வன்முறை இஸ்லாத்தில் தீர்வா?
வன்முறைக்கு முதல் ஆரம்பப்புள்ளி கோபம்.
கோபத்தை விட்டு கொடுத்தல் சிறந்தது.
அடிப்படியில் இஸ்லாம் ஒரு பாடம் கற்பிக்கும் அது என்னவென்றால்?
அல்லாஹ்விடமிருந்து நபி ஸல் அவர்கள் என்ன செயல் கற்றுக்கொடுக்க வந்தார்களோ! அதே செயலைதான் எல்லா நபிமார்களும் கற்று தந்தார்கள்
அதில் ஒன்றுதான் வன்முறை கூடாது என்பது
இதைத்தான் ஈஷா அலை அவர்களும் வன்முறை கூடாது என்றே சொல்லவந்தார்கள் ஆனால் இது மக்கள் மத்தியில் ஒரு விளையாட்டாக (ஒரு கன்னத்தை காட்டினால் இன்னொன்றையும் காட்டு ) என்ற சொல்லாடல் கேலிக்கூத்தாக ஆகிவிட்டது.
ஆதம் மகனின் இரண்டு மகன்களில் ஒருவருடைய செயலை அல்லாஹ் அங்கீகரிக்கிறான். அது என்னவென்றால்.
குர் ஆனில் ஆதமின் மகன்களில் இருவரில் ஒருவருடைய செயல் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்டது அது வேறு ஒரு மகன் கோபம் கொண்டான்.
அவன் செயல் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகனை கொலை செய்வதாக கூறினான், கொலை செய்ய பட போகிறவன் நீ என்னை கொள்வாயானால் நான் உன்னை கொல்ல கை கூட உயர்த்த மாட்டேன் என்று கூறினான்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது நற்செயல் ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கோபம் கொண்டவன் மீது அவன் கொலை செய்யும் நோக்கத்தில் கூட இவன் அவன் மீது கையை உயர்தினால்!.......
அந்த செயலின் காரணமாக கூடுதலாக கோபம் கொண்டு
இந்த செயலின் காரணமாக அவன் இவனை கொன்றது போல் ஆகிவிடும்.
ஆகவே கொலை செய்யப்பட்டவன் கையை உயர்த்தவில்லை
இப்போது கொலையின் காரணம் அவனுக்கு அல்லாஹ் கொடுத்த நற்செயல் காரணமாக இவனை கொன்றது போல் ஆகிவிட்டது.
இனி இதனுடைய வழக்கு அல்லாஹ்விடம் உள்ளது
இதே செயல் கூட அலி ரலி அவர்களுக்கு கூட நடந்தது,அதை பின்பு விளக்குகிறோம்,
ஆனால் அலி ரலி அவர்களை இவ்வுலகம் அவர்கள் வன்முறை செய்தார்கள் என்று நம்ப வைத்துள்ளது,
அவருடைய ஒரே ஒரு செயல் அவருடைய குணத்தை பிரதிபலிக்கும்
கைபர் போர் அன்று நபி ஸல் அவர்கள் அலி ரலி அவர்களை ( மூஸா அலை அவர்களுக்கு ஹாரூன் எப்படியோ ) அப்படி நீங்கள் எனக்கு இருக்க விருப்பபடலையா என்று கேட்டுள்ளார்கள்.
தீனுக்காக போராடும் ஒருவரை இவ்வுலகம் வன்முறையாளர்களாக சித்தரிக்கும்.
இங்கு பயப்பக்தியுடையவர்கள் யார், நன்மை செய்ய கூடியவர்கள் யார் என்பதை இறைவன் கூறுகிறான்.
அவர்கள் யார்? அவர்கள்தான் கோபத்தை அடக்கிகொள்வார்கள்
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
(அல்குர்ஆன் : 3:134)
முஹ்மீன்களுக்கு தகுதியுடையவர்களாக ஆகவேண்டுமானால் கோபத்தை அடக்கி கொள்ள வேண்டும்
கிழே கொடுக்கப்பட்ட வசனத்திற்கு முன்பு பேசக்கூடிய வசனம் முஹ்மீன்கள்தான்.
அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 9:15)
அல்லாஹ் தேர்ந்தெடுத்த அடியார்களில் ஒருவரான நபி யூனுஸ் அலை அவர்களும் கோபம் கொண்டு போனார்கள்
அவர்களை நெருக்கடிக்கி ஆளாக மாட்டார்கள் என்று நினைத்து கொண்டார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்
இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
(அல்குர்ஆன் : 21:87)
ஈமான் கொண்டவர்கள் யார் என்றால் கோபம் வந்தால் அடக்கி கொள்வார்கள்.
அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்.
(அல்குர்ஆன் : 42:37)
பயப்பக்தியுடையவர்கள், முஹ்லஸீன்கள், ஈமான் கொண்டவர்கள் இவர்கள் எல்லாரும் கோபத்தை அடக்கி கொள்வார்கள்.
இதை நபி ஸல் அவர்களுடைய செயலிலும் காணலாம், கோபத்தை கட்டுப்படுத்த மற்றவர்களுக்கு அவர்கள் கற்றும் கொடுத்தார்கள்
இதுவரை குர்ஆனில் உள்ளதை பார்த்தோம்,
இனிமேல் ஹதீதில் காண்போம்.
கோபத்தின் ஒரு பகுதி விட்டுக்கொடுத்தல்
ஒருவரிடம் விட்டுக்கொடுக்கும் தன்மை இருந்தால் அவரிடம் கோபம் இருக்காது.
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
இஸ்லாம் மிகச் சிறந்தது? அதாவது (மிகச் சிறந்த முஸ்லிம் யார்)?"
"எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவர்
ஸஹீஹுல் புகாரி : 11
பொறுமையை விடச் சிறந்த, விசாலமான ஓர் அருட்கொடை எவருக்கும் வழங்கப்படவில்லை."
ஸஹீஹுல் புகாரி : 1469
கடன் வாங்குபவர், கடன் கொடுப்பவர்
கடன் வாங்குபவர் அதை திருப்பி கொடுக்கும் எண்ணம் வேண்டும்
அந்த எண்ணம் இல்லாவிட்டால் அந்த சம்பந்த பட்டவருக்கு கோபம் வரும்
அப்போது கோபம் வர காரணமானவர் கூட மறுமை நாளில் தண்டிக்க படலாம்.
"உங்களில் சிறந்தவர், தன் கடனை மிக அழகான முறையில் திருப்பிச் செலுத்துபவரே ஆவார்"
ஸஹீஹுல் புகாரி : 2393
நபி ஸல் அவர்கள் கடன் கொடுப்பவருக்கும் கூட மன்னித்து விடுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்கள்.
மேலும் இங்கு மனிதர்கள் ஒருவரும் அல்லாஹ் சொல்லக்கூடிய
கடன் கொடுக்கல், வாங்கல் முறையை உலகில் யாரும் பயன்படுத்த வில்லை இந்த பதிவை பதிவுடுகிற நான் உட்பட...........
அல்லாஹ் நாடியவர்களை தவிர
அதனால்தான் நாங்கள் கூறுகிறோம் மனிதன் முழுவதும் நஷ்டவாளி
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 2:282)
குர் ஆனில் பெரிய வசனம் இந்த வசனம் மட்டுமே
கடனை திரும்ப செலுத்தும் எண்ணம் இல்லாதவராலும், கடனை வாங்கும் போதும் அவர் பயன்படுத்துகிற தவறான வார்த்தையாலும்
வன்முறை நிகழும்.
கடன் கொடுத்தவர் திரும்பி வாங்கிக்கொள்ளலாம் அது அவர் விருப்பம்.
ஆனால் நபி ஸல் சொன்னதை அவர் செய்தால் இன்ஷாஅல்லாஹ் அவருக்கு அதற்க்குரிய கூலி கிடைக்கும்
இஸ்ரவேலர்களுக்கு அல்-கிஸாஸ்’ (பழிக்குப்பழி வாங்கும்) சட்டம் இருந்தது; ஆனால், அவர்களிடம் ‘தியா’ (இரத்தப் பரிகாரம்) எனும் முறை இருக்கவில்லை. எனவே அல்லாஹ் இச்சமுதாயத்திற்கு (பின்வருமாறு) அருளினான்:
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
“கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிக்குப்பழி வாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானவனுக்குச் சுதந்திரமானவன்; அடிமைக்கு அடிமை; பெண்ணுக்குப் பெண். கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்பட்டால்...”
(இதன் விளக்கம் யாதெனில்) வேண்டுமென்றே செய்யப்படும் கொலைக்கு (பழிக்குப்பழி வாங்காமல்) தியாவை (இரத்தப் பரிகாரத்தை) ஏற்றுக்கொள்வதே அந்த மன்னிப்பாகும்.
(இந்த விஷயத்திலும் நபி ஸல் அவர்கள் மன்னிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் கவனியுங்கள், மேலும் படியுங்கள் )
“...அவன் (வாரிசுதாரர்) நல்லமுறையில் நடந்து கொள்ள வேண்டும். அவனிடம் (கொலையாளி) அழகிய முறையில் (நஷ்ட ஈட்டைச்) செலுத்திவிட வேண்டும்.”
(அதாவது வாரிசுதாரர்) நல்லமுறையில் கோர வேண்டும்; (கொலையாளி) அழகிய முறையில் செலுத்திவிட வேண்டும்.
“இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையாகும்.”
உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்ததை விட இது (அல்லாஹ்வின்) அருளாகும்.
“இதற்குப் பிறகும் யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.”
(இங்கு வரம்பு மீறுதல் என்பது) தியாவை (நஷ்ட ஈட்டைப்) பெற்றுக்கொண்ட பிறகு கொலை செய்வதாகும்.
ஸஹீஹுல் புகாரி : 4498
(இதைத்தான் அல்லாஹ் அருள் என்று கூறுகிறான்.)
ஆனால் உலகில் இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம், தீவிரவாத மார்க்கம் என்றெல்லாம் எப்படி பெயர் வந்தது.
ஒரு மாற்றுமதத்தை சேர்ந்த சகோதரர் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும்.
இஸ்லாமிய வரலாறு சிறிய அளவு தெரிந்தால் மட்டுமே அது இயலும்.
குர்ஆனை வைத்துதான் காஃபிர்கள் பெரும்பாலான வாதங்களை வைக்கிறார்கள்
நிச்சயமாக தவ்ராத் வேதத்தில் (5:44)
அவர்களுக்கு நாம் அதில், “உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல் ஆகவும்; காயங்களுக்கு(ச் சமமான காயங்களாகவும்) நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்;” எனினும் ஒருவர் (பழி வாங்குவதை) தர்மமாக விட்டுவிட்டால், அது அவருடைய பாவங்களுக்குப் பரிகாரமாகும்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!.
(அல்குர்ஆன் : 5:45)
ஆனால் அல்லாஹ் நாம் சமுதாயத்திற்கு "மன்னிப்பு " வழங்குதல்தான் சிறந்தது என்று கூறியுள்ளான்.
தங்களுக்கு இடையே உள்ள " கிஸாஸ் " என்ற சட்டத்தை வைத்து பிரச்சனைகளை தீர்க்கும் போது
உலகத்திற்கு இவர்கள் வன்முறையாளர்களாக மாறுகிறார்கள்.
உலகில் முஸ்லீம் சமுதாயம் தீவிரவாதிகளாக வருவதற்கு காரணம்
முதலில் முஸ்லீம் மனிதர்களுக்குள் சண்டையை ஏற்படுத்துவது, அப்புறம் குழுவுகளுக்கு நடுவில் சண்டையை ஏற்படுத்துவது, அப்புறம் நாடாக உருவாக்கி நாடுகளுக்கு இடையில் சண்டையை ஏற்படுத்துவது,
இப்படி ஏற்படுத்துவது எதிரிகளின் இலக்கு
ஒவ்வொரு நாடும் தன்னுடைய தார்மீக நெறியை காப்பாற்ற போராடும்போது,
உலகில் தன்னுடைய தார்மீக நெறியை காப்பாற்ற நினைக்கும் நாடு தீவிரவாதி நாடு என்று மக்கள் முன்னிலையில் ஷைத்தானின் கூட்டத்தார்கள் காட்டுகிறார்கள்
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக், இப்படி உலகிற்க்கு முஸ்லீம் நாடுகள் மட்டுமே தீவிரவாதி நாடுகளாக காண்பிக்கபட்டுள்ளது
இனி இந்த லிஸ்டில் வந்து கொண்டு இருப்பது கத்தார், ஏமன், துருக்கி, லெபனான், சிரியா, சூடான் ஆயுத குழுக்கள் உள்ள நாடுகள் எல்லாம் அந்த பெயரை மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள்
அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நாடு சவுதி அரபியா, அமீரகம்,குவைத், இப்படி போன்ற நாடுகள்
எப்போது அவருடைய நட்பு வட்டம் எதிரியாக மாறுகிறதோ
அப்போது இந்த லிஸ்டில் வரப்போவது அல்லாஹ்வே அறிவான் சவுதி அரபியா, அமீரகம்,
ஆகவே குர் ஆனில் ஒரே " சொல் " = 💓 நீங்கள் மன்னிப்பதே சிறந்த செயல் 💓
என்று கூறியுள்ளான்.
எல்லாத்திற்கும் ஒரு வரையை உண்டு
அதேபோல் மனிதனுடைய செயலை மன்னிப்பதற்கும் அல்லாஹ் ஒரு எல்லை வைத்துள்ளான்.
மன்னிப்பதன் எல்லை எதுவரையேனில் ஒருவரை அவருடைய வீட்டில் இருந்து வெளியேரின பிறகே தன்னுடைய மன்னிப்பின் எல்லை தன்மை மாற்றவேண்டும்.
வீட்டில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்ற விஷயத்தில் ஒன்று புரிய வேண்டும், தனி மனிதனுக்கு நடக்கக்கூடியது ஒன்று உள்ளது.
சமுதாயத்திற்கு நடப்பது ஒன்று உள்ளது.
தனிப்பட்ட விஷயத்தை சமுதாய பிரச்சனையாக மாற்றக்கூடாது.
நாங்கள் சமுதாயத்திற்கு நடப்பதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். கீழே உள்ள வசனத்தை படியுங்கள்.
“போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா?” என்று கேட்டார்; அதற்கவர்கள்: “எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது?” எனக் கூறினார்கள்; எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 2:246)
இந்த வசனம் மூஸா அலை அவர்கள் சமூகத்திற்கு சொல்லப்பட்டது என்றெல்லாம் சொல்லி நாம் நழுவி விடமுடியாது.
10 வருடமாக நபி ஸல் அவர்களுக்கு மக்காவில் நடந்த சோதனையில் பொறுமையாக இருக்க சொல்லித்தான் வஹி வந்தது.
எப்போது அநியாயகாரர்கள் நபி ஸல் அவர்களை கொல்ல திட்டம் தீட்டி முயற்சி செய்தார்களோ
அப்போது மக்காவுக்கு " தாவா "என்ற செயல் பனி முடிந்து விட்டது
அதன் பின் எல்லாமே" போராக "தான் இருந்தது.
ஒரு சமுதாயம் போர் செய்ய எப்போது கடமையாகிறது.
குர் ஆன் சொல்வதை கேளுங்கள்.
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 22:39)
இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை);
(அல்குர்ஆன் : 22:40)
அப்படியென்றால் வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் போருக்கு தயாராகலாமா என்று நினைத்து எல்லாரும் போருக்கு செல்வோமானால்?
அதே வசனத்தின் பின்வருமாறு அல்லாஹ்வே கூறுகிறான்.
மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)
போர் என்பது தனித்தனியே எல்லாரும் சண்டை செய்வதல்ல.
போர் செய்வது என்பது ஒரு தலைமையின் கீழ் வரவேண்டும்.
இதை நாம் நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறே நமக்கு உணர்த்தும்.
நாம் எப்போது வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறோமோ?
அப்போது அல்லாஹ்வின் உதவியும் எதிர்பாருங்கள்.
அதற்க்கான முயற்சியும் எடுங்கள்.
முயற்சி எடுப்பது என்பது குர் ஆனையும், ஹதீதையும் படித்துக்கொண்டே வாருங்கள், உம்மதுக்கு அல்லாஹ் வழி காட்டுவான்.
போரில் உள்ள நிபந்தனைகள் வழிகாட்டல் நபி ஸல் அவர்களின் வாழ்க்கையிலும், குலஃபாய ராஸீதீன்ங்கள் வரலாறிலும் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புரிய வரும்.
உம்மத்தின் சிறிய தவறு பெரிய விளைவை ஏற்படுத்தும்.
உம்மத் தரிகெட்டு போனது எதனால் என்றால்
ஒரு தனி ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனையில் ஒரு குழுவாக மக்கள் ஒன்று சேருவதுதான் பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி.
இது நபி ஸல் அவர்கள் காலத்தில் அவர்கள் இருக்கும் போதே நடந்தது அதை அப்போவே அவர்களுக்குள் இருந்து நீக்கி விட்டார்கள்.
அல்லாஹ்தான் குர் ஆனில் அவர்களுக்கு முஹாஜிர்கள், அன்சாரிகள் என்று பெயர் வைத்தான்
அப்பேர்ப்பட்ட கூட இருந்த தோழர்களுக்கே இப்லீஸ் வஸ்வசவை ஏற்படுத்தி விட்டான்.
நபி ஸல் அவர்களுடைய தோழர்களுக்கே இப்லீஸ் வஸ்வசவை ஏற்படுத்தி விட்டான் என்றால் இன்னைக்கு நானும் நீங்களும் யார்?
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் (கஸ்வாவில்) இருந்தோம். அப்போது முஹாஜிர்கள் பலர் அவர்களுடன் சேர்ந்துகொண்டதால் (அவர்களின் எண்ணிக்கை) அதிகரித்தது. முஹாஜிர்களில் வேடிக்கை செய்யும் ஒருவர் இருந்தார். அவர் ஓர் அன்சாரியின் பின்புறத்தில் (விளையாட்டாக) அடித்தார். இதனால் அந்த அன்சாரி கடும் கோபமடைந்தார். இறுதியில் அவர்கள் (இருவரும்) தங்கள் மக்களை அழைத்தனர். அந்த அன்சாரி, "அன்சாரிகளே! (உதவுங்கள்)" என்றார். அந்த முஹாஜிர், "முஹாஜிர்களே! (உதவுங்கள்)" என்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, "அறியாமைக் காலத்து மக்களின் இந்த அழைப்பு என்ன?" என்று கேட்டார்கள். பிறகு, "அவர்களுக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். முஹாஜிர் அந்த அன்சாரியின் பின்புறத்தில் அடித்தது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "இதை விட்டுவிடுங்கள்! நிச்சயமாக இது வெறுக்கத்தக்கது (நாற்றமெடுக்கக்கூடியது)" என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி : 3518
ஆகவே நாம் இருக்கும் இந்த இடம் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு செயலும், பின்வரும் உம்மதுக்கு பெரிய விளைவை ஏற்படுத்தலாம்.
ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வின் துவாவோடு,பொறுமையாகவும், கவனமாகவும் முடிவெடுங்கள், மார்க்கதை அரிஞ்சர்களோடும் முன் வைத்து முடிவு எடுங்கள்.
உம்மத்தின் தவறான முடிவு வன்முறையையும் உம்மதுக்கு கெட்ட பெயரையும் ஏற்படுத்தும்.
Comments
Post a Comment