பகுத்தறிந்து இஸ்லாமை தேர்ந்தெடுக்கலாமா? இஸ்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்ட மார்க்கமா?

 பகுத்தறிந்து இஸ்லாமை தேர்ந்தெடுக்கலாமா?


இஸ்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்ட மார்க்கமா?


ஒருவர் இந்த வானம், பூமி எப்படி சுலல்கிறது என்று சிந்தித்து இஸ்லாமில் வருகிறார்.


அவருக்கு நம்பிக்கை பலனலிக்குமா?



ஒரு படிப்பறிவும் இல்லாமல் ஒருவர் பிறக்கும் போதே இஸ்லாமில் பிறக்கிறார்,அவருக்கு நம்பிக்கை இருக்கும் கல்வி அறிவு எப்படி இருக்கும் ?



இஸ்லாமில் இந்த இரண்டும் அவசியம்



இந்த இரண்டில் முதலில் மனிதனுக்கு வேண்டியது என்பது நம்பிக்கை தான்.


ஒருவருக்கு பிறக்கும் போதே ( படைக்கும் போதே ) சில கல்வி அறிவு கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் நம்பிக்கை என்பது தேர்ந்தெடுப்பது தான்.


ஆகவேதான் நாங்கள் கூறுவது ஒரு மனிதனுக்கு முதலில் தேவை படுவது நம்பிக்கை


அதுவும் (மறைவான நம்பிக்கை ) கண்டிப்பாக இருக்க வேண்டும்



(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.

(அல்குர்ஆன் : 2:3)



அல்லாஹ் சூரா பாகராவில் பயப்பக்தியுடையவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அல்லாஹ்வே கூறுகிறான்.



அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.....................



அப்போது இது எப்படி பகுத்தறிவுக்கு உட்பட்டதாகும்........



நாமெல்லாம் பகுத்தறிவுதான் இஸ்லாம் என்று நினைத்து கொண்டுள்ளோம்


நாங்கள் கூறுகிறோம் பகுத்தறிவை தாண்டியதுதான் இஸ்லாம்.


இஸ்லாம் என்பது வேறு ஆனால் நம்முடைய அறிவு ( கல்விக்கு ) உட்பட்டுதான் நாம் பகுத்தறிவை பயன்படுத்த முடியும்


இப்போது நாங்கள் பகுத்தறிவையும், இஸ்லாமையும் ஒரு உதாரணத்தை வைத்து பிரித்து காண்பிக்க போகிறோம்.


நாத்தீகத்தில் தான் பகுத்தறிவு இது எப்படி, ஏன் என்று சிந்தனை இருக்கும்.


ஒன்றுமில்லாத ஒன்றில் இருந்துதான் இந்த உலகம், பூமி, உயிர்கள் எல்லாம் வந்தது என்று நாத்தீகத்தில் கூறுகிறார்கள்.


ஒன்றுமில்லாததிலிருந்து வந்தது எல்லாமே 5 அறிவு தான்

ஆனால் அதே  ஒன்றுமில்லாததிலிருந்து வந்தவன் மனிதன் மட்டும் 6 அறிவு


இதெப்படி இயற்க்கையில் சாத்தியம் என்றால் பதில் இல்லை


பகுத்தறிவு இதுவரையே செல்லும்


இதை தாண்டி பல நிகழ்வுகள் உள்ளன  அதையும் நான்தான் படைத்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.



நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கும், ஷகாபாக்கள் கொண்டுள்ள நம்பிக்கையும் வித்தியாசம் உள்ளதா இல்லையா என்று பின் வருமாறு பார்ப்போம்



ஒரு வேளை நபி ஸல் அவர்களுடன் இருந்துருந்தால் இப்போது உள்ள மனநிலையில் நபி ஸல் அவர்களை நம்புவோமா என்று சிந்தித்து கொள்வோம்.



இப்போது வாழக்கூடிய சாமியார்கள் கையை கழுவியோ, உமிழ்வதையோ (துப்புவதையோ) காலை கழுவியோ அதை நாம் மேனியில் தேய்க்க சொன்னால்  நாம் தேய்ப்போமா?



இது அறிவியல் காலம் இப்போது வந்து ஒருவர் கழுவும் தண்ணீரை மேல் முழுவதும் தேய்க்க சொல்வதா? சாத்தியமே இல்லை என்று நாம் வாதம் செய்வோம்



ஆனால் நபி ஸல் அவர்களுடைய தோழர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று கவனித்து கொள்ளுங்கள்.



நபி ஸல் அவர்கள் உமிழ்ந்து அவர்களுடைய தோழர்கள் எடுத்து குடித்தார்கள், முகத்திலும் தடவினர்கள்.



அபூ மூஸா (ரழி) கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் உள்ள ஒரு குவளையைக் கேட்டார்கள், அதில் தம் இரு கைகளையும் முகத்தையும் கழுவினார்கள், பின்னர், ஒரு வாய் அளவு தண்ணீரை அந்தக் குவளையில் உமிழ்ந்தார்கள், பிறகு (அபூ மூஸா (ரழி) மற்றும் பிலால் (ரழி) ஆகிய) எங்களிடம், "இந்தக் குவளையிலிருந்து குடியுங்கள், மேலும் இதிலிருந்து சிறிதளவு தண்ணீரை உங்கள் முகங்களிலும் மார்புகளிலும் ஊற்றிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.


ஸஹீஹுல் புகாரி : 188



புஹாரி 2731,2732


அல் -மிஸ்வர் பின் மக்ரமா & மர்வான் 


அறிவிக்க கூடிய ஹதீதில்


ஹுதைபியா உடன்படிக்கையின் போது


மக்கா தலைவர்களின் ஒருவன் உர்வா பின் மஸ்ஊத்


நபி ஸல் அவர்களிடம் சமாதானம் பேச வருகிறார்கள்


அங்கு நபி ஸல் அவர்களோடு உள்ள தோழர்களை பார்த்துவிட்டு மக்காவில் போய் தன்னுடைய மக்களிடம் தன் பார்த்ததை கூறுகிறார்


அவர் அப்படி என்ன பார்த்தார்.



உர்வா தனது தோழர்களிடம் திரும்பிச் சென்று, "என் சமூகத்தாரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அரசர்களிடம் சென்றிருக்கிறேன். கைஸர், கிஸ்ரா, நஜாஷி ஆகியோரிடமும் சென்றிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! முஹம்மதுடைய தோழர்கள் முஹம்மதைக் கண்ணியப்படுத்துவதைப் போன்று, எந்த மன்னரின் தோழர்களும் தங்கள் மன்னரைக் கண்ணியப்படுத்துவதை நான் கண்டதே இல்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் காறி உமிழ்ந்தால், அது அவர்களில் ஒருவரின் கரத்தில் விழாமல் இருப்பதில்லை. அதை அவர்கள் தங்கள் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கின்றனர். அவர் கட்டளையிட்டால் அதைச் செய்ய முந்திக்கொள்கின்றனர். அவர் உளூச் செய்தால் அந்தத் தண்ணீருக்காகச் சண்டையிடும் அளவுக்குச் செல்கின்றனர். அவர் பேசினால் தங்கள் குரல்களைத் தாழ்த்திக்கொள்கின்றனர். அவரைக் கண்ணியப்படுத்தும் விதமாக அவரை உற்றுநோக்குவதுமில்லை. அவர் உங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டியுள்ளார். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.



நாங்கள் இந்த நிகழ்ச்சியை வைத்து கேட்கிறோம்.


இதே நிகழ்ச்சியில் நாம் இருந்தால்


நபி ஸல் அவர்கள்  காறி உமிழ்ந்தால், அது அவர்களில் தோழர்கள் ஒருவரின் கரத்தில் விழாமல் இருப்பதில்லை. அதை அவர்கள் தங்கள் முகத்திலும் மேனியிலும் தேய்த்துக்கொள்கின்றனர்.



இந்த தோழர்கள் இடத்தில் இருந்திருப்போமா?


அவரவர் மனதை தொட்டு கேள்வியாக கேட்டுக்கொள்ளுங்கள்



இதை இங்கு கூற காரணம்.


பகுத்தறிவை தாண்டிய மறைவான நம்பிக்கை இருந்தால் மட்டுமே இது சாத்தியம்



இந்த பகுத்தறிவை தாண்டிய நம்பிக்கையைத்தான் இப்போது உள்ள சாமியார்கள் இடத்தில் காண்கிறோம்.


ஆனால் இவர்கள் செய்வது உலக லாபத்திற்காக.


நபி ஸல் செய்தது அல்லாஹ்வுடைய தீனுக்காக


இதை மக்கள் (காஃபிர்கள் ) மத்தியில் வெளிப்படையாக சொல்லும் போது இஸ்லாமும், மற்ற எல்லா மதமும் ஒன்று எண்ணுகிற அளவிற்கு இந்த நாத்தீக உலகம் மறக்கடித்து விட்டது.



இப்போது இஸ்லாமியர்களும் எங்களுக்கு அறிவுக்கு புலப்பட்டால்தான் ஹதீத்களை ஏற்றுக்கொள்வோம் என்று சொல்லகிற அளவுக்கு நாத்தீக உலகம் மறக்கடித்து விட்டது.


இப்போது நாத்தீக வட்டத்தில் சொல்லக்கூடிய பகுத்தறிவு என்பது ஒரு எள் அளவு கூட இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லை.


மேலும் அறிவுக்கு அப்பாற்பட்ட, பகுத்தறிவுக்கு புலப்படாத நிறைய விஷயம் இருக்கிறது.


அது என்னவென்று படிப்படியாக பார்ப்போம்.


பெரும்பாலும் அபூஹுரைரா ரலி அவர்கள் தான் அதிகமான ஹதீதை அறிவித்துள்ளார்கள்.


அவருக்கு மறதி ஏர்படவே செய்யதா என்பதற்கு இப்போது உள்ள இந்த நாத்தீக பகுத்தறிவுக்கு எட்டாத விஷயத்தை கூறுகிறார்.



அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:



ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள், "நான் எனது இந்த உரையை முடிக்கும் வரை உங்களில் எவர் தனது ஆடையை விரித்து வைத்து, பின்னர் (உரை முடிந்ததும்) அதனைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொள்கிறாரோ, அவர் எனது இந்த உரையில் எதனையும் ஒருபோதும் மறக்கமாட்டார்" என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தமது உரையை முடிக்கும் வரை, என்னிடம் இருந்த ஒரே ஆடையான (நமிரா எனும்) கம்பளியை நான் விரித்தேன். பின்னர் அதனை எனது நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். சத்தியத்துடன் அவர்களை அனுப்பியவன் மீது ஆணையாக! அன்று முதல் இன்று வரை, அந்த உரையில் எதனையும் நான் மறக்கவில்லை.


அல்லாஹ்வின் வேதத்தில் உள்ள இரண்டு வசனங்கள் இல்லையென்றால், நான் உங்களிடம் எதனையும் அறிவித்திருக்க மாட்டேன். (அவை): "{இன்னல்லதீன யக்துமூன மா அன்ஸல்னா மினல் பய்யினாதி...}" (என்று தொடங்கி) "{...அர்ரஹீம்}" (என்பது வரையுள்ள வசனங்களாகும்).



ஸஹீஹுல் புகாரி : 2350


நபி ஸல் அவர்கள் சந்திரணை பிளந்து காட்டிணார்கள் இதற்க்கும் பகுதிதறிவிற்கும் சம்பந்தம் இல்லை இந்த நிகழ்ச்சியை மனிதர்களுடைய கண் பார்க்கிறது ஆனால் நபி ஸல் அவர்கள் மக்களுக்கு நேரில் காண்பித்து கொடுத்தும் அவர்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இல்லை.


அப்போது இதை பகுத்தறிவு என்பதா ? விதண்டாவாதம் என்பதா ?




அப்துர் ரஹ்மான் பின் அபீ பக்ர் (ரழி) அவர்கள் கூறியதாவது:


அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா (திண்ணைத் தோழர்கள்) ஏழைகளாக இருந்த திண்ணை தோழர்களை . நபி (ஸல்) அவர்கள், "யாரிடம் இருவருக்கான உணவு உள்ளதோ அவர் (அவர்களிலிருந்து) மூன்றாமவரை அழைத்துச் செல்லட்டும். யாரிடம் நால்வருக்கான உணவு உள்ளதோ அவர் ஐந்தாமவரை அல்லது ஆறாமவரை அழைத்துச் செல்லட்டும்" என்று கூறினார்கள்.


அபூ பக்ர் (ரழி) மூன்று பேரை அழைத்து வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்து பேரை அழைத்துச் சென்றார்கள்.



அப்போது அபூபக்கர் ரலி அவர்களிடம் உள்ள உணவு எல்லாருக்கும் இல்லாமல் போகிறது


இருக்கிற உணவை எடுத்து கொடுகிறார்கள்


அதில் இருந்து மக்கள் எடுத்து சாப்பிடுகிறார்கள்


அதில் இருக்கக்கூடிய உணவு அப்படியே உள்ளது என்று கூறுகிறார்கள்.


அந்த உணவை எத்தனை பேர் உண்டார்கள் என்று கேட்டால் அல்லாஹ்வே அறிவான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அதிசயம் நடக்கிறது


ஸஹீஹுல் புகாரி : 602


மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஹதீத் பெரிய சம்பவம் இந்த அதிசய சம்பவத்தை பகுத்தறிவா? அதை மீறிய நம்பிக்கையா? என்று உணர்த்தவே இந்த ஹதீதை சுருக்கி கூறி உள்ளோம்


ஒரு மனிதரை அடக்கம் செய்தால் பூமியே அவரை வெளியில் எடுத்து போடுமா?



அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:


கிறித்தவராக இருந்த ஒரு மனிதர் இஸ்லாத்தைத் தழுவினார். அவர் ‘அல்பகரா’ மற்றும் ‘ஆல இம்ரான்’ (ஆகிய அத்தியாயங்களை) ஓதியவராகவும், நபி (ஸல்) அவர்களுக்காக (வஹி) எழுதுபவராகவும் இருந்தார். பின்னர் அவர் மீண்டும் கிறித்தவத்திற்கே மாறிவிட்டார். அவர், “நான் முஹம்மதுக்கு எழுதிக் கொடுத்ததைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது” என்று சொல்லி வந்தார்.


பிறகு அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்தான். அவரை (மக்கள்) அடக்கம் செய்தார்கள். ஆனால் விடிந்தபோது பூமி அவரை வெளியே தள்ளியிருந்தது. அவர்கள், “இது முஹம்மதுடைய மற்றும் அவருடைய தோழர்களுடைய செயலாகும். இவர் அவர்களிடமிருந்து தப்பியோடி வந்ததால், நமது தோழரின் (கல்லறையைத்) தோண்டி, அவரை வெளியே வீசிவிட்டனர்” என்று கூறினர்.


எனவே, அவருக்காக (மீண்டும்) குழிதோண்டி ஆழப்படுத்தினர். ஆனால் விடிந்தபோது பூமி அவரை வெளியே தள்ளியிருந்தது. அவர்கள், “இது முஹம்மதுடைய மற்றும் அவருடைய தோழர்களுடைய செயலாகும். இவர் அவர்களிடமிருந்து தப்பியோடி வந்ததால், நமது தோழரின் (கல்லறையைத்) தோண்டி, அவரை வெளியே வீசிவிட்டனர்” என்று கூறினர்.


எனவே, அவருக்காக (மீண்டும்) குழிதோண்டி, தங்களால் முடிந்தவரை பூமியில் ஆழப்படுத்தினர். ஆனால் விடிந்தபோது பூமி அவரை வெளியே தள்ளியிருந்தது.


ஆகவே, இது மனிதர்களின் செயல் அல்ல என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்; எனவே அவரை (அடக்கம் செய்யாமல்) அப்படியே போட்டுவிட்டார்கள்.



ஸஹீஹுல் புகாரி : 3617



மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த சம்பவம் என்பது பகுத்தறிவுதான் பெரியது என்று சொல்லக்கூடிய முஸ்லீம்கள் இந்த ஹதீத் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமா இருக்கிறது என்று விட்டுவிடமுடியுமா?


இது நம்பிக்கை சார்ந்த விஷயமா?


பகுத்தறிவை தாண்டி படைத்த ஒருவன் இருந்தால் மட்டுமே இது செய்ய முடியும் என்று சொல்வது சாத்தியமாகுமா?





மேலும் ஒரு ஹதீத் அஜ்வா பேரித்தம்பழம் சாப்பிட்டு விஷம் குடித்தால் இறந்து போகமாட்டார்கள் என்ற ஹதீத் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி அதை பலகீனமாக்கி வைத்துள்ளோம்.


இந்த ஹதீதும் பகுத்தறிவை தாண்டி உள்ள நம்பிக்கை


அப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட ஒருவர்  அஜ்வா பேரித்தம்பழம் சாப்பிட்டு விஷம் குடிக்கவும் செய்வார்கள்.


அப்படிப்பட்ட நம்பிக்கை கொள்ள வாழ்க்கையை முஃஹ்லீசாக வாழ்ந்தால் மட்டுமே சாத்தியமாகும்.



குர் ஆன் என்பதே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதுதான்.


அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நபிமார்களில் ஒவ்வொரு நபிக்கும், மனிதர்கள் நம்பிக்கை கொள்ளத்தக்க அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. ஆனால் எனக்கு வழங்கப்பட்டிருப்பதெல்லாம் அல்லாஹ் எனக்கு அருளிய வஹீ (இறைச்செய்தி) ஆகும். ஆகவே, மறுமை நாளில் மற்ற நபிமார்களை விடவும் அதிகமான பின்பற்றுபவர்களைக் கொண்டவராக நான் இருப்பேன் என ஆதரவு வைக்கிறேன்.”



ஸஹீஹுல் புகாரி : 7274



குர் ஆன் எப்படி அதிசயம் நபி ஸல் அவர்கள் என்ற ஒரு மனிதருக்கு அருளப்பட்டது


அவர் சாதாரணமாக பேசும்போது உள்ள வார்த்தை அவர்கள் வாயில் இருந்து வருகிறது.


அவர்கள் வஹி அறிவிக்கும் போது அதே வாயில் இருந்து வருகிறது.


அப்போது அந்த அரபு நடைமுறையில் உள்ளவர்களுக்கு தெரியும்


நடைமுறை பேச்சு எது? வஹி எது? என்று தெளிவாக பிரித்து கண்டு கொள்ளலாம்


நாம் முஸ்லீம் மக்கள் குர் ஆனை படித்து தன்னுடைய பகுத்தறிவால் விளக்கங்கள் கொடுக்க முடியுமா?


பகுத்தறிவுக்கு உட்பட்டது என்றால் பனி இஸ்ரவேல்கள் கேட்டகேள்விக்கு நாங்கள் கேட்கிறோம்


ரூஹ் எங்கே இருந்து உருவாகிறது?


தூங்கும் போது நம்மளுடைய உயிர் கைபற்ற படுகிறது ஆனால் நம்மளுடைய இதயம் துடிக்கிறது


அப்போது இதை பகுத்தறிவால் ஒருவர் எப்படி விளக்க முடியும்


பகுத்தறிவை தாண்டிய ஒருத்தன் இருந்தால் மட்டுமே இதற்க்கு விளக்கம் கிடைக்கும்.


இதில் பகுத்து அறிந்து குர் ஆனை பயன்படுத்தி பதில் தாருங்கள்.



இப்படி பல விஷயங்களை கேட்டுக்கொண்டே போகலாம்.



இந்த தலைப்பு எடுத்ததற்கு காரணம்



பகுத்தறிவு என்ற பெயரால் இஸ்லாமில் மிகுதியான ஹதீத்கள் பலகீனமாக்கபட்டுள்ளன



குர் ஆனை வைத்துதான், ஹதீத் உள்ளது


அந்த ஹதீதை படித்து எனக்கு அறிவுக்கு புலப்படவில்லையே, நடைமுறை சாத்தியம் இல்லையே என்றேல்லாம் கூறுவதை விட்டுவிட்டு


அல்லாஹ்வினால் அனுமதித்த காரியங்களை செய்துகொண்டு இருந்தால்,

இன்ஷாஅல்லாஹ் நாங்கள் இப்போது உங்களுக்கு விளக்குவது போல் எல்லா காரியங்களையும் அல்லாஹ்வே நம்முடைய உம்மதுக்கு சீராக்குவான்.

Comments