கலகம் செய்யாதீர்கள் 3
கலகத்தின் மூன்றாவது தரத்தை பார்ப்போம்.
கலகம் செய்வது என்பது = சீர்த்தியிருத்தப்பட்ட சமுதாயத்தை சீர்கெடுப்பது ஆகும்.
முதல் பாகத்தில் மனிதனுக்கு மனிதன் கலகம் செய்வதற்கு செய்யக்கூடிய தவறான முறையை பயன்படுத்த மனதில் முதல் முறையாக தோன்றும் தவறான எண்ணம்தான் ( ஃபித்னா ) என்று பார்த்தோம்.
இரண்டாவது தலைப்பில் அந்த தவறான எண்ணத்தை ஒரு சமூகத்திற்குள் செயல்படுத்தும் நிகழ்வையே ( الْفَسَادُ ) ஃபஸாத் என்று பார்த்தோம்.
இது இரண்டற்கும் மாறுபட்டவிதமான விஷயம்தான்,இந்த கலகத்தின் மூன்றாவது படித்தரம்தான் (الْمُفْسِدِیْنَ, يُفْسِدُوْنَ,)
இந்த வார்த்தை என்பது ஒரு சமூகமே சேர்ந்து ஒட்டுமொத்தமாக சீர்திருத்தப்பட்ட சமூகத்தை கெடுப்பதாகும்.
இப்படியும் சொல்லலாம் ஒரு சமூகத்திலிருந்து ஒருவரானாலும், ஒன்றுக்கு மேற்பட்டவராலும் மற்றொறு சமூகத்திற்கு கெடுதல் நினைப்பது,வழி கெடுப்பது இப்படி சொல்லிக்கொண்டே போவதாகும். .
உதாரணமாக الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் முதல் வசனத்தை பார்க்கலாம்.
இந்த الْمُفْسِدِیْنَ வார்த்தை கடந்த போன காலத்தை பற்றி பேசப்படுவதற்கு பயன்படுகிறது.
18:93 இல் யஃஜூஜ், மஃஜூஜை அல்லாஹ் ஒரு சமூகம் (சமுதாயம்) என்று கூறுகிறான்.
21:95 முதல் 97 வரை தப்ஸீர்.
யஃஜூஜ், மஃஜூஜ் கட்டவிழ்த்து விடப்படும் வரை,) அவர்கள் ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினர் என்பதை நாம் முன்பே குறிப்பிட்டுள்ளோம்; மேலும் அவர்கள் நூஹ் (அலை) அவர்களின் மகன் யாஃபித் (யாப்பேத்) வழியாகவும் வந்தவர்கள். யாஃபித் துருக்கியர்களின் தந்தை ஆவார். துல்கர்னைன் கட்டிய தடுப்பணைக்குப் பின்னால் விடப்பட்ட వారిల్ ஒரு கூட்டத்தினரைத் துருக்கியர் என்பது குறிக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:
யஃஜூஜ், மஃஜூஜ் என்ற ஒரு சமூதாயமாக இருக்கும் மனிதர்கள் வேறு ஒரு சமுதாயம் மீது குழப்பம், கலகம் செய்ய , சீர்திருத்தத்தை கெடுக்க வருவாருவார்கள்.
என்பதை புரியவே இங்கு இந்த 18:94 வசனத்தில் (مُفْسِدُوْنَ ) பயன்படுத்த படுகிறது.
(18:94) அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் (مُفْسِدُوْنَ) - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.
இது கடந்த காலத்தில் நடந்ததை கூறும் சொல்லாக (مُفْسِدُوْنَ) அமைகிறது
மேலும் இதை சார்ந்த வசனங்களை பார்க்கலாம்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள இரண்டாம் வசனத்தை பார்க்கலாம்.
( 29:36) முன் அழிந்த சமுதாயம் என்ன செய்து கொண்டு இருந்தது அதற்க்கு அல்லாஹ் அரபு வார்த்தை என்ன பயன்படுத்துகிறான் என்று பார்ப்போம்.
( 29:36) மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் (مُفْسِدِيْنَ) செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.
மேலும் அல்லாஹ் (அல்குர்ஆன் : 7:86) நினைவு படுத்திகிறான்.
( 7:86) “மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் (الْمُفْسِدِيْنَ) செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக” (என்றும் கூறினார்).
மேலும் குர்ஆனில் ஒரு வசனத்தில் அல்லாஹ் எதில் குழப்பம் செய்வீர்கள் என்றும் கூறுகிறான் (அல்குர்ஆன் : 26:183)
(26:183) “மனிதர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்களை நீங்கள் குறைத்து விடாதீர்கள் - மேலும், நீங்கள் பூமியில் குழப்பம் (مُفْسِدِيْنَ) செய்பவர்களாக அலையாதீர்கள்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள மூன்றாம் வசனத்தை பார்க்கலாம்.
(7:74) “ஆது” கூட்டத்தாருக்குப் பின் வந்த கூட்டத்தை பார்த்து அல்லாஹ் பூமியில் குழப்பம் (مُفْسِدِیْنَ) செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்” என்று நினைவு கூறுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதிலும் முழு சமூகமும் செய்தார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள நான்காம் வசனத்தை பார்க்கலாம்.
(29:30) லூத் அலை அவர்களுடைய சமூகம் செய்த செயலுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.
(29:30) அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் (الْمُفْسِدِيْنَ) செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள ஐந்தாம் வசனத்தை பார்க்கலாம்.
(28:77) “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் (الْمُفْسِدِيْنَ) செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).
அல்லாஹ் காரூனுக்கு கொடுத்த செல்வத்தை இறைவழியில் செலவு செய்ய கூறுகிறான்.
இதை சேர்த்து வைப்பது மட்டும் இல்லை மற்றவர்களுக்கு காரூனுக்கு உதாரணமாக ஆகக்கூடாது என்பதற்காகவே அவனுக்கு அல்லாஹ் கொடுத்த அறிவுரை.
அவனுக்கு கொடுத்த செல்வம் எப்படிப்பட்டது என்றும் இந்த தப்ஸீரில் கூறப்படுகிறது.
இப்னு கசீர் = 28:76,77
﴾وَلاَ تَبْغِ الْفَسَادَ فِى الاٌّرْضِ﴿
(மேலும் பூமியில் குழப்பத்தை தேடாதே.) அதாவது: 'பூமியில் ஊழலைப் பரப்புவதும், அல்லாஹ்வின் படைப்புகளுக்குத் தீங்கு விளைவிப்பதும் உன் நோக்கமாக இருக்க கூடாது என்பதே இதனுடைய தார்மீக கருத்தும் கூட.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள ஆறாம் வசனத்தை பார்க்கலாம்.
(2:220) அனாதைகளை பற்றி பேசக்கூடிய வசனம்
அனாதைகள் விஷயத்தில் சரிவர பேனாத்தவர்கள் ஒருவராக இருந்தாலும், ஒரு சமுதாயமாக இருந்தாலும் சரியே அவர்கள் விஷயத்திலும் கவனமாக இருக்கவேண்டும்.
(2:220) இன்னும் அல்லாஹ் குழப்பம் (الْمُفْسِدَ) உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்;
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள ஏழாம் வசனத்தை பார்க்கலாம்.
(38:28) ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் (كَالْمُفْسِدِيْنَ) செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா?
என்று அல்லாஹ் நம்மளிடம் இந்த செயலை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள் என்ற அடிப்படையில் வைக்கிறான்.
இங்கு கலகம் செய்யக்கூடிய அரபு வார்த்தை مُفْسِدِيْنَ பயன்படுத்தப்படுகிறது.
அதனால்தான் இந்த வார்த்தையின் ( مُفْسِدِيْنَ ) வீரியத்தை உணர்ந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறோம்.
இதை அல்லாஹ் தாவூத் நபி வரலாற்றில் மனோ இச்சையை பின்பற்றாதீர்கள் என்று முஸ்லீம் மக்களுக்கு ஞாபக படுத்திவிட்டு ஒரு எச்சரிக்கையாக இந்த வசனத்தில் ( كَالْمُفْسِدِيْنَ ) வார்த்தையை கூறப்படுகிறது.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள எட்டாம் வசனத்தை பார்க்கலாம்.
(3:63) நபி ஈஸாவின் உண்மையான வரலாறை சொல்லிமுடித்து விட்டு இதை அவர்கள் புறக்கணித்தால் புறக்கணிப்பவர்களை பார்த்து இந்த வசனம் கூறப்படுகிறது.
அல்லாஹ் உண்மை என்று கூறிய வரலாறை மாற்ற நினைப்பவர்களும் குழப்பம் செய்ய நினைப்பவர்களே.
(3:63) அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் (بِالْمُفْسِدِيْنَ) செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள ஒன்பதாவது வசனத்தை பார்க்கலாம்.
(2:60) மூஸா தம் சமூகத்தாருடைய பன்னிரண்டு உம்மத்தாருக்கும் அல்லாஹ் ஒரு செய்தியை எச்சரிக்கிறான்.
நீங்கள் குழப்பம்செய்துகொண்டு திரியாதீர்கள். என்று இங்கு இந்த (مُفْسِدِیْنَ ) வார்த்தையை பயன்படுத்துகிறான்.
(2:60) மூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, “உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக!” என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; “அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து (مُفْسِدِیْنَ ) கொண்டு திரியாதீர்கள்” (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள பத்தாவது வசனத்தை பார்க்கலாம்.
அல்லாஹ் நபியிடம் மூஸாவின் வரலாறை கூறுகிறான்
மூஸா நபியை ஃபிர்அவ்னிடத்தில் அனுப்பிவைத்து ஃபிர்அவ்னிடத்தில் எதற்க்காக அனுப்பிவைத்து என்று கூறிவிட்டு பின்னர் அவர்களுக்கு உண்டான முடிவை நபி ஸல் அவர்களுடைய உம்மதுக்கு ஞாபகப்படுத்துகிறான். ( فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ)
( 7:103 ) அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் الْمُفْسِدِیْنَ ۟ முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
இதற்க்கு அடுத்து உள்ள வசனம் ஃபிர்அவ்ன் கடைசி நேரத்தில் ஈமான் கொள்ளும்போது முடிவு நேரம் வரை நீ குழப்பவாதியாகத்தானே இருந்தாய் என்று அல்லாஹ் அவனுக்கு ஞாபகப்படுத்துகிறான்.
( 10:91 ۟ ) “இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் الْمُفْسِدِیْنَ செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
மேலும் الْمُفْسِدِیْنَ என்ற வார்த்தையில் உள்ள பதினோன்னாவது வசனத்தை பார்க்கலாம்.
இந்த வசனமே முழுவதுமாக யார் குழப்பம் பண்ணுவார்கள்,கலகம் செய்வார்கள் என்று விளக்கமே இல்லாமல் புரிந்து கொள்ளலாம்.
( 5:64 ) “அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது” என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் (الْمُفْسِدِیْنَ) செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
இதில் கூறப்பட்டுள்ள குழப்பத்தின் இரண்டு வார்த்தைகளும் يُّفْسِدُوْنَ,تُفْسِدُوْا விளக்க சிறிய உதாரணம் தேவைப்படுகிறது.
அந்த உதாரணத்திற்க்காக ஒரு செயல் இங்கு கூறுகிறோம்
அந்த செயலை (கடந்தகால சொற்றொடர் ) (கடந்த காலத்தில் நிகழ்கால சொற்றொடர்) (கடந்த காலத்தில் வருங்கால சொற்றொடர்) இப்படி இந்த இரண்டு வார்த்தைகாக يُّفْسِدُوْنَ,تُفْسِدُوْا கூறியுள்ளோம்.
(முன்பு ஒரு சமூகம் இருந்தது) என்பது = கடந்த கால சொல்
(அந்த சமூகத்திற்கு நன்மை நாடினேன் ) என்பது = கடந்த காலத்தில் முடிந்த சொல்
(ஆனால் அந்த சமூகம் தீமையை செய்தது ) என்பது = கடந்த காலத்தில் வருங்கால சொல்
ஆகவே இந்த இரண்டு வார்த்தையும் يُّفْسِدُوْنَ,تُفْسِدُوْا கலகம் செய்தல் = குழப்பம் பண்ணுதல் என்பதை புரிய வைக்கிறது.
இப்போது இந்த வார்த்தை கொண்ட வசனங்கள் கொடுக்கிறோம்.
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள முதலாவது வசனத்தை பார்க்கலாம்.
وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِ فِرْعَوْنَ اَتَذَرُ مُوْسٰى وَقَوْمَهٗ لِيُفْسِدُوْا فِى الْاَرْضِ وَيَذَرَكَ وَاٰلِهَتَكَ قَالَ سَنُقَتِّلُ اَبْنَآءَهُمْ وَنَسْتَحْىٖ نِسَآءَهُمْ وَاِنَّا فَوْقَهُمْ قَاهِرُوْنَ
அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) “மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொன்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆதிக்கம் பெற்றுள்ளோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 7:127)
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள இரண்டாவது வசனத்தை பார்க்கலாம்.
اَ لَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ زِدْنٰهُمْ عَذَابًا فَوْقَ الْعَذَابِ بِمَا كَانُوْا يُفْسِدُوْنَ
எவர்கள் நிராகரித்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம்.
(அல்குர்ஆன் : 16:88)
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள மூன்றாவது வசனத்தை பார்க்கலாம்.
الَّذِيْنَ يَنْقُضُوْنَ عَهْدَ اللّٰهِ مِنْ بَعْدِ مِيْثَاقِهٖ وَيَقْطَعُوْنَ مَآ اَمَرَ اللّٰهُ بِهٖۤ اَنْ يُّوْصَلَ وَيُفْسِدُوْنَ فِى الْاَرْضِ اُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ
இ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.
(அல்குர்ஆன் : 2:27)
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள நான்காவது வசனத்தை பார்க்கலாம்.
وَاِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ جَاعِلٌ فِى الْاَرْضِ خَلِيْفَةً قَالُوْٓا اَتَجْعَلُ فِيْهَا مَنْ يُّفْسِدُ فِيْهَا وَيَسْفِكُ الدِّمَآءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَـكَ قَالَ اِنِّىْٓ اَعْلَمُ مَا لَا تَعْلَمُوْنَ
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.
(அல்குர்ஆன் : 2:30)
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள ஐந்தாவது வசனத்தை பார்க்கலாம்.
الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ
“அவர்கள் பூமியில் குழப்பம் உண்டாக்குவார்கள்; நன்மை செய்ய மாட்டார்கள்” என்றுங் கூறினார்).
(அல்குர்ஆன் : 26:152)
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள ஆறாவது வசனத்தை பார்க்கலாம்.
وَكَانَ فِى الْمَدِيْنَةِ تِسْعَةُ رَهْطٍ يُّفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَلَا يُصْلِحُوْنَ
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள்.
(அல்குர்ஆன் : 27:48)
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள ஏழாவது வசனத்தை பார்க்கலாம்.
அல்லாஹ் காஃபிர்களை பற்றி நபி அவர்களிடம் நீங்கள் அவர்களை அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் என்று 2ஆவது அத்தியாயத்தில் 6 ஆவது வசனத்தில் இல் கூறுகிறான்.
அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு என்றும் அதை தொடர்ந்து உள்ள வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்
மேலும் அடுத்த வசனத்தில் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று சொல்வோரை குறித்து
அல்லாஹ் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை;
அவர்கள் விஷயத்தில் அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.
என்று இதையெல்லாம் அல்லாஹ் கூறிவிட்டு அவர்களிடம்
2:11“பூமியில் குழப்பத்தை (تُفْسِدُوْ) உண்டாக்காதீர்கள்” என்று சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.
2:12
நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் (الْمُفْسِدُوْنَ) உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.
இந்த வசனத்தின் தப்ஸீர் நயவஞ்சகர்களை பற்றி பேசக்கூடியதாகும்.
நயவஞ்சகர்கள் யார் என்றால் ஒரு சமூகம் சீர்திருத்தப்பட்டால் அதிலிருந்து அல்லாஹ்வுக்கு கட்டுப்படாதவர்களே நயவஞ்சகர்கள் ஆவார்கள்.
அவர்களால் மட்டுமே அந்த சமூகத்தில் குழப்பம் செய்யமுடியும்,மேலும் அவர்கள் இருக்ககூடிய அந்த தேர்ந்தெடுத்த சமூகத்தையும் தாண்டி அவர்கள் குழப்பம் செய்ய முடியும்.
தனது மனோ இச்சையின் படி அல்லாஹ் இப்படித்தான் கூறியுள்ள என்ற செயலை மாற்றி வேறு ஒரு செயலை அந்த சமூகத்திற்கு கற்று கொடுக்க முடியும் இப்படித்தான் அல்லாஹ்வின் தீனில் கலகம் செய்யமுடியும்.இதையே இந்த வார்த்தை பொருள் தரலாம்,
இங்கு அல்லாஹ் நயவஞ்சகர்களை பார்த்து 2:11 இல் (تُفْسِدُوْ) என்றும் 2:12 இல் (الْمُفْسِدُوْنَ) என்றும் ஒரே பிரிவினரை பார்த்தே கூறப்படுகிறது.
கலகம் செய்வது, குழப்பம் செய்வது, இப்படி இந்த இரண்டு வார்த்தைகளுமே பயன்படுகிறது.
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள எட்டாவது வசனத்தை பார்க்கலாம்.
(7:85) மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் (تُفْسِدُوْا) உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
(12:73) யூசுப் நபியுடைய சகோதரர்கள் மீது திருடர்கள் என்று பழி சுமத்தும் போது நாங்கள் இங்கே குழப்பம் செய்ய வரவில்லை என்றும் கூறும் வசனம்.........
இந்த வசனத்தில் திருடர்கள் என்று வருகிறது.
திருடுவதும் குழப்பம் செய்வது என்று அர்த்தமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு வந்து அந்த நாட்டில் மீது கலங்கம் ஏற்படுத்துவது
அப்படி செய்யும் போது பிடிபட்ட குற்றவாளிகள் மீது மட்டும் தவறான எண்ணம் வராது அவர் எங்கிருந்து வந்தாரோ அந்த நாட்டின் மீதும் தவறான எண்ணம் வரும் அப்படியும் பொருள் கொள்ளலாம்.
12:73 (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் ( لِـنُفْسِدَ ) உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள ஒன்பதாவது வசனத்தை பார்க்கலாம்.
(17:4) நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.
17. பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்) என்ற சூராவில் இந்த 17:4 வசனத்தை தொடர்ந்து 5 வசனங்கள் பனி இஸ்ரவேலர்களுடைய அழிச்சாட்டியங்களை அல்லாஹ் விவரிக்கிறான். அது அதனுடைய தப்ஸீரில் ஏறத்தாழ 2000 அல்லது 3000 வருடங்களில் உள்ள வரலாறுகளில் பார்க்கலாம்.
இதுவும் சாதாரண குழப்பமாக எடுத்துக்கொள்ளக்கூடாது குழப்பத்தில் எல்லையை மீறக்கூடிய செயல் எல்லாம் இந்த வருடங்களில்தான் நடக்கிறது.இதனுடைய குழப்பத்தின் வார்த்தை தான் ( لَـتُفْسِدُنَّ )
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள பத்தாவது வசனத்தை பார்க்கலாம்.
( 47:22) (போருக்கு வராது) நீங்கள் பின் வாங்குவீர்களாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடுவதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?
இந்த சூராவின் ஆழம் ஜிஹாத் சட்டமாக்கப்பட வேண்டும் என்று விசுவாசிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஆனால் அல்லாஹ் அதை விதியாக்கியபோது, மக்களில் பலர் பின்வாங்கினார்கள்,
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை தடுப்பதும் அதில் ஊடுருவி கலங்கம் பண்ணி தடுப்பதும் இங்கு குழப்பம் என்றே பொருள் கொள்ளலாம்.
அடுத்து تُفْسِدُوْا என்ற வார்த்தையில் உள்ள பதினோன்றாவது வசனத்தை பார்க்கலாம்.
இந்த சூராவின் வசனம் முன் நரகவாசிகள், சொர்க்கவாசிகளை பற்றி அல்லாஹ் பேசுகிறான்.
(7:52) நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
இதெல்லாம் சொல்லிவிட்டு அந்த மறுமை நாளை எதிர்பார்க்கிறார்களா? என்றெல்லாம் கேட்டுவிட்டு
அதில் நடக்கக்கூடிய பரிந்துரையையும் பேசிவிட்டு
தன்னுடைய ஆட்சியின் மகிமையை விளக்கிவிட்டு
இப்படிப்பட்ட இறைவனிடத்தில் முஹ்மீன்கள் பிரார்த்தனை எப்படி செய்யவேண்டும் என்று கூறுகிறான்.
(7:55) (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
இங்கே மறுமைநாளில் சம்பவத்தை பற்றி பேசுவதால் உலகம் தொடங்குனது முதல் கடைசிவரை யாரெல்லாம் நிராகரிப்பாளர்களாக வருவார்களோ அப்படிபட்டவர்களை பார்த்து இந்த வசனம் பேசுகிறது.
(7:56) (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் (وَلَا تُفْسِدُوْا) உண்டாக்காதீர்கள்;
இங்கேயும் அல்லாஹ் تُفْسِدُوْا என்ற வார்த்தையை பயன்படுத்துகிறான்.
இந்த மொத்த பதிவுகளிலும்
குழப்பம் செய்வது கலகம் செய்வது பற்றி உள்ள வார்த்தைகளை பார்த்தோம்.
இங்கு மூன்று படித்தரமாக பிரித்தாலும் இதனுடைய விளைவுகள் எல்லாம் ஒன்றுதான்.
Comments
Post a Comment