மறுமை நாளின் அருகில் வரக்கூடிய யஹ்ஜுஜ் மஹ்ஜுஜ் செய்ய கூடிய குழப்பங்களை பார்க்க போகிறோம்.
2. குழப்பம் செய்வது என்பது =அல்லாஹ்வின் வழியில் செல்வோறை வழிகெடுப்பதற்கு உதவி செய்வது இரண்டாவது மிக பெரிய செயலாகும்.
இதை ஒவ்வொரு தலைமுறையிலும் யார் செய்தாலும் நாங்கள் அவர்களை
யஹ்ஜுஜ் மஹ்ஜுஜாக பார்க்கிறோம்.
இனி குழப்பங்கள் என்று குர் ஆன் சொல்லக்கூடிய செயலை பார்ப்போம்.
கலகம் செய்யாதீர்கள் 1
கலகம் செய்யாதீர்கள் என்பதற்கு நமக்கு அர்த்தம் தெரிவதில்லை.
கலகம் செய்வது என்பது = சீர்த்தியிருத்தப்பட்ட சமுதாயத்தை சீர்கெடுப்பது ஆகும்.
உதாரணமாக அல்லாஹ் ஒரு சமூகத்தையே வட்டி இல்லாத சமுதாயமாக
மாற்றி காட்டிவிட்டால் அந்த சமூகத்தை எப்படியாவது வட்டி வாங்க வைக்க
வேண்டும் என்று செயல்படுவது அதற்காக சூழ்ச்சி செய்வதுதான். (கலகம்)
எங்களுக்கு உள்ள கல்வியின் அடிப்படையில் சில குறிப்புகளை தருகிறோம்.
மக்களாகிய நீங்கள் இன்றைய காலகலகத்தின் வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
குர் ஆனில் சோதனை, கலகம், குழப்பம், இப்படியான தமிழ் மொழிபெயர்ப்புக்கு..........
அரபு வார்த்தையில் =ஃபித்னா,ஃபஸாத்,முஃப்ஸிதூன் என்று இதை சார்ந்த வார்த்தைகளை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
குர் ஆனில் இந்த குழப்பம், கலகம் பண்ணுவது என்பது மூன்று படி தரங்களில் கொண்டு வரப்படுகிறது.
1.முதல் படித்தரம்
2.இரண்டாம் படித்தரம்
3.மூன்றாம் படித்தரம்
என்று மூன்று நிலை உள்ளது
இதில் மூன்றாம் நிலையை அடைந்தால் அல்லாஹ்வின் வேதனையை எதிர்பார்ப்போம்.
அந்த மூன்றாம் நிலையை குறித்து கடைசியாக பார்ப்போம்.
இப்போது முதல் பகுதியை இப்போது பார்ப்போம்.
فِتْـنَةً,وَالْفِتْنَةُ,الْفِتْنَة,الْفِتْنَةَ
குர் ஆனில் சிரிதோ பெரிதோ என்று வகைப்படுத்துதலுக்கு அந்த பாவத்தின் உண்மையான நிலை அல்லாஹ்வே அறிவான்.
இங்கு அல்லாஹ்வின் வார்த்தைகளை அடிப்படையாக வைத்து இந்த குழப்பங்களின் வகையை மூன்று படித்தரமாக பிரித்துவைத்து இருக்கின்றோம்
இதன் முதல் பகுதியே
ஃபித்னா (فِتْـنَةً,وَالْفِتْنَةُ,الْفِتْنَة,الْفِتْنَةَ) என்ற வார்த்தையாகும்.
இந்த வார்த்தைக்கான முதல் வசனத்தை பார்ப்போம்.
குழப்பங்கள் தோன்றக்கூடிய முதல் பகுதி இதயம்தான்
கலகம் ( குழப்பம் ) தோன்றக்கூடிய முதல் இடம் மனது
அந்த மனதிலிருந்து முதலாக தோன்றக்கூடிய வகைதான் குர் ஆனில் இந்த வார்த்தையாக பயன்படுகிறது.
ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை ( فِتْـنَةً ) தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள். (22:53)
இதைத்தான் அல்லாஹ் யாருடைய மனதில் நோய் உள்ளதோ அவர்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று (3:7) இல் அல்லாஹ் ( فِتْـنَةً ) என்று கூறுகிறான்.
(3:7) என்று இந்த வசனத்தில் யார் மனதில் குழப்பம் உள்ளதோ அவர்கள் என்ற பகுதி பொதுவாக எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் அவர்கள் அவர்களுடைய சமூகத்தினுல் குழப்பத்தை ஏற்படுவார்கள் என்று இதன் மூலம் பொருள் கொள்ளலாம்.
முதலில் நாங்கள் சொன்னதுபோல் கலகம் ஏற்படுத்துவதின் ஆரம்ப நிலையை குறிப்பிடவே இந்த (فِتْـنَةً) வார்த்தை பயன்படுத்தபடுகிறது என்று இதிலிருந்து விளங்க முடிகிகிறது.
இந்த வார்த்தைக்கான இரண்டாம் வசனத்தை பார்ப்போம்.
இப்னு கசீர் 2:190 to 193 வரை உள்ள தப்ஸீரில்
அபுல் ஆலியா, முஜாஹித், ஸஈத் பின் ஜுபைர், இக்ரிமா, அல்-ஹஸன், கதாதா, அத்-தஹ்ஹாக் மற்றும் அர்-ரபீஃ பின் அனஸ் ஆகியோர் அல்லாஹ் கூறியது குறித்துக் கூறினார்கள்:
وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ
(மேலும் ஃபித்னா (குழப்பம்) கொலையை விட மோசமானது.) "ஷிர்க் (இணைவைத்தல்) கொலையை விட மோசமானது."
இங்கு "ஷிர்க் (இணைவைத்தல்) கலகத்தோடு ( ஃபித்னாவோடு ) ஒப்பிடுகிறார்கள்.
இதை நாம் இங்கு மொழிபெயர்ப்பது என்னவென்றால்.
ஷிர்க் என்பது இந்த வசனத்தில் சிலை வழிபாட்டை குறிக்கிறது.
அதே ஷிர்க் என்ற வார்த்தை சிலைவழிபாடு மட்டும் இல்லை என்பதே நாங்கள் இங்க சொல்ல வருகிறோம்.
காரணம் இதை வேறு ஒரு பதிவில் விளக்கியுள்ளோம்.
ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒவ்வொரு செயலை அல்லாஹ் பின்பற்ற சொல்லிஇருப்பான் அதை அவர்கள் மீரும்போதுதான் அது கலகமாக (ஃபித்னாவாக ) பொருளாகிறது.
அல்லாஹ்வின் தீனை மாற்ற முயற்சி செய்வதுதான் (ஃபித்னா)
இந்த வசனம் அரபு நாட்டில் குறைசிகளுக்குள் நடக்கிற அந்த செயலை குறிப்பதால்
இந்த வார்த்தையை ( ஃபித்னா) அல்லாஹ் இந்த வசனத்தில் அல்லாஹ் பயன்படுத்தியதாக பார்க்கிறோம்.
இதையேதான் (2:217) ம் பொருள் தருகிறது.
இதை சார்ந்த மேலும் வசனங்களை கூறுகிறோம்.
( 9:47,48 ) தபூக் போரில் கலந்து கொண்டவர்களின் நிலையை பற்றி அல்லாஹ் இங்கு கூறுகிறான்.
அதில் பணம் உள்ளவர்களும், உடல் பலம் உள்ளவர்களும் அதில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
அதில் சில நயவஞ்சகர்கள் கலந்து கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்கிறார்கள்.
அவர்கள் போரில் கலந்து கொண்டால் மற்றவர்களும் கலந்து கொள்ளாமல் இருக்க அவர்கள் குழப்பம் செய்வார்கள் என்பதையே அல்லாஹ் இந்த வசனத்தில் ( ஃபித்னா ) என்று கூறுகிறான்.
இதே போன்று அர்த்தத்திலும் 33. ஸூரத்துல் அஹ்ஜாப (சதிகார அணியினர்) என்ற சூராவில் கூறப்படுகிறது.
( 33:13 )மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார் (மதீனாவாசிகளை நோக்கி) “யஸ்ரிப் வாசிகளே! (பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள்” என்று கூறியபோது, அவர்களில் (மற்றும்) ஒரு பிரிவினர்: “நிச்சயமாக எங்களுடைய வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன” என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும் - கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட) நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள் (போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடுவதைத் தவிர (வேறெதையும்) நாடவில்லை.
( 33:14 )அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் (الْفِتْنَةَ) செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.
அல்லாஹ் தன் அடியார்களுக்கு செய்ய சொன்ன விஷயத்தை அவர்களுக்குள் மாற்றி செய்ய சொல்லி கலகம் செய்து (ஷிர்க்) செய்வார்கள் என்று பொருள் கொள்ளலாம்.
இதுவும் ஒரு சமூகத்தில் உள்ளே நடக்கக்கூடிய குழப்பம் அதற்காக இந்த வார்த்தை பயன்படுத்த படுகிறது.
(الْفِتْنَةَ) என்ற வார்த்தையை உதாரணத்திற்க்காக நாங்கள் சில குர் ஆன் வசனங்களை இங்கு கொண்டு வந்துள்ளோம்.
இனி அடுத்த பாகத்தில் குழப்பம்,கலகத்தின்,இரண்டாவது படித்தரம் பாக்கலாம்
Comments
Post a Comment