கு (எதிரிகளிடமிருந்து) போர்ச் செல்வங்களை அளித்தபோது, நபி (ஸல்) அவர்கள் அப்பொருட்களை (இஸ்லாத்தை நோக்கி) உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். ஆனால், அன்சாரிகளுக்கு அதில் எதையும் கொடுக்கவில்லை. மற்ற மக்களுக்குக் கிடைத்ததைப் போல் தங்களுக்குக் கிடைக்காததால் அன்சாரிகள் தங்கள் மனங்களில் வருத்தமடைந்தனர்.


ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளிடையே உரையாற்றினார்கள்: "அன்சாரி சமூகத்தரே! நீங்கள் வழிதவறியவர்களாக இருந்தபோது நான் உங்களிடம் வரவில்லையா? பின்னர் என் மூலமாக அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைக் காட்டினான். நீங்கள் பிரிந்து கிடந்தீர்கள்; என் மூலமாக அல்லாஹ் உங்களை ஒன்றிணைத்தான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள்; என் மூலமாக அல்லாஹ் உங்களைச் செல்வந்தர்களாக்கினான்" என்று கூறினார்கள்.


நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு) எதைக் கூறினாலும், அதற்கு அன்சாரிகள், "அல்லாஹ்வும் அவனது தூதருமே (எங்கள் மீது) அதிகம் உபகாரம் செய்தவர்கள்" என்று பதிலளித்தனர்.


நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்க மாட்டீர்களா?" என்று கேட்டார்கள். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் எதைக் கூறினாலும் அவர்கள், "அல்லாஹ்வும் அவனது தூதருமே (எங்கள் மீது) அதிகம் உபகாரம் செய்தவர்கள்" என்றே பதிலளித்தனர்.


பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் விரும்பியிருந்தால், 'நீங்கள் (மக்காவிலிருந்து) இன்னின்ன நிலையில் எங்களிடம் வந்தீர்கள்; (நாங்கள் உங்களுக்கு உதவினோம்)' என்று சொல்லியிருக்கலாம். மக்களோ ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு செல்ல, நீங்கள் நபி (ஸல்) அவர்களை உங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்வதை விரும்பவில்லையா? ஹிஜ்ரத் (எனும் உறவு) மட்டும் இல்லாதிருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். மக்கள் ஒரு கணவாய் வழியாகவோ, மலைப்பாதை வழியாகவோ சென்றால், நான் அன்சாரிகள் செல்லும் கணவாய் மற்றும் மலைப்பாதையிலேயே செல்வேன். அன்சாரிகள் (உடலைத் தொட்டிருக்கும்) உள்ளாடை போன்றவர்கள்; மற்ற மக்கள் மேலாடை போன்றவர்கள். நிச்சயமாக, எனக்குப் பின்னால் (உரிமைகளில்) பிறர் உங்களுக்கு முன் அமர்த்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அப்போது நீங்கள் என்னை (மறுமையில்) ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தில் சந்திக்கும் வரை பொறுமையாக இருங்கள்."



ஸஹீஹுல் புகாரி : 4330


ஒன்றும் இல்லாமல் தீனுக்காக போராடினவர்களுக்கு நபி ஸல் அவர்கள் கொடுத்த அறிவுரை


"பொறுமையாக இருங்கள் "


நாம் நம்மளுடைய நிலமையை யோசித்து பாருங்கள்


முஸ்லீமான ஒருவர் நம்மை குறை சொல்வாரேன்றால் அவரை "வெட்டும்" அளவுக்கு சமூகம் சென்றுள்ளது.


எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் பொறுமையை மேற்கொள்ளுங்கள் என்ற சொல் போதிக்க படுவதில்லை.



நபி ஸல் அவர்கள் காலத்தில் போருக்கு செல்லும்போதுகூட "பொறுமை " காத்தார்கள் 


அதை படை தளபதிகளுக்கும் கூறினார்கள்.


அல்-அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவர் எப்படி பட்டவர்


அவருக்கும் அவர்களுடன் இருந்த நஜ்த் தலைவர்களுக்கும் செல்வங்களை வாரி கொடுத்தார்கள்.



அவர்கள் சந்ததி எப்படி பட்டவர்கள்.



அவர்களுடைய சந்ததிகள் வரும் சமயத்தில் நபி ஸல் அவர்கள் இருந்தால் எப்படிப்பட்ட வேதனை கொடுப்பார்கள். என்றும் கூறிவிட்டார்கள்.


அன்சாரிகளுக்கு சமாதானமும் கூறினார்கள்.




இப்படி இஸ்லாத்தின் தவ்ஹீத் ஒன்றாக இருந்தாலும் செல்வத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மக்களையும்  அல்லாஹ்வின் கட்டளை படி நபி ஸல் அவர்கள் ஒவ்வொரு விதமாக கவனித்தார்கள்.


மக்கா வெற்றிக்கு பின் வந்த முஸ்லீங்களை பற்றி ஒருவரை மட்டுமே இதுவரை கூறியுள்ளோம்.



இப்படி அல்-அக்ரஃ பின் ஹாபிஸை பற்றி இவர் சம்பந்தமான ஹதீத் இருந்ததினால் நமக்கு தெரிந்தது.


சிலரை பற்றி நபி ஸல் அவர்கள் வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.


ஆனால் அவர்கள் விரும்புனதை நபி ஸல் அவர்கள் அவர்களுக்கு கொடுத்தார்கள்.



நபி ஸல் அவர்கள் விரும்புனதை கொடுத்தார்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக அல்லாஹ் கூறுவதை தெளிவாக செய்தார்கள் என்று சொல்லுவதே பொருத்தமாக அமையும்.


மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்;


(அல்குர்ஆன் : 57:10)



இந்த பதவி மறுமை நாளில் மட்டுமே குறிக்காது இம்மைலும் அல்லாஹ் நாடிவரை  பதவியால் உயர்தரத்தில் ஆக்கி இருந்தான்.


அதை நாம் வரலாற்றில் என்ன நிகழ்த்தது என்பதை வைத்தே முடிவுக்கு வந்துள்ளோம்.



உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;


(அல்குர்ஆன் : 24:55)



மக்கா வெற்றிக்கு முன் பாடுப்பட்டவர்களுக்கே அல்லாஹ் கண்ணியமான ஆட்சியை கொடுத்தான் அதை வரலாற்றில் பார்க்கலாம்.


மக்கா வெற்றிக்கு பின் வந்தமக்களுக்கு கண்ணியமான ஆட்சியை கொடுக்கவில்லை.


அப்போது அவர்கள் நரகவாசிகளா?


என்று கேட்பவர்களுக்கு.........



அவர்களுடைய செயல் அல்லாஹ்விடம் உள்ளது.



அதில் தீர்ப்பளிக்கும் உரிமை நம்மளிடத்தில் இல்லை.


அவர்களிடத்தில் இருந்து நாம் பாடம் படித்துக்கொள்ளலாம்.


மக்கா வெற்றிக்கு முன் தியாகம் செய்தவர்களுடைய வாக்கு (அவர்களின் வார்த்தை ) அதன் மதிப்பு அதிகமாகும்.

Comments