ஒருவரை காஃபிர் என்றோ முஸ்லீம் என்றோ முடிவு எடுக்கலாமா? அவரின் முன்பு நேராக சொல்லலாமா?
முஸ்லீம் = காஃபிர்
இறைநம்பிக்கையாளர் வெளிப்படையான முஸ்லீமான ஒருவரின் தவறான செயலை பார்த்து அவரை காஃபிர் என்று கூப்படலாமா?
உமர் பின் அல்-கத்தாப் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"செயல்களின் பலன் எண்ணங்களைப் பொறுத்திருக்கிறது
ஸஹீஹுல் புகாரி : 1
ஒருவரிடம் தெளிவான குஃப்ர் இருந்தாலும் அவரை காஃபிர் என்று சொல்வது எந்த ஒரு நபிமொழியிலும் நாங்கள் கண்டதில்லை.......... ஒரே ஒரு செயலை தவிர...............
அது எந்த செயல்...........
ஜுனாதா பின் அபீ உமைய்யா அவர்கள் கூறியதாவது:
நாங்கள் உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களிடம் சென்றோம். நாங்கள், "அல்லாஹ் உங்களைச் சீர்படுத்துவானாக! (உங்களுக்குக் குணமளிப்பானாக!) நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதும், அல்லாஹ் உங்களுக்குப் பயனளிக்கக் கூடியதுமான ஒரு ஹதீஸை எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கேட்டோம்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள்; நாங்கள் அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்தோம். அப்போது அவர்கள் எங்களிடம் வாங்கிய உறுதிமொழியில், 'நாங்கள் விரும்பும் நிலையிலும் நாங்கள் வெறுக்கும் நிலையிலும், எங்கள் சிரமத்திலும் எங்கள் எளிதான நிலையிலும், எங்களுக்குப் பாதகமாக (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் (தலைமைக்குச்) செவிசாய்த்து வழிப்பட வேண்டும்; அதிகாரத்தில் உள்ளவர்களுடன் (அதிகாரத்தைக் குறித்து) நாங்கள் சண்டையிடக் கூடாது; அல்லாஹ்விடமிருந்து (நிரூபிக்க) உங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்கக்கூடிய, பகிரங்கமான குஃப்ரை (இறைமறுப்பை) நீங்கள் கண்டால் தவிர' என்று அமைந்திருந்தது."
ஸஹீஹுல் புகாரி : 7055, 7056
அதிகாரத்தில் உள்ளவர்களிடம் "குஃப்ரை" கண்டால் அதுவும் பகிரங்கமான "குஃப்ரை" கண்டால் "தடுக்கலாம்" கீழ் படிய கூடாது...........
"குர் ஆனேஅதைத்தான் கூறுகிறது ""குகைவாசிகள்" ஃபிர்அவுனை எதிர்த்த சூனியகாரர்கள் இப்படி பல பேரை கூறுகிறது, இதை பின்பு பாக்கலாம்
அப்படியென்றால் ஒரு தனிப்பட்ட ஒருவர் தவறான செயல் செய்கிறார் அப்போது அவருடைய எண்ணங்களும் தவறாகதானே இருக்கும்.
அப்போது ஒருவர் காஃபிருடைய செயலை செய்கிறார் அப்போது அவர் காஃபிர் ஆவாரா?
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக, ஒரு மனிதன் நீண்ட காலம் சுவர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து வருவான், பின்னர் அவனுடைய செயல்கள் நரகவாசிகளின் செயல்களைக் கொண்டு முடிக்கப்படும்.
மேலும் நிச்சயமாக, ஒரு மனிதன் நீண்ட காலம் நரகவாசிகளின் செயல்களைச் செய்து வருவான், பின்னர் அவனுடைய செயல்கள் சுவர்க்கவாசிகளின் செயல்களைக் கொண்டு முடிக்கப்படும்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2651
ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர், மக்கள் பார்வையில் வெளிப்படையாக, சொர்க்கவாசிகளின் செயல்களைப் போன்ற செயல்களைச் செய்வார், அவர் நரகவாசிகளில் ஒருவராகவும் இருப்பார்; மேலும், ஒருவர் மக்கள் பார்வையில் வெளிப்படையாக நரகவாசிகளைப் போல செயல்படுவார், ஆனால் (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்கள் என அறிவித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 112 b
நிச்சயமாக அல்லாஹ் சுவர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான்; அவர்கள் தங்கள் தந்தையர்களின் முதுகெலும்புகளில் இருக்கும்போதே அவர்களுக்கென அதனை அவன் படைத்துவிட்டான். மேலும் நரகத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான்; அவர்கள் தங்கள் தந்தையர்களின் முதுகெலும்புகளில் இருக்கும்போதே அவர்களுக்கென அதனை அவன் படைத்துவிட்டான்" என்று கூறினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2662 ச
சொர்க்கவாசி, நரகவாசி ஒரு பிறப்பிலே இருக்குமானால் நாம் நற்செயல் செய்யவேண்டாமா? அப்படியே விட்டு விடலாமா
இம்ரான் இப்னு ஹுஸைன் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது:
சுவர்க்கவாசிகளும் நரகவாசிகளும் (ஏற்கனவே) வேறுபடுத்தப்பட்டு விட்டனரா? அவர்கள் (ஸல்) கூறினார்கள்: ஆம். மீண்டும் கேட்கப்பட்டது: (அப்படியானால்), பிறகு நற்செயல்கள் செய்வதால் என்ன பயன்? அதற்கு அவர்கள் (ஸல்) கூறினார்கள்: ஒவ்வொருவரும் எதற்காகப் படைக்கப்பட்டுள்ளாரோ அதற்கு அவர் இலகுபடுத்தப்பட்டுள்ளார்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2649 அ
சொர்க்கவாசியும், நரகவாசியும் அவர்களுடைய செயல் இலகுவாக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது.
ஈமான் உள்ளம் சம்பந்தப்பட்டது.
பிற மனிதன் ஒருவருடைய செயலை கண்டு சொர்க்கவாசியா? நரகவாசியா? என்று புரிந்து கொள்ளலாம்.
அதை பிறரிடம் நிரூபிக்க முடியாது.
குற்றத்தை நிரூபிக்க குற்றம் சாட்டப்பட்டவர் மீது குறைந்த பட்சம் சாட்சி வேண்டும்
அப்போதுதான் நிரூப்பிக்க முடியும்.
நூஹ் நபி தன்னுடைய மகனின் செயலை கண்டு நல்லவன் என்று நினைத்து கொண்டார்.
அல்லாஹ் கூறித்தான் நூஹ் நபிக்கு தெரிந்தது.
நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
(அல்குர்ஆன் : 11:45)
அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
(அல்குர்ஆன் : 11:46).
முனாஃபிக்களையோ, தீயவர்களையோ, காபீர்களையோ அல்லாஹ்வே பிரித்து காண்பிப்பான்.
(காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
(அல்குர்ஆன் : 3:179)
மிக கடினமான கேள்வி இப்போது நாங்கள் கேட்கிறோம்.
இசை என்பது அனுமதிக்கப்பட்டதா? அனுமதிக்க படாததா?
என்று இரண்டு விதமான கருத்து ஒன்னு உள்ளது அப்படித்தானே!
இப்போது இந்த தலைப்பில் இருந்தே கேள்வி கேட்கிறோம்.
தெளிவாக விடை காணலாம்.....
ஒருவருடைய செயல் என்ற அடிப்படையில் ஒருவர் இசை கேட்கிறார்........
அதேபோல் இன்னொருவர் அதே செயல் என்ற அடிப்படையில் இசை கேட்கவில்லை.
இப்போது நாங்கள் இசை ஹராமா? ஹலாலா? என்று கேட்கமட்டோம்.
இப்போது இந்த இருவரில் யார் தன்னுடைய செயலில் சிறந்தவர் என்று அவர்களின் செயலின் அடிப்படையில் தெரியும்.
கண்டிப்பாக தெரியும்.
இருவரில் நஷ்டவாளி யார்? என்பதும் கண்டிப்பாக தெரியும்.
இந்த விஷயம் ஒரு இரையடியாருக்கு தெரியும்.
ஆனால் பிறரிடம் இவர் இசை கேட்கிறார் இவருக்கு நரகம் கிடைக்கும்.
இவர் இசை கேட்கவில்லை அதனால் இவருக்கு சொர்க்கம் கிடைக்கும்.
என்று பிறரிடம் கூறுவதற்கு அல்லாஹ் இம்மையில் யாருக்கும் எந்த ஒரு ஆதரத்தையும் விட்டுவைக்க வில்லை.
ஏனென்றால் இந்த இருவரும் வேறு ஏதாவது செயலில் நன்மைகள் செய்யலாம்.
நன்மைகள், தீமைகள் எடையில் போடப்பட்டு பின்புதான் எடை காணப்படும்.
இது இஸ்லாமில் பெரிதோ சிரிதோ சரியான செயலை அல்லாஹ் அறிவான்.
மேலும் சிறிய உதாரணம்.
ஒரு நிகழ்வில் அன்சாரி பெண்ணின் பாட்டில் இசை இருந்தது அதை நபி ஸல் அவர்கள் அங்கீகரித்தார்கள்
அதன் பின்பு திரும்பி படுத்து கொண்டார்கள்.
அபூபக்கர் ரலி அவர்கள் வந்து அந்த இசையை தடுக்க முனைந்தார்கள்
அபூபக்கர் ரலி அவர்களிடம் அவர்களை விட்டு விடுங்கள் என்று கூறினார்கள்.
இந்த ஹதீத் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இந்த நிகழ்வில் அந்த இசையில் நபி ஸல் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆகவே நபி ஸல் அவர்களின் செயலும், மற்றவர்களுக்கு சில விஷயங்களை அவர்கள் அங்கீகரித்ததும் இஸ்லாமாக அரிஞ்சர்கள் மத்தியில் இருந்தாலும்.
நபி ஸல் அவர்கள் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் முக்கியம் கொடுத்த செயல் என்பது அல்லாஹ்வுடைய தீன் மட்டும்தான்..... இங்கு மக்களுக்கு சிலவிஷயங்கள் விருப்பப்பட்டால் அதை அனுமதித்தது என்பது வேறு.
ஹதீத் இந்த விஷயத்தை இலகுவாக்கி இருந்தாலும்.
சொல்லையும், செயலையும் குர் ஆன் மிக வலுவாக பேசுகிறது.
அல்லாஹ் எப்போதும் விஷயங்களை தெளிவாக பேசிவிடுவான்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
(அல்குர்ஆன் : 61:2)
நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.
(அல்குர்ஆன் : 61:3)
61 சூரா ஷஃப்ஃபு (வரிசை ) இந்த சூராவே எதற்க்காக வரிசையில் இருக்க வேண்டும் என்று பேசும்.
ஆகையால் (சொல் என்பது வேறு )
(செயல் என்பது வேறு )
அல்லாஹ்வின் வார்த்தையின் படி இந்த இரண்டிற்கும் வித்தியாசம் (படித்தரமா?)(ஹலால், ஹராமா? ) என்பதை அல்லாஹ்வே அறிவான்.
நபி ஸல் அவர்களின் குணம் (மன்னிக்க கூடியவர் ) என்று நமக்கு தெரிந்ததுதான்.
எவ்வளவு தூரம் மன்னிக்க கூடியவர்கள் என்று பார்த்தால்
பத்ர் யுத்தகளத்தில் பிடித்து வந்தவர்களை மன்னித்தார்கள்.(ஆனால் அல்லாஹ் அவர்களை மன்னிக்க வில்லை )
ஆதாரம் ( முஸ்லீம் =1763 )
தாயிப் நகரின் உள்ள மக்களை இந்த மலையின் இடுக்கில் வைத்து கொன்றுவிடவா என்ற கேட்ட வணவர்களிடம் இவர்களுடைய சந்ததிகள் அல்லாஹ்வின் நட்டத்தால் இஸ்லாத்திற்கு வருவார்கள் அவர்களை வேண்டாம் விட்டு விடுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நபி ஸல் அவர்களின் குணத்தை விவரிக்க கீழே உள்ள செய்தியை (ஹதீதை ) கூறுகிறோம்.
நயவஞ்சகர்களுக்கு
"(நபியே!) நீர் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும், அல்லது இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் சரியே; இவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் இவர்களை மன்னிக்கவே மாட்டான்" (அல்குர்ஆன் 9:80)
என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மேலும், "நான் எழுபது முறைகளை விட (அதிகமாகப் பாவமன்னிப்புத் தேடுவதை) அதிகப்படுத்துவேன்" என்று கூறினார்கள்.
ஸஹீஹுல் புகாரி : 4672
நபி ஸல் அவர்களின் குணங்களை விளக்க வேண்டுமென்றால் இன்னும் நிறைய கூறலாம்
ஆகவே சொல்லும், செயலும் ஒன்றல்ல.
ஒரு மனிதனுடைய மனதில் வஞ்சகத்தை வைத்துவிட்டு செயலில் நல்லதை செய்பவரும் இருக்கிறார்கள்.
நபி ஸல் அவர்கள் செய்ததும், அங்கீகரித்ததும் ஒன்றல்ல
பெரிய வித்தியாசம் இருக்கிறது.
செய்ததும், அங்கீகரித்ததும் ஒன்றல்ல என்று சொன்னதும் (ஹலால், ஹராம் ) என்று புரியக்கூடாது.
கண்டிப்பாக நபி ஸல் அவர்கள் செய்ததற்கும், அங்கீகரித்ததற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
நபி ஸல் அவர்கள் குர் ஆனாக வாழ்ந்தார்கள் ( நபி ஸல் அவர்களுடைய குணமும், செயலும் ஒன்றுபோல் இருந்தது)
நம்மில் பெரும்பாலான அருஞ்சர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு குர் ஆனை விட ஹதீதை தான் காண்பிக்கிறார்கள்.
பெரும்பாலான அரிஞ்சர்கள் நபி ஸல் அவர்கள் அங்கீகரித்ததைதான் காண்பிக்கிறார்கள்.
இது மறுமைநாளில் பெரிய இழப்பாகவும் வரலாம்.........
எல்லாம் அல்லாஹ்வே அறிந்தவன்.
நாங்கள் ( மக்களை ) மனிதர்களை சொர்க்கத்தின் பக்கம் அழைக்கிறோம்.
ஒருவர் இஸ்லாத்தில் காட்டாத செயலை செய்வார்கள்.
அவ்வாறு அவர்கள் செய்வதை கண்டால் அவரிடம் சென்று அவரை சொர்க்கத்திற்க்கு அழைப்பதற்க்கு முயற்சி செய்ய வேண்டும்.
இதுவே இஸ்லாமில் எல்லாரும் (எல்லா நபிமார்களும் ) செய்த செயலாக உள்ளது.
வரலாற்றில் எந்த ஒரு நபிமார்களும் இஸ்லாத்திற்கு மாற்றமாக செய்பவரை கண்ணிய குறைவாக பேசுவது, அவர் செய்த குறையை மற்றவரிடம் சுட்டி காட்டுவது இப்படி எந்த செயலையும் செய்யவில்லை.
நேரடியாக சென்று அவர்களை சொர்க்கத்தின் பக்கம் அழைத்தார்கள்.
(அதற்கு) மூஸா “வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 17:102)
மூஸா அலை அவர்கள் ஃபிர்அவ்ன் அவனுடைய பேச்சின் எல்லை எந்த அளவுக்கு இருந்தது என்று கவனம் வைத்து இருந்தார்கள். அதனால்தான் அவனிடம் சென்று இஸ்லாத்தின் பக்கம் அழைத்து விட்டு அவனின் அநியாய பேச்சின் காரணமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று சொன்னார்கள்.
فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰى
“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
(அல்குர்ஆன் : 79:24)
ஃபிர்அவ்ன் நான்தான் உங்களுடைய இறைவன் என்று கூறினான்.
அடுத்து
இப்ராஹிம் நபியிடம் நம்ரூத் வாதடினது.
நமரூத் = நானும் உயிர் கொடுக்கிறேன், உயிர் எடுக்கிறேன்
இப்ராஹிம் நபி = என் இறைவன் சூரியனை கிழக்கில் இருந்து உதிக்க செய்கிறான், நீ மேற்கில் இருந்து உதிக்க செய்
நமரூத்= வயடைத்து போனான்
(இதே போன்று தெளிவான குஃபுர் இருந்தால்)
குஃபுர் இருப்பவரிடம் சென்று நன்மையை சொல்ல வேண்டும்.
(புஹாரி 7055,7056)
அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்: “எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)” என்று; அதற்கவன், “நானும் உயிர் கொடுக்கிறேன்; மரணம் அடையும் படியும் செய்கிறேன்” என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்: “திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!” என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 2:258)
அடுத்து
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
அபூ ஜஹ்ல் (மக்களிடம்), “முஹம்மத் உங்கள் மத்தியில் (சஜ்தா செய்வதற்காக) தனது முகத்தை மண்ணில் வைக்கிறாரா?” என்று கேட்டான். அதற்குக் “ஆம்” என்று கூறப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீது சத்தியமாக! அவர் அவ்வாறு செய்வதை நான் பார்த்தால், நிச்சயம் நான் அவரது கழுத்தை மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணில் புழுதி படியச் செய்வேன்” என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவரது கழுத்தை மிதிப்பதாக எண்ணிக்கொண்டு அவன் (அவர் அருகில்) வந்தான். ஆனால் அவன் (திடீரென) தனது கைகளால் (எதையோ) தடுத்தவாறு தனது குதிகால்களில் பின்வாங்கிச் சென்றதைத் தவிர வேறெதுவும் மக்களைத் திகைக்க வைக்கவில்லை. அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், “நிச்சயமாக எனக்கும் அவருக்கும் இடையில் நெருப்பாலான ஒரு அகழியையும், பயங்கரத்தையும், இறக்கைகளையும் காண்கிறேன்” என்று கூறினான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் என்னை நெருங்கியிருந்தால் வானவர்கள் அவனை ஒவ்வொரு உறுப்பாகப் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் கூறுகிறார்: இது அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் ஹதீஸில் உள்ளதா அல்லது அவர்களுக்கு எட்டிய செய்தியா என்பது எமக்குத் தெரியவில்லை). பின்னர் அல்லாஹ் (பின்வரும் வசனங்களை) அருளினான்:
“கல்லா இன்னல் இன்ஸான லயத்கா. அன் ரஆஹுஸ்தக்னா. இன்ன இலா ரப்பிகர் ருஜ்ஆ. அரஅய்தல்லதீ யன்ஹா. அப்தன் இதா ஸல்லா. அரஅய்த இன் கான அலல் ஹுதா. அவ் அமர பித் தக்வா. அரஅய்த இன் கத்தப வதவல்லா. அலம் யஃலம் பிஅன்னல்லாஹ யரா. கல்லா லஇன் லம் யன்தஹி லனஸ்ஃபஅன் பின் நாஸியா. நாஸியதின் காதிபதின் காதிஆ. பல்யத்வு நாதியஹ். ஸனத்வுஸ் ஸபானியா. கல்லா லா துதிஃஹு.” (அல்குர்ஆன் 96:6-19) - (அதாவது அபூ ஜஹ்லைக் குறித்து இவ்வசனம் அருளப்பட்டது).
உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், “மேலும் (இறுதி வசனத்தில்) அல்லாஹ் எதை ஏவினானோ அதை அவருக்கு (நபிக்கு) ஏவினான்” (அதாவது ‘சஜ்தா செய்வீராக; நெருங்குவீராக’ என்று கட்டளையிட்டான்) எனும் தகவலை அதிகப்படுத்தினார்கள். இப்னு அப்துல் அஃலா (ரஹ்) அவர்கள், “நாதியஹ் என்பது அவனது சமூகத்தாரைக் குறிக்கும்” என்று அதிகப்படுத்தினார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2797
அபூ ஜஹ்லை பற்றி நிறைய சம்பவங்கள் பேசலாம் அப்படி பேசினால் தலைப்பு மாறும்.
ஆகவே அவனின் கொடூரத்தனத்தின் எல்லையை விளக்க இந்த செய்தி போதும்.
இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகிறோம் என்றால்
நம்ரூத், ஃபிர்அவுன்,அபூ ஜஹ்ல் இந்த மூவரின் செயலும் எண்ணத்தை பிரதிபலிக்கிரது.
தூதர்கள் மூஸா, இப்ராஹிம், நபி ஸல் அவர்கள் முதலில் நேரில் போய் இறைவனின் போதனையை எடுத்துறைத்தார்கள்.
அதன்பின்புதான் அல்லாஹ் இவர்களின் எண்ணங்களில் முற்றுப்புள்ளி வைத்தான்.
இப்போது உள்ள சாதாரண மக்களிடம் ஒரே ஒரு செய்தியை எடுத்து சொல்லிவிட்டு அவர்களை " காஃபிர் " என்று முத்திரை குத்துவது எப்படி நியாயம்?
அல்லாஹ்வுக்கு ஒருவரை " காஃபிர் " என்று முத்திரை குத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படுகிறது
அது மனிதனுடைய கணக்கில் பல வருடங்கள் ஆகலாம்.
எந்த சூழ்நிலையில் ஒருவரை மன்னிப்பதும், ஒருவரை மன்னிக்காமல் விடுவதும் மனிதனாகிய நாம் புரிந்து கொள்ளமுடியாத செயலாகும்.
நாய்க்காக ஒரு பெண் தண்ணீர் இறைத்து சொர்க்கம் சென்றவளும் இருக்கிறாள், சென்றவரும் இருக்கிறார்.
பூனையை கொடுமை படுத்தி நரகம் சென்றவளும் இருக்கிறாள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு விபச்சாரியை அல்லாஹ் மன்னித்தான், ஏனெனில், அவள் ஒரு கிணற்றின் அருகே மூச்சிரைத்துக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றபோது, அந்த நாய் தாகத்தால் சாகும் நிலையில் இருப்பதைக் கண்டு, தனது காலணியைக் கழற்றி, அதைத் தனது முக்காட்டுடன் கட்டி, அதற்காக சிறிது தண்ணீர் இறைத்தாள். அதனால், அல்லாஹ் அதற்காக அவளை மன்னித்தான்."
ஸஹீஹுல் புகாரி : 3321
அஸ்மா பின்த் அபூபக்கர் ரலி அவர்கள் அறிவிக்க கூடிய ஹதீத்
நரகம் எனக்கு மிக அருகில் வந்தது; எந்த அளவிற்கென்றால், 'இறைவா! நானும் அவர்களுடன் (சேர்க்கப்பட்டு) விடுவேனோ?' என்று நான் கேட்டேன். அப்போது அங்கே ஒரு பெண்ணைக் கண்டேன். - (அறிவிப்பாளர் கூறுகிறார்:) 'ஒரு பூனை அவளைப் பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் கருதுகிறேன். - (நான்), 'இவளுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டேன். அதற்கு, 'இவள் அப்பூனையை அது பசியால் சாகும்வரை அடைத்து வைத்திருந்தாள். அதற்கு அவள் உணவளிக்கவும் இல்லை; பூமியின் பூச்சிகளைத் தின்பதற்காக அதை (அவிழ்த்து) விடவும் இல்லை' என்று கூறப்பட்டது."
ஸஹீஹுல் புகாரி : 745
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஒரு பெண் ஒரு பூனையை அது சாகும் வரை அடைத்து வைத்திருந்த காரணத்தால் தண்டிக்கப்பட்டாள். அதன் காரணமாக அவள் நரகத்தில் நுழைந்தாள். அவள் அதை அடைத்து வைத்திருந்தபோது அதற்கு உணவோ தண்ணீரோ கொடுக்கவில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்பதற்கேனும் அதை அவள் விட்டுவிடவுமில்லை.”
ஸஹீஹ் முஸ்லிம் : 2242 a
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு மனிதர், ஒரு நாய் தாகத்தின் காரணத்தால் (ஈர) மண்ணைத் தின்று கொண்டிருப்பதை கண்டார். உடனே அந்த மனிதர் தம் காலணியை எடுத்து, அதன் மூலம் (தண்ணீரை) மொண்டு, அந்த நாய் தாகம் தணியும் வரை அதற்குப் புகட்டினார். அல்லாஹ் அவருக்காக (அச்செயலை) மெச்சிக் கொண்டு, அவரைச் சொர்க்கத்தில் நுழையச் செய்தான்."
ஸஹீஹுல் புகாரி : 173
இன்னும் நிறைய விஷயங்களை ஞாபக படுத்திக்கொண்டே போகலாம்.
நாங்கள் இந்த பதிவிலிருந்து சொல்ல வருவது என்னவென்றால்.
காஃபிராக இருக்க கூடிய ஒருவர் தன்னை தெளிவாக பிரகன படுத்தினால் தவிர அவரை காஃபிர் என்று கூறுவது நல்லதல்ல.
ஒருவரின் செயலின் மூலம் அவர் நற்செயல் செய்கிறாரா?
தீய செயல் செய்கிறாரா? என்பது கண்டிப்பாக தெரியும்........
இங்கே மூன்றாமவருக்கு தீய செயல் செய்ய கூடியவரை பற்றி அவதூரோ.... பத்துவா..... முடிவோ...... எடுப்பது நல்லதல்ல..........
Comments
Post a Comment