கலகம் செய்யாதீர்கள் 2
கலகத்தின் இரண்டாவது தரத்தை பார்ப்போம்.
கலகம் செய்வது என்பது = சீர்த்தியிருத்தப்பட்ட சமுதாயத்தை சீர்கெடுப்பது ஆகும்.
இனி இந்த இரண்டாவது தலைப்பில் ( الْفَسَادُ ) ஃபஸாத், என்பதை பற்றி சில வசனங்களை கொண்டு பார்க்கலாம்.
முதல் பாகத்தில் மனிதனுக்கு மனிதன் கலகம் செய்வதற்கு செய்யக்கூடிய தவறான முறையை பயன்படுத்த மனதில் முதல் முறையாக தோன்றும் தவறான எண்ணம்தான் ( ஃபித்னா ) என்று பார்த்தோம்.
இந்த தலைப்பில் அந்த தவறான எண்ணத்தை செயல்படுத்தும் நிகழ்வையே ( الْفَسَادُ ) ஃபஸாத் என்று குறிப்பிடுகிறோம்.
ஃபஸாத் என்ற தலைப்பில் முதல் வசனத்தை பார்ப்போம்.
மனிதர்கள் மற்ற மனிதர்களின் புனிதத்தை மதிக்க வேண்டும்.
அந்த புனிதம் இன்னொருவருடைய உயிர்
ஆதமின் மகன் தன் சகோதரனை வரம்பு மீறியும், அநியாயமாகவும் கொன்றதால், அல்லாஹ் கூறுகிறான்,
( 5:32 )“நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;
இந்த வசனத்தை ஒரு சமூகத்தின் உள் இருக்கக்கூடிய மக்கள் ஒருவருக்கு ஒருவர் செய்யக்கூடியதுகுறித்து பேசப்படுகிறது.
முஹம்மது நபி சமூகத்தை ஒரே சமூகமாக அல்லாஹ் தேர்ந்தெடுத்து அதில் ஒருவருக்கு ஒருவர் கொலை அநியாய முறையாக செய்யக்கூடாது என்று சட்டம் இயற்றினால்.
அதை அந்த சமூகத்தில் உள்ள ஒருவரோ,சிலரோ. அதை மீறும்போது கூறப்படும் வார்த்தைதான் ( فَسَادٍ ) ஆக பயன்படுத்த படுகிறது.
இந்த வரம்பை மீறுபவர்களை என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான்.
( 5:33 ) அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் ( فَسَادً ) செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.
(5:33) தப்ஸீர்
إِنَّمَا جَزَآءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِى الاٌّرْضِ فَسَاداً
(அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டு, பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களின் கூலி...) “இது இணைவைப்பாளர்கள் குறித்து அருளப்பட்டது. அவர்களில் எவரேனும் கைது செய்யப்படுவதற்கு முன்பு பாவமன்னிப்புக் கோரினாலும், அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.” சரியான கருத்து என்னவென்றால், இந்த வசனம் பொதுவான பொருளைக் கொண்டது. மேலும் இது இணைவைப்பாளர்களையும், இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்ற வகைகளைச் செய்யும் மற்ற அனைவரையும் உள்ளடக்கியது. அல்-புகாரி மற்றும் முஸ்லிம் அவர்கள், அபூ கிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் அல்-ஜர்மீ அவர்கள் கூறியதாக, அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூறியதாகப் பதிவு செய்துள்ளார்கள்:
இதைத்தான் நாங்கள் மேலே கூறினோம் ஒரே சமூகத்தில் உள்ள ஒருவரோ பலரோ அந்த சமூகத்தினுல் செய்யக்கூடிய கலகம்தான் ( ஃபஸாத், ) ஆகும்.
ஃபஸாத்தின் இரண்டாவது வசனத்தை பார்ப்போம்.
(8:73) நிராகரிப்பளர்களாக அல்லாஹ்தான் பல பிரிவினைகளார்களாக அல்லாஹ்தான் ஏற்படுத்தியுள்ளான்
நிராகரிப்பளர்களுக்கு உள்ளும் அல்லாஹ் சில விதமான தாக்கத்தையும், பயத்தையும் வைத்துள்ளான்.
ஆகவே அவர்களுக்குள் அவர்களே பக்கபலமாக இல்லாவிட்டால் இந்த பூமியில் கலகமும், கொலையும் பெறுகிவிடும்.
(8:73) நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும் ( وَفَسَادٌ ) , பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
இதுவும் ஒரு சமுதாயத்தில் உள்ளே நடக்கக்கூடியதாகும்.
ஃபஸாத்தின் மூன்றாவது வசனத்தை பார்ப்போம்.
( 11:116 ) நபி ஸல் அவர்களின் உம்மத்திர்க்கு முன்பு அல்லாஹ்வின் அமானத்தை பேணக்கூடிய பொறுப்பு பனி இஸ்ரவேலர்களிடம் கொடுக்கப்பட்டது
இதுவும் ஒரு சமுதாயம்தான் இவர்களை வைத்துதான் இந்த வசனம் பொருள் கொள்ளப்படுகிறது.
( 11:116 ) உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை ( الْفَسَادِ ) தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
ஃபஸாத்தின் நான்காவது வசனத்தை பார்ப்போம்.
(40:26) ஃபிர்அவ்ன் “மூஸாவை பார்த்து இவர் குழப்பத்தை விளைவிக்க வந்தவர் என்று கூறுகிறான்.
இங்கே ( الْفَسَادَ ) என்ற வார்த்தை ஒரு சமூகத்தில் இருக்கக்கூடிய பல சமுதாயத்தை பற்றித்தான் பேசுகிறது.
(40:26) மேலும் ஃபிர்அவ்ன் கூறினான்: “மூஸாவை கொலை செய்ய என்னை விட்டு விடுங்கள்! இன்னும் இவர் தம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கட்டும்; நிச்சயமாக இவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது இப்பூமியில் குழப்பத்தை ( الْفَسَادَ ) வெளியாக்குவார் என்று நான் அஞ்சுகிறேன்” .
ஃபஸாத்தின் ஐந்தாவது வசனத்தை பார்ப்போம்.
(28:83) காரூனுக்கு அல்லாஹ் கொடுத்த செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிட சொல்லும்போது அதை மருத்தான் அப்படி செலவிடாமல் இருந்தால் இப்படி செலவிடாமல் இருக்கிறதும் அல்லாஹ் அனுமதித்தது தான் என்று மக்கள் நினைப்பார்கள். அதனால் அதனை மாற்ற அவனுக்கு அல்லாஹ் வேதனை கொடுத்தான் வேதனை கொடுத்ததற்கு பிறகு மக்களும் அதை புரிந்த கொண்டார்கள் இதை கூறும்போதுதான் அந்த வசனத்தில் ( فَسَادًا ) என்ற வார்த்தையை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
(28:83) அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை ( فَسَادًا ) உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு.
ஃபஸாத்தின் ஆறாவது வசனத்தை பார்ப்போம்.
(2:205) ஒன்று ( الْفَسَادَ ) குழப்பம் பண்ணுவது என்றும் இரண்டாவது அல்லாஹ்வின் படைப்பினங்களை மாற்ற முயல்வது ( لِيُفْسِدَ ) என்றும் ஒரே வசனத்தில் இரண்டு வார்த்தைகளை அல்லாஹ் கூறுகிறான்.
2:205 (அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
இந்த வசனத்தின் தப்ஸீரில் முனாஃபிக்களை பற்றி கூறப்படுகிறது.
முனாஃபிக்கள் என்பவர்கள் ஒரு சமூகத்தில் உள்ளேதான் உருவாகுவார்கள்.
அவர்கள் ஒரு சமூகத்திற்குள்ளும் நன்றாக வாழ்ந்துகொண்டு இருக்கிற வேறு வேறு சமூகத்திற்குள்ளும் கலகம்,சீர்திருத்தப்பட்ட இடங்களை கெடுக்கலாம்.
அதனால் கூட இந்த வசனத்தில் கலகம் செய்வதற்கு அரபு மூலத்தில் இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது.
இதற்க்கு முன்புள்ள வசனத்தில் ( (நபியே!) மனிதர்களில் ஒரு வ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.)
தஃப்சீர் இப்னு கஸீர் - 2:204-207
وَإِذَا تَوَلَّى سَعَى فِى الاٌّرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لاَ يُحِبُّ الْفَسَادَ
(மேலும் அவன் (உம்மை விட்டும்) திரும்பியதும், பூமியில் குழப்பம் விளைவிக்கவும், பயிர்களையும் கால்நடைகளையும் அழிக்கவும் முயற்சி செய்கிறான்; மேலும் அல்லாஹ் குழப்பத்தை விரும்புவதில்லை.)
இந்த வசனம், அத்தகைய நபர்கள் நாவில் வழிகெட்டவர்கள், செயல்களில் தீயவர்கள், அவர்களுடைய வார்த்தைகள் புனையப்பட்டவை, அவர்களுடைய நம்பிக்கை கெட்டது, அவர்களுடைய செயல்கள் ஒழுக்கமற்றவை என்பதைக் குறிக்கிறது. இந்த வசனம் 'ஸஆ' (நேரடிப் பொருள், 'முயற்சிக்கிறான்' அல்லது 'நோக்கங்கொள்கிறான்') என்ற (அரபு) வார்த்தையைப் பயன்படுத்துகிறது. இதே இரண்டு வார்த்தையும் வேறு வேறு சந்தர்ப்பத்தில் ஃபிர்அவ்னை விவரிக்கவும் பயன்படுத்தப்பட்டது:
இதே ( الْفَسَادَ ) வார்த்தையை ஃபிர்அவ்ன் சம்பந்தப்பட்ட ஒரு வசனத்தை காண்பிக்க விரும்புகிறேன்.
89:10 மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
89:11 அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
89:12 فَاَكْثَرُوْا فِیْهَا الْفَسَادَ ۟
அன்றியும், அவற்றில் குழப்பத்தை ( الْفَسَادَ ) அதிகப்படுத்தினர்.
அல்லாஹ் இங்கு ஃபிர்அவ்ன் ( الْفَسَادَ ) அதிகப்படுத்தினர் என்று கூறுகிறான்.
ஃபிர்அவ்ன் الْفَسَادَ ஒரு பிரிவினைக்குள் பண்ணிக்கொண்டு இருந்த குழப்பத்தை அதிகமாக்கி பல பிரிவினைக்கு மேல் அதிகமாக பண்ணிக்கொண்டு இருந்ததை அல்லாஹ் இங்கு கூறுகிறான்.
இந்த வசனத்தில் அல்லாஹ் குழப்பத்திற்கு வைத்த அரபு வார்த்தை ( الْمُفْسِدِیْنَ ) இந்த வார்த்தை ஒரு சமூகம் மொத்தமாக சீர்திருத்தப்பட்ட சமூகத்தை கெடுக்கும் அளவுகோலாக அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
இதை நாம் குழப்பத்தின் மூன்றாம் படித்தரத்தில் பார்ப்போம்.
28:4 நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் (الْمُفْسِدِیْنَ) செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
ஃபஸாத்தின் ஏழாவது வசனத்தை பார்ப்போம்.
( 30:41 ) மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் (الْفَسَادُ) தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
இந்த வசனத்தின் படி (மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின;)
இந்த (الْفَسَادُ) வசனம் இறங்குன கால கட்டம் முதல் இதை தொடர்ந்து உலகம் குழப்பத்தின் அடுத்து கட்டத்திற்கு போய் கடைசியாக ஈஷா நபி வரை போய் முடியும்.
இதற்க்கு இடையில் மனிதன் செய்த தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
தஃப்சீர் இப்னு கஸீர் - 30:41-42
ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ
(நிலத்திலும் கடலிலும் தீமை வெளிப்பட்டுவிட்டது) "நிலத்தில் ஏற்படும் தீமை என்பது ஆதமின் மகனைக் கொல்வதாகும், கடலில் ஏற்படும் தீமை என்பது கடற்கொள்ளையாகும்." முதல் கருத்தின்படி, இந்த சொற்றொடர்,
ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِى النَّاسِ
(மனிதர்களின் கரங்கள் சம்பாதித்தவற்றின் காரணமாக நிலத்திலும் கடலிலும் தீமை வெளிப்பட்டுவிட்டது,) என்பதன் பொருள், பயிர்கள் மற்றும் பழங்களில் ஏற்படும் பற்றாக்குறை பாவங்களின் காரணமாகவே ஏற்படுகிறது. அபுல் ஆலியா கூறினார்கள்: "யார் பூமியில் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறானோ, அவன் அதைச் சீரழித்துவிட்டான், ஏனென்றால் பூமியின் மற்றும் வானங்களின் நல்ல நிலை அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதைச் சார்ந்துள்ளது." எனவே, அபூ தாவூத் பதிவு செய்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது:
«لَحَدٌّ يُقَامُ فِي الْأَرْضِ أَحَبُّ إِلَى أَهْلِهَا مِنْ أَنْ يُمْطَرُوا أَرْبَعِينَ صَبَاحًا»
(பூமியில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தண்டனையும், அதன் மக்களுக்கு நாற்பது நாட்கள் மழை பொழிவதை விடச் சிறந்ததாகும்.)
அதற்குக் காரணம், விதிக்கப்பட்ட தண்டனைகள் நிறைவேற்றப்பட்டால், அது மக்களை - அவர்களில் பெரும்பாலோரையோ அல்லது பலரையோ - அல்லாஹ்வின் தடைகளை மீறுவதிலிருந்து தடுக்கும். அவர்கள் பாவத்தை கைவிட்டால், இது வானங்களிலும் பூமியிலும் அருள்களுக்கு ஒரு காரணமாக அமையும். எனவே, இறுதி காலத்தில் ஈஸா பின் மர்யம் (அலை) அவர்கள் இறங்கி வரும்போது, அவர்கள் அந்த நேரத்தில் இந்த ஷரீஅத்தின்படி தீர்ப்பளிப்பார்கள், மேலும் பன்றிகளைக் கொன்று, சிலுவையை உடைத்து, ஜிஸ்யாவை ஒழிப்பார்கள். அவர்கள் இஸ்லாத்தைத் தவிர அல்லது வாளைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள். அல்லாஹ் தஜ்ஜாலையும் அவனுடைய பின்பற்றுபவர்களையும், யஃஜூஜ், மஃஜூஜையும் அவருடைய காலத்தில் அழிக்கும்போது, பூமிக்குக் கூறப்படும், உனது அருளை வெளிக்கொண்டு வா. அப்போது மக்கள் கூட்டமாக ஒரே மாதுளம்பழத்திலிருந்து சாப்பிடுவார்கள், அதன் தோலுக்குக் கீழே நிழல் தேடுவார்கள், மேலும் ஒரு கர்ப்பிணி ஒட்டகத்தின் பால் ஒரு மக்கள் கூட்டத்திற்குப் போதுமானதாக இருக்கும். இது முஹம்மது (ஸல்) அவர்களின் ஷரீஅத்தைப் பின்பற்றுவதால் ஏற்படும் அருள்களின் காரணமாக மட்டுமே நடக்கும். எவ்வளவுக்கெவ்வளவு நீதி நிலைநாட்டப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அருள்களும் நன்மைகளும் அதிகரிக்கும். ஸஹீஹில் அறிவிக்கப்பட்டுள்ளது:
Comments
Post a Comment