முஆவியா அவர்களின் சிறப்பு
ஒருவரின் கேள்வி:முஆவியா அவர்களின் சிறப்பை பற்றி கூறவும்.
மற்றொருவரின் பதில் : அஹ்லுல் பெய்த் என்பதே முஆவியா அவர்களின் சிறப்பு ஆகும்.
கேள்வி: அப்போது முஆவியா அவர்களுக்கு முன்பு உள்ள குலஃபாய ரஸீதீன்களின் சிறப்பை ஏன் கூறமாறுகிறீர்கள்.
பதில்: முஆவியா அவர்களுக்கு எழுந்த இவ்வளவு விமர்சனம் குலஃபாய ரஸீதீன்களுக்கு எழவில்லை
கேள்வி: ஏன் எழவில்லை அன்னை ஆயிஷா ரலி அவர்களுக்கு விமர்சனம் எழவில்லையா
அபூபக்கர் ரலி அவர்களுடைய கலீஃபா பதவியின் மேல் விமர்சனம் எழவில்லையா
உமர் ரலி அவர்களுக்கு அவர் தோணுவது போல் செய்வர் என்று விமர்சனம் எழவில்லையா
உஸ்மான் ரலி அவர்களுக்கு விமர்சனம் எழவில்லையா அவர்கள் உறவுகளை அதிகமாக ஆதரிக்கிறார்.
அலி ரலி அவர்களுக்கு விமர்சனம் எழவில்லையா
இதில் முஆவியா அவர்கள் சம்பந்தமாக கேட்கிற கேள்வி நியாயமானதாக தெரியும்.
இதில் சிந்திக்க கூடிய விஷயம் என்னவென்றால்.
முஆவியா அவர்கள்,அலி ரலி அவர்கள் இவர்கள் இருவர் சம்பந்தமாக விமர்சனம் செய்து செய்து
குலஃபாய ரஸீதீன்களுடைய சிறப்பு அம்சங்களை மறக்கடித்துவிட்டார்கள் என்பது தீய கோட்பாட்டின் சாதனை......
இப்போது குலஃபாய ரஸீதீன்கள் இப்படியெல்லாமா செய்தார்கள் என்று வியப்படையும் அளவுக்கு அவர்களுடைய சிறப்பு அம்சம் உள்ளது.
ஆகவே யார் யார் மீது எந்த எந்த விஷயம் மீது கருத்து வேறுபாடு உள்ளதோ அந்த விஷயத்தை நியாயமான முறையில் பேசிவிட்டு அதிலிருந்து விடுபட்டு
குலஃபாய ரஸீதீன்களுடைய சிறப்பு அம்சங்களையும் கண்டிப்பாக மக்கள் மத்தியில் கூறவேண்டும்.
மிகமுக்கியமான விஷயம் குலஃபாய ரஸீதீன்களுடைய சிறப்பு அம்சங்களை சொல்லாமல் போனாலும் இஸ்லாம் வீழ்ச்சி பெரும்.
நபி ஸல் அவர்களுக்கு பின்பு வந்த மக்களுக்கு அழகிய முன்மாதிரி என்பது நபி ஸல் அவர்களும் அவர்களுடைய தோழர்களும்.
தோழர்கள் என்று சொன்னால் எல்லாரும் வரமாட்டார்கள்.
அழகிய முன்மாதிரிக்கு மிக முக்கிய தகுதி வாய்ந்தவர்கள் மக்கா வெற்றிக்கு முன்பு உள்ளவர்கள்.
இவர்களே அல்லாஹ்வின் சமூகத்தில் உயர்வானவர்கள்.
இவர்களே பின்பற்றுவதற்கு தகுதியானவர்கள்.
وَمَا لَكُمْ اَلَّا تُنْفِقُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِیْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ لَا یَسْتَوِیْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقٰتَلَ ؕ اُولٰٓىِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِیْنَ اَنْفَقُوْا مِنْ بَعْدُ وَقٰتَلُوْاؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰی ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟۠
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அப்போது காலித் பின் வலீத் போன்ற ஸஹாபாக்கள் எல்லாம் தகுதியானவர்கள் இல்லையா என்று கேட்க சில பேர் முற்படுவார்கள்?
அவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அல்லாஹ் கூறுவது போல் நபி ஸல் அவர்களும் அவர்களுடைய தோழர்களும் அவர்களுடைய வரலாறுகளில் இருந்து விடை இருந்தால்.
மக்கா வெற்றிக்கு பின் வந்தவர்களை ஏன் பின்பற்றவேண்டும்.
இதன் மூலம் காலித் பின் வலீத் போன்ற ஸஹாபாக்களை பின்பற்ற கூடாது என்று சொல்லவரவில்லை
மக்கா வெற்றிக்கு முன்னர் உள்ளவர்களிடம் பிரச்சனைக்கு விடை இல்லையென்றால்
மக்காவின் வெற்றிக்குப் பின் உள்ளவர்களிடம் அதே பிரச்சனைக்கு விடை தேடுவேன்.
ஆகவே முஆவியா அவர்களை வைத்து உம்மத்தை தவறான வழியில் கல்விகற்றவர்கள் வழிநடத்த வேண்டாம்.
Comments
Post a Comment